Saturday 31 October 2015

புலிச்சின்ன கல்வெட்டு

சோழர்களின் புலி சின்னம்
வாணகோ அரையரின் மகளும்
மூன்றாம் இராசராச சோழனுடைய (1216-1256)
பட்டத்தரசியும்மான சோழனை முழுதுடையாள்
கூத்தாடும் தேவர் நாச்சியார் என்பவரின் பெயருக்கு முன்னால் இந்த புலி சின்னம் கோட்டோவியமாக செதுக்கப்பட்டுள்ளது.
ஈஸ்வரன் கோயிலின் கருவறையின் வடக்கு புறம் நான்முகனின் கீழ் குமுதப்பட்டையில் உள்ளது.
தமிழ் நாட்டில் வேறு எங்கேனும் சோழர்களின் புலி இலாஞ்சனை
கண்டுபிடிக்கப்பட்டுள்ளனவா?
கல்வெட்டு செய்தி
"..ஸ்ரீ வாணகோவரையர் மகளார் கூத்தாடுந்தேவர் னாச்சியார்
சோழனை முழுதுமுடை
யார் பெண்னை நாயனாற்கு திரிநுந்தா விளக்குக்கு குடுத்த
பசு பத்து ரிஷப க..."
கல்வெட்டு விளக்கம்
கல்வெட்டின் துவக்கத்தில் சோழர்களின் புலி சின்னம்
பொறிக்கப்பட்டுள்ளன .வாணகோவரையரின் மகளும்
சோழனை முழுதும் உடையவருமான கூத்தாடுந் தேவர் நாச்சியார் பெண்னை நாயனாற்கு ஓரு நுந்தா விளக்குக்கு
எரிக்க பத்து பசுவும், ஓரு எருதும் தானமாக கொடுத்துள்ளார்.
இக்கோயிலில் மூன்றாம் இராசராச சோழனுடைய(1216-1256)
கல்வெட்டுகளும்
மூன்றாம் குலோத்துங்க சோழனுடைய (1178-1218) கல்வெட்டுகளும் நிறைய காணப்படுகின்றன.
ஆதலால் இது மூன்றாம் இராசராசனின் பட்டத்தரசியாகதான் இருக்க முடியும். அதுவும் சோழனை முழுதுடையாள் என்ற வாசகம் வருவதால் கண்டிப்பாக இராசராசனின் பட்டத்தரசிதான்.
-அறம் கிருஷ்ணன்

மன்னர் இராம நாதனின் அரிய கல்வெட்டு ்

பிச்சை எடுப்பது தவறு என்று சொன்ன முதல் மன்னன்.
வயிற்றுப்பசியோடு யாரும்
வாழ்ந்திட கூடாது .என்று யோசித்த ஒரு மன்னன்
அதற்காண அரசானையும், அதனை எப்படி செயற்படுத்த வேண்டும் என்ற முறையையும்,
அரசானையை கடைப்பிடிக்காத மக்களுக்கும்
அதனை செயல்படுத்தாத அதிகாரிகளுக்கு என்ன தண்டனை
என்ற விவரங்களை கல்வெட்டாக செதுக்கி வைத்துள்ளான்
போசள அரசன் வீர இராமநாதன் .
ஆண்டு-கி.பி.1295
அரசு - போசளர்
மன்னன் -வீரராமநாதன்
கல்வெட்டு செய்தி
"ஸ்ரீ...ஸ...தி..ஹொ(சள) ஸ்ரீவீரராமநா(த) வரீஸர்க்கு
யாண்டு நாற்பத்தொன்றாவது உடையார் பெண்னையாண்டார் மட த்திலும் பெண்னை நாயனார் தேவதானமாக (ஊ)ர்களிலும் ஓரு அதிகாரியாதல் கணக்கர் காரியஞ் செய்வார்களாதல் கூசராதல் ஆரேனு
மொருவர் வந்து விட்டது விடாம(ல்) சோறு வேண்டுதல்
மற்றோதேனுமொரு நலிவுகள் செய்குதல் செய்தாருண்டாகில்
தாங்களே அவர்களைத் தலை
யை அறுத்துவிடவும் அப்படி செய்திலர்ளாதல் தங்கள்
தலைகளோடே போமென்னும்படி றயப்புத்த பண்ணி இதுவே
சாதன
மாகக்{கொ}ண்டு அங்கு வந்து நலிந்தவர்களைத் தாங்களே ஆசைஜ பண்ணிக் கொள்ளவும் சீ காரியமாகத்
தாங்க......த....போதும் போன அமுதபடிக் குடலாக ஸவ
மாணியமாகக் குடுத்தோம் அனைத்தாயமும் வி
ட்டுக்கு.... கூசர் உள்ளிட்டார் பையூரிலே இருக்கவும் சொன்னோம் இப்படி....தெ இதுக்க்கு வில
ங்கனம் பன்னினவன் கெங்கைக் கரையில் குராற் பசுவை கொன்றான் பாவத்தைக் கொள்வான் "
கல்வெட்டு விளக்கம்
வீர இராமநாதன் எனும் போசள அரசனுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஓரு யோசனை தோன்றியிருக்கிறது.
பாடுபடுகிற எவரும் பசியோடு இருக்க கூடாது.
அதற்காக மடத்தை கட்டி
அந்த மடத்திற்கு அதை சுற்றியுள்ள பலஊர்களை தேவதானமாக எழுதிவைத்துவிடுகிறான்.
அப்படி தேவதானமாக எழுதிவைத்த ஊர்களில் உள்ளவர்களும், மடத்தில் தங்கியிருப்பவர்களும் யாரும் சோற்றுக்காக பிச்சை எடுக்க கூடாது. அப்படி யாராவது சோறு கேட்டு வந்தாலோ அல்லது பிச்சை எடுத்தாலோ அவர்களின் தலையை அறுத்துவிட வேண்டும்.
இதை பார்த்து கொண்டு அரசானையை பின்பற்றாத அதிகாரிகளின் தலையையும் அறுத்துவிட வேண்டும்.
பெண்ணேஸ்வரமடத்து இறைவனுக்கு கொடுக்கப்பட்ட வரிச்சலுகைகள், மாநியங்கள், அதிகாரிகளாளும் பிற சிற்றரசுகளாளும், இடையூர் இன்றி நடைப்பெற வேண்டும்
என்ற நோக்கத்தில்தான் வீர இராமநாதன் ஓரு கடுமையான
அரசானையை வெளியிட்டுள்ளான்.
கோயில் மற்றும் மடத்திற்கு வரவேண்டிய வருவாய்களை தடை செய்தாலோ, அல்லது சோறு கேட்டு வந்தாலோ, அவர்கள் சிரச்சேதம் செய்யப்படவேண்டும் என இவ்வானை குறிப்பிடுகிறது.
அவர்கள் அதிகாரிகள், கணக்கர், காரியம்செய்பவர், கூசர், என இந்த அரசானையை இவர்கள் யாரும் மீரக்கூடாது.
சோறு வேண்டுதலும், பிற நலிவுகள் செய்தலும் தவறு.
இந்த செய்தி கோயிலின் தெற்குச் திருச்சுற்று சுவர் பீடத்தில்
உள்ளது.
இடம்-காவேரிப்பட்டிணம்-நெடுங்கல் போகும் சாலை.
பெண்ணேஸ்வரமடம்.
-அறம் கிருஷ்ணன்.

