Saturday, 6 September 2014
9.500 ஆண்டுகள் பழமைமிக்க எதியோபிய நாகரிகத்தினும் மேலாக… எதியோபிய நாகரிகம் சூடான்-எதியோபியாவின் வட பகுதியில் நைல் ஆற்றுக் கரை ஓரம் தோன்றி வளர்ந்தது. இந் நாகரிகம் எகிபது நாகரிகத்தினும் பழமை மிக்கது எனறும் உண்மையில் எதியோபிய நாகரிகரே எகிப்து நாகரிகத்தையும் அமைத்ததாக சொல்லப்படுகிறது. ஆயினும் மேலையர் எகிப்தையே பெருமைபட பேசுகின்றனர். உலகில் பலருக்கு எதியோபியாவில் பழம் நாகரிகம் இருந்ததே அறியாமல் உள்ளனர். எதியோபிய நாகரிகம் காலத்தால் எகிப்தினும் முற்பட்டது, இதாவது, 9,500 ஆண்டுகள் பழமையுடையதாய் சொல்லப்படுகிறது. இங்கு சிந்து எழுத்துகளை ஒத்த எழுத்துகள் மண்டி எனும் ஊரில் கண்டெடுக்கப்பட்டன. இதற்கு பிற்பட்டதே எகிப்தின் எழுத்துகள். நாகரிகத்தில் எதியோபியா எகிப்துக்கு சற்றும் குறைவில்லாதது. எதியோபிய நாகரிக மன்னர் பெயர்களைக் காணும் போது இவர்களுடைய முன்னோர் தமிழராய் இருத்தல் வேண்டும் என்ற கருத்தை தோற்றுவிக்கிறது. இந்நாகரிக மன்னர் பெயர்களில் சேரர் பெயர்கள் இடம்பெறுவது சேரம் ஆட்சி ஒர் காலத்தே இங்கு வழங்கி இருக்க வேண்டும் எனபதை உணர்த்துகிறது. தமிழோடு ஒத்துள்ள இந்நாகரிக மன்னர் பெயர்களை சிந்துவெளி முத்திரைப் பெயர்களோடும், சங்க இலக்கியப் பெயர்களோடும், பிற நாகரிக மன்னர்தம் தமிழ்ப் பெயரோடும் ஒப்பிட்டு ஆய்கிறது இக்கட்டுரை. இந் நாகரிக மன்னர் பெயர் ஒப்பீடு இந்நாகரிகங்களின் மக்கள் ஒரு குலைக் காய் போல் ஒரு மூல நாகரிகத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும், அதோடு அம்மூல தாய் நாகரிகம் தமிழர் உடையது என்று விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம். இவ்வுலகில் எழுத்துகள் சற்றொப்ப 6.500 ஆண்டுகள் அளவில் தோன்றின அதற்கு முன் எழுத்துகள் கிடையா. தமிழின் காலம் கல்வெட்டு, சங்க இலக்கியச் சான்றுகளின் படி 2,500 ஆண்டுகள் பழமையதாக சொல்லப்படுகின்றது. எதியோபிய மன்னர்தம் தமிழ்ப் பெயர்கள் 6,500ஆண்டுகள் பழமை மிக்கதால் தமிழின் பழமையை 6,500 ஆண்டுகளுக்கு முன் போடலாம், அதோடு எதியோபியாவில் கிடைத்த மட்பாண்டங்கள் ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழிகளை முழுதும் ஒத்துள்ளதால் தமிழும் தமிழர் நாகரிகமும் 9.500 ஆண்டுகள் பழமைமிக்க எதியோபிய நாகரிகத்தினும் மேலாக, இதாவது, 10,000 ஆண்டுகள் தொன்மையதாய் கொள்ளலாம். இப்பெயராய்வு எதியோபிய மன்னர் Tafari Mokonnen 1922 இல் வெளியிட்ட மன்னர் பெயர் பட்டியலை அடிப்படையாகக் கொள்கிறது. ஓரிப் பழங்குடியில் மொத்தரம் 