Sunday 19 July 2020

இராஜேந்திரசோழனின் பிறந்த நாள் எது??


#ஆடிஆதிரை_இராஜேந்திரச்சோழன்_பிறந்தநாள்
என்பதை குறிப்பிடும் #கல்வெட்டு

மாமன்னன் இராசேந்திரன் பிறந்த நாள் ஆடித் திருவாதிரையா?
மார்கழித் திருவாதிரையா? எனும் குழப்பத்தை தீர்த்த கல்வெட்டு...

திருவாதிரை என்பதில் யாருக்கும் குழப்பம் இல்லை.
நீலகண்டசாஸ்திரியாரும்,
சதாசிவபண்டாரத்தாரும் திருவாதிரை எனத்தான் அறிந்தனர்.

ஆனால் நீலகண்டசாஸ்திரிகள் மாதத்தை உறுதிப்படுத்தி கூறவில்லை.
பண்டாரத்தார் அதை மார்கழி என்று திருவெற்றியூர் கல்வெட்டை துணைகொண்டு கூறினார்.
~~~~~~~~~~~~~~~~~~~~
ஆனால்-
#திருவாரூரில் தியாகராசர் மூலஸ்தானத்தின் குமுத வரியில் உள்ள இராசேந்திரசோழனின் 31 வது ஆட்சியாண்டின் 244-ம் நாள் அவர் பிறப்பித்த #அரசுஆணையில் தன் தந்தையின் பிறந்த நாளுக்கும், அவரின் பிறந்த நாளுக்கும் ஈசனாரின் திருவாதிரைக்கும் நடக்கும் விழாவுக்கான நிவந்தம் பற்றி கூறுகிறார். அக்கல்வெட்டு இந்தியத் தொல்லியல் கல்வெட்டு இதழில் 1919-ம் ஆண்டு 674 எண்ணில் குறிப்புரைக்கப்பட்டுள்ளது.

இக்கல்வெட்டு ஏன் முழுமையாக ஏற்புடையாக இருக்கிறது என்றால்,
1.இது இராசேந்திரசோழனின் அரசாணை.

2.அவரே" யாம் பிறந்த ஆடி ஆதிரைக்கும் அய்யனின் ஐப்பசி சதயத்திலும் அய்யரின் மார்கழி திருவாதிரைக்கும்"என மூன்று நிகழ்ச்சிகளின் மாதம்,நட்சத்திரமும் குறிப்பிடப்படுகிறது.மார்கழியை பிறந்த மாதமாகக் குறிப்பிடும் பிற கல்வெட்டுகளில் இப்படி பிரித்து மூன்றையும் சுட்டவில்லை.அதோடு அவை அரசு ஆணையில்லை.

3.இராசேந்திரனுக்கு அணுக்கமான தியாகேசர் சன்னதி மூலஸ்தானத்தில் உள்ளது.

எனவே ஆடித்திருவாதிரை -  பார்போற்றும் வேந்தன்
எங்களது நாயகன் #இராஜேந்திரச்சோழன்
பிறந்த நாள்....
#ப்யாரீப்ரியன்

No comments:

Post a Comment