Saturday, 26 October 2019

கோலம்

#கோலம்..
வீட்டின் முன்பு இடும்
கோலமென்பது வெறும் அழகுக்காக மட்டுமில்லை.  சரியான முறையில் சரியான அளவில் உருவங்கள் ஒன்றிணையும் கோலம் தெய்வீக சக்தியை வரவைக்கும் யந்திரத்துக்கு ஒப்பானது.
அதனாலேதான், கோலங்கள் வீட்டு வாசலிலும், பூஜை அறையிலும் வரையப்படுகின்றது.
மேலும் மார்கழியில் அதிகாலையில் கோலமிடுவதால் பூமத்திய ரேகையில் பல மாற்றங்கள் நிகழ்வதால்  அதாவது டிசம்பர் மாதத்தில் பூமினுடைய சக்திநிலையில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த சக்தி மாற்றத்தின்போது தேவையான அறிவு, ஞானம் இருந்தால், அப்போது ஏற்படும் சக்தி சூழ்நிலையை, நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.
அதில் ஒரு வழிமுறைதான் இந்த கோலமிடுதல்.

நாள்தோறும் சூரிய உதயத்திற்குமுன் வாசலில் கோலமிடுவதால் நம் உடலுக்கு தேவையான முழுமையான பிராணவாயு சுவாசிக்க இயலும்... 
வீட்டை பெருக்கி சாணம் தெளிப்பதால் கண்ணுக்கு தெரியாத கிருமிகள் அழிக்கப்படுகின்றன. குனிந்து நிமிர்ந்து புள்ளி வைத்து கோலம் போடும்போது இடுப்பெலும்பு வலுப்பெறுகிறது.

புள்ளியிட்டு கோலம் போடும்போது நம்முடைய சிந்தனை ஒருநிலைப்படுகிறது.
கற்பனைத்திறன்,
மன அமைதி,
நேர மேலாண்மையும்,
தன்னம்பிக்கையும் ஏற்படுகிறது.நம்முடையை சிந்தனை சிதறலையும் தடுக்கும் ஒருவித பயிற்சியாகிறது.

மேலும் புள்ளிக்கோலம் போடும்போது புள்ளிகளை உற்று நோக்கும்போது கண்பார்வை அதிகரிக்குது. (இதனாலதான் அந்தக் காலத்து பாட்டிகள் கண்ணாடி அணிந்ததில்லை)
அரிசி மாவினால் போடப்படும் கோலங்களால் எறும்புகளுக்கு உணவாகிறது.
முழுவதுமாக போட்டு முடித்த பிறகு மகிழ்ச்சி ஏற்படுவதும்,அண்டை வீட்டாரிடம் புகழும் கிடைக்கிறது..
கோலப்போட்டிகளில் கலந்து வெற்றி பெற்றால் பரிசும் கிடைக்கிறது..
#ப்யாரீப்ரியன்..

Tuesday, 15 October 2019

உறைகிணறு

#உறைகிணறு.. காவிரிப்பூம்பட்டினத்தில் வானகிரி, நெய்தவாசல், பெருந்தோட்டம் முதலிய பகுதிகளில் உறைகிணறுகள் காணப்படுகின்றன.
கடற்கரை அருகில் உறை கிணறுகள்.உறை கிணற்றுப் புறச்சேரி' என்ற ஒரு பகுதி குறித்தும்  நல்ல தண்ணீருள்ள கிணறு பற்றியும் பட்டினப்பாலை குறிப்பிடுகிறது.

தமிழ்நாட்டில் நடைபெற்ற தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளில் பல இடங்களில் சகொற்கை, அரிக்கமேடு, மாமல்லபுரம், வசவசமுத்திரம் (மாமல்லபுரம் அருகில்), மாளிகைமேடு, செங்கமேடு, மாங்குடி(நெல்லை), காஞ்சிபுரம், படைவீடு, பெரியபட்டினம் முதலிய இடங்களிலும் அண்மையில் #கீழடி (சிவகங்கை) பட்டரைப் பெரும்புதூர் (திருவள்ளூர்) போன்ற இடங்களிலும் #உறைகிணறுகள வெளிப்படுத்தப்பட்டன.

இவை இரண்டு வகையாக இருக்கும். ஒரே உயரம் அளவு உடையதாக வளையங்கள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும். வளையங்களுக்கு இடையில் களிமண்பூச்சு இருக்கும். சில இடங்களில் வளையத்தின் நடுவே சிறு துவாரம் இருக்கும். இதன் வழியே பக்கவாட்டு நிலத்தில் உள்ள நீர் கிணற்றுக்குச் சென்றுவிடும்.

மற்றொரு வகையில் உறை கிணற்றின் மேற்பகுதியின் விட்ட அளவு, கீழ்பகுதியை விடக் குறைவாக இருக்கும். அதனால், ஒரு வளையத்தின் மேல் இன்னொரு வளையம் வைக்கும்பொழுது மேலே வைக்கப்படும் வளையத்தின் கீழ்ப்புற விட்ட அளவு அதிகமாக இருப்பதால் அது கீழே உள்ள வளையத்தில் நன்றாகச் செருகிக் கொள்ளும்.

பொதுவாக மனிதன் வாழ்ந்த #பண்டையவாழ்விடங்களில்' இத்தகைய உறைகிணறுகள் காணப்படுகின்றன.

தமிழகத்தில் கிணறுகள் தோண்டப்பட்டதையும், அவற்றிலிருந்து நீர் எடுத்தலைப் பற்றியும் சங்க இலக்கியங்களான அகநானூறும்  பெரும்பாணாற்றுப்படையும்  குறிப்பிடுகின்றன.
#ப்யாரீப்ரியன்

Wednesday, 9 October 2019

கல்வெட்டுகளில் உள்ள தமிழி பெயர்கள்

#தமிழி_பெயர்கள் - #தமிழ் #பிராமி கல்வெட்டுகளில் கீழ்க்கண்ட பெயர்கள் காணப்படுகின்றன: 👇

அசூதன் 
அஞ்சி
அடன்
அட்டன்
அதன்
அதினன்
அத்திரன்
அந்துவன்
அந்தை
அரட்ட
அரிதன்
அரிதி
அரியதன்
அரிய்தி
ஆதன்
ஆதன்னாகன்
ஆய்சயன்
ஆரிதன்
இராவதன்
இளங்கடுங்கோ
இளங்கடுங்கோ
இளங்காயிபன்
இளங்கோ இ
இளஞ்சடிகன்
இளவெயினி
இளவோன்
உதயன்
உபறுவன்
எளசந்தன்
எளசுடன்
ஒபனபவிரய
கசபன் 
கடலன்
கடுங்கோன்
கணதேவன்
கணிமான்
கவுடியி
கழுமாறனதன்
காத்தான்
காயபன்
காயிபன்
கீரன்
கீரன்
குவிரந்தை
குவிரன்
குற்றன்
கைய் அளன்
கொறி
கொற்றந்தை
கொற்றி
கொற்றி
கோடன்சடிகன்
கோபன்
சந்தந்தைச்சந்தன்
சந்தரிதன்
சந்திரச நந்தி
சாதன்
சாத்தன்
சாத்தன்
சிழிவன்
செக்கத்தண்ணி
செங்காயபன்
செங்குவிரன்
செல்லிரும்பொறை
செற்அதன்
சேக்கந்தி
சேந்தன்
தியன் சந்தன்
தேவன்
நக்கன்
நதசிறியகுவன் 
நத்திநடன்
நாகன்தத்மன்
நெடுசாதன்
நெடுஞ்சழியன்
நெடுமலன்
பாரரசு
பிகன்
பிடந்தை
பிடன்
பிட்டந்தை
பிட்டன்
பின்னன்
பூதிவிர
பெருங்கடுங்கோன்
பெருங்கீரன்
பேரதன் பிடன்
போலாலயன்
மோசி
வழுத்தி
விசூவன்
வியகன்
வியக்கன்
வெணி
வெண்காசிபன்
வெளியன்
வேள்

நன்றி: திரு. இங்கர்சால், 

Wednesday, 2 October 2019

ரயிலில் இருக்கை ஒதுக்கீடு செய்வது இப்படி தான்...

பேருந்துகளில் நாம் விரும்பும் இருக்கையை தேர்வு செல்வது போல், #ரயிலில் மட்டும் தேர்வு செய்ய முடியாதது ஏன்...??
#ப்யாரீப்ரியன்..
நம்மில் பலருக்கு இந்த சந்தேகம் இருக்கும். முதியவர்களில் இருந்து இளைஞர்கள் வரை தங்களுக்கு ஏற்ற சீட் ஒருமுறை கூட ரயிலில் கிடைக்கவில்லை என புலம்புவதை கூட காதுப்பட கேட்டிருப்போம்.
ஆனால், இது ஏன், எதனால் பேருந்துகளில் விருப்பமான சீட் புக் செய்ய வாய்ப்புகள் இருக்கும் போது ரயில்களில் மட்டும் இல்லை என நீங்கள் என்றாவது யோசித்ததுண்டா?
#அறிவியல் காரணம்...
நாம் திரையரங்கில் எந்த இருக்கை வேண்டுமானாலும் நமது விருப்பத்தின் பேரில் பதிவு செய்யலாம். ஹவுஸ்புல் ஆனாலும், ஓரிரு இருக்கைகள் புக் ஆனாலும் எந்த பாதிப்புகள் இல்லை. ஏனெனில் இது நகர்வு தன்மையற்ற இடம்.

ஆனால், ரயில் என்பது அதிக வேகத்தில் பயணிக்க கூடிய நகர்வு பொருள். இங்கே நமது விருப்பத்தின் பேரில் இருக்கை பதிவு செய்யும் போது பல தவறுகள் மற்றும் எளிதாக விபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
#கோச்
பொதுவாக ரயில்களில் S1, S2 S3.... என பல கோச்சுகள் இருக்கும். ஒவ்வொரு கோச்சிலும் 72 இருக்கைகள் இருக்கும். மேலும், கீழ், மத்திய, மேல் படுக்கை அமைப்பும் கொண்டிருக்கும்.

~டிக்கெட் புக் ஆகும் முறை..
நீங்கள் டிக்கெட் பதிவு செய்யும் போது ஒவ்வொரு கோச்சிலும் மத்திய பகுதியில் இருக்கும் இருக்கைகள் தான் முதலில் பதிவு செய்யப்படும். அதாவது. 30 - 40 என்ற எண்களுக்குள் இருக்கும் இருக்கைகள் தான் பதிவு செய்வார்கள். எல்லா கோச்சிலும் இந்த மத்திய இருக்கைகள் பதிவான பிறகு. அதற்கடுத்த இருக்கைகள் சீரான முறையில் பதிவு செய்யப்படும்.
பர்த் பதிவுகளும் இப்படி தான் பதிவு செய்வார்கள். முதலில் கீழ் பர்த், பிறகு மத்தியில், அடுத்த மேல் பர்த் பதிவுகள் செய்யப்படும்.
#புவியீர்ப்பு_மையம்
ரயிலில் இப்படி டிக்கெட் பதிவு செய்து பிரித்தால் தான் ரயில் ஓடும் போது அதன் புவியீர்ப்பு மையம் பாதிக்கப்படாமல் இருக்கும். ரயில் ஓடும்போது அதன் சமநிலை பாதிப்படையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முறை பின்பற்றப்படுகிறது.

கடைசி நேரத்தில் டிக்கெட் யாராவது கேன்சல் செய்து உங்களுக்கு இருக்கை கிடைத்தால், அது 2,3 அல்லது 71,72 என்ற இருக்கையாக கிடைப்பதற்கு இந்த முறை தான் காரணம்.
#சிந்தியுங்கள்!
நூறு கிலோமீட்டர் வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கும் ரயிலில் S1, S2, S3 முழுவதும் நிரம்பியும், S4, S5, S6 காலியாக இருந்து, இதர கோச்கள் ஓரிரு இருக்கை மட்டும் பதிவாகியிருந்தால், கண்டிப்பாக ரயிலின் வேகத்தை கூட்டி, குறைத்து, ப்ரேக் போடும் போது விபத்துகள் நேர வாய்ப்புகள் உண்டு.
இதை தவிர்க்க தான் இந்த முறையில் டிக்கெட் புக் செய்யப்படுகிறது....

Monday, 30 September 2019

வசம்பு

விஷம் குடித்தவருக்குகூட இதை கொடுத்தால் பிழைத்துவிடுவார்கள்… கட்டாயம் வீட்ல வாங்கி வைங்க…

நம்முடைய முன்னோர்கள் வீட்டில் கட்டாயம் வசம்பு வைத்திருப்பார்கள். குறிப்பாக பிறந்த கைக்குழந்தைக்கு தினமும் வசம்பு உரசி வாயில் வைப்பதுண்டு. காரணம் குழந்தை சாப்பிடும் உணவாலோ அல்லது அலர்ஜியோ விஷத்தன்மையோ குழந்தைக்கு பரவக் கூடாது என்பதற்காக கொடுக்கப்படும்.

அதனால் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் வசம்பு என்பது குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் ஒன்று என்று. ஆனால் அது அப்படியல்ல. வசம்பு பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.

வசம்பு எப்பேர்ப்பட்ட கொடிய விஷத்தன்மையையும் போக்கக்கூடியது. அதனால் கட்டாயம் வீட்டில் வசம்பு வைத்திருக்க வேண்டியது அவசியம்.

வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து
சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லா
நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

வசம்பை விஷம்அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டு, மூன்று டீஸ்பூன் கொடுத்தால் உள்ளிருக்கும் விஷம் முழுக்க வெளியே வந்து விடும்.

கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது.

பசியைத் தூண்டி சோம்பலைத் தீர்க்கும்.

அகோரஸ் காலமஸ் (Acorus Calamus) என்ற அறிவியல் பெயர் கொண்ட இது
ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃப்ளாக் (Sweet Flag) என்று அழைக்கப்படுகிறது.

பாட்டி வைத்தியம் என்று நம் முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில்
சேர்ப்பது இந்த வசம்பைத் தான். கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி
காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள்.
இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது.
சுடு தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து
கிருமிநாசினியாகவும் பயன்படுத்தலாம்.
#ப்யாரீப்ரியன்

Wednesday, 18 September 2019

விழிப்புணர்வு பதிவு...
#ப்யாரீப்ரியன்

#தண்ணீர் என்றால் பத்து நாளில் புழு வைக்க வேண்டும்!

#பழங்கள் என்றால் குறிப்பிட்ட நாட்களில் அழுகி நாற்றமெடுக்க வேண்டும்!

#காய்கறிகள் என்றால் சில நாட்களில் சொத்தையாகி புழு வைக்க வேண்டும்!

#நவதானியங்கள் என்றால் கொஞ்ச நாளில் வண்டு சேர வேண்டும்...!

ஆக எது கெட்டுப்போகிறதோ!
புழு வண்டு வைக்கிறதோ!
எது அழுகி நாற்றமெடுக்கிறதோ!
எது ஊசிப் போய் வீணாகிறதோ!
எது வண்டு வைத்து குப்பைக்கு போகிறதோ!

அவை மட்டுமே இயற்கையின் விதிப்படி நல்ல தரமான #தீங்கில்லாத_உணவுப்பொருள்கள்....!!!

3 மாதம் ஆனாலும் புழு வைக்காமல் இருக்கும் பாட்டில் வாட்டர் கேன் வாட்டர் #எப்படி_நல்லதண்ணீர்_ஆகும்??

பழமுதிர் சோலைகளிலும் ரிலயன்ஸ் பிரஷ்களிலும் மெகா சூப்பர் மார்கெட்டிலும் பூச்சி மருந்து தெளித்து இரண்டு வாரமானாலும் கெடாமல், அழுகாமல், இளமை மங்காது, பள பளப்பாக விற்கப்படும்
பழங்கள் காய்கறிகள் நல்ல தரமான பொருட்களா??

இரண்டு மூன்று மாதத்தில் வீட்டில் அரைக்கப் படும் மிளகாய் பொடி, இட்லிப் பொடியிலேயே கடும் காரத்தை உள்வாங்கி புழு வந்து கெட்டுப்போகிறது...!!

பூச்சிக் கொல்லி மருந்து கலந்து பல மாதங்கள் ஆனாலும் கெட்டுப் போகாது, மணமாக விற்பனை செய்யப்படும் பாக்கெட்டுகள் நல்ல பொருளா??

#இல்லவே_இல்லை...!

ரெடிமேடு உணவு பொருள் பாக்கெட் எல்லாமே நஞ்சுதான் நஞ்சுதான்...!!!

டி.வி. விளம்பரம் பார்த்து எந்த உணவு மற்றும் அழகு சாதனப் பொருட்களை வாங்கினால் அதைவிட மடமையும் முட்டாள்தனமும் வேறு எதுவுமில்லை...

கெட்ட உணவுப் பொருள்களை மெகா கடைகளில் வாங்குவது, ஒரு பொழுது போக்கு சமூக கௌரவமாக மாறி விட்டது...
அதை விடக் கொடுமை..
நோயைப்பற்றி மெகா மருத்துவமனை சிகிச்சை அதன் செலவுகள் பற்றி உரத்து பேசுவதும் ஒரு சமூக கௌரவமாக கருதப்படும் அவலமான சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்....!!!

உணவு முறை, நோய், நலம், மருத்துவம், சமூகம்
பற்றிய புரிதல் கோளாறே இதற்கெல்லாம் காரணம் வரை முறையற்ற நுகர்வு பண்பாடும் இதற்கு அடிப்படைக்காரணம்...!

#உண்மையை_உ ணர்வோம்......

Monday, 16 September 2019

விமானத்தை கண்டுபிடித்தவர்..

#விமானத்தை கண்டறிந்தவர்...#தல்படே...

மறைக்கப்பட்ட நமது இந்திய அறிவியலின் கண்டுபிடிப்பு - 

பறவை பறப்பதை போல வானில் பறக்க  உருவாக்கப்பட்ட  விமானத்தை 17 டிசம்பர் 1903 ஆம் ஆண்டு ஓர்வில் ரைட் மற்றும் வில்பர்ட்ரைட் என்ற  #ரைட்சகோதரர்கள் தான் முதன்முதலில் உருவாக்கி உலகையே வியப்பிற்கு உள்ளாக்கினர் என்பதுதான் நாம் அனைவரும் படித்து அறிந்த செய்தி...

ஆனால் விமானத்தை இவர்களுக்கு முதலே இன்னொருவர் உருவாக்கிவிட்டார் என்று வரலாற்று சான்றுகளுடன் சிலர் கூறுகின்றனர்.
#நியூசிலாந்தை சேர்ந்த #ரிச்சர்ட்_பியர்ஸ் 
(Richard Pearce ) என்ற இயந்திரவியலாளர் 
31 மார்ச் 1903 ஆம் ஆண்டு முதலாவது விமானத்தை பரிசோதித்து உள்ளதாகவும் 
மீண்டும் விமானத்தில் மாற்றங்களை செய்து 11 மே 1903 ஆம் ஆண்டு பலர் முன்னிலையில் விமானத்தை இயக்கி காட்டியதாகவும் ஆனால் அது தரையிறக்கும் போது விபத்திற்கு உள்ளாகியதில் விமானம் முற்றாக சேதமடைந்ததாகவும்

மீண்டும் அதை சரி செய்து இயக்குவதற்கு முன்னர், ரைட் சகோதரர்கள் முந்திக்கொண்டதாகவும் செய்திகள் வந்ததாக அறியப்படுகிறது...
~~~~~~~~~~~~~~~~~~~~~~
உண்மையில்
இந்தியரான அறிஞர் சிவ்கர் பாபுஷி #தல்படே தான் உலகில் முதல் விமானத்தை உருவாக்கியவர் எனவும் 
அவர் வடிவமைத்த விமானத்தின் முதல் சோதனை ஒட்டம் 1895ஆம் ஆண்டு மும்பையில் ௨ள்ள ஜவ்பதி கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில்ல் நடைபெற்றதாகவும். அதில் அவருடைய விமானம் 1500 அடி உயரத்திற்கு பறந்து சென்று பத்திரமாக தரையிறங்கியதாகவும் 
அந்த பார்வையாளர்களில் கோவிந்த ரானடே மற்றும் ஷாயாஜி ராவ் கெய்க்வாட் போன்ற புகழ்பெற்ற நீதிபதிகளும் இருந்தனரெனவும் அறியப்படுகிறது. 

ஆனால், ரைட்ஸ் சகோதர்களின் விமானத்தின் முதல் சோதனை ஒட்டம் 1903ஆம் ஆண்டு டிசம்பர் மாததில் தான் நடைபெற்றது. அதுவும் அந்த விமானம் 13 நிமிடங்கள் மட்டுமே பறந்தன என்பது குறிப்பிடத் தக்கது.

தல்படே விமானத்தின் முதல் சோதனை ஒட்டம் வெற்றிபெற்றதாலும் விமான ஆராய்ச்சியை மேலும் தொடர பண உதவி தேவைப்பட்டதாகவும். தன்னால் நிறைய விமானங்களை பல திறனில் தயாரிக்க முடியும் ௭ன்று கூறியதாகவும், அவருடைய விமான ஆராய்ச்சிக்கு பரோடாவின் மகாராஜா சாயாஜி ராவ் ஹேய்க்வாட் பண உதவி செய்ய முன்வந்ததாகவும்...

 ஆனால், இந்தியன் ஒருவன் விஞ்ஞானியாக ஆகுவதை விரும்பாத ஆங்கிலேயர்கள் பரோடாவின் மகாராஜாவை மிரட்டியதால் அவ௫ம் ஆங்கிலேயர்களுக்கு பயந்து தல்படேக்கு பண உதவி செய்ய முன்வரவில்லை என அறியப்படுகிறது..

1916ஆம் ஆண்டு தல்படே மரணமடைந்தபிறகு, அவர் உருவாக்கிய விமானத்தையும் அதன் வடிவமைப்புகளையும் அவருடைய சொந்தங்கள் ஒரு ஆங்கிலேய கம்பெனிக்கு பணத்திற்காக விற்றுவிட்டதாகவும் அதன் மூலம். அவருடைய விமான வடிவமைப்பு ரைட்ஸ் சகோதர்களுக்கு சென்றிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

ரைட்ஸ் சகோதர்களின் விமானத்தின் முதல் சோதனை ஒட்டம் 1903ஆம் ஆண்டு டிசம்பர் மாததில் தான் நடைபெற்றது. அதுவும் அந்த விமானம் 13 நிமிடங்கள் மட்டுமே பறந்தன. ரைட்ஸ் சகோதர்கள் பறவை பறப்பதை முன்மாதிரியாக கொண்டு விமானத்தை உருவாக்கினர். 

ஆனால்,  தல்படே சூரிய ஆற்றல் மற்றும் பாதரசம் இணைந்த கொள்கையின்படி அதாவது, சூரிய ஆற்றலை கொண்டு பாதரசத்தை வெடிக்க செய்து அதன்முலம் கிடைக்கும் உந்துவிசையால் விமான என்ஜின் இயங்குமாறு வடிவமைத்து  முதல் சோதனை ஒட்டத்தை 1895ஆம் ஆண்டு வெற்றிகரமாக முடித்ததென்பது சிறப்பு தானே....
#ப்யாரீப்ரியன்..
~|இணையச்செய்திகளிலிருந்து|~~|

Saturday, 7 September 2019

சந்திராயன்-2

#சந்திரயான் 2 நம்பிக்கை..

சந்திரயான்-1 விண்கலத்திற்கு பின்னர் நிலவை ஆய்வு செய்வதற்காக ஏவப்பட்ட இந்தியாவின் இரண்டாவது விண்கலம்.
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தினால் (ISRO) வடிவமைக்கப்பட்ட இந்த விண்கலம் ஸ்ரீஹரிக்கோட்டா விண்வெளி மையத்திலிருந்து நிலாவை நோக்கி ஜி. எஸ். எல். வி மார்க்  ஏவுகலன் மூலம் ஏவப்பட்டது.

இவ்விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவப் பகுதியின் தரையில் இருந்து 2.1 கிமீ உயரத்தில் இருந்த போது, இஸ்ரோ தரைக் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது.

2.1 கிமீ உயரம் வரையிலும் விக்ரம் லேண்டர் முழுக் கட்டுப்பாட்டில் இருந்தது.அனைத்து சாதனங்களும் நன்றாக இயங்கின.

விக்ரம் லேண்டரை நிலவின் தென் துருவப் பகுதியில் தரை இறங்கச் செய்யும் அந்த கடைசி 3 நிமிடங்களில் மட்டுமே சிக்கல் ஏற்பட்டு இஸ்ரோவிற்கும் விக்ரம் லேண்டருக்குமான தொடர்பு  தடைபட்டு நிலைநிறுத்துவதில் தோல்வி உண்டாகி இருப்பதாக அறிகிறோம்..

#நம்பிக்கை

நிலவின் தென் துருவப் பகுதியில் விக்ரம் லேண்டர் கருவியை அப்படியே மோதச் செய்து தரை இறக்காமல் ஒரு ஏரோபிளேன் தரை இறங்குவது போல ஸ்மூத்தாக தரை இறக்க திட்டம் செய்யப்பட்டது.இதன் பெயர் Soft Landing.

இப்போது விக்ரம் லேண்டருக்கும் இஸ்ரோவிற்கும் இடையிலான சிக்னல் துண்டிக்கப்பட்டு இருப்பதால் Soft Landing மட்டுமே தான் நடக்காது.
ஆனால் நிலவின் ஈர்ப்பு விசை விக்ரம் லேண்டரை பிடித்து கீழே இழுத்து விடும்.
நிலவின் தென் துருவப் பகுதியின் தரையை விக்ரம் லேண்டர் கட்டாயம் தொட்டு விடும்.

பூமியின் ஈர்ப்பு விசையை விட நிலவின் ஈர்ப்பு விசை 6 மடங்கு குறைவு என்பதால் 2.1 கிமீ உயரத்தில் இருந்து கீழே விழுந்தாலும் அதற்குப் பெரிதாக பாதிப்பு இருக்க வாய்ப்பு இல்லை என்றே கணிக்கப்படுகிறது.

விக்ரம் லேண்டர் உள்ளே இருக்கும் பிரக்யான் ரோவர் உயிர்ப்போடு இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம்.

இதற்கு எல்லாம் மேலாக சந்திரயான் 2 விண்கலத்தில் இருக்கும் ஆர்பிட்டர் நிலவை தொடர்ந்து சுற்றி வரும்.95% பணிகளை இந்த ஆர்பிட்டர் செய்யும்.விக்ரம் லேண்டர் ஆயுட்காலம் 14 நாட்கள் தான்.ஆனால் ஆர்பிட்டர் ஆயுட்காலம் 1 வருடத்திற்கும் மேல்.

சந்திரயான்-2 நிலவின் தென் துருவப் பகுதியின் தரையை தொட்டு விட்டதே வெற்றி எனலாம்.

 இது வரை எந்த நாடுகளும் தரைஇறங்க முயற்சிக்காக நிலவின் தென்துருவத்தை தேர்ந்தெடுத்தோம் ?????

இது வரை அமெரிக்கா,ரஷியா,சீனா  போன்ற எந்த நாடுகளும் தென் துருவத்தில் தரை இறங்க முயற்சிக்கவில்லை ஏன் என்றால் அது மிகவும் கடினமான பகுதி. தென் துருவப் பகுதி பூமத்திய ரேகையிலிருந்து வெகு தொலைவில் உள்ளது, இது இப்போது வரை முற்றிலும் அறியப்படாதது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, அதைச் சுற்றியுள்ள நிரந்தரமாக நிழலாடிய பகுதிகளில் நீர் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. சந்திரனின் தென் துருவத்தில் உள்ள பரப்பளவு நிழலில் உள்ளது, இது அதன் வட துருவத்தை விட மிகப் பெரியது, எனவே நீர் மற்றும் தாதுக்கள் இருப்பதை எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரோவின் கூற்றுப்படி, சந்திரனின் தென் துருவப் பகுதியில் குளிர் பொறிகளாக இருக்கும் பள்ளங்கள் உள்ளன மற்றும் ஆரம்பகால சூரிய மண்டலத்தின் புதைபடிவ பதிவுகளைக் கொண்டுள்ளன. பில்லியன் கணக்கான ஆண்டுகளில் இருந்து, சந்திரனின் தென் துருவத்தின் பள்ளங்கள் சூரிய ஒளியால் தீண்டத்தகாதவை, இது சலனமற்ற சூரிய மண்டலத்தின் தோற்றம் பற்றிய பதிவுகளைக் கொண்டுள்ளது. நிழலாடிய பள்ளங்கள் கிட்டத்தட்ட 100 மில்லியன் டன் தண்ணீரை வைத்திருக்கக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் அதன் பாறைப்படிவுகள் ஹைட்ரஜன், அம்மோனியா, மீத்தேன், சோடியம், மெர்குரி மற்றும் சில்வர் ஆகியவற்றின் தடயங்கள் உள்ளன, இது அத்தியாவசிய வளங்களின் பயன்படுத்தப்படாத ஆதாரமாக அமைகிறது. இஸ்ரோவின் கூற்றுப்படி, அதன் அடிப்படை மற்றும் நிலை நன்மைகள் எதிர்கால விண்வெளி ஆய்வுக்கு பொருத்தமான குழி நிறுத்தமாக அமைகின்றன.இதற்காக தான் இந்தியா மற்ற நாடுகளை போல் எளிதாக தன் விண்கலத்தை தரையிறங்க முடியும் நிலவின் பூமத்திய ரேகை பகுதியை தேர்ந்தெடுக்காமல் இது மிகவும் கடினமான முயற்சி என தெரிந்துமே இதில் அமெரிக்கா,ரஷ்யா,சீனா வரிசையில் நான்கோடு ஒன்றாக தன் பெயரை சேர்ப்பதற்கு முயலாமல் தனித்துவமாக தன் பாதையை வகுத்தது.இதில் ரிஸ்க் மற்றும் சாத்தியக்கூறுகள் மிகவும் கடினம் எனத் தெரிந்தும் 2.1 கிலோ மீட்டர் வரை நிலவின் தென் துருவத்தின்  அருகில் வந்தது இங்கு தோல்வி அல்ல பெரும் வெற்றிக்கான முதல்படி.
இது நம் நாட்டின் தனித்துவமான முயற்சிக்கு கிடைத்த வெற்றிக்கனியே.அதனால் உங்கள் குழந்தைகளிடம் சந்திராயன்-2 விண்கலம் நிலவில் தரையிறங்கவில்லை என்று எதிர்மறையாக சொல்லாமல்  நாம் உலகில் எந்த நாடும்  முயற்சிக்க தயங்கிய நிலவின் தென் துருவத்தில்  2.1 கிலோ மீட்டர்  உயரம் அருகில் வரை அடைந்து விட்டோம் என பெருமிதத்துடன் சொல்லுவோம்.இதற்காக கடுமையாக  உழைத்த அத்தனை விஞ்ஞானிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவருக்கும் எங்கள் இந்திய மக்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்.

Wednesday, 28 August 2019

திருவள்ளுவர் நாணயம்

தெய்வப்புலவர் திருவள்ளுவரின்திருவு­­ருவம் பொறித்த ஒரு தங்க நாணயம் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினி சார்ந்த எல்லிஸ்துரை என்பவரால் சென்னையில் வெளியிடப்பட்டது என்பது ஒரு வியப்பான செய்தி..
ப்யாரீ ப்ரியனின் இலக்கிய வரலாற்று மீள்பகிர்வு...
கல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள தங்க நாணயங்களின் பட்டியலின் முதல் தொகுதியில் இந்தத் தங்க நாணயத்தைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு முதன்முதலாகக் காணப்படுகிறது. இரட்டை வராகன் என்று அழைக்கப்பட்ட ஒரு தங்க நாணயத்தின் முன்புறத்தில் அமர்ந்த நிலையில் திருவள்ளுவரும், பின்புறத்தில் ஐந்துமுனை நட்சத்திரமும் பொறிக்கப்பட்டுள்ளன என்று இக்குறிப்பு தெரிவிக்கிறது. இக்காசு ஆங்கிலேய கிழக்கிந்தியக் கும்பினியின் சென்னை அரசால் 1819-க்கு முன்னர் வெளியிடப்பட்டது என்றும், இது புத்தம் புதியதாகக் காணப்படுவதால் அச்சிடப்பட்டும் புழக்கத்திற்கு வெளியிடப்படாத நாணயமாக இருக்க வேண்டும் என்றும், இதே போன்று நான்கு நாணயங்கள் மட்டுமே கிடைத்துள்ளன என்றும், அவற்றில் இரண்டு லண்டனில் பிரிட்டிஷ் மியூசியத்திலும், மற்ற இரண்டு கல்கத்தாவில் இந்திய அருங்காட்சியகத்திலும­­் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன என்றும் இக்குறிப்பிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.
ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினி அரசு சென்னையிலிருந்து 19-ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் வெளியிட்ட "நட்சத்திரப் பகோடா" அல்லது 'வராகன்' என்று அழைக்கப்பட்ட பல தங்க நாணயங்களில் இதுவும் ஒன்று என்று தெரிகிறது. மேலும் இக் காசு இயந்திரத்தின் மூலம் மிகவும் நேர்த்தியாக அச்சடிக்கப்பட்டுள்ளத­­ு. கும்பினி அரசு சென்னை ஜார்ஜ் கோட்டையில் முதன் முதலாக 1807-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இயந்திர நாணய சாலையை நிறுவி தங்கம், வெள்ளி மற்றும் செப்புக் காசுகளை வெளியிடத் தொடங்கியது. 1817-ம் ஆண்டும் டிசம்பர் மாத இறுதியில் தங்க வராகன்கள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டு விட்டது. ஆகையால் இக்காசு 1807-ம் ஆண்டு முதல் 1817-ம் ஆண்டு வரையிலான பத்தாண்டு காலத்துக்குள் வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என்று நிச்சயமாகச் சொல்ல முடியும். மேலும், 1616-ம் ஆண்டும் ஆங்கிலேய கிழக்கிந்திய கும்பினியார் கல்கத்தாவில் வணிக மையம் நிறுவி, 200 ஆண்டுகள் ஆனதை கொண்டாட 1816-ம் ஆண்டு சில சிறப்பு நாணயங்களை வெளியிட்டார்கள். அவற்றுள் இது ஒன்றாக இருக்கலாம்.
எல்லிஸ் துரையும் திருக்குறளும்
அக்கால கட்டத்தில் ஃப்ரான்சிஸ் வைட் எல்லிஸ் என்னும் ஆங்கிலேய அதிகாரி சென்னை மாவட்டக் கலெக்டராகப் பணியாற்றி வந்தார். 1796-ம் ஆண்டு ஆட்சிப் பணியில் சேர்ந்த அவர் சில ஆண்டுகளிலேயே தமிழ் முதலிய தென்னிந்திய மொழிகளிலும் வடமொழியிலும் பெரும் புலமை பெற்றுவிட்டார். தமிழ் நூல்கள் அச்சேறிராத அக்காலத்திலேயே அவர் ஏட்டுச் சுவடிகளிலிருந்து முறையாகத் தமிழைக் கற்றுத் தேர்ந்தார். தமிழ் முதலிய திராவிட மொழிகள், சம்ஸ்கிருதம் போன்ற இந்தோ-ஆரிய மொழிகளிலிருந்து வேறுபட்டவை என்ற உண்மையை முதன்முதலாக உலகுக்கு அறிவித்த பெருமை இவரையே சாரும்.
எல்லிஸ் துரைக்கு திருவள்ளுவர் மீதும் திருக்குறள் மீதும் அளப்பரிய பற்று இருந்தது. திருக்குறளிலிருந்து பல குறள்களை தேந்தெடுத்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தெளிவான உரையுடன் ஓர் அரிய நூலை இவர் எழுதினார். இதுவே திருக்குறளின் முதல் ஆங்கில மொழி பெயர்ப்பாகும்.
#ப்யாரீப்ரியன்..

Friday, 23 August 2019

மகாபாரதமும் அறிவியலும்

#மகாபாரதம்...
இன்று இருக்கும் அறிவியலை விட மிக மேம்பட்ட அறிவு அன்று இந்தியாவில் இருந்திருக்கின்றது ஏதோ ஒருகாலத்தில் அது தொடற்பற்று போய் மீண்டும் ஐரோப்பாவில் மலர்ந்தது என அவர்களே சொல்கின்றார்கள்

ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்பையும் மகாபாரதம் மற்றும் கண்ணணோடு ஒப்பிட்டு அவர்கள் சிலாகிப்பதே வேறு ரகம்

அணுகுண்டு வெடிக்கும் பொழுது ஓப்பன் ஹைமர் எனும் யூதன் அது கீதையில் கண்ணன் சொன்ன வடிவம் என்கின்றான்

இன்றைய #அணுகுண்டு அன்றைய பிரம்மாஸ்திரம் சந்தேகமில்லை ஆனால் மகாபாரதம் அதை கட்டுபடுத்தும் வித்தை அர்சுனனுக்கு தெரிகின்றது அதனால் எங்கோ ஒரு வித்தை உண்டு என நம்பிக்கையோடு ஆய்வினை தொடர்கின்றது மேற்குலகம்

#பிரம்மாஸ்திரம் இப்படி என்றால் பாசுபத கணை எப்படி இருக்கும் என்கின்றது இன்னொரு ஆய்வு

கண்ணனின் சக்கராயுதம் இன்றைய #ட்ரோனின்  மாடல் என்கின்றது இன்னொரு ஆய்வு, கவனியுங்கள் பொருந்தும்

பார்வையிலே எரிக்கும் #லேசர் போன்ற சக்தி காந்தாரிக்கு இருந்திருகின்றது, ஒளி கதிரில் ஒருவரை எரிக்கலாம் என்பதன் தத்துவம் அது

கர்னணின் பிறப்பு கிட்டதட்ட #குளோனிங் மற்றும் நவீன விஞ்ஞான விஷயங்களை சொல்வதாக சொல்கின்றது மருத்துவம்

பலராமன் பிறப்பும் அதையே சொல்கின்றது

பாரதத்தை படித்த மேற்குலகம் அதன் நுட்பம் எல்லாம் இன்று கண்முன் நிற்பதை பார்த்து அதிசயிக்கின்றது

மந்திரம் சொன்னால் சில கணைகள் இயங்கும் என பாரத போர் சொல்வதை இன்று நாம் #வாய்ஸ்_பாஸ்வேர்ட் என்கின்றோம் என்கின்றது ஒரு ஆய்வு

இன்றைய ஏவுகணை எதிர்ப்பு #ஏவுகணைகள் எல்லாம் அன்றே பாரத போரில் பயன்பட்டன, ஏவுகணை எதிர்ப்பு கணைகள் சாத்தியம் என முதலில் சொன்னது

அர்ஜூனன் கழுத்தை குறிவைத்த நாகஸ்திரம் இன்று உலகை மிரட்டும் #உயிரியல் ஆயுதத்தின் வடிவம் என்கின்றது ஒரு ஆய்வு

ஆம் விஷத்தை ஆயுதமாக்கலாம் என இன்றைய உலகின் மிரட்டலை முதலில் சொன்னது பாரதமே

விண்வெளியின் ரகசியங்களை மகாபாரதம் சொல்லிதருவது போல் இன்னொரு காவியம் சொல்வதில்லை என்கின்றது இன்னொரு ஆய்வு

துரோணரும் துருபதனும் அமைத்த #வியூங்களை இன்றளவும் சிலாகிக்கின்றனர் ராணுவ தளபதிகள்

பாரதத்தை யார் ப்ரியமாக படிக்கின்றார்களோ இல்லையோ மிக நுட்பமாக படித்தவர்கள் இஸ்ரேலியர்

ஆம் யுத்தத்தில் மனநலமும் உற்சாகமும் முக்கியம். சோர்ந்துவிட்ட அர்ஜூனனை மனநலமாக எழவைத்த கண்ணனின் உரையே கீதை

அந்த பலமே அங்கு வெற்றியினை தீர்மானித்தது, இன்றளவும் தங்கள் வீரர்களின் மனநலத்தை காப்பதில் இஸ்ரேலின் கவனம் அதிகம்

அதே அளவு தந்திரம் எதிரியினை மனதால் குழப்புவது, அதை கண்ணன் செய்தான், இஸ்ரேல் அரபு போர்களில் அட்டகாசமாக செய்தது

பாரத போரில் பலமிக்க துரியன் படை ஒரேநேரத்தில் வந்தால் சிக்கல் , ஆனால் ஒவ்வொருவராக வந்து செத்தார்கள்

அரபுலகில் இன்று எல்லாவற்றையும் கடந்து ஈரானை மட்டும் சந்திக்க இஸ்ரேல் கிளம்புவது அப்படித்தான்

இஸ்ரேலிய வெற்றி ஒவ்வொன்றையும் பாருங்கள் அவர்கள் கண்ணனை அப்படியே படித்திருப்பார்கள்

அவர்களின் ராஜதந்திரி கீட்ஸேயாகட்டும் , தளபதி மோசே தயானாகட்டும் எல்லாவற்றிலும் கண்ணன் தெரிவான்

சிறிய படைகுழு பெரிய சேதத்தை செய்ய வேண்டும் என்பதை அபிமன்யுவிடம் இருந்து நுணுக்கமாக கற்றனர் இஸ்ரேலியர், மோசே தயான் அதில் தன்னிகரற்று இருந்தார்

போர் ஆயத்தம், நட்பு படை,  தலமை, குழு மனப்பான்மை, உளவு படை, அர்ப்பணிப்பு , தகவல் தொடர்பு என எல்லாவற்றையும் போதிக்கின்றது மகாபாரதம்..

ஆம் ராணுவம், உளவு, ராஜதந்திரம்,நிர்வாகம் என எல்லாவற்றிலும் வென்றவர்களை பாருங்கள், அதில் எல்லாம் கண்ணனின் முத்திரை இருக்கும்...
#ப்யாரீப்ரியன்...
படித்ததில் பிடித்தது....

Wednesday, 14 August 2019

தேசியக்கொடி ஏற்றுதல் குறித்து

#தேசியக்கொடி... குறித்து..

*சுதந்திர தினத்திற்கும் குடியரசு தினத்தன்றும் கொடி ஏற்றுவதில் உள்ள வேறுபாடுகள்.......*

*#முதல்_வித்தியாசம்......*

பதினைந்து ஆகஸ்ட் சுதந்திர தினத்தன்று கொடி  ஏற்றும்போது கொடி கீழிருந்து மேலே கயிற்றால்  இழுத்து பிறகு கட்டப்பட்டுள்ள கொடி திறக்கப்பட்டு பறக்கவிடப்படும் அன்றைய தினத்திற்கு மரியாதை செய்யும் விதமாக செய்யப்படும் இந்த நிகழ்வுக்கு "கொடியேற்றம்" அதாவது Flag hoisting என்றழைக்கபடுகிறது.,

இருபத்து ஆறு ஜனவரி மாதம் குடியரசு தினத்தன்று
கொடி கம்பத்தின் உச்சியிலே கட்டப்பட்டு இருக்கும். அந்த முடிச்சு அவிழ்க்கப்பட்டு அதாவது கொடி  திறக்கப்பட்டு பறக்கவிடப்படும்  இதை கொடியை பறக்கவிடுதல்  அதாவது flag unfurling என்பார்கள்..

*#இரண்டாவது_வித்தியாசம்

சுதந்திரம் கிடைத்தபோது அரசியல் சட்டம் அமுலுக்கு வரவில்லை. அப்பொழுது பிரதமர் தான் நாட்டில் முதல் மனிதராக political head  கருதப்பட்டார். குடியரசு தலைவர் ஒரு constitutional monarchy, அவர் அப்போது பதவி பிரமாணம் எடுத்துக்கொள்ளவில்லை. இதனால் சுதந்திர தினத்தில் பிரதமர்  கொடி ஏற்றுகிறார். குடியரசு தலைவர் மாலையில் ரேடியோ தொலைக்காட்சி மூலமாக உரையாற்றுவார்..

குடியரசு தினத்தன்று அரசியல் சட்டம் அமுலுக்கு வந்தபடியால்  அரசியல் சட்டத்தின் தலைவர் மற்றும் பாதுகாவலர் என்ற முறையில் குடியரசு தலைவர் கொடியை பறக்கவிடுவார்..

*#மூன்றாம்_வித்தியாசம்.......

சுதந்திர தினத்தன்று டில்லி செங்கோட்டையில் கொடி ஏற்றபடுகிறது

குடியரசு தினத்தன்று டில்லி ராஜ்  பாத்தில் கொடி பறக்கவிடப்படுகிறது.......
#ப்யாரீப்ரியன்...

Friday, 9 August 2019

தமிழகத்தில் அரியலூர் பகுதியில் வாழ்ந்த டைனோசர் இனம்

அரியலூர் படுகையில்  வாழ்ந்த #டைனோசார்கள்.

அரியலூர் படுகையில் டைனோசார் முட்டை கடந்த நூற்றாண்டின் இறுதிப் பகுதியில்தான் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால், 19ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதியிலேயே, டைனோசார் எலும்பு ஃபாசில்களும், பல்  ஃபாசில்களும், இந்திய புவியியல் ஆய்வுத் துறையை (G S I) சேர்ந்த புவியியலாளர்  WILLIAM THOMAS BLANFORD (1860) அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் அப்போது இந்த விலங்குகளுக்கு டைனோசார் எனும் பெயர் இல்லை. இவை MEGALOSAURAS என்றே அறியப்பட்டன. MEGA என்றால் ‘பெரிய’  SAURAS  என்றால் ‘ஊர்வன’. பின்னாளில் 1941ஆம் ஆண்டு, RICHARD OWEN  என்பார் DINOSAUR எனும் பெயரை அறிமுகம் செய்தார்.
கல்லமேடு கிராமதிற்கருகே சுமார் 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவானப் படிவப்பாறைகளில் கிடைத்த எலும்பு ஃபாசில்கள் மிகவும் சிதைந்திருந்தன. தனியாக  ஒரு பல் மட்டும்  நல்ல நிலையில் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து,1870 இல்,GSI ஐ சேர்ந்த RICHARD LYDEKKER, கல்லமேடு பகுதியிலும், CHARLES MATELY 1928 இல் கல்லமேடு மற்றும் ஓட்டக்கோவில்  பகுதியிலும் டைனோசார் ஃபாசில்களை கண்டறிந்தனர். MATELY அவர்களுக்கு உருவத்தில் மிகப் பெரிய TITANOSAURAS, சிறிய உருவமுடைய STEGOSAURAS ஆகியவற்றின் ஃபாசில்கள் கிடைத்தன. இதன் மூலம் இங்கே, ஒருவகையல்ல, பலவகை டைனோசார்கள் வாழ்ந்திருந்தன என அறியமுடிகிறது.

TITANOSAURAS போன்ற தழைத் தின்னிகள்  மட்டுமல்லாமல், ABELISAURAS போன்ற ஊன் தின்னி டைனோசார்களின் பாசில்களும் இங்கே கண்டறியப்பட்டுள்ளன.

அரியலூர் படுகையில் மட்டுமல்ல, உலகின் பல பாகங்களிலும், டைனோசார் எலும்பு பாசில்களை விட, டைனோசார் பல் பாசில்களே அதிகம் கிடைக்கின்றன.

“ வந்தீங்க, வந்துட்டுப் போனீங்க, போய்ட்டு வந்தீங்க, அப்புறமா போனீங்க, அதுக்கப்புறம் வரவேயில்லையே “ இது மனிதனின் பல்லுக்கான விடுகதை.
ஆனால், இது டைனோசார்களுக்குப் பொருந்தாது, ஏனெனில், இவைகளுக்கு பற்கள் விழுந்து கொண்டே இருக்குமாம், விழ விழ முளைத்துக் கொண்டே இருக்குமாம். அதனால்தானோ என்னவோ, பல் பாசில்கள் அதிகம் கிடைக்கின்றன. 

GSI ஐ சேர்ந்த, யாதகிரி மற்றுன் அய்யாசாமி ஆகிய புவியியலாளர்கள் 1987 ஆம் ஆண்டு , CARNOSAURAS பாசில்ககளை கண்டறிந்தார்கள். இதைத் தொடர்ந்து, 2013 இல்,TROODON வகை டினோசாரின் பல்லும் இங்கே கிடைத்தது,

நன்றி : பெரும்பாலான படங்களும், தகவல்களும், SCIENTIFIC THAMIZHAN விழியத்திலிருந்து                   
எடுக்கப்பட்டவை.
திரு.நிர்மல்ராஜா, திரு.சிங்கராஜன் சம்பந்தம் அவர்களுக்கும் நன்றி.
#ப்யாரீப்ரியன்...

Monday, 1 July 2019

மண்பானை நீரின் பயன்

#மண்பானை வாங்கிப் பயன்படுத்துங்கள்!

சளி பிடிக்கும் என சொல்லாதீர்கள்!

சளி என்கிற கழிவைத்தான் மண்பானை வெளியேற்றும்!

உங்கள் வீட்டு RO வாட்டர் வெளியேற்றாது !

மண்பானை நீர்- 7- 8 pH அளவு"

இரத்தத்தில் pH அளவும்
எலும்பு,
மூட்டு வலியும்...!

மூட்டு எலும்பு வலிக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மருத்துவர்கள் சொல்வது மூட்டு தேய்ந்து விட்டது, கால்சியம் குறைந்து விட்டது, எலும்பு அடர்த்தி குறைந்து விட்டது என்பதுதான் .

 இயல்பாக இரத்தத்தின் pH அளவு 7.4 ஆகும். (pH என்பது "potential of Hydrogen"). ஒரு பொருள் 7 இற்கு கீழ் pH அளவு இருந்தால் அந்த பொருள் அமில தன்மை உடையது. ( Acid ). ஒரு பொருள் 7 இற்கு மேல் pH அளவு இருந்தால் அந்த பொருள் காரத்தன்மை உடையது. ( Alkaline ) .

நமது இரத்தம் இயல்பாக காரத்தன்மை உடையது. இரத்தம் 7.4 pH அளவு உடையது...!
ஆனால் நாம் அருந்தும் பெரும்பாலான குளிர்பானங்கள் அமிலத்தன்மை உடையவை.
அதாவது pH அளவு என்பது பெரும்பாலும் 5 விட கீழாக இருக்கும். இந்த குளிர்பானங்களை அருந்தும் போது நமது இரத்தமானது அதன் இயல்பான காரத்தன்மையை இழந்து அமிலத்தன்மையாக மாறும்.

இது தொடர்ந்து நடக்கும் போது இரத்தம் அமிலத்தமையை அடையும்.

இது பல்வேறு உடல்நல கேடுகளுக்கு வழிவகுக்கும். எனவே இதை தடுக்கும் பொருட்டு உடலானது இரத்தத்தை காரத்தன்மையாக மற்ற முயலும்.

இரத்தத்தை காரத்தன்மை உடையதாக மாற்ற கூடிய பொருள் கால்சியம். எனவே...!

இந்த எலும்பு மற்றும் மூட்டுகளில் உள்ள கால்சியம் ஆனது ionized கால்சியம் ஆக மாற்ற பட்டு நமது இரத்தத்தில் கலக்கிறது . இப்போது இரத்தம் இயல்பான காரத்தன்மை அடைகிறது. இவ்வாறு எப்போதெல்லாம் இரத்தம் அமிலத்தன்மை உடையதாக மாறுகிறதோ அப்போதெல்லாம் கால்சியம் எலும்பு மூட்டுகளில் இருந்து பிரிந்து இரத்தத்தில் கலந்து அதை காரத்தன்மை உடையதாக மாற்றுகிறது.

எனவே எலும்பு, மூட்டுகள் வலுவிழக்கிறது. கடுமையான வலி உண்டாகிறது.

இப்போது எந்த அளவு pH ஆனது கீழ்கண்ட பொருட்களில் இருக்கிறது என்று கூகுளில் தேடி பார்த்தபோது கீழ்கண்ட அளவீடுகள் கிடைத்தன.

குளிர்பானங்கள் - 2.3 - 3.5 pH அளவு.
R.O.WATER - 5 - 6 pH அளவு
காபி - 4.5 - 5.5 pH அளவு

மண்பானை நீர் - 7- 8 pH அளவு.

R.O. WATER - என்பது நாம் வீடுகளில் பெருமையாக நினைத்து பயன்படுத்தும் தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி.
தற்காலங்களில் பெரும்பாலான வீடுகளில் இந்த கருவிகள் பொருத்தப்பட்டு தண்ணீரை சுத்திகரிப்பதாய் நினைத்து மூட்டுவலியை விலை கொடுத்து வாங்குகிறார்கள்.நீங்கள் குடிக்கும் அத்தனை குளிர்பானங்களும் மூட்டுவலிக்கு ஒரு காரணமாய் அமைகிறது .

இப்போது மண்பானை நீர் எவ்வளவு பாதுகாப்பானது என்று உங்களுக்கு தெரிய வரும். ஏன் என்றால் மண்பானை நீர் pH அளவு 7- 8 ஆகும்.

கார்போரேட்டுகள் திட்டமிட்டு விளம்பரம் செய்து நம்மிடையே குளிர்பானங்களை விற்கிறார்கள்.
அதுபோல் தண்ணீர் சுத்தமில்லை என்ற எண்ணத்தை மனதில் விதைத்து நீர் சுத்திகரிப்பு கருவியை விற்று நமக்கு நோயை பரப்புகிறார்கள்.  பின்னர் அவர்களே அந்த நோய்க்கு மருந்தை விற்பார்கள்.

இந்த சுழற்சி வலையை விட்டு வெளியில் வந்தால் மட்டுமே உங்களுக்கு நோய் குணமாகும்...!
#ப்யாரீப்ரியன்..
~~புலனத்திலிருந்து..

Thursday, 27 June 2019

ஆதிச்சநல்லூர் மண்பாண்ட பெண் ஓவியம்

ஆதிச்சநல்லூர் மண்பாண்ட ஓவியம்..
பெல்லாரி பாறை ஓவியம்...
இரண்டும் ஒன்று போலவே இருப்பது ஆராய்ச்சிக்குரியது...

Monday, 17 June 2019

தமிழினம் விழிக்க....குடும்ப கட்டுப்பாடு

#விழிப்புணர்வு_தகவல்

"மெல்ல அல்ல விரைவாகவே இனி சாகும் தமிழினம்!

#பெர்ட்டிலிட்டி_ரேட் என்ற ஒரு எண் உன்டு. அதாவது சராசரியாக ஒரு பெண் எத்தனை குழந்தை பெறுகிறாள் என்ற கணக்கு அது. இறப்புவிகிதத்தை எல்லாம் கணக்கில் கொண்டால் ஒரு இனம்/நாடு/மாநிலம் என எதுவாக இருப்பினும் அதன் தற்போதைய ஜனத்தொகை குறையாது இருக்கவேண்டுமெனில் ஒரு பெண் குறைந்தது 2.1 பிள்ளைகளையாவது சராசரியாக பெறவேண்டும். ஏனெனில் ஒரு ஆண்/ஒரு பெண் இணைந்து 2.1 குழந்தைகளையாவது சராசரியாக பெற்றால் தான் அந்த இனம்/நாடு/மாநிலத்தின் ஜனத்தொகை வளர்கிறதோ இல்லையோ, அழியாமலாவது இருக்கும். (2.1 என்பது சராசரி. அதனால் 0.1 குழந்தையை எப்படி பெறுவது என குழம்பவேண்டாம்

தமிழ்நாட்டின் ஜனதொகை பெருக்கம் நெகடிவில் உள்ளது. ஆம் சராசரியாக ஒரு தமிழ்ப் பெண் 1.7 குழந்தைகளையே பெறுகிறார். இந்தியாவின் அதிக மக்கள் தொகை உள்ள உபி, பிகாரில் இது 3.5. ஆம் சராசரி உபி, பிகார் பெண் 3.5 குழந்தைகளை பெறுகிறார்.

அதாவது இந்த தலைமுறையில் 2 கோடி தமிழர்கள் இருந்தால் அவர்கள் பிள்ளைகளாக 1.7 கோடி தமிழரே இருப்பார்கள். ஜனதொகையில் 15% ஒவ்வொரு தலைமுறையிலும் காணாமல் போகும். அதே சமயம் இந்த தலைமுறையில் 2 கோடியாக இருக்கும் பிகாரிகள் அடுத்த தலைமுறையில் 3.5 கோடியாக இருப்பார்கள். அத்தனை பேர் பிகாரிலும், உபியிலும் எப்படி வசிக்க முடியும்? அதனால் தான் நாடு, முழுக்க பரவுகிறார்கள். தென்னகத்தை நோக்கி பிரியமாக படையெடுக்கிறார்கள்.

இதனால் தான் தென்மாநிலங்களில் ஆள்பற்றாக்குறை ஏற்பட்டு பீகார், உபி என வடமாநில தொழிலாளிகளை இறக்குமதி செய்யும் நிலை உருவாகிறது. இதே நிலை தொடர்ந்தால் இன்னும் 100 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் தேசிய மொழி இந்தியாகவும், அகிலேஷ் சிங் யாதவின் பேரன் தமிழக முதல்வராகவும் இருக்கலாம். தமிழை கேட்கவேண்டுமெனில் எங்காவது மியூசியத்தில் போனால் ஒலிப்பதிவுகளை வைத்திருப்பார்கள் கேட்டுகொள்ளலாம்.

இந்த அவலநிலை எப்படி உருவானது, ஏன் உருவானது?

1970 களில் தான் இந்த குடும்பக்கட்டுப்பாடு திட்டம் இந்திரா காந்தி அரசால் கொன்டுவரப்பட்டது.

"நாம் இருவர் நமக்கு மூவர்" எனதான் அப்போது ஆரம்பித்தார்கள். இப்போது அது "நாம் இருவர். நமக்கு ஒருவர்" என மாறியுள்ளது. இனி "நாம் இருவர். நமக்கெதுக்கு இன்னொருவர்" என மாறினாலும் மாறலாம்.

தமிழக கட்சிகள் மொழியுரிமையை பேசினாலும், ஜனத்தொகை கட்டுப்பாடு எனும் நாசகர விசயத்தில் மத்திய அரசு "போடு தோப்புகரணம்" என்றால் "எண்ணிக்க" என சொல்லும் படித்தான் நடந்து கொண்டுள்ளன. சத்துணவு ஆயாக்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு ஆபரேஷனுக்கு ஆள்பிடிக்க எல்லாம் டார்கெட் வைத்து அவர்களில் பலர் ஆள் கிடைக்காமல் தாமே ஆபரேசன் செய்து கொண்ட கதை எல்லாம் நடந்ததுண்டு. குடும்பக்கட்டுப்பாடு ஆபரேசனுக்கு 500 ரூபாய் பணம், மஞ்சள் பையில் ஐந்து கிலோ அரிசி என எல்லாம் கொடுத்த கதை 80களில் வளர்ந்த பலரும் அறியலாம்.

இப்படிப்பட்ட நாசகரமான குடும்பக்கட்டுப்பாட்டு திட்டம் ஒரே தலைமுறையில் தமிழக ஜனத்தொகை வளர்ச்சி விகிதத்தை நெகட்டிவுக்கு கொண்டு வந்து விட்டது. எத்தனையோ தமிழ்ச் சாதிகளில் கல்யாணம் செய்ய பெண் இல்லை.  ஒரு குறிப்பிட்ட சாதியில் பெண் கிடைக்காத பையன்கள் படும் அவதியை முன்பு எழுதியிருந்தார். இந்த அவலத்துடன் ஆணாதிக்கமும் சேர்ந்து பெண் குழந்தைகளை கருவிலேயே அபார்ட் செய்து, பையன்களை மட்டும் பெற்றுக்கொள்ள வைத்து ஆண்-பெண் விகிதமும் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டது.

இதுமட்டுமின்றி ஜனத்தொகை குறைந்தால் நாடாளுமன்றத்தில் நமக்கான சீட்டுகளில் எண்ணிக்கை குறைந்து தமிழகத்தின் அரசியல் பிரதிநிதித்துவமும் குறைந்துவிடும். மாநிலங்களுக்கு ஒதுக்கபடும் நிதியும் குறையும்.

ஜீவாதாரமான இந்தப் பிரச்சனையை எந்த தமிழக அரசியல்கட்சியும் ஏனோ பேசுவதே இல்லை. அவர்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை இருப்பதே தெரியவில்லையா அல்லது சோஷலிச போர்வையில் கொண்டு வரப்படும் "ஜனத்தொகை கட்டுப்பாட்டு சூழ்ச்சியை" அவர்கள் புரிந்து கொள்ளவில்லையா என தெரியவில்லை.

இனியாகிலும் விழித்துக்கொள்வோம்....அதிக அளவில் குழந்தைகளை பெறுவோம். ஒவ்வொரு தம்பதியும் குறைந்தது 2 குழந்தைகளையாவது பெறுவது என உறுதி எடுக்கவேண்டும். இல்லையெனில் அண்ணன்/தம்பி, அக்கா/தங்கை, மாமா/சித்தப்பா/அத்தை போன்ற உறவுகள் எல்லாமே அழிந்துவிடும்.

பிள்ளைகள் செல்வங்கள். அவர்கள் சுமைகள் அல்ல.

விழிப்புடன் இல்லையெனில் மொழியும், இனமும், நாடும் அழிந்துவிடும்."
#ப்யாரீப்ரியன்..

- நன்றி:நியண்டர் செல்வன்

Thursday, 30 May 2019

பணக்கார கோவில்

#பணக்காரக்கோவில்..

2000 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் மிகப் பணக்கார கோவிலாகத் திகழ்ந்தது தற்போது பாகிஸ்தானின் மூலஸ்தானம் என்னும் இடத்தில் இருந்த #சூரியனார்_கோவில் ஆகும். இப்போது இந்த நகரை மூல்டான் என்று அழைக்கின்றனர். 

இங்கு காந்த சக்தியால் அந்தரத்தில் தொங்கிய அதிசய சூரியன் விக்கிரகம் அலெக்ஸாண்டரை அசரவைத்தது என்று கிரேக்க, மற்றும் அராபிய வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர். 

மூல்டான் பற்றி தொல்பழங்காலக் குறிப்புகளும் கிடைக்கின்றன.

கிரேக்க நாட்டு ராணுவ தளபதியான் ஸ்கைலாக்சும் இது பற்றி எழுதியிருக்கிறார். 

அவர் முதலாம் டேரியஸ் மன்னன் (கி.மு.550 – 486) காலத்தில் பஞ்சாபுக்கு வந்தார். 

காஸ்யபபுரம் பற்றி ஹெரோடோட்டஸ், டாலமி ஆகியோரும் குறிப்பிட்டுள்ளனர் என அறியப்படுகிறது. 

மூல்டான் கோவிலுக்கு வந்த அலெக்ஸாண்டர் அங்குள்ள கலைக்கோவிலைக் கண்டு அசந்தே போய்விட்டார். அந்தக் கோவில் விக்ரகம் பல காந்தக் கற்களின் உதவியால் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதை அவர் பார்த்தார். 

மூலஸ்தான் சூரியதேவனார் கோவில் பற்றி 1200 ஆண்டுகளுக்கு முன் சீன யாத்ரீகர் #யுவான்சுவாங்கும் சூரியனார் சிலை சொக்கத் தங்கத்தினால் ஆனதெனவும், ஏராளமான ரத்தினக் கற்களால் அலங்கரிக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக அறியப்படுகிறது.

மூல்டானில் வேறு இரண்டு கற்சிலைகளும் இருந்தனவெனவும் அவற்றின் பெயர் ஜுன்புகாத், சூன்புகாத் (துவார பாலகர்கள்??) பள்ளத்தாக்கின் இரண்டு பக்கமும் 80 கஜ இடைவெளியில் அமைக்கப்பட்டிருந்தன எனவும். இந்த சிலைகளை வெகு தொலைவிலிருந்தே காண முடியும் ஏனவே.பக்தர்கள் மரியாதை காரணமாக  வண்டியில் இருந்து இறங்கி வெறும் கால்களால் நடந்து கோவிலுக்கு வருவர் எனவும் கூறப்படுகிறது..

இது பற்றி சிந்து ராஜ்ய வரலாறு என்னும் புத்தகத்தில் #டாக்டர்_மும்தாஜ் என்ற பாகிஸ்தானிய எழுத்தாள பெண்மணி எழுதியுள்ளார்..

(கிருஷ்ண பகவானால் சபிக்கப்பட்ட அவரின் மகன் சாம்பன், தொழு நோயிலிருந்து மீள, சந்திரபாகா நதிக்கரையில் சூரியபகவானுக்கு ஒரு கோயில் கட்டி பிரியமாக வணங்கினார். அதுவே சூரியனுக்கு உரிய முதல் கோயில் என புராணங்கள் கூறுகின்றன).


#ப்யாரீப்ரியன்..

இணையத்திலிருந்து..

Saturday, 18 May 2019

ஐ எழுத்தின் சிறப்பு

#ஐ...

தமிழ் எழுத்துகளிலேயே தனக்கென ஒரு கம்பீரத்தை உடைய எழுத்து ”ஐ”

எழுத்தைப் பாருங்கள். ஒரு தமிழ் அரசன் தன்னைப் பணிந்த பகைவன் முன்னால் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் அழகை தன்னிடத்திலே கொண்டு விளங்கும்.

சொற்களோடு ”ஐ” சேர்த்து உச்சரிக்கும் போது, வசதியும் இனிமையும் கூடுகிறது.

”மாணிக்கக் கூத்தனை, வண்தில்லைக் கூத்தனை”-                                                   திருமூலர்.

”ஐ” என்கிற ஓரெழுத்தேகூடக் கடவுளைக் குறிக்கிறது. 
அது அகரம்-இகரம்-யகரம் என்ற மூன்றையும் சேர்ந்தது.

அகரம்-கடவுள்,பதி - இகரம்-ஆத்மா-பசு  -  யகரம்-உலகம், பாசம் என வாரியார் சுவாமிகள் விளக்குகிறார்.

தமிழகத்தின் பழைய இயற்கைப் பிரிவுகளை ”ஐந்திணை” என்றழைததனர். அவையாவன: குறிஞ்சி(மலை), முல்லை(காடு), மருதம்(வயல்), நெய்தல்(கடல்), பாலை.

”ஐ” என்றாலே தலைவன், காதலன் என்றொரு பொருள் உண்டு.

வேப்ப மரம் பூக்கும்பொழுது திரும்பிவிடுவதாகக் கூறிப் பிரிந்து சென்ற தலைவன் அவ்வாறு வரவில்லை.புதிதாகப் பூத்த வேப்பம்பூ தலைவன் இன்றி வீணாகிறதே எனத் தவைவி வருந்துகிறாள்..இங்கு தன் காதலனை ”ஐ” என்று குறிப்பிடுகிறாள்.

”கருங்கால் வேம்பின் ஒன்பூ யாணர்

என் ஐ இன்றியும் கழிவது கொல்லோ”

                                             (குறுந்தொகை)

ஐ என்றால அழகு என்றொரு பொருளுண்டு. அழகியது என்பதனை முன்னாளி்ல் ஐது என்பர். அழகாக மழை பெய்கிறது என்பதை ”ஐது வீழி பெயல்” எனச் சிறுபாணாற்றுப்படைக் குறிப்பிடுகிறது.

ஐ என்பதை தமிழில் மிக உயர்ந்த பெரியோர்களைம், மன்னர்களையும், சான்றோர்களையும் விளிக்க அதனுடன் யா இணைந்து ”ஐயா” என்கிற வழக்கு தமிழ் இலக்கியங்களிலும் நடைமுறையிலும் பயிலப்படுகிறது.

ஒருமுறை பாரத சொற்பொழிவாளர் ஒருவர் பேசும் பொழுது குறிப்பிட்ட செய்தியானது, ”தமிழ் மொழியில் மிக உயர்வான ஒரு சொல் ”ஐயா” என்பதாகும் என்றம், அந்தச் சொல் பயின்றுவரும் கவிதையில், அதனால் விளிக்கப்படுகிறர் மிக உயர்ந்த நிலையில் வைத்துப் பிரியமாக போற்றப்படுவர்” என்பதாகும்.

”ஐ” என்றாலே வியப்பின் அடையாளமாகும்.

”ஐ” என்ற ஓரெழுத்து ஏராளமான அழகிய பொருட்களைத்தருவது நிச்சயமாக நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
#ப்யாரீப்ரியன்...

Friday, 3 May 2019

குழலூதும் சிவன்

குழலூதும் சிவபெருமான்

வலப்புறம் உமை இடப்புறம் நந்திதேவருடன் பின்னிரு கரங்களில் மானும் மழுவுமேந்தி குழலிசைக்கும் சிவனாக.....
................
இராஜகம்பீர மண்டபத்து தூண் சிற்பம்/
இராசராசேச்சரம் எனும் ஐராவதீசுவரர் திருக்கோயில்/ தாராசுரம்

Thursday, 2 May 2019

உடுக்கை கயிறு



பெரும்பாறையை குடைந்து,
கையளவில் சிற்பத்தை செதுக்கி,

அச்சிறு சிற்பத்தின் கையில் உடுக்கையை வைத்து,
அந்த உடுக்கையின் கயிறையும் நேர்த்தியாக வடித்திருப்பதை....
எண்ணி.....
வியந்து தான் போனேன்....
அத்தனையும் ஆறு அங்குல பரப்பில்....
#ப்யாரீப்ரியன்..

Monday, 22 April 2019

எலும்புக் குறியீடு....

#உலக_புத்தகதினம் (23-04-2019).
உலகின் முதல் பதிவு.#எலும்பில்.!

குகைகளில் எழுதத் தொடங்கு முன்பே, எலும்புகளில் பதிவு செய்துவிட்டனர்.
 முதன் முதலில் குரங்கின் கை எலும்பில்  பெண்கள், மாதத்தின் நாட்களை, குறியீடாக அந்த எலும்பில் தனது #மாதவிடாயை, கருக்காலத்தைக் கணக்கில் கொள்ள, வானில் நிலவு வந்து போகும் காலக் கெடுவுடன் தொடர்புடையதாக பிரியமாககுறித்து வைத்துள்ளனர். ஆப்பிரிக்காவின் "#லேபோம்பா" (Lebombaஅ) எண்ற இடத்தில் அந்த குறியீடு செய்துள்ள எலும்பு கிடைத்தது. எனவே அதன் பெயரிலே லேபோம்பா எலும்பு என்றே அழைக்கப்பட்டது. அதன் வயது என்ன தெரியுமா? சுமார் 37,000 ஆண்டுகள்.! இந்த எலும்பில் 29 கோடுகள்/பட்டைகள் உள்ளன.

அதுபோலவே, இஷாங்கோ என்ற இடத்தில் கிடைத்த எலும்பின் பெயர் "இஷாங்கோ எலும்பு". எலும்பின் நுனியில் அதனை எழுதப் பயன்படுத்திய படிகக் குச்சியும்(crystal) உள்ளது. இதுவும் ஆப்பிரிக்க எரிமலைப்படிவுகளில் கிடைத்துதான். இதன் வயது 20,000 -25,000 ஆண்டுகள். இதில் 3 வரிசைகளில் எண்கள் பற்றி "டாலி( Tally )" குறியீட்டில் பதிவு செய்துள்ளனர் அக்கால பெண்கள்! இதில் 6 மாத சந்திர காலண்டர் பொறிக்கப்பட்டுள்ளது.

எலும்பில் எழுதிய மனிதன், மலையின் குகைகளில் எழுதினான். பிறகு பாப்பிரஸ் மரபட்டைகள், ஆடு மற்றும் கன்றுகுட்டியின் தோல்கள், மரபட்டைகள், களிமண், மண் ஓடுகள் மற்றும் பேப்பர்கள் என எழுத்தின் பதிவு கொஞ்சம் கொஞ்சமாக பரிணாமம் பெற்றது. இன்று மின்னஞ்சலில், வலைதளத்தில், e-எழுத்தாக மாறியுள்ளது.

காலப்பதிவுகள்..
