Saturday 15 August 2020

பழந்தமிழரின் போர் ஆயுதங்கள் சில..

 பழந்தமிழரின் போராயுதங்களில் சில:


வீரத்தில் சிறந்து விளங்கிய தமிழர்கள் இத்தகைய போராயுதங்களைப் ப்ரியமாக பயன்படுத்தி இருக்கிறார்கள் என்ற செய்தி நமக்கெல்லாம் பெரும் வியப்பை தருவதாகவே அமைந்துள்ளது .


தமிழரின் ஆய்தங்கள் இருவகைப்படும்.


கைக்கொள்படை/ கைப்படை: - (hand hold weapons)

கைவிடுபடை/ எறிபடை

கைவிடாப்படை

கைக்கொள்ளாப்படை: - ( siege & defense tools)


தோய்த்தல் - ஆயுதங்களைக் காய்ச்சி நனைத்தல்

துவைச்சல் (படைக்கருவி) - tempering (weapons)

பணைத்தல் - AIM MISS

இலக்கு, மச்சை - target

ஆயுதப்பயிற்சி செய்யுமிடம் - சரம்புச்சாலை, பயிற்சிப்பாசறை

சரம்பு - ஆயுதப்பயிற்சி

பணிக்கன் - படைக்கலம் பயிற்றுவிப்போன்.

சலகுபிடித்தல் - படைப் பயிற்சி எடுத்தல் (to practice drill)

ஆயுதங்கள் வைத்திருக்குமிடம் - ஆயுதசாலை, படைவீடு, ஆயுதக்களஞ்சியம், தில்லெரி.

எஃகம் / துப்பு / படைக்கலம் / ஆய்தம்/ ஏதி/ தானை/ கடுமுள்/ துழுமுள் / படை/ கூர்த்திகை/ அரி -ஆயுதப்பொது

ஆய்தம் என்பது தமிழே. இச்சொல்லே பிற்காலத்தில் 'ஆயுதம்' என்று சமற்கிருததில் திரிந்தது 


எஃகம் - எஃகில் இருந்து செய்யப்பட்டதே எஃகம் .

ஆய்தங்களின் கூர்மையின் பெயர் - வல், வள், வசி , வை, அள், பூ, ஆர் (sharpness, pointedness)

ஆயுதத்தின் நுனி - முனை (tip of a weapon)

அலகு - ஆயுதத்தின் கொல்லும் கூர்மை கொண்ட பகுதி (blade of a weapon or instrument)

ஆயுதத்தின்பல்- கரு

கழி - ஆயுதப்பிடி

அடைப்பம்- போர்க் கருவிகள் வைக்கும் பை/ பேழை.

தடறு- ஆயுதவுறை / படையுறை/ கருவிப்புட்டில்

காரோடன் - ஆயுதவுறை செய்வோன்.

வாளுறை - புட்கரம்/ வாளலகு /கட்காதாரம்/வள் / இடங்கம்

வாண்முட்டி - வாளின் பிடி (handle or hilt of a sword)

கிண்ணி- வாளின் கைப்பிடி உறை (cover of the hilt of the sword)

வாண்முகம் - வாளின் வாய் (edge of the sword)

சொருகுவாள் - உறையினுள் வைக்கப்பட்ட வாள்

ஆணி - வாளின் அலகு (blade of sword)

கத்திப் பிட்டல் - கத்திக் கூடு

தாங்கு - வேல் / ஈட்டியின் பிடி (The staff of the spear)

பிடங்கு - வேல் / ஈட்டியின் பிடியானது இலையுடன் சேருமிடம் (The part of a lance to which steel is fixed.)

தரங்கு - வேல் / ஈட்டியின் நுனி {The point of in spear (end tip)}

இலை - வேல் / ஈட்டியின் அலகு (blade of a spear or lance or javelin)

காம்பு - கோடாரிகளின் அலகு (blade of the battle axe)

தலை - செண்டு அ கரளாக்கட்டை போன்றவற்றின் தலைப்பகுதி (head part of a mace or club)


தமிழ் அகராதிகளில் முத்தலைச்சூலம்/ முக்குடுமி (பெரியபு. உருத்திர. 10) என்னும் வித்தியாசமான சூலத்தைக் குறிக்கும் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. சூலம் என்றால் நாம் அறிந்தது..

இரண்டு பெயர்களும் தலையினையே குறிக்கின்றன. மேலும் இந்த ஆய்தத்தினை தலையில் மணிமுடி போல தாங்கியபடி ஒருவர் அமர்ந்திருப்பது போன்ற ஓர் முத்திரையானது சிந்துசமவெளி ஆய்வில் கண்டெடுக்கப்பட்டு இருக்கின்றது.

ஆகவே இவை ஏதேனிலும் ஒன்று அதற்கான பெயராக இருக்கலாம் என்பது பதிவரின் கருத்து.


#சூலம் / காளம் / மும்முனை/ நல்வசி/ சூல் - இதில் பல வகையுண்டு.

எரிமுத்தலை - நெருப்பினைக் கொண்ட சூலம்

சத்தி - சிறு சூலம்

"தாமேற் றழுத்திய சத்தி வாங்கி" (பெருங். மகத. 20, 63)

"ஊனக மாமழுச் சூலம் பாடி"(திருவாச. 9:17)


#முக்கவராய்தம் / முக்கவர்தடி / முக்கப்பு / முக்கவர்சூலம்/ முத்தலைக் கழு - இதன் குத்தும் பகுதியானது சூலத்தின் குத்தும் பகுதியைக் காட்டிலும் நீளமாக இருக்கும். இது வேட்டைக்குப் பயன்படும் ஓர் ஆய்தம். தேவைப்பட்டால் களத்திலும் சுழலும்.


#முத்தலைக்கழு - கழு போன்ற நீண்ட குத்தும் அலகூகளைக் கொண்ட சூலம்.

"பருமுக் கப்பினரே"(தக்கயாகப். 98)

"முக்கவர் சூலமும் கபாலமும் குன்றில்மிகும் காராரிந்த மேனி"


"கழு முள் மூவிலை வேல் முத்தலை கழு…சூலப் படை என வழங்கும்" (நிக.தி:7:2)


#சூலவேல்/ மூவிலைச்சூலம் / இலைத்தலைச் சூலம்- மூன்று வேலின் இலை போன்ற முனைகளைத் அலகாகக் கொண்ட சூலம்.


#மூவிலைவேல் / முத்தலைவேல் - வேல் என்பது ஓரிலை போன்றது. மூவிலை வேல் என்பது மூன்று இலைகளால் ஆனது. 

முருகனின் கையில் இவ்வாய்தம் உண்டு.


#வேல்/ உடம்பிடி/ ஞாங்கர்/ விட்டேறு : முக்கோண இலைவடிவ கூரிய முனை கொண்ட ஆய்தம். இதனை கையில் வைத்தே சண்டையிடுவர்... கூடியவரை எறிவதில்லை!

வேலின் முகம் அகன்று விரிந்து இருக்கும்! வேலின் கீழ் நுனி வட்டமாக முடியும்!

வடிவேல் - மிகவும் கூர்மையான வேல்


#சிறியிலை எஃகம் - சிறிய ஒடுங்கிய இலையினைக் கொண்ட வேல். இதன் தாங்கு நீளமாக இருக்கும்..


#ஏந்திலை/ முகட்டுவேல் - இலை நீளமாக இருப்பது போன்ற வடிவினைக் கொண்ட வேல். இதன் தாங்கு நீளமாக இருக்கும்.. கூடியவரை எறிவதில்லை!

ஏ → ஏந்து = உயரம்

இலை - இலை

ஏந்திலை = நெடிய இலை


#தூரியம் - தூரிகை போன்ற ஒரு வகையான வேல் . இதன் தாங்கு நீளமாக இருக்கும்.. கூடியவரை எறிவதில்லை!


#முத்தகம் - முத்தக இலை போன்ற அமைப்பினை உடைய வேல். இதன் தாங்கு நீளமாக இருக்கும். கூடியவரை எறிவதில்லை!


#அயில்/ அயில்வேல் - கோரைப்புல் போன்று கொஞ்சமாக அகண்டு மிகவும் நீண்டிருக்கும் ஓரு வகையான வேல்.


#சங்கு / சங்கம்- இலையானது ஒரு பக்கம் வளைந்து இருக்குமான ஆய்தம். கூடியவரை எறிவதில்லை!

சுல்- சல்- சழி - சருக்கு- சக்கு- சங்கு- சங்கம


#பூந்தலைக்குந்தம் -  இதன் தாங்கு நீளமாக இருக்கும்.. கூடியவரை எறிவதில்லை.


#சவளம் :- சவண்ட வாள் போன்ற தோற்றம் உடைய ஆய்தம். கூடியவரை எறிவதில்லை! இதில் இரு வகை உண்டு:

சுவள்→ சவள் → சவளம்

சிறுசவளம் - சிறிய சவளம்

பெருஞ்சவளம்/பீலி - நன்கு சவண்ட பெரிய சவளம்.


#உழவாரம் - அலகானது கொஞ்சம் பார்பதற்கு நேராக்கி நிறுத்திய மண்வெட்டி போல இருக்கும். முன்பக்கம் மட்டுமே சப்பையாக்கப்பட்டு கூராக இருக்கும்!


#சல்லியம்- ஆணி/ முள் போன்ற அலகினை உடைய எறிபடை !

சுல் = குத்தற்கருத்து வேர்.

சுல் → சல் = கூரிய முனையுள்ளது, குத்தும் கருவி.

சல் + இயம் = சல்லியம் → ஆணி/ முள் போன்ற கூரிய முனை

கீழ்க்கண்ட சல்லியமானது தென்தமிழ்நாட்டு அரசர் ஒருவரால் பிரித்தானிய பேரரசர் ஒருவருக்கு ப்ரியமான அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டதாகும்


#அரணம் - அரணத்தின் வடிவினை ஒத்த இலையினைக் கொண்ட வேல் .

இதே பொருள் கொண்ட செருப்பு மற்றும் கருஞ்சீரகம் ஆகியவற்றினதும் வடிவத்தினைக் காண்க. அனைத்தும் ஒரே வடிவமே!


#வல்லயம் / குத்துவல்லயம் - இது அதிநீளமான ஓர் ஆய்தமாகும்; முனையில் கூரிய கூர்மையுள்ள மிகவும் நீளமான கையிற்வைத்து எதிரியை குத்தும் ஒருவகை ஆய்தம். எட்டத்தில் நின்றபடியே எதிரியை குத்தி விடலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.. இதனைக் கூடுதலாக யானைமேல் உள்ளவர்கள் பயன்படுத்துவார்கள்!


#கழுக்கடை -குச்சியில் நீளமான கூர்மையான முனையினைக் கொண்ட ஈட்டி.


#நேரிசம்- நீண்ட முள்போன்ற மெல்லிய தலையினைக் கொண்ட ஈட்டி. இது எறிபடை வகையே.

நேர்- நேரான

இல்>இளி>இசி - முள் / குத்துவது

அம் -விகுதி


#திருகுதடி- திருகுவது போல இருக்கும் ஈட்டி அலகு. இதன் தாங்கு நீளமாக இருக்கும்.. இது எறிபடை வகையே.


#தோமரம்/ கைவேல்/ கப்பம்/ கப்பணம்/ கற்பணம் - சிறிய படை.. இது பார்ப்பதற்கு சிறிய வேல் போன்று இருக்கும்.. இதே போன்ற சிலதினை முதுகில் ஓர் தூணி போன்று ஒன்றினை அமைத்து அதனுள் வைத்து செருக்களம் நோக்கி எடுத்துச் செல்வர். தேவைப்படும் போது எதிரி நோக்கி விட்டெறிவர் இல்லையேல் கையில் வைத்து சண்டையிடுவர்..

இப்படை வீரர்களை அக்காலத்தில் தோமரவலத்தார் என்றழைத்தனர்.


#கவர்தடி- இருபக்கமும் கூரான எறியாய்தம்.


#பொத்திரம் -

பொள்- துளையிடுவது போன்ற

திரம்- தகரைச்செடியின் கொத்துப் பூப்போல குண்டாக இருக்கும் கூர்மையான அலகு.


#இட்டி / ஈட்டி/ எறியீட்டி/ வண்டம்/ தரங்கம்/ குந்தம்- எறிபடை …

ஈட்டியின் முகம் அகலாது குறுகி இருக்கும் ; ஈட்டியோ நேர்க்கோட்டில் முடியும்.

இல் > இள் > ஈட்டு > ஈட்டி

துளங்கு → தளங்கு → தரங்கு → தரங்கம்

குல் > குன் > குந்து > குந்தம்

வண் - மிகுதி

வண்டம் - மிகுதியாக இருக்கும் ஆய்தம்.. (வேலினை விட ஈட்டி / குந்தம் தானே போர்க்களத்தில் அதிகமாக இருக்கும்!)


#இரட்டைக்கருவீட்டி- நீண்ட கைபிடி காணப்படும்.


#பட்டிசம் - இது சிங்களத்தில் பட்டிச்தான என்றுள்ளது


#சாக்கத்தி


#கணுவாளி- முள்கொண்ட முட்டி


#வயிரமுட்டி - இடிப்பதற்கான முளைகளை உடைய கையில் கொண்டு சண்டையிடும் ஆயுதம்.


#இடிக்கட்டை - மாட்டுக்கொம்பால் செய்த கையில் வைத்து சண்டையிடும் ஆய்தம்.


