#விமானத்தை கண்டறிந்தவர்...#தல்படே...
மறைக்கப்பட்ட நமது இந்திய அறிவியலின் கண்டுபிடிப்பு -
பறவை பறப்பதை போல வானில் பறக்க உருவாக்கப்பட்ட விமானத்தை 17 டிசம்பர் 1903 ஆம் ஆண்டு ஓர்வில் ரைட் மற்றும் வில்பர்ட்ரைட் என்ற #ரைட்சகோதரர்கள் தான் முதன்முதலில் உருவாக்கி உலகையே வியப்பிற்கு உள்ளாக்கினர் என்பதுதான் நாம் அனைவரும் படித்து அறிந்த செய்தி...
ஆனால் விமானத்தை இவர்களுக்கு முதலே இன்னொருவர் உருவாக்கிவிட்டார் என்று வரலாற்று சான்றுகளுடன் சிலர் கூறுகின்றனர்.
#நியூசிலாந்தை சேர்ந்த #ரிச்சர்ட்_பியர்ஸ்
(Richard Pearce ) என்ற இயந்திரவியலாளர்
31 மார்ச் 1903 ஆம் ஆண்டு முதலாவது விமானத்தை பரிசோதித்து உள்ளதாகவும்
மீண்டும் விமானத்தில் மாற்றங்களை செய்து 11 மே 1903 ஆம் ஆண்டு பலர் முன்னிலையில் விமானத்தை இயக்கி காட்டியதாகவும் ஆனால் அது தரையிறக்கும் போது விபத்திற்கு உள்ளாகியதில் விமானம் முற்றாக சேதமடைந்ததாகவும்
மீண்டும் அதை சரி செய்து இயக்குவதற்கு முன்னர், ரைட் சகோதரர்கள் முந்திக்கொண்டதாகவும் செய்திகள் வந்ததாக அறியப்படுகிறது...
~~~~~~~~~~~~~~~~~~~~~~
உண்மையில்
இந்தியரான அறிஞர் சிவ்கர் பாபுஷி #தல்படே தான் உலகில் முதல் விமானத்தை உருவாக்கியவர் எனவும்
அவர் வடிவமைத்த விமானத்தின் முதல் சோதனை ஒட்டம் 1895ஆம் ஆண்டு மும்பையில் ௨ள்ள ஜவ்பதி கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில்ல் நடைபெற்றதாகவும். அதில் அவருடைய விமானம் 1500 அடி உயரத்திற்கு பறந்து சென்று பத்திரமாக தரையிறங்கியதாகவும்
அந்த பார்வையாளர்களில் கோவிந்த ரானடே மற்றும் ஷாயாஜி ராவ் கெய்க்வாட் போன்ற புகழ்பெற்ற நீதிபதிகளும் இருந்தனரெனவும் அறியப்படுகிறது.
ஆனால், ரைட்ஸ் சகோதர்களின் விமானத்தின் முதல் சோதனை ஒட்டம் 1903ஆம் ஆண்டு டிசம்பர் மாததில் தான் நடைபெற்றது. அதுவும் அந்த விமானம் 13 நிமிடங்கள் மட்டுமே பறந்தன என்பது குறிப்பிடத் தக்கது.
தல்படே விமானத்தின் முதல் சோதனை ஒட்டம் வெற்றிபெற்றதாலும் விமான ஆராய்ச்சியை மேலும் தொடர பண உதவி தேவைப்பட்டதாகவும். தன்னால் நிறைய விமானங்களை பல திறனில் தயாரிக்க முடியும் ௭ன்று கூறியதாகவும், அவருடைய விமான ஆராய்ச்சிக்கு பரோடாவின் மகாராஜா சாயாஜி ராவ் ஹேய்க்வாட் பண உதவி செய்ய முன்வந்ததாகவும்...
ஆனால், இந்தியன் ஒருவன் விஞ்ஞானியாக ஆகுவதை விரும்பாத ஆங்கிலேயர்கள் பரோடாவின் மகாராஜாவை மிரட்டியதால் அவ௫ம் ஆங்கிலேயர்களுக்கு பயந்து தல்படேக்கு பண உதவி செய்ய முன்வரவில்லை என அறியப்படுகிறது..
1916ஆம் ஆண்டு தல்படே மரணமடைந்தபிறகு, அவர் உருவாக்கிய விமானத்தையும் அதன் வடிவமைப்புகளையும் அவருடைய சொந்தங்கள் ஒரு ஆங்கிலேய கம்பெனிக்கு பணத்திற்காக விற்றுவிட்டதாகவும் அதன் மூலம். அவருடைய விமான வடிவமைப்பு ரைட்ஸ் சகோதர்களுக்கு சென்றிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
ரைட்ஸ் சகோதர்களின் விமானத்தின் முதல் சோதனை ஒட்டம் 1903ஆம் ஆண்டு டிசம்பர் மாததில் தான் நடைபெற்றது. அதுவும் அந்த விமானம் 13 நிமிடங்கள் மட்டுமே பறந்தன. ரைட்ஸ் சகோதர்கள் பறவை பறப்பதை முன்மாதிரியாக கொண்டு விமானத்தை உருவாக்கினர்.
ஆனால், தல்படே சூரிய ஆற்றல் மற்றும் பாதரசம் இணைந்த கொள்கையின்படி அதாவது, சூரிய ஆற்றலை கொண்டு பாதரசத்தை வெடிக்க செய்து அதன்முலம் கிடைக்கும் உந்துவிசையால் விமான என்ஜின் இயங்குமாறு வடிவமைத்து முதல் சோதனை ஒட்டத்தை 1895ஆம் ஆண்டு வெற்றிகரமாக முடித்ததென்பது சிறப்பு தானே....
#ப்யாரீப்ரியன்..
~|இணையச்செய்திகளிலிருந்து|~~|
அறியாத புதிய செய்தியாக உள்ளது தகவலுக்கு நன்றி
ReplyDelete