Monday 31 October 2016

ஓசூரில் சமண மதம்

ஓசூர் வெங்கடபெருமாள் கோயிலில்
12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சமண கல்வெட்டுகளும் .சமணசிற்பங்களும்
கண்டு பிடிப்பு.
ஓசூரில் உள்ள ஸ்ரீ வெங்கடபெருமாள் கோயிலில்
12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சமண கல்வெட்டுகளும் .சமண சிற்பங்களையும்
கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று தேடல் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.
கிருஷ்ணகிமாவட்டம் ஓசூருக்கு கிழக்கு திசையில் மலைமீதுள்ள ஸ்ரீ வெங்கடபெருமாள் கோயிலில் 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த மூன்று சமண கல்வெட்டுகளும், மூன்று சமண கற்சிற்ப்பங்களும் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று தேடல் குழுவினர் கண்டறிந்துள்ளனர்
. கிருஷ்ணகிமாவட்டத்தில் அறம்கிருஷ்ணன் தலைமையில் ,பிரியன்,இராசு,மஞ்சுநாத்,ஜெகன், உள்ளிட்டோர் ஒன்றினைந்து கிருஷ்ணகிமாவட்டவரலாற்று தேடல்குழு என்ற அமைப்பை ஏற்படுத்தி இம்மாவட்டத்தின் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களையும், கோயில்கள், கல்வெட்டுகள்,நடுகற்கள், கோட்டைகள், புராதானவராலாற்று சின்னங்கள்,ஆகியவற்றை எல்லாம் ஆய்வு செய்து, புதைந்து போயிருக்கும் பல்வேறான வரலாற்று தகவல்களை வெளியே கொண்டு வருகின்றனர்.இந்த சிறப்பு மிக்க வரலாற்று தேடலை விழுபுரம் வரலாற்று ஆய்வாளர் திரு.வீரராகவன் அவர்கள் தலைமையேற்று நடத்தி கொடுத்தார்.
ஓசூரை சுற்றி மூன்று மலைகுன்றுகள் உள்ளன.நேர்கிழக்காக சந்திரசூடேஷ்வரர் மலையும். தென்கிழக்கே ஸ்ரீ வெங்கடபெருமாள் கோயிலும், வடக்கு புரமாக பிரம்மா மலையும் உள்ளன.மும்மூர்த்திகளும் ஒறே நேர்கோட்டில் அமைந்திருப்பது இங்கு மட்டுதான் .இதில் தென்கிழக்கில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடபெருமாள் கோயிலில்தான் மேற்கண்ட சமண கல்வெட்டுகளும்,.சமண சிற்பங்களும் அமைந்துள்ளன.
தமிழகத்தில் சமணசமயத்தின் நுழைவாயிலாக ஓசூர் இருந்துள்ளது.வளர்ந்து வரும் பெரும் நகரங்களில் ஒன்றான ஓசூர் நகரின் தென்கிழக்கே சுமார் 1000 அடி உயர மலையின் மீது இயற்க்கையாக அமைந்துள்ளது ஸ்ரீ வெங்கடபெருமாள் கோயில்.இந்த கோயிலில்தான் மூன்று சமண கல்வெட்டுகளும், மூன்று சமண கற்சிற்ப்பங்களும் உள்ளன. அதே போல் இக்கோயிலின் அருகில் இருக்கும் சந்திரசூடேஷ்வரர் மலையின் அடிவாரத்தில் சமண படுக்கையும், சமண பள்ளி இருந்ததற்காண அடையாளங்கள் உள்ளன.
இந்தியாவில் தோன்றி வளர்ந்த பல தொன்மையான சமயங்களில் சமண சமயமும் ஒன்று. இந்தியாவில் 2500 வருடங்களுக்கு முன்பாகவும்,தமிழகத்தில் கி.மு.இரண்டாம் நூற்றாண்டு வாக்கிலும் சமண சமயம் உள்ளே வந்திருக்கிறது. தகடூரை ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சி கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் விழுபுரம் மாவட்டம் ,திருகோயிலூருக்கு அருகில் உள்ள ஜம்பையில் சமணர்களுக்கு சமணபடுக்கை ஏற்படுத்தி கொடுத்தற்கான கல்வெட்டை செதுக்கியுள்ளார்.
தமிழ் நாட்டை பொருத்தவரை கி.பி. 7 ஆம் நூற்றாண்டு வாக்கில் தமிழகம் முழுவதும் சமணம் பரவியிருந்தது.
இந்தியாவில் தென்பகுதியில் கர்நாட்டாகா மாநிலம் சிரவணபெளகோளாவிலிந்துதான் சமணம் தொடங்கியிருக்கவேண்டுமென வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.தமிழகத்திற்கு எந்த வழியாக வந்திருக்கும் என்று பார்க்கும் போது ஆச்சர்யாமான தகவல் கிடைக்கிறது.தமிழகத்தின் எல்லைநகரமான
ஓசூர்வழியாகதான் உள்ளே வந்து தருமபுரி, அதியமான்கோட்டை,(பாவக்கல்,ஆம்பள்ளி) கொங்குஎல்லை,கரூர்,திண்டுகல் வழியாக மதுரையை அடைந்திருக்கிறது.
தமிழகத்தில் சமண சமயத்திற் அதிகமான தடயங்கள் உள்ள நகரம் மதுரை.அதனால்தான் சமணத்தின் தலைநகரமாக மதுரை விளங்குகிறது.
ஓசூர் வழியாகதான் சமண சமயம் பயணப்பட்டிருந்தாளும் கூட சுமார் ஆயிரம் வருடங்களுக்கு பிறகே கி.பி.12 ஆம் நூற்றாண்டில்தான் இங்கு அதற்கான கோயில் கட்டப்பட்டிருக்கிறது. ஓசூரின் ஸ்ரீ வெங்கடபெருமாள் கோயிலில் பெரிய கற்பாறையில் கி.பி.12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த மூன்று சமண கல்வெட்டுகளும், மூன்று சமண கற்சிற்ப்பங்களும் உள்ளன.கோயிலின் நுழை வாயிளில் படிக்கட்டுகளில் ஏறும்போது வலதுபுரம் பெரிய கற்பாறையில் ஆறடி உயரமும், பத்தடி அகலத்தில் கற்பாறையில் கல்வெட்டு செதுக்கப்பட்டுளது.இந்த கல்வெட்டு தமிழ், வடமொழி,கிரந்தம் ஆகிய மூன்று மொழிகளில் இக்கல்வெட்டு செதுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment