1.அப்துல் கலாம் எப்போது பிறந்தார்?15.10.1931
2.அப்துல்கலாமின் தந்தை என்ன தொழில் செய்தார்?படகோட்டி
3.அப்துல்கலாமின் தாய் மற்றும் தந்தை பெயர் என்ன?தந்தையார் - ஜைனாலுபுதீன், தாயார் -ஆஷியம்மா
4.அப்துல்கலாம் தனது ஆரம்ப கல்வியை எங்கு படித்தார்?இராமேஸ்வரத்தில் ஒரு தொடக்கப்பள்ளியில்
5.அப்துல்கலாமின் நெருங்கிய பள்ளி நண்பர் பெயர் என்ன? பட்சி இராமநாத சாஸ்திரி
6.மசூதியில் செய்யும் தொழுகையும் ஒரு இந்துக் கோவிலில் செய்யும் பிரார்த்தனையும் ஒரே இடத்திற்குத்தான் சென்றடைகின்றன என்ற நம்பிக்கை எப்போதும் எனக்கு இருந்தது என்று கூறியவர் யார்?அப்துல் கலாம்
7அப்துல்கலாம் எந்த இந்துமத நூல்களை விரும்பிக் கற்றார்?இராமாயணம், மகாபாரதம், பகவத்கீதை
8அப்துல்கலாம் அடிக்கடி சென்ற கோவில் எது?இராமநாதசுவாமி திருக்கோவில், இராமேஸ்வரம்
9சீகல் என்ற கடல்புறாவை பார்த்து "இந்த பறவையை போல் மனிதர்களும் ஏன் பறந்து போக முடியாது"? என கேட்டவர் யார்?அப்துல் கலாம்
10சிறுவயதில் அப்துல்கலாம் என்ன வேலை செய்து சம்பாதித்தார்?செய்தித்தாள் வினியோகம்
11அப்துல்கலாம் இராமநாதபுரத்தில் உள்ள எந்த பள்ளியில் உயர்நிலை வகுப்பை முடித்தார்?ஸ்வார்ட்ஜ் உயர்நிலைப்பள்ளி
12ஸ்வார்ட்ஜ் பள்ளியில் அப்துல்கலாமை கவர்ந்த ஆசிரியர் யார்?அய்யாதுரை சாலமன்
13திருச்சியில் உள்ள எந்த கல்லூரியில் அப்துல்கலாம் தனது இன்டர் மீடியட் படிப்பை முடித்தார்?செயின்ட் ஜோசப்
14எந்த எழுத்தாளர்களின் நூல்களை அப்துல்கலாம் விரும்பி படித்ததாக கூறினார்?டால்ஸ்டாய், ஹார்டி, ஸ்காட்
15தனது இளங்கலை பட்டப்படிப்பை அப்துல்கலாம் எங்கு படித்தார்?செயின்ட் ஜோசப் கல்லூரி, திருச்சி
16அப்துல்கலாம் தனது தொழில்நுட்ப கல்வியை எங்கு பயின்றார்?சென்னை குரோம்பேட்டையிலுள்ள எம்.ஐ.டி
17அப்துல்கலாம் படிக்க தனது நகைகளை அடகு வைத்து பணம் தந்த அவரது சகோதரி யார்?ஜொஹாரா
18சென்னை கல்லூரியில் படித்தபோது அப்துல்கலாம் எழுதி ஆனந்த விகடன் வார இதழில் வெளிவந்து முதல்பரிசினை பெற்ற கட்டுரை எது? “நமது சொந்த விமானத்தை உருவாக்குவோம்”
19சென்னை எம்.ஐ.டியில் எந்த ஆண்டு கலாம் பட்டம் பெற்றார்?1958
20அப்துல்கலாமிற்கு எந்த இரண்டு வேலைக்கான நேர்முகத்தேர்வு அடுத்தடுத்த நாட்களில் அமைந்தது?1. விமானப்படையின் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் உற்பத்தி இயக்குநரகத்தில் பணி 2. பாதுகாப்புத்துறை பணி
21விமானப்படைத் தேர்வுக்காக அப்துல்கலாம் எங்கு சென்றார்?டேராடூன்
22பாதுகாப்புத்துறை தேர்வுக்காக அப்துல்கலாம் எங்கு சென்றார்?டில்லி
23அப்துல்கலாம் எந்த தேர்வில் வெற்றிபெற்றார்?பாதுகாப்புத்துறை
24அப்துல்கலாம் எந்த தேர்வில் 9-வது இடத்தை பெற்று தேர்வாகவில்லை?விமானப்படைத்தேர்வு
25விமானப்படைத் தேர்வில் வெற்றி பெறாத அப்துல்கலாம் மன அமைதிக்கான எங்கு சென்றார்? யாரை சந்தித்தார்?ரிஷிகேஷ் சென்று மகரிஷி சிவானந்தரை சந்தித்தார்
26“மனதில் தோன்றி வலுவடைந்த ஆசை நிச்சயமாக நிஜமாகும் இதை உறுதியாக நீ நம்பு ” என்று அப்துல்கலாமிடம் யார் கூறினார்?சுவாமி சிவானந்தர்
27ரிஷிகேசத்தில் இருந்து வந்தவுடன் அப்துல்கலாம் என்ன பணியில் சேர்ந்தார்?பாதுகாப்புத்துறை பணியில்
28கான்பூர் பாதுகாப்புத்துறையில் அப்துல்கலாம் என்ன பணியில் சேர்ந்தார்? DTP & P அலுவலகத்தில் முதுநிலை விஞ்ஞான உதவியாளர்.
