Thursday 11 June 2020

லேப்டாப் பழைய பேட்டரி பயன்

#லேப்டாப்களின் பழைய #பேட்டரிகளை கொண்டு ஏழைகளின் குடிசைகளுக்கு செலவின்றி ஒளியூட்ட முடியும்...

பயனற்றவை என்று கருதி தூக்கி வீசப்பட்டும் லேப்டாப்களின் #பழைய_பேட்டரிகளை கொண்டு இந்தியாவில் வசிக்கும் ஏழைகளின் குடிசைகளுக்கு ஒளியூட்ட முடியும் என சமீபத்திய ஆய்வு தெளிவுப்படுத்தியுள்ளது.

லேப்டாப்களில் பயன்படுத்தப்படும் சுமார் 5 கோடி ‘லித்தியம்’ பேட்டரிகள் பயனற்றவையாக ஆண்டுதோறும் குப்பையில் தூக்கி வீசப்படுகின்றன. இவ்வகையில், தூக்கி எறியப்படும் சுமார் 70 சதவீதம் பேட்டரிகளில் மிச்சமிருக்கும் ஆற்றலைக் கொண்டு ஒரு நாளைக்கு 4 மணி நேரம் வீதம் ஓராண்டுக்கு ஒரு ‘எல்.ஈ.டி.’ விளக்கை ஒளிரச் செய்ய முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள சான் ஜோஸ் நகரில் சமீபத்தில் ஒரு ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஏழை-எளிய மக்கள் அதிகம் வாழும் குடிசைப்பகுதிகள் நிறைந்த இந்தியாவைப் போன்ற முன்னேறும் நாடுகள், இந்த எரிசக்தியை பயன்படுத்தி, மின்சார செலவுகளை ஓரளவுக்கு மிச்சம் பிடிக்கலாம் என அந்த ஆய்வின் முடிவு சுட்டிக் காட்டியுள்ளது.

லேப்டாப்பின் பழைய பேட்டரிகளைப் போன்ற எளிதில் மின்னூட்டம் செலுத்தத்தக்க மூலப்பொருட்களை வாங்க அதிக முதலீடு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

இவை பெரும்பாலும் குப்பைகளில் கிடைக்கக்கூடிய பொருட்களில் ஒன்றாக இருப்பதால், குடிசைகள் தோறும் ‘சோலார் பேனல்’களை பொருத்தி, அதன் மூலம் பகல் நேரத்தில் கிடைக்கும் சூரிய சக்தியை இந்த பழைய பேட்டரிகளில் சேமித்து, மின்சக்தியாக மாற்றலாம்.

அந்த மின்சக்தியின் வாயிலாக, ஏழை மக்களின் குடிசைகளை செலவே இல்லாமல் இரவு வேளைகளில் ஒளியூட்ட முடியும் என்பதை இந்த ஆய்வின் முடிவு வலியுறுத்துகின்றது.
#ப்யாரீப்ரியன்..மீள்...(2014)
https://m.facebook.com/story.php?story_fbid=766322816784058&id=100002190405617

No comments:

Post a Comment