Tuesday 2 August 2016

நிறம் மாறும் லிங்கம்

மூன்று வேளையும் நிறம் மாறும் 1000 வருடம் பழமை வாய்ந்த சிவலிங்கம்... இன்றுவரை துலங்காத மர்மம்!

இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தோல்பூரில் உள்ள சிவாலயத்தில் தினமும் நிறம் மாறும் அதிசய சிவலிங்கம் உள்ளது.

தோல்பூரில் உள்ள 1000 ஆண்டு பழமைவாய்ந்த இந்த சிவனின் பெயர் அக்ஷலேஷ்வர் மஹாதேவ் என்பதாகும். இந்த லிங்கமானது காலை, நண்பகல், இரவு ஆகிய மூன்று வேளைகளில் வெவ்வேறு நிறங்களில் காட்சியளிக்கிறது.இந்த அதிசயமானது வருடத்தின் அனைத்து நாட்களிலும் நிகழ்கிறது.

காலை நேரங்களில் சிவந்த நிறத்தில் காட்சியளிக்கும் இந்த லிங்கம் , நண்பகலில் காவி நிறத்தில் காட்சியளிக்கிறது,இரவில் கருப்பாக காட்சியளிக்கிறது. மீண்டும் காலையில் சிவப்பு நிறமாக மாறிவிடுகிறது.இதுகுறித்து அங்குள்ள மக்கள் கூறுகையில் இரவெல்லாம் கருப்பு நிறத்தில் இருக்கும் இறைவன் பகலில் சிவப்பு நிறத்தில் மாறி பக்தர்களை ஆசிர்வதிப்பதாக நம்புகின்றனர்.

மேலும் இந்த ஆலயத்தில் ஏராளமான ரகசியங்கள் புதைந்திருக்கிறது. சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள சிவலிங்கம் நிறுவப்பட்டுள்ளது , இந்த சிவலிங்கத்தின் உயரம் இதுவரையில் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.இதன் அடிப்பகுதி ஆயிரம் அடிகளையும் தாண்டி, தரைக்குக் கீழே புதைந்து கிடக்கிறது. சிவன் அடிமுடி காண முடியாதவர் என்பதை உணர்த்துகிற இது ஆலயமாக விளங்குகிறது.

பூமியில் சிவன் காலடி எடுத்து வைத்த ஒரே இடம் இது தான். இந்த இடம்தான் பூமியின் மையமாக இருக்கும் என கோவில் நிர்வாகத்தினர் கூறுகின்றனர். திருமணம் ஆகாதவர்கள் இந்த ஆலயத்தில் வந்து வழிபட்டால் மனதுக்குப் பிடித்த வாழ்க்கைத்துணை அமைந்துவிடும் என்கின்றனர்.
#ப்யாரீப்ரியன்

காசியின் மகத்துவம்

‎காசி‬ யின் வரலாறு அறிந்து கொள்வோம்..
‪#‎ப்யாரீப்ரியன்‬...
காசி என்பது 168 மைல் பரப்பளவில் சிவபெருமானால் (சிவசக்தியால்) அமைக்கப்பட்ட ஒப்பற்ற, நினைப்பதற்கே அரிய ஓர் சிவ சக்தி யந்திரம்.
வருடத்தின் எல்லா நாட்களும், ஒரு நாளின் எல்லா மணிநேரமும் ஓய்வின்றி செயல்படும் ஒப்பற்ற சிவ சக்திநிலை இங்கே இருப்பதாக அனைவரின் நம்பிக்கை.
சிவன் வடிவமைத்த காசியின் 168 மைல் சுற்றளவில் 468 சக்தி மையங்கள்.
அவற்றில் 108 அடிப்படை சக்தி மையங்கள்.
இதில் 54 ஆண்தன்மை நிறைந்த சக்தி வடிவங்கள், 54 பெண் தன்மை நிறைந்த சக்தி மையங்களாக சிவனால் அமைக்கப்பட்ட தென்பது வரலாறு.
நிலவின் சுழற்சிக் கணக்கில், மூன்று வருடத்திற்கு ஒரு முறை 13 மாதங்கள் இருக்கும்.
நம் சூரிய குடும்பத்தில் இருப்பது 9 கோள்கள்.
4 திசைகள் அல்லது பஞ்ச பூதங்களில் ‘ஆகாஷ்’ தவிர்த்து நான்கு அடிப்படைக் கூறுகள்.
ஆக, 13*9*4 = 468.
நம் உடலில் இருக்கும் சக்தி சக்கரங்கள் 114.
இதில் 2 நம் உடல் தாண்டி இருக்கிறது.
மீதம் இருக்கும் 112ல், 4 சக்கரங்களுக்கு நாம் ஏதும் செய்ய அவசியம் இருக்காது.
மற்ற 108ம் சரியாய் இருந்தால், இந்த நான்கும் தானாய் மலர்ந்திடும்.
இந்த 108ல் 54 பிங்களா (ஆண்தன்மை), 54 ஈடா (பெண் தன்மை).
அதனால் 108 அடிப்படை சக்தி ஸ்தலங்களில் 54 சிவன், மற்றும் 54 தேவி கோவில்கள் காசியில் அமைக்கப் பட்டன.
காசி நகர அமைப்பே வடிவியல் (geometry) அளவிலும் கணிதவியல் அளவிலும் மிகக் கச்சிதமான, அற்புதமான வடிவமைப்பு.
பிரபஞ்சத்தின் சிறு அம்சமான மனிதனும், அந்தப் பிரபஞ்சமும் தொடர்பு கொள்வதற்கான மிக நேர்த்தியான அமைப்பு.
இது முழு உயிரோட்டத்தில் இயங்கும் ஒரு மாபெரும் மனித உடலின் பிரதிபலிப்பு.
முழு உயிரோட்டத்தில், முழுமையான சக்தி அமைப்பில் ஒரு உடல் இயங்கினால், அதுவே பிரபஞ்சத்தை அவனிற்குத் திறந்து வைக்கும்.
இப்படி பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ளக் கூடிய இடமாகத்தான் சிவசக்தியினால் காசி உருவானதாம்.
இங்கே ஒருவர் வாழமுடிந்தால், பிரபஞ்சத்துடன் இவ்வழியில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிந்தால், எவர் தான் காசியை விட்டு வெளியேற சம்மதிப்பார்..?
468 கோவில்களில், 108 போக, மீதத்தில் 56 விநாயகர் கோவில்கள், 64 யோகினி கோவில்கள், 12 சூரியன் கோவில்கள், 9 நவதுர்கை கோவில்கள், 9 சண்டி கோவில்களும் அடங்கும்.
இதில் 56 விநாயகர் கோவில்கள் 8 திசைகளில், 7 பொதுமையம் கொண்ட வட்டத்தில் அமைக்கப் பட்டிருக்கிறது.
இந்த வட்டத்தில் நடக்க ஆரம்பித்தால், இதன் முடிவு காசி விஸ்வநாதர் கோவிலில் முடியும்.
அதோடு சூரியனின் 12 கோவில்களும் தக்ஷிணாயனத்தில் இருந்து உத்தராயணத்திற்கு நகரும் சூரியனின் திசையை ஒத்து இருக்கிறது.
இப்படி படைப்பை உற்று நோக்கி, ஒவ்வொரு மாறுதலுக்கும் ஏற்ற வகையில் இயங்கும் வண்ணம் காசி அமைக்கப்பட்டது.
இது தவிர சிவன், சப்தரிஷிகளை உலகின் வெவ்வேறு மூலைக்கு அனுப்பிய போது, அவர்கள் அவரைப் பிரிய மனமில்லாமல் ஏங்கியதால், அவர்களுக்கு ‘சப்தரிஷி’ பூஜையை கற்பித்து, அதை அவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்தால், சிவனுடன் இருக்கும் உணர்வைப் பெறுவார்கள் என்றும் சொல்லி அனுப்பினாராம்.
இன்றளவிலும் இப்பூஜை விஸ்வநாதர் கோவிலில் இரவு 7 மணியளவில் நடைபெறுவது இக்கோவிலின் சிறப்பு.
அப்பூஜையை உணர்ந்தால் தான் புரியும்.
அப்பூஜையை செய்பவர்களுக்கு அதன் மகத்துவம் தெரியவில்லை எனினும், அதைச் சிறிதும் பிசகாமல் செய்வதால், அவ்விடத்தில் நம்பற்கரிய சக்தி உருவாகிறது.
அக்காலத்தில், இந்தப் பூஜை ஒரே நேரத்தில், காசியின் 468 கோவில்களிலும் செய்யப்பட்டது.
இதன் தாக்கத்தை வார்த்தைகளில் அடக்கிட முடியாது.
இப்படியொரு மாபெரும் உயிரோட்டத்தில் காசிதிளைத்திருந்ததை நாம் அனுபவிக்காமல் போனது, நம்முடைய மிகப்பெரும் துரதிர்ஷ்டம் என ஆன்றோர்கள் கூறுகிறார்கள்.
இதை நாம் கவனித்துப் பார்த்தால், எல்லையில்லாமல் வளர வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு.
இது வெறும் ஆசையாய் இருந்தால் போதாது என்று, அதை நிறை வேற்றிக் கொள்வதற்குத் தேவையான கருவியாய் காசி உருவாக்கப்பட்டது.
இது ஒரு சக்தி உருவம்.
இந்த உருவத்திற்கு ஏற்றாற்போல், அதைச் சுற்றி ஒரு ஊர் தானாக உருவானது.
அதனால் காசி என்பதை ஊராகப் பாக்காமல், அதை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும்.
இந்த மகத்தான வாய்ப்பை உணர்ந்துதான் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மக்கள் காசியை இன்றும் போற்றி வருகின்றனர்
#ப்யாரீப்ரியன் ஆன்மீக தொகுப்பிலிருந்து..

குடிக்கும் நீருக்கு வரி

நாம் குடிக்கும் ஒவ்வொரு ‪#‎சொட்டு_தண்ணீருக்கும்‬ செலுத்துகிறோம் என்பது உங்களுக்கு தெரியுமா?
இது என்ன புதுக் கதையா இருக்கேன்னு நீங்க நினைப்பது புரிகிறது. ஆனால்
அதுதான் ‪#‎உண்மை‬
அக்குவாபினா தண்ணீராய் இருந்தாலும் சரி அல்லது லோக்கல்ல போடுற கேன் தண்ணீராக இருந்தாலும் சரி குடிக்கிற ஒவ்வொரு சொட்டு தண்ணீருக்கும் நாம் அமெரிக்காவுக்கு வரி செலுத்துகிறோம்*
குடிநீர் சுத்திகரிப்பு RO முறையில்தான் சுத்திகரிக்கப் படுகிறது. அதாவது reverse osmosis முறை. இதன் ‪#‎காப்புரிமை‬ அமெரிக்கா வசம் உள்ளது_
நாம் எந்த கம்பெனி சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை குடித்தாலும் சரி அல்லது வீட்டிலேயே RO சாதனம் பொருத்தினாலும் பில்டர் மூலமாக அமெரிக்காவுக்கு வரி செலுத்த வேண்டும்.
இப்போது புரிகிறதா?
சுத்தமான மழைநீரை சாக்கடையிலும் கடலிலும் விட்டுவிட்டு கடல்நீரை ஏன் குடிநீராக்குகிறார்கள் என்று 1000 கோடி கடல்நீர் குடிநீராக்கும் திட்டமென்றால்
காலகாலத்திற்கும் RO மூலமாக அமெரிக்காவுக்கு நாம் வரி செலுத்துவோம். அரசியல்வாதிக்கு கமிஷன்.
ஆற்று நீரையெல்லாம் கடலில் கொட்டிவிட்டு அம்மா நீர் மூலமாக அமெரிக்காவுக்கு வரி
ஏரி குளங்களில் மீன் வளர்க்கிறேன் இறால் வளர்க்கிறேன் என்று நீராதாரங்களை பாழ்படுத்திவிட்டு ‪#‎கிராமங்களில்கூட‬ மக்களை கேன் தண்ணீர் குடிக்கவைத்து அமெரிக்காவுக்கு வரி
நம் முன்னோர்கள் நெல்லையும், புல்லையும் மட்டும் அறுவடை செய்தவர்கள் என்பது மட்டுமல்ல, நீரையும் அறுவடை செய்து ஏரி, குளம், குட்டை என பல வடிவங்களில் சேகரித்து வந்தனர்_. ‪#‎வளர்ச்சி‬ என்ற பெயரில் ஆறு,ஏரி, கால்வாய், குளம், குட்டை, காடுகள்,மலைகள் என குடிநீர் பெறக்கூடிய எல்லா இயற்கை வளங்களையும் திட்டமிட்டு அழித்து நாசப்படுத்தியது மட்டும் அல்லாமல் பெய்யும் மழையும் பெப்சிக்கும், கோக்குக்கும் அக்குவாபினவுக்கும் அம்மா வாட்டருக்கும் என எழுதி வைத்துவிட்ட நாட்டில் ஏழைகளுக்கு எது மிஞ்சும்? ஆறுகள்தோறும் பன்னாட்டு நிறுவனங்களின் கார் கம்பெனிகள், ரசாயன ஆலை, சாய பட்டறை ஆலை தோல் பதப்படுத்தும் ஆலை,பேப்பர் சர்க்கரை ஆலை கட்டி நீர்நிலையை பாழாக்கி அமெரிக்காகாரனுக்கு வரி.
நீங்கள் குடிப்பது சுத்திகரிக்கப்பட்ட நீர் இல்லை மாறாக குளோரின் ஆசிட் போன்ற நச்சு வேதிபொருட்கள் கலந்த மொல்ல கொள்ளும் விசம்(slow poison) என்பதை தெரிந்துகொள்ளுங்கள்
நிலத்திற்கு கீழே உள்ள நீர்தான் குடிப்பதற்கு உகந்த நீர்_, மண்ணை விட சிறந்த வடிகட்டி உலகில் வேறு எதுவும் இல்லை* என விழா (முந்நீர் விழவு) வைத்து அறிவித்த நம் முன்னோர்கள் எங்கே......
என் காலுக்கும் ஐந்தடிக்கும் கீழ் உள்ள குடிநீர் என் வாய்க்கு வருவதற்குள் நான் அமெரிக்காவுக்கு வரி கட்ட வேண்டும்
என்ற நிலையில் உள்ள நாம் எங்கே.
அய்யகோ!
(உங்கள் மனசாட்சி துடித்தால் இந்த பதிவை ஷேர் செய்யுங்கள்)
இந்திய தரகு முதலாளிகள் மற்றும் அரசியல்வாதிகளின் தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம், நுகர்வு கலாச்சாரம் இவற்றிற்கு பின்னால் _பன்னாட்டு நிறுவனங்களின்(கார்ப்பரேட்டுகளின்) சதி_ உள்ளது என்பதை நாம் எப்போது உணர்வோம்.
பின்குறிப்பு வழக்கம் போலவே ஆதாரம் இருக்கான்னு கேட்கறவங்களுக்கு RO அமெரிக்க காப்புரிமை எண் US4574049
~திரு.ரீகன் அவர்களின் பதிவிலிருந்து ‪#‎ப்யாரீப்ரியன்‬