29கான்பூரில் இருந்து பெங்களுருக்கு இடமாற்றம் செய்யப்பட்ட அப்துல்கலாம் என்ன நிறுவனத்தில் பணிபுரிந்தார்?ஏரோநாட்டிகல் டெவலப்மெண்ட் எஸ்டாபிளிஷ்மெண்ட் எனும் விமான வடிவமைப்பு வளர்ச்சி நிறுவனம்
30உள்நாட்டு தொழில்நுட்பத்தில் அப்துல்கலாமால் உருவாக்கப்பட்ட விமானத்தின் பெயர் என்ன?நந்தி
31பெங்களுரில் இருந்து மும்பைக்கு என்ன துறையில் பணியாற்ற அப்துல்கலாம் சென்றார்?இந்தியன் கமிட்டி ஆப் ஸ்பேஸ் ரிசர்ச்சில், ராக்கெட் என்ஜினியர் பணி
32பம்பாயில் அப்துல்கலாம் யாருக்கு கீழ் பணிபுரிந்தார்?விக்ரம் சாராபாய், எம்.ஜி.கே.மேனன், சராஃப்
33விண்வெளி ஆராய்ச்சி மற்றும் ஏவுகணை தயாரிப்பு பணியில் தனது குருநாதராக யாரை அப்துல்கலாம் குறிப்பிட்டார்?விக்ரம் சாராபாய்
34அப்துல்கலாமை பயிற்சிக்காக இந்திய அரசு எந்த வெளிநாட்டிற்கு அனுப்பியது?அமெரிக்காவிலுள்ள நாசா
35“நாசா“வின் விளக்கம் என்ன?National Aeronautics and space Administration
36நாசாவில் ஆறு மாதம் தங்கியிருந்து அப்துல்கலாம் என்ன பயிற்சியை பெற்றார்?சவுண்டிங் ராக்கெட் ஏவுவது பற்றிய பயிற்சி
371967 நவம்பரில் தும்பா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து எந்த ராக்கெட்டை அப்துல்கலாம் குழு ஏவி வெற்றி கண்டது?ரோகிணி-75
38விக்ரம் சாராபாய் எந்த ரக மோட்டாரை அப்துல் கலாமிடம் காட்டி இது போல் உங்களால் உருவாக்க முடியுமா என்று கேட்டார்?ராட்டோ (RATO) ரக மோட்டார்
39ராட்டோ ரக விமான மோட்டாரை அப்துல்கலாம் யாருடன் சேர்ந்து உருவாக்கினார்?வி.எஸ்.நாராயணன்
40ராட்டோ எஞ்சின் பொருத்திய விமானம் எப்போது வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது?1972
41எந்த துறையின் கீழ் இந்திய விண்வெளி ஆய்வு மையம் உருவாக்கப்பட்டது?இந்திய அணுசக்தி துறை
42எந்த இரு அமைப்புகள் இந்தியாவின் விண்வெளி ஆய்வுப்பணிகளை நடத்த பொறுப்பேற்றன?1.இன்சாட் 2. இஸ்ரோ
43இன்சாட் மற்றும் இஸ்ரோ பணிகளுடன் எஸ்.எல்.வி திட்டத்தின் நான்காவது பாகத்தை வடிவமைக்கும் பொறுப்பு யாரை தேடி வந்தது?அப்துல் கலாம்
44எஸ்.எல்.வி. சோதனைக்காக முன்னர் தேர்வு செய்யப்பட்ட இடம் எது? அது இப்போது எதற்கு பயன்படுத்தப்படுகிறது?ஆந்திர மாநிலத்தில் ஏவுதளமாகச் செயல்படும் ஸ்ரீஹரிகோட்டா
45அப்துல் கலாமின் குருநாதர் விக்ரம் சாராபாய் எந்த ஆண்டு மரணமடைந்தார்?1972
4610.08.1979-இல் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து அப்துல்கலாமால் ஏவப்பட்டு சரிவர இயங்காமல் வெடித்து சிதறிய ராக்கெட் எது?எஸ்.எல்.வி.3
47எஸ்.எல்.வி.3 ராக்கெட்டின் குறைபாடுகளை சரிசெய்து 18.07.1980-ல் எந்த செயற்கைக்கோளுடன் விண்ணில் அப்துல்கலாம் குழு செலுத்தியது?ரோகிணி செயற்கைக்கோள்
48 செயற்கைக்கோள்களை ஏவும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெற யார் காரணம்?அப்துல் கலாம்
49அப்துல்கலாம் தலைமையில் எஸ்.எல்.வி-3டி-1 விண்ணில் என்று செலுத்தப்பட்டது?31.05.1981
501982-ல் அப்துல்கலாம் வகித்த இந்திய அரசின் பதவி எது?பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பின் டைரக்டர் ஜெனரல்
51அப்துல்கலாம் வகித்த பதவிகளுள் ஒன்று?பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிவியல் ஆலோசகர்
52அப்துல்கலாம் தலைமையில் அக்னி ஏவுகணை எப்போது விண்ணில் ஏவப்பட்டது?22.05.1989
53யாருடைய வழிகாட்டுதலின் கீழ் 1998ம் ஆண்டு பொக்ரான் அணுகுண்டு சோதனை சிறப்பாக செயல்படுத்தப்பட்டது?அப்துல்கலாம்
54வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது யாரை ஜனாதிபதியாக்கினார்?அப்துல்கலாம்
55இந்தியாவின் எத்தனையாவது குடியரசுத்தலைவராக அப்துல்கலாம் பதவியேற்றார்?11 வது குடியரசுத்தலைவர்
56பாதுகாப்பு துறையில் பயன்படுத்தப்பட்டு வந்த பலவகை தொழில்நுட்பங்களை கொண்டு ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் எத்தகைய கருவிகளை உருவாக்க அப்துல்காலம் வழிவகை செய்தார்?இரத்தத் துடிப்பை சீராக்கும் கருவி (Cardiac Pacemaker) , இரத்த நாளங்களைச் சீராக்கும் கருவி (Intra Vascular stent), கா்ப்பத் தடைக்காக கர்ப்பப் பையினுள் வைக்கப்படும் ஒரு கருவியான இன்ட்ரா-யுடெரின் காண்ட்ராசெப்டிவ் டிவைஸ் (IUCD)
57நடக்க முடியாதவர்கள், போலியோ நோயாளிகளுக்கு காம்போசிட் உலோகம் மூலம் அப்துல்கலாம் என்ன செய்து கொடுத்தார்?செயற்கைக் கால்கள்
58உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்காக அப்துல்கலாம் என்ன கருவிகளை கண்டுபிடித்து வழங்கினார்?எடைகுறைவான FRO ஊன்று கோல்
59இருதய வால்வு மற்றும் இடுப்பு எலும்புப் பகுதியில் பொருத்தப்படும் தகடுகளை யார் வடிவமைத்தது?அப்துல்கலாம்
60அப்துல்கலாமுக்கு தேசிய வடிவமைப்பு விருது எப்போது வழங்கப்பட்டது?1980 61அப்துல்கலாமுக்கு பத்ம பூஷன் விருது எப்போது வழங்கப்பட்டது?1981
62அப்துல்கலாமுக்கு டாக்டர் பிரேன்ராய் விண்வெளி விருது எப்போது வழங்கப்பட்டது?1986
63ஓம் பிரகாஷ் பாஸின் விருது அப்துல்கலாமுக்கு எந்த ஆண்டு வழங்கப்பட்டது?1986
64பத்ம விபூஷன் விருது அப்துல்கலாமுக்கு எந்த ஆண்டு வழங்கப்பட்டது?1990
65நேரு தேசிய விருது அப்துல்கலாமுக்கு எந்த ஆண்டு வழங்கப்பட்டது?1990
66ஆரியப்பட்டா விருது அப்துல்கலாமுக்கு எந்த ஆண்டு வழங்கப்பட்டது?1994
67பேராசிரியர் நாயுடம்மா நினைவு தங்கமெடல் அப்துல்கலாமுக்கு எந்த ஆண்டு வழங்கப்பட்டது?1996
68ஜி.எம்.டி மோடி விருது அப்துல்கலாமுக்கு எந்த ஆண்டு வழங்கப்பட்டது?1996
69இந்திராகாந்தி விருது அப்துல்கலாமுக்கு எந்த ஆண்டு வழங்கப்பட்டது?1997
70பாரதரத்னா விருது அப்துல்கலாமுக்கு எந்த ஆண்டு வழங்கப்பட்டது?1997
71வீரசாவர்கர் விருது அப்துல்கலாமுக்கு எந்த ஆண்டு வழங்கப்பட்டது?1998
72இந்தியா 2020, அக்னி சிறகுகள் என்ற புத்தகங்களை எழுதியது யார்?அப்துல்கலாம்
73TIFAC தலைவராக அப்துல்கலாம் இருந்தார்? TIFAC என்றால் என்ன?Technology of Information Fore Casting and Assessment Council)
74இந்தியா 2020ல் வல்லரசாக எந்த 5 அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.1. விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்துதல் 2. மின் உற்பத்தி
3. கல்வி மற்றும் ஆரோக்கியப் பராமரிப்பு 4. தகவல் தொழில்நுட்பம்
5. போர் வியூகத்துறை
75இந்தியாவின் மாபெரும் வளர்ச்சிக்கு யார் துணை நிற்பார்கள் என்று அப்துல்கலாம் கூறினார்?இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள்
76“கனவு காணுங்கள்” என்ற மந்திரச் சொல்லுக்குரியவர் யார்?அப்துல்கலாம்
77இந்திய ஜனாதிபதியாக எந்த ஆண்டுகளில் அப்துல்கலாம் பதவி வகித்தார்?ஜூலை 25, 2002 – ஜூலை 25, 2007
78சென்னையில் உள்ள எந்த பல்கலைக்கழகத்தில் அப்துல்காலம் கௌரவப் பேராசிரியராக பணிபுரிந்தார்?அண்ணா பல்கலைக்கழகம்.
79ஆ.ப.ஜெ.அப்துல்கலாமின் முழுபெயர் என்ன?ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல்கலாம்
80. இந்தியாவில் ஏவுகணை (அக்னி) தொழில்நுட்ப வளர்ச்சிக்கு காரணமான விஞ்ஞானி யார்?ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.
81. அக்னி ஏவுகணையின் தந்தை என்றழைக்கப்பட்டவர் யார்?ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.
82. பாரத ரத்னா விருது பெற்ற பின் குடியரசுத் தலைவரான நபர் யார்?ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.
83. Missile Man of India என்றழைக்கப்படுபவர் யார்?ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.
84. .ஏவுகணை தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய தமிழர் யார் ?ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.
85.இளைஞர்களின் எழுச்சி நாயகனான அப்துல்கலாம் என்று காலமானார்.27.07.2015
86.அப்துல்கலாம் எந்த மாநிலத்தில் இருந்த போது மரணமடைந்தார்?மேகாலயா மாநிலம்
87.எந்த IIM- லில் உரையாற்றிக் கொண்டிருந்த போது அப்துல்கலாம் உயிர் பிரிந்தார் ?ஷில்லாங் IIM (Indian Institute of Management )
88.அப்துல்கலாம் இறந்த போது அவருக்கு வயது என்ன?83 க்கும் 84 க்கும் இடையில்.
89.APJ அப்துல்கலாம் அவர்களுடைய உடல் தமிழகத்தில் எங்கு அடக்கம் செய்யப்பட்டது? இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தங்கச்சிமடம் பஞ்சாயத்துக்குட்பட்ட பேய்க்கரும்பு என்ற இடத்தில்.
90. அக்டோபர், 15 என்ன தினமாக தமிழக அரசு அறிவித்துள்ளது ?
இளைஞர் எழுச்சி தினம்.
Thursday, 15 October 2015
கலாம்..The leader in human souls
Pyaree Priyan....in fb...twitter..& all social networks...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment