Saturday, 31 October 2015

மன்னர் இராம நாதனின் அரிய கல்வெட்டு ்

பிச்சை எடுப்பது தவறு என்று சொன்ன முதல் மன்னன்.
வயிற்றுப்பசியோடு யாரும்
வாழ்ந்திட கூடாது .என்று யோசித்த ஒரு மன்னன்
அதற்காண அரசானையும், அதனை எப்படி செயற்படுத்த வேண்டும் என்ற முறையையும்,
அரசானையை கடைப்பிடிக்காத மக்களுக்கும்
அதனை செயல்படுத்தாத அதிகாரிகளுக்கு என்ன தண்டனை
என்ற விவரங்களை கல்வெட்டாக செதுக்கி வைத்துள்ளான்
போசள அரசன் வீர இராமநாதன் .
ஆண்டு-கி.பி.1295
அரசு - போசளர்
மன்னன் -வீரராமநாதன்
கல்வெட்டு செய்தி
"ஸ்ரீ...ஸ...தி..ஹொ(சள) ஸ்ரீவீரராமநா(த) வரீஸர்க்கு
யாண்டு நாற்பத்தொன்றாவது உடையார் பெண்னையாண்டார் மட த்திலும் பெண்னை நாயனார் தேவதானமாக (ஊ)ர்களிலும் ஓரு அதிகாரியாதல் கணக்கர் காரியஞ் செய்வார்களாதல் கூசராதல் ஆரேனு
மொருவர் வந்து விட்டது விடாம(ல்) சோறு வேண்டுதல்
மற்றோதேனுமொரு நலிவுகள் செய்குதல் செய்தாருண்டாகில்
தாங்களே அவர்களைத் தலை
யை அறுத்துவிடவும் அப்படி செய்திலர்ளாதல் தங்கள்
தலைகளோடே போமென்னும்படி றயப்புத்த பண்ணி இதுவே
சாதன
மாகக்{கொ}ண்டு அங்கு வந்து நலிந்தவர்களைத் தாங்களே ஆசைஜ பண்ணிக் கொள்ளவும் சீ காரியமாகத்
தாங்க......த....போதும் போன அமுதபடிக் குடலாக ஸவ
மாணியமாகக் குடுத்தோம் அனைத்தாயமும் வி
ட்டுக்கு.... கூசர் உள்ளிட்டார் பையூரிலே இருக்கவும் சொன்னோம் இப்படி....தெ இதுக்க்கு வில
ங்கனம் பன்னினவன் கெங்கைக் கரையில் குராற் பசுவை கொன்றான் பாவத்தைக் கொள்வான் "
கல்வெட்டு விளக்கம்
வீர இராமநாதன் எனும் போசள அரசனுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஓரு யோசனை தோன்றியிருக்கிறது.
பாடுபடுகிற எவரும் பசியோடு இருக்க கூடாது.
அதற்காக மடத்தை கட்டி
அந்த மடத்திற்கு அதை சுற்றியுள்ள பலஊர்களை தேவதானமாக எழுதிவைத்துவிடுகிறான்.
அப்படி தேவதானமாக எழுதிவைத்த ஊர்களில் உள்ளவர்களும், மடத்தில் தங்கியிருப்பவர்களும் யாரும் சோற்றுக்காக பிச்சை எடுக்க கூடாது. அப்படி யாராவது சோறு கேட்டு வந்தாலோ அல்லது பிச்சை எடுத்தாலோ அவர்களின் தலையை அறுத்துவிட வேண்டும்.
இதை பார்த்து கொண்டு அரசானையை பின்பற்றாத அதிகாரிகளின் தலையையும் அறுத்துவிட வேண்டும்.
பெண்ணேஸ்வரமடத்து இறைவனுக்கு கொடுக்கப்பட்ட வரிச்சலுகைகள், மாநியங்கள், அதிகாரிகளாளும் பிற சிற்றரசுகளாளும், இடையூர் இன்றி நடைப்பெற வேண்டும்
என்ற நோக்கத்தில்தான் வீர இராமநாதன் ஓரு கடுமையான
அரசானையை வெளியிட்டுள்ளான்.
கோயில் மற்றும் மடத்திற்கு வரவேண்டிய வருவாய்களை தடை செய்தாலோ, அல்லது சோறு கேட்டு வந்தாலோ, அவர்கள் சிரச்சேதம் செய்யப்படவேண்டும் என இவ்வானை குறிப்பிடுகிறது.
அவர்கள் அதிகாரிகள், கணக்கர், காரியம்செய்பவர், கூசர், என இந்த அரசானையை இவர்கள் யாரும் மீரக்கூடாது.
சோறு வேண்டுதலும், பிற நலிவுகள் செய்தலும் தவறு.
இந்த செய்தி கோயிலின் தெற்குச் திருச்சுற்று சுவர் பீடத்தில்
உள்ளது.
இடம்-காவேரிப்பட்டிணம்-நெடுங்கல் போகும் சாலை.
பெண்ணேஸ்வரமடம்.
-அறம் கிருஷ்ணன்.

No comments:

Post a Comment