Curving technics of our ancestors

உங்கள எந்த அளவு இம்ப்ரெஸ் பண்ணும்னு தெரியல இருந்தும் நான் பாத்து மிரண்ட சில விஷயங்கள உங்களுக்கு சொல்றேன், அதே ஆங்கெல்ல நீங்களும் பாருங்க.

1) ரொம்ப க்ளோசா வாட்ச் பண்ணுங்க அரையடிக்கு அரைஅடி அளவே இருக்குற இந்த சிற்பத் தொகுப்பு ஒரே கல்லுல செஞ்சது கிடையாது ரெண்டு கல்லோட ஜாயிண்ட், வலது பக்கம் ஓரத்துல லேசா ஒடஞ்சிருக்காட்டி நம்மால நிச்சயமா கண்டு பிடிச்சிருக்க முடியாது. இதுல பெரிய சேலஞ் என்னன்னா ரெண்டு கல்லும் ஒண்ணு மேல ஒண்ணு உக்காரும் போது ஒரு நூல் அளவு வெலகினாலும் பாக்க நல்லா இருக்காது..மொத்த உழைப்பும் வீணாகும். ஆனா நான் சொன்ன பிறகு தான் அது ரெண்டு கல்லுன்னே உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்!. இப்போ கேள்வி என்னன்னா..What Calculations they have used to bring this perfection?

2) கிரானைட் ஒரு முரட்டுத் தனமான கல்லு. இன்னைக்கு அத கட் பண்ணவே பெரிய ப்ளேட் கொண்ட ராட்சஸ சைஸ் மஷினும் பல கேலன் லிட்டர் தண்ணியும் தேவைப்படுது. அந்த கல்லுல வெறும் சுத்தியலும் உளியும் மட்டுமே வெச்சி அந்த பூ, மாலைத் தொங்கல், முத்துத் தோரணம், அந்த முத்துத் தோரணம் சாதாரணமா கூட இல்ல.. மூணு சிங்கத்தோட வாயில இருந்து வருது, அதுல நடுவுல இருக்குற சிங்கத்த முழுசாவும், இடது, வலது பக்கம் இருக்குற சிங்கத்த பாதியாவும் காட்டி இடுக்குறது தான் வித்தை! அப்டியே மறக்காம 2 இன்ச் சைஸ்ல மேல இருக்குற அந்த அந்த பூதகனன்களோட முகங்களையும் பாருங்க!! இப்போ கேள்வி என்னன்னா..Did they used a needle to carve these things?

3) இதுல எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச விஷயம்னா, படத்தோட இடது பக்கம் ஆடிட்டு இருக்குற அந்த பெண்ணோட முகம்! கிரானைட கட் பண்ணுறதே சவால்னா! அதுல இந்த "Graceful Face" ன்னு சொல்லுவாங்களே அந்த வார்த்தைய அந்த பெண்ணோட முகத்தோட ஒப்பிட்டு பாருங்க! இன்னும் கொஞ்சம் க்ளோசா வாட்ச் பண்ணோம்னா நம்ம உடம்ப அப்படி வளைக்குறதே சிரமம், அப்படியே நாம செஞ்சாலும் உடம்ப அந்த அளவுக்கு வளைக்கும் போது முகத்துல கஷ்டத்த தான் நாம காட்டுவோம், அந்த வளைவுக்கு மத்தியில அவ்வளவு அழகான ஒரு expression கொடுக்கக் முடிஞ்சிருக்குன்னா! அந்த அளவுக்கு Trained
Artist அன்னைக்கு இருந்திருக்காங்கன்னு தான அர்த்தம்!. அத பாத்து..பாத்து..பாத்து..உள்வாங்கி இருந்தாதானே அத கல்லுல கொண்டு வந்திருக்க முடியும்?

4) இன்னும் கொஞ்சம் ஜூம் பண்ணி உள்ள போங்க..படத்தோட வலது பக்கம் இருக்குற பெண் நேரா ஆடிட்டு இருக்கா..அதனால அவ கழுத்துல இருக்குற சங்கிலி நேரா தொங்குது..இடது பக்கம் இருக்குற பெண் ரொம்ப வேகமா Cross Leg ல ஆடிட்டு இருக்கா..வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாத அந்த சங்கிலி எப்படி ஆடிட்டு இருக்குன்னு பாருங்க..சிற்பமே ரொம்ப ரொம்ப சின்னது..அதுலயும் இந்த சங்கிலிய கூட இந்த அளவு மெனக்கெட்டு காட்டி இருந்திருக்காங்கன்னா.. என்ன ஒரு தொழில் பக்தி இருந்திருக்கணும். வடிச்சி முடிக்க எத்தன மாசம் கஷ்டப்பட்டிருபாங்கன்னு தெரியல..ஆனா அவங்களோட Final Ultimate Aim நாம பாத்து ஒரு நொடி ரசிக்கனும்குறது மட்டும் தான்!

ஆதித்த கரிகாலன் காலம்.
1100 வருடங்கள் கடந்தது.

Wednesday 28 October 2015

Historical Kings lists

சங்ககாலத்திற்கு முன்பிருந்த சோழர்கள்.
புறநானூறு பாடல்களில் இருந்து பெறப்பட்ட சோழமன்னர்களின் பெயர்கள். தோராயமாக அறியப்பட்ட அவர்களின் ஆட்சி காலங்கள்.
ஏறி ஒலியன் வேந்தி 3023 B.C.E
மாந்துவாழி C. 2980 B.C.E
எல் மெய் நன்னன் C. 2945 B.C.E
கீழை கிஞ்சுவன் C. 2995 B.C.E
வாழிசை நன்னன் C. 2865 B.C.E.
மெய் கியகுசி ஏற்று C. 2820 B.C.E.
ஆய் குழி அகுசி ஏற்று C. 2810 B.C.E.
திழகன் மாந்தி C. 2800 B.C.E.
மாந்தி வேலன் C. 2770 B.C.E.
ஆய் அடும்பன் C. 2725 B.C.E.
ஆய் நெடுஞ செட் சோழ தகையன் C. 2710 B.C.E.
எல் மெய் ஆக்குவன் (அ) கீழ் நெடு மன்னன் C. 2680 B.C.E.
முடிகோ மெய் காளையன் தகையன் C. 2650 B.C.E.
இளங்கோ கீழ் காளையன் தகையன் (எ) இலங்கீழ் நன்னன் C. 2645 B.C.E - இவருடைய சகோதரர் ஆய் கீழ் நன்னனால் கடம்பர் வழி தோற்றம்.
காளையன் குடின்ஞான் C. 2630 B.C.E.
நெடுங்காளையான் தகயன் C. 2615 B.C.E.
வேங்கை நெடுவேல் வரையன் C.2614 B.C.E.
வேட்கால் குடின்ஞான் C. 2600 B.C.E.
மெய்வேல் வரையன் C. 2590 B.C.E.
சிபி வேந்தி C. 2580 B.C.E.
பருநோஞ்சி சாமழிங்கன் C. 2535 B.C.E.
செம்பிய சோழன் C. 2525 B.C.E.
சாமழி சோழிய வேளாண் C. 2515 B.C.E.
உதிவேன் காளை தகன் C. 2495 B.C.E.
நன்னதட் காளை தகன் C. 2475 B.C.E.
வேல் வேன் மிந்தி C. 2445 B.C.E.
நெடுஞ் செம்பியன் C. 2415 B.C.E.
நெடுனொஞ்சி வேந்தி C. 2375 B.C.E.
மெய்வேல் பகற்றி C. 2330 B.C.E.
ஆய் பேருண் தோன்னொஞ்சி C. 2315 B.C.E.
குடிக்கோ புங்கி C. 2275 B.C.E.
பெருங்கோப் பொகுவன் C. 2250 B.C.E.
கோத் தற்ற்ரி C. 2195 B.C.E.
வடிசெம்பியன் C. 2160 B.C.E.
ஆலம் பொகுவன் C. 2110 B.C.E.
நெடுஞ்செம்பியன் C. 2085 B.C.E.
பெரும்பெயர் பொகுவன் C. 2056 B.C.E.
கடுஞ்செம்பியன் C. 2033 B.C.E.
நெடுங்கதன் C. 2015 B.C.E.
பருநக்கன் C. 1960 B.C.E.
வனிசெம்பியன் C. 1927 B.C.E.
உதசிர மொந்துவன் C. 1902 B.C.E.
பெருங்கத்தன் C. 1875 B.C.E.
கடுங்கன்தலன் C. 1860 B.C.E.
நக்கமொஞ்சுவன் C. 1799 B.C.E.
மார்க்கொவேல் மாந்துவன் ஆத்திக்கோ C. 1786 B.C.E.
முசுகுந்தன் வேந்தி C. 1753 B.C.E.
பெருனக்கன் தற்ற்ரி C. 1723 B.C.E.
வேர்கத்தன் C. 1703 B.C.E.
அம்பலத்து இருமுன்றுவன் C. 1682 B.C.E.
காரிமொந்துவன் C. 1640 B.C.E.
வேன்னக்கன் தற்ற்ரி C. 1615 B.C.E.
மார்கோ சுந்துவன் C. 1565 B.C.E
வேற்பருந்தோன் முன்றுவன் C. 1520 B.C.E.
உதன்கத்தன் C. 1455 B.C.E.
காரிகோ சுந்துவன் C. 1440 B.C.E.
வென்றி நுன்குணன் C. 1396 B.C.E.
மோந்துவன் வேந்தி C. 1376 B.C.E.
காந்தமான் C. 1359 B.C.E.
முன்றுவன்வேந்தி C. 1337 B.C.E.
காந்தமான் C. 1297 B.C.E.
மொஞ்சுவன் வேந்தி C. 1276 B.C.E.
அனிசெம்பியன் C. 1259 B.C.E.
நுன்குணன் வேந்தி C. 1245 B.C.E.
மாற்கொப்பெரும் சென்னி C. 1229 B.C.E.
மொஞ்சுவன் நன்வேந்தி C. 1180 B.C.E.
கோப்பெருனர் சென்னி C. 1170 B.C.E.
மோந்துவன் செம்பியன் C. 1145 B.C.E.
நற்சென்னி C. 1105 B.C.E.
செட்செம்பியன் C. 1095 B.C.E.
நக்கர் சென்னி C. 1060 B.C.E.
பருண் செம்பியன் C.1045 B.C.E.
வெஞ்சென்னி C. 998 B.C.E.
முசுகுந்தன் C. 989 B.C.E.
மார்கொப் பெருஞ்செம்பியன் C. 960 B.C.E.
நெடுஞ்சென்னி C.935 B.C.E.
தட்செம்பியன் C. 915 B.C.E.
அம்பலத்து இருவேர் செம்பியன் C. 895 B.C.E.
காரிகோ சென்னி C. 865 B.C.E.
வேன்வேர் சென்னி C. 830 B.C.E.
கந்தமன் C. 788 B.C.E.
கந்தலன் C. 721 B.C.E.
செட் சென்னி C. 698 B.C.E.
வணி நுன்குணன் C. 680 B.C.E.
முதுசெம்பியன் வேந்தி C. 640 B.C.E.
பீலன் சேம்பிய சோழியன் C. 615 B.C.E.
மேயன் கடுங்கோ C. 590 B.C.E.
தித்தன் C. 570 B.C.E.
பெருநற்கிள்ளி போர்வைக்கோ C. 515 B.C.E.
கடுமுன்றவன் C. 496 B.C.E.
கோப்பெருஞ்சோழன் C. 495 B.C.E.
நற்கிள்ளி முடித்தலை C. 480 B.C.E.
தேவ்வன் கோ சோழன் C. 465 B.C.E.
நரன் செம்பியன் C. 455 B.C.E
நக்கன் பீல வளவன் C. 440 B.C.E.
இனியன் தேவன் சென்னி C. 410 B.C.E.
வர்செம்பியன் C. 395 B.C.E.
நெடுந்செம்பியன் C. 386 B.C.E.
நக்கன் அரண் சோழன் C. 345 B.C.E.
அம்பலத்து இருங்கோ சென்னி C. 330 B.C.E.
பெருநற்கிள்ளி C. 316 B.C.E.
கோ செட் சென்னி C. 286 B.C.E.
செருபழி எரிந்த இளஞ்சேட்சென்னி C. 275 B.C.E.
நெடுங்கோப் பெருங்கிள்ளி C. 220 B.C.E.
சென்னி எல்லகன் C. 205 B.C.E. - இலங்கையின் மீது படையெடுத்த எல்லாளனின் சகோதரன்
பெருங்கிள்ளி C. 165 B.C.E.
கொப்பெருஞ்சோழிய இளஞ்சேட்சென்னி C. 140 B.C.E.
பெருநற்கிள்ளி முடித்தலை கோ C. 120 B.C.E.
பெரும்பூட்சென்னி C. 100 B.C.E.
இளம்பெருன்சென்னி C. 100 B.C.E.
பெருங்கிள்ளி வேந்தி (எ) கரிகாலன் I C. 70 B.C.E.
நெடுமுடிகிள்ளி C. 35 B.C.E.
இலவந்திகைப்பள்ளி துஞ்சிய மெய் நலங்கிள்ளி சேட் சென்னி C. 20 B.C.E.
ஆய்வே நலங்கிள்ளி C. 15 B.C.E.
உருவபக்ரர் இளஞ்சேட்சென்னி C. 10 - 16 C.E.

Monday 26 October 2015

C.M.C HOSPITAL

சிஎம்சி உருவானது?
தொடர்ந்து படியுங்கள்...
திண்டிவனம் என்றும் போல காரிருளில்
மூழ்கியிருந்தது. அது இரவு நேரம்.
மின்சாரம் இல்லாத காலம். வருடம் 1870 !
அந்த மிஷன் பங்களாவில் சிம்னி விளக்கு
வெளிச்சத்தில் ஒரு இளம் அழகிய அமெரிக்க
நங்கை ஆங்கில நாவல் படித்துக்
கொண்டிருந்தாள் .
அவளின் பெயர் ஐடா ஸோஃபியா ஸ்கடர் ( Ida
Sophia Scudder ) . வயது 20.
அமெரிக்காவில் இறைத் தூதர்
( missionary ) பயிற்சியும் பெற்றவள் .
ஆனால் அதில் ஆர்வம் இல்லாதவள் .
இந்தியாவில் நிலவிய வறுமை,
பஞ்சம்,வியாதி அவளை விரக்திக்குள்ளா
க்கியது .
அவளுடைய தந்தை ஒரு மருத்துவ இறைத்
தூதர் ( Medical Missionary ) பெயர்
மறைத்திரு டாக்டர் ஜான் ஸ்கடர் .
திண்டிவனம் பகுதியில் ஏசுவின்
இறைப்பணியுடன் மருத்துவப்
பாணியிலும் ஈடுபட்டிருந்தார்.
தாய்க்கு உடல் நலம் குன்றிய காரணத்தினால்
ஐடா ஸ்கடர் அப்போது திண்டிவனம்
வந்திருந்தாள் .
. தந்தையின் மருத்துவப் பணியின்போது
உதவி வந்த தாய்க்கு உடல் நலம் குன்றிய
காரணத்தால் இவள் உதவ வேண்டிய நிர்ப்பந்தம்
உண்டானது. பாமர மக்கள் இவளையும் ஒரு
மருத்துவராக எண்ணினர்.
இறைத் தூதர் பணியில் அவளுக்கு
நாட்டமில்லாமல் போனதற்கு இந்தியாவின்
பின்தங்கிய நிலை ஒரு காரணம்.
அவளுடைய குடும்ப உறுப்பினர்
அனைவருமே இறைப் பணியாளர்கள் என்பது
இன்னொரு காரணம். அவருடைய ஏழு
சகோதரர் அனைவருமே இறைப்
பணியாளர்கள்தான்! அதோடு அவளின் இளமை.
பிடித்த ஒருவரை திருமணம் புரிந்து
அமெரிக்காவில் சொகுசாக வாழ
வேண்டும் என்ற கனவு!
ஆனால் அன்றைய இருண்ட இரவு அவளுடைய
உள்ளத்தில் ஒரு உள்ளொளியை
உண்டுபண்ணியதை இறைவனின் செயல்
என்றுதான் கூறவேண்டும்!
நாவலில் மூழ்கியிருந்தவளின் கவனத்தை
கதவை வெளியில் யாரோ தட்டும் சத்தம்
கலைத்தது. நள்ளிரவை நெருங்கும் நேரம்.
பெற்றோர் அயர்ந்து தூங்கிக்
கொண்டிருந்தனர். எழுந்து சென்று
கதவைத் திறந்தாள்.
லாந்தர் ஒளியில் ஒரு இஸ்லாமியர்
தலையில் சமய குல்லா அணிந்தவாறு
நிற்பது கண்டாள் . அவரைப் பார்த்து அவள்
திரு திருவென விழித்தாள். வந்தவர்
பதற்றத்துடன் காணப்பட்டார்.
” மிஸ்ஸியம்மா . நீங்கள்தான் என் மகளைக்
காப்பாற்றணும்! ” அவர் மன்றாடினார்.
” உங்கள் மகளுக்கு என்ன? ” எனும் அர்த்தம்பட
தமிழில் கேட்டாள் அந்த அமெரிக்க மங்கை.
” தலைப் பிரசவம்! வலியால்
துடிக்கிறாள்! உடனே வாருங்கள் அம்மா ”
அவர் கெஞ்சுகிறார்.
” ஐ. ஆம் சாரி. நான் டாக்டர் இல்லே.
பிரசவம் பாக்க எனக்கு தெரியலே . ”
+ அப்படி சொல்லாதீங்க மிஸ்ஸியம்மா.
ஏதாவது செய்யுங்கள். ‘ அவரின் நிலை
அப்படி.
” இருங்கள். அப்பாவை எழுப்புறேன். அவர்
உடன் வருவார். ” என்றவாறு மாடி
அறைக்குச் செல்ல திரும்பினாள்.
” வேண்டாம் மிஸ்ஸி. அவரை
எழுப்பவேண்டாம். ” அவர் உரக்க கூறி
தடுத்தார்.
” ஏன் வேண்டாம்? உங்களுடைய மகள் ? ”
” வேண்டாம் அம்மா வேண்டாம்! ஒரு முஸ்லீம்
பெண்ணுக்கு ஆண் பிரசவம் பார்க்க எங்களின்
வேதத்தில் இடம் இல்லை. அதைவிட அவள்
செத்தாலும் பரவாயில்லை. நான்
வருகிறேன் தாயே! ” கைகள் கூப்பி
விடை பெற்று இருளில்
மறைந்துபோனார்.
அவள் செய்வதறியாது வியந்து நின்றாள்.
கதவைத் தாழிட்டுவிட்டு நாவலைக்
கையில் எடுத்தாள். விட்ட இடத்தில் தொடர
முயன்றாள். ஆனால் முடியவில்லை.
மனதில் ஒரு நெருடல்.
அதிக நேரம் ஆகவில்லை.
மீண்டும் கதவு தட்டப்பட்டது.
ஒருவேளை அவர்தான் மனம் மாறி மீண்டும்
வந்துள்ளாரோ என்ற எண்ணத்தில் கதவைத்
திறந்து பார்த்தாள்
அது வேறொருவர். நடுத்தர வயதுடையவர்.
நெற்றியில் பட்டை தீட்டியிருந்தது. அவ்ர்
ஒரு இந்து. வணக்கம் கூறிவிட்டு அவர்
சொன்னது அவளை வியப்பில் ஆழ்த்தியது.
” மிஸ்ஸியம்மா . என் மனைவி பிரசவ
வலியால் துடிக்கிறாள். உடன் என்னோடு
வாருங்கள் அம்மா . அந்த இரு உயிரையும்
காப்பாற்றுங்கள் தாயே! ” அவரும்
கெஞ்சினார்.
மீண்டும் அதே பதிலைத்தான் அவள்
கூறினாள். தந்தையை அழைக்கவா என்று
கேட்டாள்.
” வேண்டாம் தாயே! எங்கள் ஹிந்து
சாஸ்த்திரத்தில் அதற்கு இடமில்லை . என்
மனைவி செத்தாலும் சாகலாமே ஒரு ஆண்
அவளுக்கு பிரசவம் பார்க்க முடியாது
தாயே. ” அவரும் ஏமாற்றத்துடன்
திரும்பினார்.
அவர் சென்றபின்பு அவள் அமைதி இழந்து
போனாள். நாவலை மூடிவிட்டு படுக்கச்
சென்றாள். உறக்கம் வரவில்லை. அப்போது
மீண்டும் கதவு தட்டப்படும் சதம் கேட்டு
குதித்தெழுந்தாள்.
கதவைத் திறந்து பார்த்தபோது
வேறொரு நபர்! அவரும் ஒரு இந்துதான்.
” மனைவிக்கு பிரசவ வலியா? ” இவளே
கேட்டாள்.
” ஆமாம் தாயே . அது எப்படி உங்களுக்குத்
தெரிந்தது? உடனே வந்து என் மனைவியைக்
காப்பாற்றுங்கள் மிஸ்ஸி. ” அவரின் கெஞ்சல்
.
” அப்பாவை எழுப்பவா? ” என்ன பதில் வரும்
என்று தெரிந்துதான் கேட்டாள்.
” அப்பாவா? வேண்டாம் தாயே. அது எங்கள்
சம்பிரதாயத்தில் இல்லை தாயே. நீங்கள்தான்
வரணும். ” அவர் உறுதியாகக் கூறினார்.
” இல்லை. நான் டாக்டர் இல்லையே? அப்பாதான்
வர முடியும் ” அவள் உண்மையைக்
கூறினாள்.
” அதை விட என் மனைவி சாகலாம். ”
என்றவாறே வந்த வழியே திரும்பினார்.
அதன்பின்பு அவளின் தூக்கம்
பறந்தோடியது. இது இந்திய நாடு.
இங்குள்ள கலாச்சாரமே வேறு. பெண்கள்தான்
பிரசவம் பார்க்கவேண்டும் என்பதில்
நம்பிக்கைக்கொண்ட மக்கள் வாழும் நாடு.
இதற்கு என்னதான் தீர்வு ? பெண் டாக்டர்களே
இந்தியாவில் இல்லாத காலமாயிற்றே ?
தீவிரமாக யோசித்தாள் ஐடா என்ற அந்த
இருபது வயதுடைய அமெரிக்க இள நங்கை!
மறு நாள் மாலையில் பங்களா தோட்டத்தில்
ஐடா அமர்ந்து நாவல் படித்துக்
கொண்டிருந்த போது வீதியில் ஒன்றன்
பின் ஒன்றாக மூன்று சவ ஊர்வலங்கள் சென்று
கொண்டிருப்பதைப் பார்த்தாள் . அந்த
மூவரும் பிரசவ சிக்கலில் இரவில்
இறந்துபோன பதின்ம வயது பெண்மணிகள்
என்பதைத் தெரிந்து கொண்டபின் மனம்
வெதும்பினாள்.
இரவில் தோன்றிய உள்ளொளி அப்போது
முழு வடிவம் பெற்றது!
அப்போதே தனது கனவான அமெரிக்காவின்
சொகுசு வாழ்க்கையை தியாகம்
செய்து விட்டாள் ஐடா!
இந்தியப் பெண்மணிகளுக்கு உடனடி தேவை
பெண் மருத்துவர்கள் என்பதை அன்றே உணர்ந்து
கொண்டாள்.அவர்களுக்காக தன்னையே
அப்போது அர்ப்பணம் செய்து கொண்டாள்.
அதை கடவுளின் அழைப்பாகவும் நம்பினாள்.
அவள் திருமணம் பற்றிய எண்ணத்தையும் அன்றே
கைவிட்டாள். அதன்பின் நடந்தவை வரலாறு.
1899 ஆம் வருடம் நியூ யார்க் நகரில்
கார்நெல் பல்கலைக்கழகமருத்துவக்
கல்லூரியில் ( Cornell Universty Medical
College ) சேர்ந்தாள். அதிலும் ஒரு
சிறப்பு . பெண்கள் மருத்துவம் பயில
அனுமதிக்கப்பட்ட முதல் வகுப்பு அது!
1899 ஆம் ஆண்டில் அவர் தேர்ச்சியுற்று
மருத்துவரானார் .
உடன் தமிழ் நாடு திரும்பி மருத்துவப்
பணியை பிணியாளிகளுக்கு,
குறிப்பாக பெண்களுக்கு செய்யவேண்டும்
என்ற ஆர்வம் கொண்டார்.பலரிடம் தனது
திட்டத்தைக் கூறினார்.
மான்ஹாட்டான் நகரைச் சேர்ந்த வங்கியாளர்
ஷெள் ( Schell ) என்பவர் தமிழ் நாட்டு
பெண்களின் நலனுக்காக 10,000 அமெரிக்க
டாலர்களை அவரின் மனைவியின்
நினைவாக ஐடாவிடம் வழங்கினார்.
( அப்போது அதன் மதிப்பு மிகவும்
அதிகமாகும் )
அவர் தமிழ் நாடு திரும்பியபோது
அவரின் தந்தை வேலூரில் மருத்துவப்
பணியில் ஈடு பட்டிருந்தார். அவர்
குடியிருந்த மிஷன் பங்களாவில் இரண்டு
வருடங்கள் டாக்டர் ஐடாவும் 2000
நோயாளிகளுக்கு சிகிச்சை
அளித்தார் ..
1900 ஆம் ஆண்டில் அவரின் தந்தை மரணமுற்றார்
மருத்துவப் பணியின் முழுப்
பொறுப்பையும் ஐடா ஏற்றுக்கொண்டார்.
அமெரிக்காவிலிருந்து கொண்டு
வந்திருந்த நன்கொடையைப் பயன்படுத்தி
1902 ஆம் வருடம் ஒரு சிறு
மருத்துவமனையை வேலூரில் அமைத்து
அதற்கு ஷெல் மருத்துவமனை ( Schell
Hospital ) என்று பெயரிட்டார் .
சிகிச்சையும் மருந்துகளும் இலவசமாக
தரப்பட்டன.( தற்போது இது Mary Tabler
Schell Eye Hospital ) என்று கண்
மருத்துவமனையாக பெரிய அளவில்
இயங்கி வருகின்றது )
சுற்று வட்டார மக்கள் அதிக அளவில் அங்கு
வந்து பயன் பெற்றனர். வருடத்தில் 40,000
நோயாளிகளுக்கு சிகிச்சை
அளித்தார் .
அப்போது தமிழகத்தில் பரவலாக காணப்பட்ட
ப்ளேக் ( plague ) , காலரா , தொழுநோய்
ஆகியவற்றிலிருந்து மக்களைக்
காப்பாற்றப் போராடினார்.
தமிழ் நாட்டு பெண்களின் நல்வாழ்வுக்காக
தான் ஒருவர் மட்டும் முயற்சியை
மேற்கொள்வது இயலாத காரியம் என்பதை
அவர் உணர்ந்தார்.
பெண்களுக்கான தாதியர் பயிற்சிப் பள்ளி
நிறுவ எண்ணினார். அப்போது
ஆசியாவிலேயே இது கேள்விப் படாத
ஒன்றாகும். சென்னைப் பல்கலைக்கழக
சம்மதத்துடன் இந்தியாவிலேயே முதல்
தாதியர் பயிற்சிப் பள்ளியை
நிறுவினார்.
1909 ஆண்டில் அவர் ஆரம்பித்த வீதியோர
கிளினிக் ( roadside clinic ) திட்டம்
கிராம மக்களிடையே பெரும்
வரவேற்பைப் பெற்றது. அவர கிராமம்
கிராமமாகச் சென்று மரத்தடியிலும்,
குளத்தங்கரையிலும் அமர்ந்து ஏழை
எளியோருக்கு மருத்துவச் சேவை
புரிந்தார்.
ஆனால் அவருக்கு அப்போதும் திருப்தி
உண்டாகவில்லை. தானும் தன்னால்
உருவாக்கப்பட்ட தாதியராலும்
பெண்களுக்குத் தேவையான மருத்துவ
சேவையை வழங்குவது இயலாத காரியம்
என்பதை உணர்ந்தார்.
பெண் மருத்துவர்களை உருவாக்குவதே
அதற்கு ஒரே வழி என்பதை உணர்ந்தார். இந்த
விபரீத எண்ணத்தைக் கேட்டவர்கள் இது நடக்கவே
நடக்காது , அவரிடம் மூன்று மாணவிகள்
வந்தாலே பெரிய ஆச்சரியம் என்று கேலி
பேசினர். அப்போதிருந்த சமுதாய
அமைப்பு அப்படி! பெண் கல்வியே இல்லாத
காலம் அது! அந்த நிலையில் பெண்கள்
மருத்துவம் பயில்வதா ?
அரசு அனுமதியுடன் சென்னைப்
பல்கலைக்கழக அங்கீகாரத்துடன் 1918 ஆம் வருடம்
பெண் மருத்துவர்களுக்கான கல்லூரி
நிறுவப்பட்டது. அதில் சேர 151 பெண்கள்
மனு செய்திருந்தனர். அவர்களில் 17 பெண்கள்
தேர்வு செய்யப்பட்டு வகுப்பில்
சேர்க்கப்பட்டனர். இதுவே கிறிஸ்துவ
மருத்துவக் கல்லூரியின் ஆர்ம்பம்.
1928 ஆம் வருடத்தில் வேலூர் டவுனுக்குள்
பெரிய மருத்துவமனை உருவாக்கப்பட்டத
ு. அதுதான் இன்றைய சி.எம்.சி.
மருத்துவமனை.
1928 ஆம் வருடத்தில் பாகாயத்தில் மலைகள்
சூழ்ந்த அழகிய பள்ளத்தாக்கில் பரவலான
நிலப்பரப்பில் மருத்துவக் கல்லூரியின்
வளாகம் அமைக்கப்பட்டது.
அப்போது நாட்டின் தந்தை மகாத்மா
காந்தி அவர்களும் கல்லூரியையும்
மருத்துவமனையையும் விஜயம் செய்து
சிறப்பித்தார்!
இன்று கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி
இந்தியாவின் தலைசிறந்த மருத்துவக்
கல்லூரியாக விளங்குவதை நாடறியும்!
ஒரு தனிப்பட்ட பெண்மணி இவ்வளவு பெரிய
சாதனைப் புரிய நிறைய
பொருளாதாரம் தேவை. இவரின்
மருத்துவப் பணியை இறைப்பணியாகவே
ஏற்று 40 கிறிஸ்துவ சபைகள் ஓரளவு
உதவின. ஆனால் அது போதாததால்
நன்கொடைகள் திரட்டும் நோக்கில் 1941 ஆம்
வருடம் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டார்.
தேவையான நிதி திரட்ட அவர்
அமெரிக்காவின் அனைத்து
பகுதிகளுக்கும் ( மாநிலங்களுக்கும் )
பிரயாணம் செய்தார்.அங்குள்ள
திருச்சபைகள் அவரின் நற்பணிக்கு ஆதரவு
நல்கியதோடு ஆண்டுதோறும் பொருள்
உதவிகள் செய்யவும் ஆர்வம்
காட்டின.பொதுமக்களும் அவருடைய
புனிதப் பணியைப் பாராட்டி உதவினர்.
2 மில்லியன் அமெரிக்கப் பெண்மணிகளிடம்
ஆளுக்கு ஒரு டாலர் என்று 2 மில்லியன்
அமெரிக்க டாலர்கள் திரட்டினார்!
அதுபோன்று பல மில்லியன் டாலர்களுடன்
வேலூர் திரும்பி,
மருத்துவமனையையும் மருத்துவக்
கல்லூரியையும் நவீனப் படுத்தினார்.
1945 ஆம் ஆண்டில் மருத்துவக் கல்லூரியில்
ஆண்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.

இன்று அனைத்து வசதிகளுடனும் , நவீன
சிறப்புப் பிரிவுகளுடனும் , 2000
படுக்கைகள் கொண்டு, ஆசியாவின் மிகப்
பெரிய மருத்துவமனையாகவும் , உலகின்
மிகப் பெரிய மிஷன் மருத்துவமனையாக
விளங்குகிறது!
ஐடாவின் பெயர் உலகெங்கும் பரவியது.
1952 ஆம் வருடம் உலகின் சிறந்த 5
டாக்டர்களில் ஒருவராக டாக்டர் ஐடா
ஸோஃபியா ஸ்கடர் தேர்ந்தெடுக்கப்
பட்டார் .
டாக்டர் ஐடா ஸ்கடர் வேலூர் நகர
மக்களாலும், வட ஆற்காடு மக்களாலும்
பெரிதும் போற்றப்பட்டார். அவரை
பாசத்துடன் ஐடா அத்தை ( aunt Ida ) என்றே
அழைத்தனர். இந்திய நாட்டின் பெண்களின்
நல்வாழ்வுக்காக தமது வாழ் நாளை
அர்ப்பணித்த தியாகச் செம்மல் அவர்.
தாதியர் கல்வியையும், பெண்களுக்கான
மருத்துவக் கல்வியையும் இந்தியாவில்
அறிமுகப் படுத்திய முன்னோடி அவர்.
அவர் தமது முதிர் வயதில் கொடைக்கானல்
மிஷன் பங்களாவில் ஓய்வு பெற்றார். தமது
85 வது வயதில் ஒரு நாள் வழக்கம்போல்
தபால்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அமெரிக்காவிலிருந்து வந்திருந்த
ஒரு தபாலில் ” டாக்டர் ஐடா , இந்தியா. ”
என்று மட்டும் முகவரி எழுதப்பட்டிருந்
தது. நாடு தழுவிய நிலையில் அவர்
அறியப்பட்டிருந்தார்.
இந்தியப் பெண்களுக்காக அவர் செய்த
மாபெரும் தியாகத்தையும்
சேவையையும் பாராட்டும் வகையில்
அவருடைய் நூற்றாண்டு தினமான ஆகஸ்ட் 12,
2000 நாளன்று அவரின் படமும் சி.எம்.சி.
மருத்துவக் கல்லூரியும்,
மருத்துவமனையும் பொறிக்கப்பட்ட
சிறப்பு தபால் தலை வெளியிட்டு
பெருமை சேர்த்தது இந்திய அரசு!
1960 ஆம் வருடம் மே மாதம் 24 ஆம் நாள்
அதிகாலையில் வழக்கம்போல் எழுந்தார்.
அவருக்கு வயது 90.
வழக்கத்திற்கு மாறாக தலை
சுற்றுவதாகக் கூறினார்.
அவருக்கு உதவும் தாதி , ” காப்பி
குடியுங்கள் அம்மா தலை சுற்றல்
நின்றுவிடும் ” என்றாள் .
அவர் , ” வேண்டாம் ” என்று பதிலளித்தார்.
ஐந்து நிமிடங்களில் அவர் இறைவனடி
சேர்ந்துவிட்டார்!
இவர் போன்றவர்கள் இந்தியா வந்ததினால்தான்
மருத்துவ துறை இத்தகைய அசுர வளர்ச்சி
கண்டிருக்கிறது. யாருக்காவது
மறுக்க முடியுமா?