Saturday 7 September 2019

சந்திராயன்-2

#சந்திரயான் 2 நம்பிக்கை..

சந்திரயான்-1 விண்கலத்திற்கு பின்னர் நிலவை ஆய்வு செய்வதற்காக ஏவப்பட்ட இந்தியாவின் இரண்டாவது விண்கலம்.
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தினால் (ISRO) வடிவமைக்கப்பட்ட இந்த விண்கலம் ஸ்ரீஹரிக்கோட்டா விண்வெளி மையத்திலிருந்து நிலாவை நோக்கி ஜி. எஸ். எல். வி மார்க்  ஏவுகலன் மூலம் ஏவப்பட்டது.

இவ்விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவப் பகுதியின் தரையில் இருந்து 2.1 கிமீ உயரத்தில் இருந்த போது, இஸ்ரோ தரைக் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது.

2.1 கிமீ உயரம் வரையிலும் விக்ரம் லேண்டர் முழுக் கட்டுப்பாட்டில் இருந்தது.அனைத்து சாதனங்களும் நன்றாக இயங்கின.

விக்ரம் லேண்டரை நிலவின் தென் துருவப் பகுதியில் தரை இறங்கச் செய்யும் அந்த கடைசி 3 நிமிடங்களில் மட்டுமே சிக்கல் ஏற்பட்டு இஸ்ரோவிற்கும் விக்ரம் லேண்டருக்குமான தொடர்பு  தடைபட்டு நிலைநிறுத்துவதில் தோல்வி உண்டாகி இருப்பதாக அறிகிறோம்..

#நம்பிக்கை

நிலவின் தென் துருவப் பகுதியில் விக்ரம் லேண்டர் கருவியை அப்படியே மோதச் செய்து தரை இறக்காமல் ஒரு ஏரோபிளேன் தரை இறங்குவது போல ஸ்மூத்தாக தரை இறக்க திட்டம் செய்யப்பட்டது.இதன் பெயர் Soft Landing.

இப்போது விக்ரம் லேண்டருக்கும் இஸ்ரோவிற்கும் இடையிலான சிக்னல் துண்டிக்கப்பட்டு இருப்பதால் Soft Landing மட்டுமே தான் நடக்காது.
ஆனால் நிலவின் ஈர்ப்பு விசை விக்ரம் லேண்டரை பிடித்து கீழே இழுத்து விடும்.
நிலவின் தென் துருவப் பகுதியின் தரையை விக்ரம் லேண்டர் கட்டாயம் தொட்டு விடும்.

பூமியின் ஈர்ப்பு விசையை விட நிலவின் ஈர்ப்பு விசை 6 மடங்கு குறைவு என்பதால் 2.1 கிமீ உயரத்தில் இருந்து கீழே விழுந்தாலும் அதற்குப் பெரிதாக பாதிப்பு இருக்க வாய்ப்பு இல்லை என்றே கணிக்கப்படுகிறது.

விக்ரம் லேண்டர் உள்ளே இருக்கும் பிரக்யான் ரோவர் உயிர்ப்போடு இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம்.

இதற்கு எல்லாம் மேலாக சந்திரயான் 2 விண்கலத்தில் இருக்கும் ஆர்பிட்டர் நிலவை தொடர்ந்து சுற்றி வரும்.95% பணிகளை இந்த ஆர்பிட்டர் செய்யும்.விக்ரம் லேண்டர் ஆயுட்காலம் 14 நாட்கள் தான்.ஆனால் ஆர்பிட்டர் ஆயுட்காலம் 1 வருடத்திற்கும் மேல்.

சந்திரயான்-2 நிலவின் தென் துருவப் பகுதியின் தரையை தொட்டு விட்டதே வெற்றி எனலாம்.

 இது வரை எந்த நாடுகளும் தரைஇறங்க முயற்சிக்காக நிலவின் தென்துருவத்தை தேர்ந்தெடுத்தோம் ?????

இது வரை அமெரிக்கா,ரஷியா,சீனா  போன்ற எந்த நாடுகளும் தென் துருவத்தில் தரை இறங்க முயற்சிக்கவில்லை ஏன் என்றால் அது மிகவும் கடினமான பகுதி. தென் துருவப் பகுதி பூமத்திய ரேகையிலிருந்து வெகு தொலைவில் உள்ளது, இது இப்போது வரை முற்றிலும் அறியப்படாதது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, அதைச் சுற்றியுள்ள நிரந்தரமாக நிழலாடிய பகுதிகளில் நீர் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. சந்திரனின் தென் துருவத்தில் உள்ள பரப்பளவு நிழலில் உள்ளது, இது அதன் வட துருவத்தை விட மிகப் பெரியது, எனவே நீர் மற்றும் தாதுக்கள் இருப்பதை எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரோவின் கூற்றுப்படி, சந்திரனின் தென் துருவப் பகுதியில் குளிர் பொறிகளாக இருக்கும் பள்ளங்கள் உள்ளன மற்றும் ஆரம்பகால சூரிய மண்டலத்தின் புதைபடிவ பதிவுகளைக் கொண்டுள்ளன. பில்லியன் கணக்கான ஆண்டுகளில் இருந்து, சந்திரனின் தென் துருவத்தின் பள்ளங்கள் சூரிய ஒளியால் தீண்டத்தகாதவை, இது சலனமற்ற சூரிய மண்டலத்தின் தோற்றம் பற்றிய பதிவுகளைக் கொண்டுள்ளது. நிழலாடிய பள்ளங்கள் கிட்டத்தட்ட 100 மில்லியன் டன் தண்ணீரை வைத்திருக்கக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் அதன் பாறைப்படிவுகள் ஹைட்ரஜன், அம்மோனியா, மீத்தேன், சோடியம், மெர்குரி மற்றும் சில்வர் ஆகியவற்றின் தடயங்கள் உள்ளன, இது அத்தியாவசிய வளங்களின் பயன்படுத்தப்படாத ஆதாரமாக அமைகிறது. இஸ்ரோவின் கூற்றுப்படி, அதன் அடிப்படை மற்றும் நிலை நன்மைகள் எதிர்கால விண்வெளி ஆய்வுக்கு பொருத்தமான குழி நிறுத்தமாக அமைகின்றன.இதற்காக தான் இந்தியா மற்ற நாடுகளை போல் எளிதாக தன் விண்கலத்தை தரையிறங்க முடியும் நிலவின் பூமத்திய ரேகை பகுதியை தேர்ந்தெடுக்காமல் இது மிகவும் கடினமான முயற்சி என தெரிந்துமே இதில் அமெரிக்கா,ரஷ்யா,சீனா வரிசையில் நான்கோடு ஒன்றாக தன் பெயரை சேர்ப்பதற்கு முயலாமல் தனித்துவமாக தன் பாதையை வகுத்தது.இதில் ரிஸ்க் மற்றும் சாத்தியக்கூறுகள் மிகவும் கடினம் எனத் தெரிந்தும் 2.1 கிலோ மீட்டர் வரை நிலவின் தென் துருவத்தின்  அருகில் வந்தது இங்கு தோல்வி அல்ல பெரும் வெற்றிக்கான முதல்படி.
இது நம் நாட்டின் தனித்துவமான முயற்சிக்கு கிடைத்த வெற்றிக்கனியே.அதனால் உங்கள் குழந்தைகளிடம் சந்திராயன்-2 விண்கலம் நிலவில் தரையிறங்கவில்லை என்று எதிர்மறையாக சொல்லாமல்  நாம் உலகில் எந்த நாடும்  முயற்சிக்க தயங்கிய நிலவின் தென் துருவத்தில்  2.1 கிலோ மீட்டர்  உயரம் அருகில் வரை அடைந்து விட்டோம் என பெருமிதத்துடன் சொல்லுவோம்.இதற்காக கடுமையாக  உழைத்த அத்தனை விஞ்ஞானிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவருக்கும் எங்கள் இந்திய மக்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்.

No comments:

Post a Comment