மனிதப்பரிணாமத்தில்

விலங்குகளின் எலும்பில் எழுத்து தொடங்கி ஓலைச்சுவடி ..தாள்களாகி இன்று மின்னூலாகி பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது வியப்பு??

ஒரு புத்தகம் என்பது கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்குமான இணைப்பு,
தலைமுறைகள் மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையிலான பாலம்” என்பதும் ஒட்டுமொத்த மனித குலத்தை ஒரு குடும்பமாக இணைக்க உதவுகின்றன என்றும், புத்தகங்கள்
மனித குலத்தின் லட்சியங்களை பிரதிபலிக்கும் வகையில்  அமைந்திருப்பதாகவும் கருதி யுனெஸ்கோ அமைப்பு
கடந்த 1995 ம் ஆண்டு முதல் ஏப்ரல் 23 ம் தேதியை உலக புத்தக மற்றும் காப்புரிமை தினமாக கொண்டாடி வருகிறது.
#ப்யாரீப்ரியன்...
இணையத்தொகுப்பு பதிவிலிருந்து....

Friday, 19 April 2019

சிரமா?..சுரமா?

#குடமலைநாடு_கொண்டோன்.

விக்கிரம சோழன் உலாவில், இராஜராஜரின் ஆட்சிக்காலத்தில் நடந்த ஒரு போர்பற்றிய இருவரிகள்.. !
“தூதர் காப்புண்டு பகலொன்றில் ஈரொன்பது சுரமும் கொண்டு, மலைநாடு கொண்டோனும்.. “

காவிரியின் வலக்கரையான கலியூர் என்னுமிடத்தில், கங்கர் படைக்கும், சோழர் படைகளுக்கும் இடையேயான போர்.

தமது தலைநகரான தலைக்காடு பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் இருந்த கங்கர்படை,  சிறைபிடிக்கப் பட்டிருந்த தமது தூதன் ஒருவனை காக்க குடமலைநாடு நோக்கிப் பயணித்த சோழர் படையினை, இடையே தடுத்தி நிறுத்திய போர்.

சோழர் படையின் தளபதியாக அப்ரமேயன், இப்போரில் தான் கொன்றதாகக் கூறும் பதினெட்டு தளபதிகளின் பேரையும், பட்டியலிட்டு வைத்துப் போயிருக்கிறான் தமது கல்வெட்டில்.  ( படம் கீழே )

மேற்கூறிய விக்கிரம சோழனுலாவில் காணப்படும் வரிகளில் உள்ள சுரம் என்னும் வார்த்தை ‘காடு’ என்ற பொருள்கொள்ளப்பட்டு, ஈரொன்பது, அதாவது பதினெட்டு காடுகளை ஒரே பகலில் கடந்தது சோழர் படை என்று பொருள்கொள்ளப் பட்டிருந்தது முன்பு.

இக்கல்வெட்டு கிடைத்தபின், சுரம் என்ற வார்த்தை, காட்டினை மட்டுமல்ல.. சிரமாகிய தலையினையும் குறிக்கும் என்பது தெளிவாக விளங்கியது.
அப்ரமேயன் கல்வெட்டு காட்டும் அந்த பதினெட்டு கங்க தளபதிகளின் பெயர்கள் பின்வருமாறு :

1. ஹொய்சலர் நாகவர்மன்.
2. மலேபர மல்ல ஒயிகன்.
3. ஹொய்சலன் பெலஹொப்பா.
4. சோலக சஞ்சிதா.
5. சின்னிவாரா.
6. மாதல எரேகங்கா.
7. மத்தச பரமன்னன்.
8. ரண்டகண்டன்.
9. முண்டா.
10. ஜக்காரிகா.
11. வீருகா.
12. நாகவர்மா.
13. புத்தரா.
14. மேயின்வரா.
15. சந்திகா.
16. ஹொன்னா.
17. நன்னிகம்.
18. பெயர் தெரியவில்லை.

வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கல்வெட்டினை கண்டறிந்து, வெளியுலகிற்குத் தெரியப்படுத்திய முனைவர். வெங்கடேசன், நண்பர். திரு. கோமகனார் மற்றும் சசிதரன் குழுவினருக்கும், இதுபற்றி எப்போது எழுதினாலும், நன்றிகூறியே ஆகவேண்டும்.

கலியூர் போரில், கங்கநாட்டுத் தளபதிகள் பதினெட்டு (ஈரொன்பது ) பேரின் தலைகளையும் சீவியெறிந்து வென்றிருக்கிறார்கள்  சோழத்தளபதி  அப்ரமேயன் தலைமையிலான படையினர் என்பதைத்தான் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது இந்தக் கலியூர் கல்வெட்டு.

சரி. இப்போது இன்னோர் விஷயத்திற்கு வருவோம்.. !

பாண்டியனை சுரம் இறக்கின பெருமான்னு,  சுந்தரசோழருக்கு ஒரு புகழ்ப்பெயர் இருக்கிறதல்லவா ?

கலியூர் கல்வெட்டின்படி, சுரம் என்பதனை சிரம் ( தலை ) என எடுத்துக் கொண்டால், பாண்டியன் தலைகொண்ட பெருமான் என்றல்லவா பொருள்தருகிறது ?

அப்படியெனில், தனது ஆட்சிக்காலத்தில் நடந்த சேவூர்ப் போரில், வீரபாண்டியன் தலைகொண்ட பெருமையினை, தமது மகனான ஆதித்த கரிகாலரோடு, சுந்தர சோழரும் பகிர்ந்து கொண்டதை அல்லவா இது குறிக்கிறது.?

( ஏற்கனவே, பார்த்திவேந்திரன் வேறு அப்பட்டத்தினை சுமந்து கொண்டிருக்கிறார் தம் கல்வெட்டுகளில்.)

சோழ வரலாற்றில் விடுவிக்கப்படவேண்டிய புதிர்கள் இன்னும் எத்தனை எத்தனையோ.. ?!

ஆய்வாளர்கள்தான் விளக்கவேண்டும்.

எழுத்தாக்கம்  :
#உளிமகிழ் ராஜ்கமல்.

Tuesday, 9 April 2019

இரும்பை கண்டறிந்தவன் தமிழன்

அறிக...
இரும்பை கண்டுபிடித்தவர் யார் என கேட்டால் விடையாக
Henry Bessmer, England - 1856.என்று தானே சொல்வோம் இதுவரை...
இனி....அப்படி சொல்வோமா???
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்துள்ள
முதுமக்கள் தாழி, எலும்பு கூடுகள், இரும்பு மற்றும் பித்தளை பொருட்கள், கலைப்பொருட்கள், ஆயுதங்கள், தங்க ஆபரணங்கள் போன்றவை கிறிஸ்து பிறப்பிற்கு முந்தைய காலத்தை சேர்ந்தவை.
அதில் ஒரு பொருளின் (AGE) அகவை கி.மு.905, மற்றொரு பொருளின் அகவை கி.மு.791 என்றும் தெரியவந்துள்ளது. அதாவது கி.மு 10 – ஆம் நூற்றாண்டு மற்றும் கி.மு.8 – ஆம் நூற்றாண்டு என்கிறது (CARBON -14. TEST) ஆய்வறிக்கை.
கி.மு. 8 - ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழன் நாகரீகத்தோடு வாழ்ந்திருகின்றான். உலோக பொருட்களையெல்லாம் கையாண்டு இருக்கின்றான். அதிலும் குறிப்பாக ‘இரும்பு’ அவன் வாழ்வியலோடு ஒன்றர கலந்திருக்கிறதுஎன்பதெல்லாம் நமக்கு வியப்பான செய்திகள்.
‘இரும்பு வடித்தன்ன கருங்கைக் கானவன்’
‘இரும்பு வடித்தன்ன மடியா மென்தோல் கருங்கை வினைஞர் காதலம் சிறாஅர்.’ - என
பழந்தமிழர்களுக்கும் இரும்புக்குமான உறவை எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும்பறைச்சாற்றுகிறது.
‘அதியமான் நெடுமான் அஞ்சி’
அவரது தலைநகர் - தகடூர்.
இரும்பை வெட்டியெடுத்து அதை தகடாக்கும் தொழில் செய்யும் ஊர் என்பதால் அதற்கு தகடூர் என்று பெயர். இரும்பு வணிகத்தில் கொடிகட்டிப் பறந்த அதியமான், கடல் கடந்து பல்வேறு தேசங்களில் தனது இரும்பு வணிகத்தை நிலை நாட்டினார். அதிலொன்று துருக்கி நாடு. உருக்கி என்பது தான் துருக்கி என்று விளங்கியிருக்க கூடும். அந்த துருக்கியில் இன்றும் அதியமான் பெயரில் நகரம் இருக்கிறது.
ஆனால்,
பதினெட்டாம் நூற்றாண்டின் பாதியில் வந்த
அந்த வெள்ளக்கார வெண்ணை தான் இரும்பை கண்டுப்பிடித்தான் என்று திரித்து எழுதப்படுகிறது வரலாறு. ஆதிச்சநல்லூர் வரலாறு மட்டுமல்ல ; ஆதிதமிழர்களின் வரலாறுகளிலும் இந்த திரிபுவாத கும்பலில் கைங்கர்யம் நிறைய உண்டெனும் புரிதல் ப்ரியனுக்கு உண்டு.
தாழி பானை ஓடுகளில் காணப்படும் எழுத்துக் கீறல்களெல்லாம் விட்டுத்தள்ளுங்கள், இந்த தாளிப்பனைகள் பெற்றெடுத்த ஓலைச்சுவடிகளில் உழுத எழுத்தாணி ஒன்றுபோதுமே, தமிழர் இருப்பின் வரலாற்றுக்கு சாட்சியாக, இரும்பின் வரலாற்றுக்கு சாட்சியாக.
ரிக் வேதத்தின் உண்மையான பெயரே உருக்கு வேதம் என்பது தான். அதாவது உலோகங்களை உருக்கும் தொழில் நுட்ப ரகசியம் தான்.
ஆதிச்சநல்லூர் என்கிற
ஆதி ‘எச்ச’ நல்லூர் மட்டுமல்ல;
அதையும் தாண்டி, நமது கவனத்தை திருவள்ளூர் மாவட்டம் வடமதுரை மீதும் வைத்தாக வேண்டியது வரலாற்றின் தேவையாகும்.
பலநூற்றாண்டுகள் பழமை வாய்ந்த
பழைய கற்காலக் கல் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டது அங்குதான் என்பது மட்டுமல்ல; எம் வள்ளுவப் பாட்டன் பிறந்த ஊர் வடமதுரை என்பதாலும்..!
-தகவல்:சமரன் நாகன்
#ப்யாரீப்ரியன்....