#குத்துக்கட்டை - குத்துவதற்கான கூர்களையும் இடிப்பதற்கான முளைகளையும் உடைய கையில் கொண்டு சண்டையிடும் ஆயுதம்.


#வில்லம்பு -

வில் என்னும் சொல்லுகான ஒத்த சொற்கள்- சிலை/ சாபம்/ குணி/ கேகயம்/ வேணு/ சிந்துவாரம்/ முனி/ தவர்/ தடி/ தண்டாரம்

வில்வட்டம் - archery

வில்லை தயாரிப்பவர்- வில்செய்வோன்

வில்லில் நாண் பூட்டப்பட்டிருக்கும் நிலையில் உள்ள வில் குலைவில் எனப்படும்.

வில்லின் நாணோசை - இடங்காரம்

குலை - வில்லின் குதை (notch in a bow to keep the string in check.)


 நாண் என்னும் சொல்லுகான ஒத்த சொற்கள் - பூரி , தொடை, ஆவம், பூட்டு, சிஞ்சினி, நரம்பு, நாரி, வடம், குணம், கப்பம்.


#அம்பு: (இதில் பல வகையுண்டு)

அம்புகளை தயாரிப்பபவர்- அம்பன்

→ அம்பு என்னும் சொல்லுகான ஒத்த சொற்கள் - கதிரம், கலி, சாயகம், பீலு, சாரகம், பூதை, சிரி, சிருகம், வண்டு, சாசம், சிலீமுகம், தொடை, தோணியம், அங்கூடம், அத்திரி, வணகம், விக்கம், ஈ,விடூசி, வேந்திரம், ஐமை, சாயகம், பகழி, சரம், வாளி, கோ, அரி, ஏ, காண்டம், அப்பு, வாசம், வாணி


இரும்பினால் செய்யப்பட்ட அம்பு - நாராசம், சலாகை

அம்பின் வகைகள்

கோரை

பாரை

ப்ரியம்

கங்கபத்திரம்

தாமரைத் தலை

வச்சிரப் பகழி

முச்சிரப் பகழி

அஞ்சலி

குஞ்சரக்கன்னம்

எரிமுகப் பகழி

உரும் இனப் பகழி

நெருக்கி மற்று அனந்த கோடி

முருக்கின் உற்று அனந்த கோடி

பல்லம்

பிறைமுகவாளி

சூகம் ,சூபம்

விசிகம்

கத்திவாளி அம்பு

.மொட்டம்பு - உதண்

அம்புக்கட்டு - புதை, கட்டு, கற்றை (sheaf of arrows)

அம்பின் நுனி - குதை, பகழி (pointed end of an arrow)

அம்புத் திரள் கட்டுங் கயிற்றின் பெயர்- பற்றாக்கை

அம்பு விடும் போது கையில் போடும் உறை- காழகம்

அம்புக்கொண்டை - உடு, புழுகு, குப்பி (head part of an arrow)

அம்பின் ஈர்க்கு- உடுவம், கோல் (shaft of an arrow)

அம்புத்தலை - புங்கம் (butt end of an arrow)

கைப்புடை- அம்பு பிடித்து இழுத்து விடும் இடம் (சிறகிற்கு பின்னால் இருக்கும் அந்தச் சிறிய இடம்)

அம்பின் சிறகு - பக்கம் (feather of an arrow)

உடுவும் உடுவமும் இணையும் இடம் - குழைச்சு (joining area of head and shaft of an arrow)


படிமப்புரவு : சொந்தமாக உருவாக்கியது'


→ அம்பு வைக்குமிடம் - (quiver) அம்பறாத்தூணி/ அம்புறைத்தூணி/ இடுதி/ புட்டில்/ கோக்குஞ்சம்/ கலாமிடம்/ அம்புக்கூடு/ தூணீரம்/ ஆவநாழி/ ஆவம் /அம்புறை/ புழுகு /கலாபம்/ வட்டில்/ அம்புயம்


#வரிவில்-வரிபோன்றமைந்த வில்

வலுவான வளைந்த மரக்கிளையின் கொம்பால் ஆகிய வில்- கொடுமரம்


#கார்முக வில் / அமைவில் - மூங்கிலால் செய்யப்பட்ட கார்காலமேகத்தில் தோன்றும் வானவில் போன்ற வில்.


#வாங்குவில் - நடுவில் நன்கு வளைந்திருக்கும் வில்.

இத்தகைய போராயுதங்களைப் ப்ரியமாக பயன்படுத்தி சிறப்பாக வீரத்துடன் வாழ்ந்தது நமக்கு பெருமையே... 

~~#ப்யாரீப்ரியன்...

இணையத்தொகுப்பு..

No comments:

Post a Comment