Sunday 10 July 2016

திருக்கழுக்குன்றம் சங்கு அதிசயம்


#திருக்கழுக்குன்றம் அதிசயம் .. 02-08-2016 அன்று

திருக்கழுக்குன்றத்தில் 12 ஆண்டுகளுக்கு ஓரு முறை சங்கு பிறக்கும்போது அதுசமயம் குளத்தில் அலைகள் அதிகமாவதுடன் - குளத்தின் ஓரங்களில் நுரை கட்டும்.

சங்கு கரை ஓதுங்கியதும் கோயில் அர்ச்சகர்கள் அதை தட்டில் எடுத்துவைப்பார்கள். அதுசமயம் அதன் உள்ளே உள்ள சங்கு பூச்சியானது தனது சங்கு ஓட்டை பிரித்துவிட்டு மீண்டும் தண்ணீரிலேயே சென்றுவிடும். அந்த நிகழ்வுக்காக அர்ச்சகர்கள் படிகளில் அமர்ந்திருப்பார்கள். இந்த அரிய நிகழ்வை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குலத்தை சுற்றிலும் நிரம்பி இருப்பார்கள்.

சாதாரணமாக உப்பு நீரில் -கடலில் தான் சங்கு பிறக்கும். இங்கு மட்டுமே சாதாரண தண்ணீரிலேயே இது தோன்றுகின்றது. மேலும் சரியாக 12 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் இதுதோன்றும். இந்த சங்குடன் சேர்த்து இதுவரை பிறந்துள்ள 7 சங்குகள் இங்குள்ள கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் விரும்பினால் எப்போழுது வேண்டுமானாலும் அதை பார்க்கலாம்.

இப்படிப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க ஊரில் தான் 12 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இலட்சதீப திருவிழா இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் (02/08/16) நடைபெறவுள்ளது.

ஓம்  நமசிவாய.  திருசிற்றம்பலம்

வேதகிரீஸ்வரர் திருக்கோயில், திருக்கழுக்குன்றம், காஞ்சிபுரம் மாவட்டம்
---------------------------------------
'தோடுடையான் ஒருகாதில் தூயகுழை தாழ
ஏடுடையான் தலைகலனாக இரந்துண்ணும்
நாடுடையான் நள்ளிருளேம நடமாடும்
காடுடையான் காதல் செய்கோயில் கழுக்குன்றே.'
-திருஞானசம்பந்தர்.

அப்பர், சுந்தரர், சம்பந்தர் மற்றும் மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடப்பெற்ற தலமான இது செங்கல்பட்டு வட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்தது. தினமும் உச்சி வேளையில் கழுகுகள் வந்து பிரசாதம் உண்ணும் மலைக்கோயில் என்று பிரசித்து பெற்றதாகும் இது.

சுமார் 1400 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த இக்கோயில் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் கட்டிய குடைக்கூளிக் கோயில் என்று கூறுவர்.

தலபுராணம்

சாருப்ய பதவிக்காக தவம் இருந்த பிரம்மனின் எட்டு மானச புத்திரர்கள், நஞ்சுண்டான் வரமருள நேரில் வருகையில் நா தவறி சாருப்ய என்பதற்கு பதில் கழுகு எனப் பொருள்படும் சாயுட்சய என கேட்டதால் கழுகாக மாறி, யுகத்திற்கு இருவர் என கழுகுகளாக இங்கு பிரசாதம் உண்டு செல்வதாக ஐதீகம்.

இந்திரன் பூஜித்த இத்தலத்தில் இன்றும் அவன் பூஜித்து வருகிறான் என்பதற்கு அறிகுறியாக இம்மலைமீதுள்ள கருவறைக்கோபுரக் கலசத்தின் அருகில் உள்ள துவாரத்தின் வழியாக இடிவிழுந்து சிவலிங்கத்தைச் சுற்றிப் பரவிப் பாய்ந்து விடுவதாகவும், இவ்வாறு இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நிகழ்வதாகவும் மறுநாள் கருவறை திறக்கும்போதும் தாங்கவொண்ணா வெப்பமாக இருக்கும் என்றும் கூறுவர்.

வேதமே கிரியாக (மலையாக) அமைந்த காரணத்தால், இத்தலப் பெருமான் வேதகிரீஸ்வரர் என்று வழங்கப்பெறுகிறார். பக்தவத்சலேஸ்வரர் என்னும் பெயரும் கொண்டிருக்கிறார்.தாயாரின் திருப்பெயர் திரிபுரசுந்தரி என்பதாகும்.

அப்பன் மட்டுமன்றி அம்மையும் இங்கு சுயம்புவானவள் என்பது இத்தலத்தின் தனிச்சிறப்பு.

தலச்சிறப்பு

கடலில் மட்டுமே கிடைப்பதான வலம்புரிச் சங்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இத்தலத்துத் திருக்குளத்தில் கிடைக்கப் பெறுகிறது. இது மார்க்கண்டேய தீர்த்தம் என்றும் சங்கு தீர்த்தம் என்றும் வழங்கப்பட்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்விக்கப்படுகிறது.

இந்த குளத்தில் குளித்தால் தோல் வியாதி, மனநிலை பாதிப்பு குணமாகும் என்பது ஐதீகம். இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து சங்கு தீர்த்த குளத்தில் நீராடி வழிபட்டு செல்கின்றனர்.

வடநாட்டிலிருந்து வருவோர் பெரும்பாலும், இத்தலத்தைப் பட்சி தீர்த்தம் என்றே அறிவர். இம்மலையைச் சுற்றி 12 தீர்த்தங்கள் உள்ளன.

எம்பெருமான் ஜோதி வடிவாய்க் காட்சியளிக்கும் திருவண்ணாமலையைப் போல, இங்கும் கிரிவலம் செய்வது மிகச் சிறப்பானதாகும். அம்மலையைச் சுற்றி 12 லிங்கங்கள் உள்ளதைப் போல, இம்மலையைச் சுற்றி 12 தீர்த்தங்கள் உள்ளன.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குருபகவான் கன்னி லக்னத்தில் நுழையும் நாளன்று லட்சதீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று வீடுகளிலும், கோயில்களிலும், சங்குதீர்த்த குளக்கரையிலும் லடச்க் கணக்கில் விளக்குகள் ஏற்றப்பட்டு ஊர் முழுவதும் ஒளி வெள்ளத்தில் மிதக்கும்.
இந்த திருவிழாவானது வட இந்தியாவில் கொண்டாடப்படும் புஷ்கரமேளா, கும்பமேளாவிற்கு இணையானது.

கிரிவலம் செல்லும் பக்தர்கள் மூலிகை காற்றை சுவாசிப்பதால் நோய்கள் நீங்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

இங்கு மலை மீது வேதகிரீஸ்வரர் கோயில், கீழே பக்தவச்சலேஸ்வரர், திரிபுர சுந்தரி அம்மன் கோயில்கள் உள்ளன.

ப்யாரீப்ரியன்..ஆன்மீக தொகுப்பிலிருந்து..

No comments:

Post a Comment