Friday, 9 August 2019

தமிழகத்தில் அரியலூர் பகுதியில் வாழ்ந்த டைனோசர் இனம்

அரியலூர் படுகையில்  வாழ்ந்த #டைனோசார்கள்.

அரியலூர் படுகையில் டைனோசார் முட்டை கடந்த நூற்றாண்டின் இறுதிப் பகுதியில்தான் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால், 19ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதியிலேயே, டைனோசார் எலும்பு ஃபாசில்களும், பல்  ஃபாசில்களும், இந்திய புவியியல் ஆய்வுத் துறையை (G S I) சேர்ந்த புவியியலாளர்  WILLIAM THOMAS BLANFORD (1860) அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் அப்போது இந்த விலங்குகளுக்கு டைனோசார் எனும் பெயர் இல்லை. இவை MEGALOSAURAS என்றே அறியப்பட்டன. MEGA என்றால் ‘பெரிய’  SAURAS  என்றால் ‘ஊர்வன’. பின்னாளில் 1941ஆம் ஆண்டு, RICHARD OWEN  என்பார் DINOSAUR எனும் பெயரை அறிமுகம் செய்தார்.
கல்லமேடு கிராமதிற்கருகே சுமார் 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவானப் படிவப்பாறைகளில் கிடைத்த எலும்பு ஃபாசில்கள் மிகவும் சிதைந்திருந்தன. தனியாக  ஒரு பல் மட்டும்  நல்ல நிலையில் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து,1870 இல்,GSI ஐ சேர்ந்த RICHARD LYDEKKER, கல்லமேடு பகுதியிலும், CHARLES MATELY 1928 இல் கல்லமேடு மற்றும் ஓட்டக்கோவில்  பகுதியிலும் டைனோசார் ஃபாசில்களை கண்டறிந்தனர். MATELY அவர்களுக்கு உருவத்தில் மிகப் பெரிய TITANOSAURAS, சிறிய உருவமுடைய STEGOSAURAS ஆகியவற்றின் ஃபாசில்கள் கிடைத்தன. இதன் மூலம் இங்கே, ஒருவகையல்ல, பலவகை டைனோசார்கள் வாழ்ந்திருந்தன என அறியமுடிகிறது.

TITANOSAURAS போன்ற தழைத் தின்னிகள்  மட்டுமல்லாமல், ABELISAURAS போன்ற ஊன் தின்னி டைனோசார்களின் பாசில்களும் இங்கே கண்டறியப்பட்டுள்ளன.

அரியலூர் படுகையில் மட்டுமல்ல, உலகின் பல பாகங்களிலும், டைனோசார் எலும்பு பாசில்களை விட, டைனோசார் பல் பாசில்களே அதிகம் கிடைக்கின்றன.

“ வந்தீங்க, வந்துட்டுப் போனீங்க, போய்ட்டு வந்தீங்க, அப்புறமா போனீங்க, அதுக்கப்புறம் வரவேயில்லையே “ இது மனிதனின் பல்லுக்கான விடுகதை.
ஆனால், இது டைனோசார்களுக்குப் பொருந்தாது, ஏனெனில், இவைகளுக்கு பற்கள் விழுந்து கொண்டே இருக்குமாம், விழ விழ முளைத்துக் கொண்டே இருக்குமாம். அதனால்தானோ என்னவோ, பல் பாசில்கள் அதிகம் கிடைக்கின்றன. 

GSI ஐ சேர்ந்த, யாதகிரி மற்றுன் அய்யாசாமி ஆகிய புவியியலாளர்கள் 1987 ஆம் ஆண்டு , CARNOSAURAS பாசில்ககளை கண்டறிந்தார்கள். இதைத் தொடர்ந்து, 2013 இல்,TROODON வகை டினோசாரின் பல்லும் இங்கே கிடைத்தது,

நன்றி : பெரும்பாலான படங்களும், தகவல்களும், SCIENTIFIC THAMIZHAN விழியத்திலிருந்து                   
எடுக்கப்பட்டவை.
திரு.நிர்மல்ராஜா, திரு.சிங்கராஜன் சம்பந்தம் அவர்களுக்கும் நன்றி.
#ப்யாரீப்ரியன்...

No comments:

Post a Comment