Tuesday 6 October 2015

Krishnagiri District

கி.பி.14 ஆம் நூற்றாண்டு நடுகல்
தமிழகத்தின் மிகமுக்கியமான நடுகல்
தமிழர்களின் ஆதி கலையான சிலம்பு கலையை
(மூங்கில் கழி) மையைப்படுத்துகிறது.
ஆட்சி செய்த மன்னன் அத்தி மல்லன்.
இக்கல் வைக்கப்பட்டுள்ள இடம்
இப்போது குந்தியம்மன் கோயில் என்று அழைக்கப்படும்
குந்திஸ்வரர் கோயிலின் அட்டத்தில் அதாவது வடபுர கூரையில்வைக்கப்பட்டுள்ளது.
இந்த நடுகல்லில் ஒரு வீரனை இரண்டு வீரர்ககள் தாக்குகிறார்கள்.
நடுவே உள்ள வீரன் வலக்கையில் குறுவாளை பிடித்துள்ளான்.
இடக்கையில் சிலம்பினை முன் நீட்டி அடி வைத்துள்ள நிலையில்
பின்னிருந்து தாக்க வரும் வீரனின் குடுமியை பிடித்த நிலையில் உள்ளான்.
இந்த நடுகல் இக்கால சிலம்பு பயிற்சியை அப்படியே நம் கண்முன் காட்டுகிறது.
கீழ் பகுதியில் வாளும் கேடயமும் தாங்கிய உருவமும் உள்ளது.
அருகில் உள்ள கல்வெட்டு செய்தி.
.".திரிபுவனமல்ல பூராதிராயன் அத்திம
..ல்லன் முதலிகளில் தாமந் தே
..வற்கடியார் மகன் மாராழ்வா
..ன் நாரசிங்கதெவநு
..கு படைத்துணை போய்ப்பட்
..டான்..."
இதன் பொருள்
மாராழ்வான் எனும் வீரன் நரசிங்கதேவன் என்பவனுக்கு
படைத்துனையாய் சென்றபோது இறந்துவிடுகிறான்.அவனுக்கு எடுக்கப்பட்ட நடுகல்.
வேறு எங்காவது இப்படி சிலம்பிற்காக நடுகல் உள்ளனவா??

No comments:

Post a Comment