Tuesday 21 July 2020

பூட்டு தோன்றிய வரலாறு

#பூட்டுகள் ஆயிரம் வந்தாலும் #புவிசார்_குறியீட்டை பெற்ற நம்ம திண்டுக்கல் பூட்டுக்கு ஈடாகுமா??...

பூட்டுச்சாவியின் வளர்ச்சியின் ஆரம்பப்புள்ளி தனக்குரிய பொருள்களை பாதுகாக்க கயிறு அல்லது அதைப்போன்ற ஒரு கட்டுமான பொருள்கொண்டு அவற்றைக் கட்டிவைக்கத தொடங்கியது தான்...

வரலாற்று ஏடுகளில் முதல் பூட்டுச்சாவி, அந்தக்கால மெசபடோமியா நாட்டின் அஸிரியாவில் உபயோகத்தில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

ஆனால் இயந்திர பூட்டுக்களைச்செய்யத் தொடங்கிய கலாச்சாரம் எது என்று தெரியாததால் , எகிப்து, கிரேக்கம் மற்றும் ரோமாபுரியில் ஒரே சமகாலத்தில் வேறு வேறு விதமான பூட்டுக்கள் செய்யத் தொடங்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

எகிப்தில் பின்லாக் எனும் வகை பூட்டுகளும், சாவிகளும் மரக்கட்டையால் செய்யப்பட்டதாக அறியப்படுகிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கிரேக்கர்களாலும், ருமேனியர்களாலும் இந்தப் பின் லாக் பூட்டுக்கள் கொஞ்சம்கொஞ்சமாக புதிய உருவம் பெறத்தொடங்கின.

கிரேக்கர்களின் பூட்டு பாதுகாப்புக் குறைவாக கருதப்பட்டது. இதனால் ருமேனியர்கள் உலோகங்களினால் பூட்டுக்கள் செய்யத்தொடங்கினார்கள். , அதன் சாவியையும் பாதுகாக்க கைகளிலேயே அணிந்து கொள்ளும் விதமாகச் சாவி வடிவமைக்கப்பட்டு, பொருட்களின் பாதுகாப்பை இரட்டிப்பாக்கினார்கள்.

முதலாம் நூற்றாண்டில் ரோம சாம்ராஜ்ஜியம் வீழ்ச்சி அடைந்தபின் பூட்டின் வளர்ச்சி தடைபட்டது.

பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பூட்டுக்களின் புதிய வளர்ச்சி ஆரம்பமானது.
ராபர்ட் பரோனின் 1778 ம் வருடம் கண்டுபிடித்த டபுள் ஆக்டிங் டம்ப்ளர் லாக்,

1784 ம் வருடம் ஜோசப் பிரம்மைய்யாவின் பூட்டு,

1818 ம் ஆண்டு ஜெர்மையாவின் பூட்டுக்கள்,

1848ல் லினெஸ் ஏலின் பின் டம்ப்ளர் பூட்டு,

1857 ல் ஜேம்ஸ் சர்ஜெண்டின் தானே பூட்டிக்கொள்ளும் பூட்டு,

1916ல் சாம்வேல் சேகலின் ஜெமி ப்ரூஃப் பூட்டு,

1924ல் ஹாரி சோரெஃப்பின் முதல் பாட்லாக்.....

இயந்திர வகையிலிருந்து தற்போது மின்னணுவிற்கு பூட்டின் தன்மை மாறுபடத் தொடங்கி உள்ளது.

இந்தியாவைப் பொறுத்த
வரையில் பூட்டு என்றாலேயே நினைவில் வருவது அலிகார் பூட்டுக்கள் மற்றும் திண்டுக்கல் பூட்டுக்கள்.

அலிகார் பூட்டுக்கள் புதிர் பூட்டு,அலங்காரப் பூட்டு, கைவிலங்கு பூட்டு, என்று பல வகையில் தயாரிக்கப்பட்டன. மிக அதிக அளவில் இவை ஏற்றுமதியும் செய்யப்பட்டன.

செட்டிநாட்டுப் பகுதிகளில், இன்றைக்கும் பல வீடுகளில், கதவுடன் கொண்ட பூட்டு பொருத்தப்பட்டிருக்கும். அதன் சாவி ஒரு உள்ளங்கை நீளத்தை விட பெரிதாகவே இருக்கும். தவிர, அந்தச் சாவி கனமாகவும் இருக்கும்.

திண்டுக்கல்லில் இருந்து வந்த மேங்கோ பூட்டுக்கள் அவற்றுடன் நம் வாழ் நாள் முழுவதும் பயன்படுத்தும் நிலையில் வந்தன.

திண்டுக்கல் பூட்டுக்கள் கைவேலைப்பாடுகளாலும்,
அலிகார் பூட்டுக்கள்  அச்சு இயந்திரங்களாலும் தயாரிப்பதாலும் திண்டுக்கல் பூட்டுக்களின் விலை அதிகமே.
அக்காலங்களில் அரசு அலுவலகங்களிலும் உபயோகப்படுத்தப்பட்டன..
#ப்யாரீப்ரியன்..
இணையத்தொகுப்பு...
https://m.facebook.com/story.php?story_fbid=3185816178168031&id=100002190405617



No comments:

Post a Comment