21 பேர் ஆண்டுள்ளனர். முதலாமவர் O r i or aram 4530-4470BC – தமிழில் ஓரி என்பது செப்பமான வடிவம். கடைஎழு வள்ளல்களுல் ஒருவனாக சங்க இலக்கியத்தில் குறிக்கப்படுபவன் வல் வில் ஓரி என்பான். எனவே ஓரி எனம் பெயர் 6,500 ஆண்டுகள் பழமையது. Gariak 4470-4404 BC தமிழில் காரி அக் காரி அக்கன் என செப்பமாக படிக்கலாம். சங்க இலக்கியத்தில் கடைஎழு வள்ளல்களுல் ஒருவனாக குறிக்கப்படுபவன் மலையமான் திருமுடிக் காரி என்பான். இப்பெயர் கொரிய நாகரிகத்தில் Dangun வழிமரபில் ஒரு மன்னனுக்கு Gareuk 2182-2137 BC என இடப்பட்டுள்ளது. தமிழில் காரி அக் காரி அக்கன் என செப்பமாக படிக்கலாம். அக்கன் – வடலூர் வட்ட மருங்கூரில் கிடைத்த பிராமி எழுத்து பொறித்த பானைஓட்டில் அதியகன் என்று உள்ளது. இதை அத்தி + அக்கன் என பிரித்து படிக்க வேண்டும். அக் பிற நாகரிகங்களில் அல், ஐ, இ, உ, அம் ஈறு பெற்றும் வரும். தெலுங்கில் அக்கராஜு என்ற வழக்குள்ளது. எகிப்து நாகரிகத்தில் 4, 7 & 8 ஆம் ஆள்குடிகளில் காரி என பெயர் கொண்டோர் பலர். Elaryan 4404-3836 BC – தமிழில் எல் அரையன் எனபது செப்பமான் வடிவம். எல் – ஒளி, சிவப்பு ஆகிய பொருள்களை கொண்டது. எல்லன், எல்லப்பன் ஆகிய பெயர்கள் இன்றும் வழங்குகின்றன. மேலை நாடுகளில் எல் வழங்குகிறது. அரயன் – அரசன் எனும் பொருள் உடையது. இப்பெயர் தமிழ் இலக்கியத்தில் பல்லிடங்களில் ஆளப்பட்டுள்ளது Eylouka 3836 – 3932 BC (QUEEN) – தமிழில் அரசி எயில் அக்கா எழில் அககாள் என செப்பமாக படிக்கலாம். இது ஒரு தூய தமிழ்ச் சொல். பண்டைத் தமிழகத்தில் பெண் அரசுப் பொறுப்பேற்றதற்கான சான்று இல்லா நிலையில் எதியோபியாவில் பெண் ஆள்வதற்கு தடை இருந்ததில்லை என்பதற்கு இவள் சான்று. Kam 2713 – 2635 BC – தமிழில் காம் காமன் என செப்பமாக படிக்கலாம். காமன் ஒரு தூய தமிழ்ச் சொல் சமஸ்கிருதம் அல்ல. இங்கு அன் ஈறு இல்லாமல் உள்ளது. சிந்துவெளி முத்திரைகளில் காமன் என்ற பெயர் வழங்குகின்றது. 63 நாயன்மாருள் ஒருவர் கலிக் காம நாயனார். அதில் காமன் இடம்பெற்றுள்ளது. சப்பான் நாகரிகத்தல் காம என்ற பெயர் வழங்குகிறது. Elektron 2515 – 2485 BC – தமிழில் எல்லி கீற்றன் என்பது செப்பமான வழக்கு. எல் இகர ஈறு பெற்றுள்ளது. சீன நாகரிகத்தில் Liao ஆள்குடி அரசனின் இயற்பெயர் Yelu Abaoji 907 -926 AD தமிழில் எல்லு அப்பய்ய தி எல்லு அப்பய்யன் தி என செப்பமாக படிக்கலாம்
Pyaree Priyan....in fb...twitter..& all social networks...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment