Tuesday 12 July 2016

செஞ்சிக்கோட்டை

செஞ்சிக் கோட்டை !!!
தமிழ்நாட்டில் தப்பியிருக்கும் மிகச் சில கோட்டைகளுள் ஒன்றாகும் செஞ்சிக்கோட்டை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் அமைந்துள்ளது.
மராட்டிய மன்னரான சிவாஜி, "இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது" எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது. பிரித்தானியர் இதனைக் "கிழக்கின் ட்ரோய்" என்றனர். முகலாயர்களால் பாதுஷாபாத் என்றும் ,சோழர்களால் சிங்கபுர நாடு என்றும் அழைக்கப்பட்டது.
இயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களால் இணைத்தது செஞ்சிக்கோட்டை. பல போர்களை சந்தித்த பிறகும், இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது. சோழர் காலத்தில் செஞ்சிக்கு பெயர் சிங்கபுரி, சிங்கபுரி கோட்டம் எனப்பட்டது. அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது. இப்பொழுதும் செஞ்சிக்கு அருகே சிங்கவரம் என்ற ஊர் உள்ளது, அது செஞ்சி அந்த காலத்தில் பெரிய நிலபரப்பு கொண்ட ஊராக இருந்திருக்கலாம் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது.
செஞ்சிக் கோட்டை மூன்று குன்றுகளையும் அவற்றை இணைக்கும் சுவர்களையும் உள்ளடக்கியது. இவற்றுள் 7சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ளடங்கியுள்ளது. 240 மீட்டர் (800 அடி) உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த இக் கோட்டை 24 மீட்டர் (80 அடி) அகலமுள்ள அகழியினால் காப்புச் செய்யப்பட்டிருந்தது. இது எட்டு மாடிகளைக் கொண்ட கல்யாண மஹால், தானியக் களஞ்சியம், சிறைச் சாலை, படையினர் பயிற்சிக்கூடம்,
செஞ்சியம்மன் கோயில் என்பவற்றைக் கொண்டிருந்தது.
இந்த அரணுக்குள் ஆனைக்குளம் எனப்படும் புனிதக் குளம் ஒன்றும் இருந்தது. இக் கோட்டைக்கான அரணாக இயற்கையாக அமைந்த கிருஷ்ணகிரி, சக்கிலிதுர்க், ராஜகிரி ஆகிய குன்றுகள் இருந்தன. இடையேயிருந்த வெளிகள் 20 மீட்டர்கள் அகலம் கொண்ட சுவர்களினால் மூடப்பட்டிருந்தன.

#ப்யாரீப்ரியன் வரலாற்றுத் தொகுப்பிலிருந்து..

Monday 11 July 2016

ஓசூர் ராம்நகர் சோமேஸ்வரர் கும்பாபிஷேகம்

‪#‎ஓசூர்_1000ஆண்டு_பழமை_கோவில்_‬#கும்பாபிஷேகம்...
புகழ் வாய்ந்த, புராதன, ‪#‎வரலாற்றுசிறப்புமிக்கக்‬ கோயில்களுக்கு ‪#‎புத்துயிரூட்டி‬, புணருத்தாரணம் செய்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் காணும் கோயில்களின் பட்டியல்கள் இங்கே நீளுகின்றன. மக்கள் பணியே மகேசன் பணி என்பார்கள்.. அந்த மகேசனுக்கே தொண்டு செய்யும் அன்பு உள்ளங்களை, அவர்களின் அறப்பணிகளை இங்கே படம் பிடித்துக் காட்டுகின்றோம்
‪#‎ஓசூர்_சொர்ணாம்பிகை‬ சமேத ஸ்ரீ ‪#‎சோமேஸ்வரர்‬ திருக்கோயில் ‪#‎ஓசூர்_ராம்நகர்‬.
‪#‎பஞ்சபாண்டவர்கள்‬ தனித்தனியே லிங்கம் ஸ்தாபித்து வழிபட்ட புராதன கோயில் சமீபத்தில் நிலத்தை தோண்டிய போது ‪#‎பீமேஷ்வரர்‬, (பீமன் வழிபட்ட லிங்கம்) ‪#‎சோமேஷ்வரர்‬ (தர்மர் வழிபட்ட லிங்கம்) ‪#‎அர்ஜூனேஷ்வரர்‬ (அர்ஜூனன் வழிபட்ட லிங்கம்) ஆகிய மூன்று லிங்கங்கள் மட்டுமே வெளியே எடுத்துள்ளார்கள்.
நகுலன், சகாதேவன், வழிபட்ட லிங்கங்கள் வெளியே எடுக்காமல், குழியை மூடி மேலே பெரிய சிவன் உருவத்தையும், ஒரு சிவ லிங்கத்தையும் ஸ்தாபனம் செய்திருப்பதாக சிவாச்சாரியார் கூறினார்.
கும்பாபிஷேகம் நோக்கம்
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி. அவ்வாறு செய்யும்பட்சத்தில் பகவான் பூரண அருளோடு நல்லாட்சி செய்து, வரப்பிரசாதியாய் விளங்குவார். அப்படி சிதிலமடைந்த கோயில்களை இந்த கும்பாபிஷேகம் இணைய தளத்தின் மூலம் உலகுக்கு அடையாளம் காட்டியதன் மூலம், கும்பாபிஷேகம் நேற்று 10 -07-2016 ஞாயிறன்று வெகு விமரிசையாக செய்யப்பட்டது..

‪#‎ப்யாரீப்ரியன்‬

இசைத்தூண்கள்...

உலக அதிசயப்பட்டியலில் இடம்பெறாத
அதிசயமான
நெல்லையப்பர் கோவிலின் இசைத்தூண்கள்..!.

ப்யாரீப்ரியனின் கலைத்தொகுப்பிலிருந்து...

இந்த இசைத்தூண்களானது ஒரு நீளமான பாறையை வெட்டி எடுத்து, அதிலிருந்து ஏழு தனித்தனி சிறிய தூண்களாக வடித்துள்ளனர்.

இந்த ஒவ்வொரு சிறிய தூண்களை தட்டினால் சப்தஸ்வரங்கலான " ச,ரி,க,ம,ப,த,நி " என்ற தனித்தனி ராகங்களை அது இசைக்கின்றது.

சில பெரிய தூண்களை சுற்றி இடம் பெற்றுள்ள சிறிய தூண்களில் ஐம்பத்தி மூன்று தனித்தனி ராகங்களை இசைக்கின்றது.

இதில் பெரிய தூணில் கர்நாட சங்கீதமும், அதைச் சுற்றியுள்ள சிறிய தூண்களில் மிருதங்கம், கடம், சலங்கை, வீணை, மணி போன்ற இசைக்கருவிகளின், இசையை தருகின்றது.

ஒவ்வொரு கல்லையும் ஒவ்வொரு பதத்திற்கு இழைத்திருந்தால் தான் இப்படி இது வேறு வேறு ஒலிகளில் இசைக்கும்.

இதைத் தட்டுவதால் நம் விரல்களுக்கு எந்த வலியும் ஏற்படுவதில்லை.

உண்மையான இசை ஞானம் உள்ளவர்கள் இதைத் தட்டினால் இசைக்கருவியில் இருந்து வரும் இசையை விட மிக துல்லியமாக இது இசைக்கின்றது.
நம் முன்னோர்களின் கலைத்திறமைகளை போற்றி பாதுகாப்பது இளைய தலைமுறையினரின் கடமை...
கடமையுடன்
#ப்யாரீப்ரியன்

Sunday 10 July 2016

திருக்கழுக்குன்றம் சங்கு அதிசயம்


#திருக்கழுக்குன்றம் அதிசயம் .. 02-08-2016 அன்று

திருக்கழுக்குன்றத்தில் 12 ஆண்டுகளுக்கு ஓரு முறை சங்கு பிறக்கும்போது அதுசமயம் குளத்தில் அலைகள் அதிகமாவதுடன் - குளத்தின் ஓரங்களில் நுரை கட்டும்.

சங்கு கரை ஓதுங்கியதும் கோயில் அர்ச்சகர்கள் அதை தட்டில் எடுத்துவைப்பார்கள். அதுசமயம் அதன் உள்ளே உள்ள சங்கு பூச்சியானது தனது சங்கு ஓட்டை பிரித்துவிட்டு மீண்டும் தண்ணீரிலேயே சென்றுவிடும். அந்த நிகழ்வுக்காக அர்ச்சகர்கள் படிகளில் அமர்ந்திருப்பார்கள். இந்த அரிய நிகழ்வை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குலத்தை சுற்றிலும் நிரம்பி இருப்பார்கள்.

சாதாரணமாக உப்பு நீரில் -கடலில் தான் சங்கு பிறக்கும். இங்கு மட்டுமே சாதாரண தண்ணீரிலேயே இது தோன்றுகின்றது. மேலும் சரியாக 12 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் இதுதோன்றும். இந்த சங்குடன் சேர்த்து இதுவரை பிறந்துள்ள 7 சங்குகள் இங்குள்ள கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் விரும்பினால் எப்போழுது வேண்டுமானாலும் அதை பார்க்கலாம்.

இப்படிப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க ஊரில் தான் 12 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இலட்சதீப திருவிழா இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் (02/08/16) நடைபெறவுள்ளது.

ஓம்  நமசிவாய.  திருசிற்றம்பலம்

வேதகிரீஸ்வரர் திருக்கோயில், திருக்கழுக்குன்றம், காஞ்சிபுரம் மாவட்டம்
---------------------------------------
'தோடுடையான் ஒருகாதில் தூயகுழை தாழ
ஏடுடையான் தலைகலனாக இரந்துண்ணும்
நாடுடையான் நள்ளிருளேம நடமாடும்
காடுடையான் காதல் செய்கோயில் கழுக்குன்றே.'
-திருஞானசம்பந்தர்.

அப்பர், சுந்தரர், சம்பந்தர் மற்றும் மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடப்பெற்ற தலமான இது செங்கல்பட்டு வட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்தது. தினமும் உச்சி வேளையில் கழுகுகள் வந்து பிரசாதம் உண்ணும் மலைக்கோயில் என்று பிரசித்து பெற்றதாகும் இது.

சுமார் 1400 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த இக்கோயில் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் கட்டிய குடைக்கூளிக் கோயில் என்று கூறுவர்.

தலபுராணம்

சாருப்ய பதவிக்காக தவம் இருந்த பிரம்மனின் எட்டு மானச புத்திரர்கள், நஞ்சுண்டான் வரமருள நேரில் வருகையில் நா தவறி சாருப்ய என்பதற்கு பதில் கழுகு எனப் பொருள்படும் சாயுட்சய என கேட்டதால் கழுகாக மாறி, யுகத்திற்கு இருவர் என கழுகுகளாக இங்கு பிரசாதம் உண்டு செல்வதாக ஐதீகம்.

இந்திரன் பூஜித்த இத்தலத்தில் இன்றும் அவன் பூஜித்து வருகிறான் என்பதற்கு அறிகுறியாக இம்மலைமீதுள்ள கருவறைக்கோபுரக் கலசத்தின் அருகில் உள்ள துவாரத்தின் வழியாக இடிவிழுந்து சிவலிங்கத்தைச் சுற்றிப் பரவிப் பாய்ந்து விடுவதாகவும், இவ்வாறு இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நிகழ்வதாகவும் மறுநாள் கருவறை திறக்கும்போதும் தாங்கவொண்ணா வெப்பமாக இருக்கும் என்றும் கூறுவர்.

வேதமே கிரியாக (மலையாக) அமைந்த காரணத்தால், இத்தலப் பெருமான் வேதகிரீஸ்வரர் என்று வழங்கப்பெறுகிறார். பக்தவத்சலேஸ்வரர் என்னும் பெயரும் கொண்டிருக்கிறார்.தாயாரின் திருப்பெயர் திரிபுரசுந்தரி என்பதாகும்.

அப்பன் மட்டுமன்றி அம்மையும் இங்கு சுயம்புவானவள் என்பது இத்தலத்தின் தனிச்சிறப்பு.

தலச்சிறப்பு

கடலில் மட்டுமே கிடைப்பதான வலம்புரிச் சங்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இத்தலத்துத் திருக்குளத்தில் கிடைக்கப் பெறுகிறது. இது மார்க்கண்டேய தீர்த்தம் என்றும் சங்கு தீர்த்தம் என்றும் வழங்கப்பட்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்விக்கப்படுகிறது.

இந்த குளத்தில் குளித்தால் தோல் வியாதி, மனநிலை பாதிப்பு குணமாகும் என்பது ஐதீகம். இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து சங்கு தீர்த்த குளத்தில் நீராடி வழிபட்டு செல்கின்றனர்.

வடநாட்டிலிருந்து வருவோர் பெரும்பாலும், இத்தலத்தைப் பட்சி தீர்த்தம் என்றே அறிவர். இம்மலையைச் சுற்றி 12 தீர்த்தங்கள் உள்ளன.

எம்பெருமான் ஜோதி வடிவாய்க் காட்சியளிக்கும் திருவண்ணாமலையைப் போல, இங்கும் கிரிவலம் செய்வது மிகச் சிறப்பானதாகும். அம்மலையைச் சுற்றி 12 லிங்கங்கள் உள்ளதைப் போல, இம்மலையைச் சுற்றி 12 தீர்த்தங்கள் உள்ளன.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குருபகவான் கன்னி லக்னத்தில் நுழையும் நாளன்று லட்சதீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று வீடுகளிலும், கோயில்களிலும், சங்குதீர்த்த குளக்கரையிலும் லடச்க் கணக்கில் விளக்குகள் ஏற்றப்பட்டு ஊர் முழுவதும் ஒளி வெள்ளத்தில் மிதக்கும்.
இந்த திருவிழாவானது வட இந்தியாவில் கொண்டாடப்படும் புஷ்கரமேளா, கும்பமேளாவிற்கு இணையானது.

கிரிவலம் செல்லும் பக்தர்கள் மூலிகை காற்றை சுவாசிப்பதால் நோய்கள் நீங்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

இங்கு மலை மீது வேதகிரீஸ்வரர் கோயில், கீழே பக்தவச்சலேஸ்வரர், திரிபுர சுந்தரி அம்மன் கோயில்கள் உள்ளன.

ப்யாரீப்ரியன்..ஆன்மீக தொகுப்பிலிருந்து..

ஓசூர் தொகுதி MLA க்கள்

‪#‎தொகுதி‬ அறிமுகம்
‪#‎ஒசூர்‬
தொகுதி எண்: 55
சிறப்புகள்:
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சேலம் ஜில்லாவின் தலைநகராகத் திகழ்ந்த பெருமையுடையது ஒசூர் நகராகும்.
ஆசியாவிலேயே மிகப் பெரிய ‪#‎கால்நடைப்பண்ணை‬ மத்திகிரியில் அமைந்துள்ளது.
ஒசூர் அருகே உள்ள தொரப்பள்ளி அக்ரஹாரத்தில் மூதறிஞர் ராஜாஜி பிறந்தார் என்பது சிறப்பாகும்.
தமிழக-கர்நாடக மாநில எல்லையில் உள்ள ஒசூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தமிழ், கன்னடம், தெலுங்கு, உருது என பன்மொழி பேசும் வாக்காளர்கள் நிறைந்துள்ளனர்.
சுமார் 100-க்கும் மேற்பட்ட பெரிய தொழிற்சாலைகளும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறுந்தொழில்சாலைகள் இத் தொகுதியில் உள்ளன. இதனால் வெளி மாவட்டங்களில் இருந்துவந்து குடியேறிய வாக்காளர்கள் 50 சதவீதம் பேர் உள்ளனர்.
கடந்த 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரை இந்த தொகுதியில் ஒசூர் மற்றும் சூளகிரி ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட கிராமப் பகுதிகள் இடம்பெற்றிருந்தன.
இதனால், ஒசூர் தொகுதி மாவட்டத்திலேயே மிகப் பெரிய சட்டப்பேரவைத் தொகுதியாக விளங்கியது. ஆனால், கடந்த 2011 ஆம் ஆண்டில் தொகுதி சீரமைப்பில் சூளகிரி ஊராட்சி ஒன்றியப் பகுதிகள் புதிதாக உருவாக்கப்பட்ட வேப்பனப்பள்ளி தொகுதியில் சேர்க்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதி ஒசூர்.
இந்தத் தொகுதியானது, 1951 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது முதல் தேசியக் கட்சிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
அதிகபட்சமாக 9 முறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. 2 முறை சுதந்திரா கட்சியும், ஒருமுறை ஜனதா தளமும், 2 முறை சுயேச்சை வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர்.‪#‎முதன்முறையாக‬ 2016 ல் ‪#‎அதிமுக‬ சார்பில் பாலகிருஷ்ணா ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டு ‪#‎கால்நடைத்துறை_அமைச்சராக‬ பதவியேற்றுள்ளார்...
இத் தொகுதியைப் பொருத்தவரையில் ரெட்டி, கவுடா, நாயுடு, வன்னியர், தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளிட்ட சமுதாய மக்கள் பரவலாக உள்ளனர். மேலும், முஸ்லிம் சமுதாய மக்களும் அதிக அளவில் உள்ளனர்.
கேரளம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இதனால் ஒசூர் தொகுதியில் வெற்றிவாய்ப்பை நிர்ணயிப்பதில் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில மக்களின் ஓட்டுகளின் பங்கு முக்கிய இடம் வகிக்கிறது.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்:
ஒசூர் நகராட்சி: ------------------------------: 45 வார்டுகள்
ஒசூர் ஊராட்சி ஒன்றியம்
26 ஊராட்சிகள்
வாக்காளர்கள்:
மொத்த வாக்காளர்கள் : 2,96,779
ஆண் வாக்காளர்கள் : 1,53,794
பெண் வாக்காளர்கள் : 1,42,934
திருநங்கை வாக்காளர்கள்: 51
வாக்குச்சாவடிகள்: 342
இதுவரை எம்.எல்.ஏ.க்கள்....
1952 முனி ரெட்டி- சுயேச்சை
1957 அப்பாவு பிள்ளை- சுயேச்சை
1962 ராமச்சந்திர ரெட்டி- காங்கிரஸ்
1967 வெங்கடசாமி- சுதந்திரா கட்சி
1971 வெங்கடசாமி- சுதந்திரா கட்சி
1977 ராமச்சந்திர ரெட்டி- காங்கிரஸ்
1980 வெங்கட் ரெட்டி- காங்கிரஸ்
1984 வெங்கட் ரெட்டி- காங்கிரஸ்
1989 ராமச்சந்திர ரெட்டி -காங்கிரஸ்
1991 கே.ஏ.மனோகரன் -காங்கிரஸ்
1996 வெங்கடசாமி -ஜனதா தளம்
2001 கே.கோபிநாத் -காங்கிரஸ்
2006 கே.கோபிநாத்- காங்கிரஸ்
2011 கே.கோபிநாத்- காங்கிரஸ்
2016
‪‎பாலகிருஷ்ணாரெட்டி‬ - அதிமுக

‪த‎கவல்;ப்யாரீப்ரியன்‬@ pyaree priyan...ஓசூர்
+918124481600

Sunday 3 July 2016

நந்திகள் பலவிதம்

நந்திகள்.. பலவிதம்...
#ப்யாரீப்ரியனின் ஆன்மீகப் பகிர்வு
             
~#நந்திகல்யாணம் பார்த்தால் #முந்திகல்யாணம்’ என்பது பழமொழி.

கோயில்களில் நடக்கும் நந்தி கல்யாண வைபவத்தில் கலந்து கொள்பவர்களுக்கு அந்தப் பேறு உடனே கிட்டுகிறது.

பொதுவாக கோயிலில் *சிவலிங்கமும் நந்தியும்*
ஒரே #நேர்க்கோட்டில் காட்சி தருவார்கள்.

ஒரு ஆலயத்தில் #ஏழு நந்திகள் இருக்குமானால்,

*அந்த ஆலயம் மிகச் சிறப்புடையது.*

#ஐந்து பிரகாரங்கள் உள்ள கோயில்களில் ,

*#இந்திர நந்தி,*

*#பிரம்ம நந்தி,*

*#வேத நந்தி,*

*#விஷ்ணு நந்தி,*

*#தர்ம நந்தி,*

என ஐந்து நந்திகளை தரிசிக்கலாம்.

ஒரு சமயம் இந்திரன்,
நந்தி ரூபத்தில் சிவபெருமானுக்கு வாகனமாக இருந்தார்.

அவரே #இந்திரநந்தி இந்திரன் போகங்களுக்கு அதிபதியாகத் திகழ்வதால் இவர் #போக நந்தி என்றும் அழைக்கப்படுகிறார்.

#பிரம்மன் ஒரு சமயம் நந்தியாகி சிவனைத் தாங்கினார்.

அதனால் அவர் #பிரம்மநந்தி எனப்பட்டார்.

பிரம்மன் வேத சொரூபி ஆனதால் இவரே #வேதநந்தியும் ஆனார்.

முப்புரத்தினை எரிப்பதற்காக *சிவபெருமான்* "தேரில்" ஏறியதும் "தன்னால்தான் திரிபுரம் அழியப் போகிறது" என்று கர்வம் கொண்டது *தேர்*.

இதனை அறிந்த *சிவபெருமான்* தன் கட்டை விரலை தேரில் ஊன்றினார், ""தேர்"" உடைந்தது.

அப்போது #மகாவிஷ்ணு நந்தியாக உருவம் எடுத்து சிவபெருமானை தாங்கினார்.

அவர்தான் #மால்விடை என்று சொல்லக்கூடிய #விஷ்ணு நந்தி.

மகா பிரளய காலத்தில்,
#தர்மதேவதை நந்தியாக மாறி சிவபெருமானைத் தாங்கியது.

அதுதான் "தர்ம விடை" எனப்படும்
#தர்மநந்தி.

கோயில் பிரதான வாயிலில் வலது பக்கம் பார்த்தபடி #அதிகாரநந்தி இருப்பார்.*

பின்புறம் #ரிஷப நந்தி இருக்கும்.

*மூன்று நந்திகள் உள்ள ஆலயத்தில்* இறைவனிடமிருந்து மூன்றாவது கொடி மரத்திற்கு அருகில் உள்ள நந்தி #ஆன்மநந்தி எனப்படும்.

இந்த நந்தியை #சிலாதிநந்தி  என்றும் சொல்வர்.

*கயிலையைக் காப்பவர், அதிகார நந்தி.*

*சிவன் தாண்டவம் ஆடும்பொழுது மத்தளம் இசைப்பார்.*

*சிவபெருமானின் கட்டளையை நிறைவேற்ற சேனைத் தலைவராகவும் இருப்பவர்.*

*பிரதோஷ காலத்தில் நந்தி மிகவும் போற்றப்படுகிறார்.*

*நந்தியை தினமும் வணங்குபவர்களுக்கு ஞானம் கைகூடும்.*

*குலம் செழிக்கும்,*
*சிறப்பான வாழ்வு அமையும்.*
      

ஹர ஹர மஹா தேவா

.   திருச்சிற்றம்பலம்

.  ஓம் நமசிவாய
#ப்யாரீப்ரியன் ஆன்மீக பதிவு தொகுப்பிலிருந்து...