Wednesday, 19 August 2020

போர் நுணுக்கங்களை அறிவோம்..

 போர்நுணுக்கம்-2 .


வரலாற்றில் மன்னர்கள் தங்களுடன் போர்புரிய வரும் எதிரிநாட்டு வீரர்களை அழிக்க எவற்றை எல்லாம் எப்படியெல்லாம் ப்ரியமாக பயன்படுத்தி வந்தனர் என்பதை சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது இளைய தலைமுறையினரும் அறியவே இப்பதிவு

(இணையத்தொகுப்பு)...


#தூண்டில்/ பெருங்கொக்கு- கொக்கு போன்று இதன் நுனியில் ஒரு கொளுக்கி இருக்கும். இதன் மூலம் அகழியினுள் உள்ள எந்த பொருளையும் இலகுவாக வெளியில் தூக்கி வீசி விடலாம்.


#ஆண்டலையடுப்பு - 


இது ஆந்தையின் தலை போன்ற அமைப்புள்ள பாத்திரமாகும்.


→ காய்பொன் உலை- உருக்கப்பட்ட இரும்புக் குழம்பு, செப்புக் குழம்பு


→ பாகடு குழிசி- சூடான தேன் கொண்ட பாத்திரம்.


→ பரிவுறு வெந்நெய்- சூடான எண்ணெய் கொண்ட பாத்திரம்.


→ காடி/ மிடா - கீழே உள்ளதைப் போன்ற ஓர் பெரிய அடுப்பில்தான் மேலேயுள்ள மூன்றும் காச்சப்படும்.


#விதப்பு- இதிலிருந்துதான் எதிரி மீது எண்ணெய் போன்றவை ஊறப்படும்.


#கவண்/ இடங்கணிப்பொறி (இடம் + கணி + பொறி ) :


#கல்லிடுகூடை- எதிரிகள் மீது வீசுவதற்கு கோட்டை மதில் மேல் வைக்கப்பட்டிருக்கும் எறிகற்கள் கொண்ட கூடை.


#தொடக்கு/ நூக்கியெறி பொறி - இதன் நுனியில் ஒரு கயிறு/ சங்கிலி இருக்கும்.இதன் மூலம் எதிரி வீரனின் கழுத்தினுட் செருகி அவனைப் பிடித்து கழுத்தில் பிடித்து தூக்கி கொன்று வீசி விடலாம்.


#கவை/ நெருக்குமர நிலை- மதில் மீது ஏறுவோரை மறித்துத் தள்ளும் ஆயுதமிது. மிக நீண்ட கைப்பிடி கொண்டது.


#புதை- அம்புக்கட்டு


#ஏவறை/ சூட்டிஞ்சி - சிறுசிறு துளைப் பொந்துகள் போலிருக்கும் இவற்றிலிருந்து எதிரி நோக்கி அம்பு எய்யப்படும்.


#ஆரல்/ குருவித்தலை - மதிற்சுவரின் மேல் மறைப்பு


#ஞாயில்/ நாயில்/ ஞாஞ்சில்/ ஏப்புழை - கோட்டை சுவரில் உள்ள இரு குருவித்தலைகளுக்கு இடையிலான இடம். இங்கிருந்து எதிரி மீது தாக்குதல் தொடுப்பார்கள்.


#கைப்பெயர்ஊசி- எந்தப்பக்கம் குத்தினாலும் சங்குதான். கோட்டை மதிலின் மேல் வைக்கப்பட்டிருக்கும் அல்லது மதிலில் இருந்து எறியப்படும்…..ஒருவேளை எதிரிகள் மதில் மேல் எறி மதிலின் உச்சியைப்பிடிப்பவர் இதன் மேல் கை வைத்தால் இது அவர்களின் கையினைக் கிழித்துவிடும்.


#சென்றெறிசிரல்/ கையம்பு - இது கையால் எறியும் ஆயுதம்தான்.


#பணை- பருமையான மூங்கில்


#எழுவுஞ்சீப்பு - சிறைக் கதவு போன்று இரும்பால் செய்யப்பட்ட ஓர் வாயிற்கதவு. அவ்வளவு இலகுவில் இடித்து உடைக்க இயலாதது. ஐயவித்துலாம் கீழே இறக்கப்பட்டால் இது மேலே எழும்பும் ; ஐயவித்துலாம் மேலே தூக்கபட்டால் இது கீழே இறங்கும்.(கோட்டையின் பாதுகாப்பிற்காகத்தான்)


#கவர்தடி- இரு பக்கமும் கூரான எறிபடை… எறியவும் செய்யலாம்; குத்தவும் செய்யலாம்.


#கழு/ கழுக்கோல்/ யானைத்தடை -கோட்டைக்கு முன்னால் எதிரிப் படைகளின் மதிற்போர்க்கருவிகள், போரானைகள் உள்நுழையாமல் இருக்க வைக்கப்பட்டிருக்கும்.


#எந்திரவில் / வளைவிற்பொறி/ வேலுமிழ்ப் பொறி/ அம்புமிழ்ப் பொறி:

இதில் வைத்து எதிரி நோக்கி எய்யப்படும் எறிபடையின் பெயர் நாளிகம்


#ஐயவித்துலாம் /ஐயவி- கோட்டை வாயிலையும் அகழி தொடக்கத்தையும் இணைக்கும் ஓர் தூக்கு பாலம்.


#வல்லயம் - கோட்டையின் மதிலில் இருந்துகொண்டு கீழே உள்ள வீரரை குத்த பயன்படும் ஈட்டி. முனையில் கூரிய இரும்புள்ள மிகவும் நீளமான கையிற்வைத்து எதிரியை குத்தும் ஒருவகை ஈட்டி ஆய்தம்.


#தாமணி-பொருட்களைக்கட்டி வைக்க உதவும் கயிறு.


#நாராசம் -இது ஒரு இரும்பால் ஆன அம்பு.& தீயம்பு..


#சலாகை - இது ஒரு இரும்பால் ஆன சிறு அம்பு.


#மிளை/ காவல்காடு - கோட்டை அகழிக்கு முன்னுள்ள செயற்கைக் காடு.


இங்கு தோட்டி எனப்படும் இரும்பு முட்கள் புதைத்து வைக்கப்பட்டிருக்கும். காவல்காட்டினுள் வேலியாக நொச்சிமரங்களும் முள்வேலிகளும் அமைந்திருந்தன. இதனை வாழ்முள்வேலி,இடுமுள்வேலி எனப் பகுத்து காட்டரணைப் பலப்படுத்தியுள்ளனர்.


#வாழ்முள்வேலி - என்பது முள் செடிகளையும் மரங்களையும் வளர்த்து அவற்றால் ஆக்கிய வேலியைக் குறிப்பது. 


#இடுமுள்வேலி - முள்ளை வெட்டிக்கொண்டு வந்து பிற இடத்தில் இடப்படும் வேலி எனப்படும்.

காட்டரணை முற்றுகையிடும் பகைவர்களின் உயிரைக் கவரும் வகையில் பல நிறம் கொண்ட தவளை, பூராண், நண்டு, கம்பளிப்புழு, பல்லி, பூதிப்புழு, கவுதாரி ஆகியவற்றுடன் கீழாநெல்லியின் பட்டை, இலை, மலர், கனி, வேர், தண்ணீர்முட்டான் கிழங்கு, சேங்கொட்டை மரம், எருமையாட்டம் கொடிகளின் சாற்றுடன் சோர்த்துப் புகையை உருவாக்கினால் அப்புகை பகைவர்களின் திறனை அழித்து அவர்களின் கண்களைக் குரடாக்குவதுடன் பகைவர்களைக் கொல்லும் திறன் உள்ளது.—


அகழி/ கிடங்கு /உடுவை/ அகப்பா/ கயம்/ காடி/ உடு/ ஓடை/ இனைடயம் /உவளகம்/ நீரரண் / அகப்பா/ கிடங்கில்- (moat) கோட்டையைச் சுற்றியுள்ள நீரரண்.


எதிரிகள் அகழியில் உள்ள நீரை அருந்தும் பொழுது அவர்களை அழிக்கும் வகையில் அவர்கள் அறியாவண்ணம் சேங்கொட்டை, அரங்கன்,நாயுருவி, மருதமரம் ஆகியவற்றின் மலர்களுடன் ஏலமரம், தானிமரம், குங்கிலியம், ஆலாலம் ஆகியவற்றின் சாறும் செம்மறியாட்டின் குருதியுடன் மக்களின் குருதியையும் சேர்த்து நன்கு அரைத்து அதனைப் பிண்ணாக்குடன் நீரில் கலந்து விட்டால் இந்நிரை அருந்துபவனும் தொடுபவனும் உடனே இறந்துவிடுவான். 


#செய்கொள்ளி - கொல்லனால் காய்ச்சப்பட்ட செந்தீயான இரும்பு


#சுறட்டுக்கோல்/ தொரட்டி- இழுத்து விழுத்தும் கோல்.


#சுண்டுவில்


#கூர்ந்தரி நுண்ணூல்- தொட்ட கையை அறுக்கும் நுண்ணூல்= மாஞ்சா நூல்


#கற்பொறி - அவிழ்த்துவிட்டால் கீழே வந்து வீழ்ந்து எதிரியைத் தாக்கும்.. மீண்டும் இதனை சுழற்றி எடுத்துப் பயன்படுத்தலாம்.


#அடிப்பனை- கோட்டை மதிலில் இருந்து எதிரிகள் மீது இதனை எறிவார்கள்.


#விடுசகடம்- உருட்டி விடப் படும் தீச்சக்கரம


#முட்செடி- இக்கொடி கோட்டை மதில் மீது படரவிடப்பட்டிருக்கும்.


#நச்சுக்கொடி- இக்கொடி கோட்டை மதில் மீது படரவிடப்பட்டிருக்கும்.


#பதணம் /பரிகை /கற்பு / மதிலுண் மேடை/ அகப்பா /மஞ்சிவர் - கோட்டை மதிலில் நடக்கும்படி ஏற்படுத்தப்பட்ட மேடு.. இங்கு நிண்டபடி எதிரி மீது போர்புரிவார்கள்


#உக்கடம் - கோட்டை உயரத்திலிருந்து எதிரி இடராளிகளை காணும்படி உக்கடம் (watch tower) எனும் கட்டுமானம்.


#நிலவரண்


காட்டரணையும் நீரரணையும் கடந்து வெற்றி பெற்ற மன்னர்கள் அதனை அடுத்து தண்டை நிலப்பகுதியில் அமைந்துள்;ள நிலவரணை முற்றுகையிடுகின்றான். “நிலவரண் இருநிலைகளில் அமைந்திருக்கும். பகைவர்கள் புறமதிலைப் பற்றாமை பொருட்டு அதன் புறத்தேயுள்;ள வெள்ளிடை நிலமும் பகைவர் முற்றுகை நீடித்திருக்கும் போது அகத்தாருக்கு வேண்டும் உணவுப்பொருள்களைப் பயிர் செய்யும் வகையில் மதிலின் உட்புறமாக விடப்படும் தண்டை நிலம் நிலவரணாகும்


அகழிக்கும் மதிலுக்கும் இடைப்பட்ட இடமான புறநகரினை நிலவரண் என்பர். இங்கு காவல் வீரர்கள் தம் பாசறையை அமைத்துக் காவல் காட்டினையும் அகழியையும் அழித்துக்கொண்டு வரும் பகைவர்களின் படைகளை எதிர்த்துத் தடுத்து நிறுத்துவர். கோட்டைக்குள் வசிக்கும் மக்கள் தத்தம் வீடுகளில் பயன்படுத்தி வெளியேற்றும் கழிவுநீரும், மழைக்காலத்தில் கோட்டையில் இருந்து வெளியேறும் நீரும் அகழியைச் சென்று அடைவதற்கு முன்பாக இந்நிலவரணைக் கடந்து செல்கிறது. கோட்டைக்குள் வசிக்கும் மக்கள் இந்நீரை பயிர்செய்வதற்குப் பயன்படுத்திக் கொள்வர். இதனால் பகைவர்களின் நீண்ட நாள் முற்றுகையைச் சமாளிக்க இயலும். இத்தகைய சிறப்பிற்குரிய இவ்வரணைப் பாதுகாக்காவிடில் மக்கள் முற்றுகைக்காலங்களில் துயர்பட நேரிடும்.


#முடக்கறை- வாயிலுக்கு மேலுள்ள அம்பு வரும் துளைகள் .


#யாநகம் - ஒரு கயிற்றால் மதிலின் உச்சியில் இருந்து கீழ்நோக்கி இறக்கப்பட்டு தொங்கவிடப்பட்டிருக்கும். எதிரி வீரர்கள் வந்தால் அவர்கள் மீதிதை அவிழ்த்து விடுவார்கள்.


#சாலம்- தொடக்ககாலத்தில் கோட்டைகளை வெறுங்கல்லால் அன்றி, மரமுஞ் சேர்ந்தே கட்டினர்.


#அட்டாணி/ அட்டாலகம் / இதணம் / மேவறை / அலங்கம் - கோட்டை மதிலுக்கு மேலே ஆங்காங்கே அமைக்கப்பட்டிருக்கும் காவலரண். உள்ளே இருப்பவருக்கு வெளியே உள்ளவர்கள் தெரியக்கூடியவகையிலும் சிறு துளைகள் கொண்டு இருக்கும் போர்க் காலங்களில் இதன்மூலம் ஈட்டி, வில்லம்பு கொண்டு வெளியே உள்ளவர்களை தாக்க வசதியாக இருக்கும். வெளியில் இருப்பவர்களுக்கு உள்ளே இருப்பவர்களைக் காண இயலாது என்ன செய்கிறார்கள் என்றும் அறிய இயலாது.


#அட்டாலை / இதண்/ பணவை - அட்டாலகத்தில் காவலுக்கு இருக்கும் வீரனை குறிக்கும் சொல்.


#வாயில் / கௌனி/ ஆத்தானம்/ அரிகூடம்/ கோட்டி- இது கோட்டைக்கான போக்குவரத்து வாசல்.


#ஒலிமுகவாயில்/ ஆசாரவாயில்/ தலைவாயில் - கோட்டையின் முக்கிய வாயில்.


நகரவாயிற் கதவை விட்டு புகும் வழி- புதவு/ புதவம்


நகரவாயிற்றிணையின் பெயர்- அளிந்தம்


நகரவாயிற் படிச்சுறுள்- அத்திகை


கவாடம் - கதவு

சிறுவாயில், பதவு, பூழை


#சுருங்கை/ கற்புழை/ மூடுவழி- கோட்டையிலிருந்து வெளியேறும் இரகசிய வழி.


#சிகரி / துருக்கம்/ அருப்பம்- மலைமேலுள்ள கோட்டை.


#கணையமரம் /துஞ்சுமரம் / தாழக்கோல் - மதிற்கதவுக்கு வலிமையாக உள்வாயிற்படியில் குறுக்கேயிடும் மரம்.


#புழை - புழை என்பது ஒரு கோட்டைக்கு பாதுகாப்பான, கட்டுப்படுத்தப்பட்ட நுழைவு வழியாகும். இது முக்கிய நுழைவுவாயிலில் இருந்து வேறு ஒரு இடத்தில் இருக்கும்.


#பரிசை/ தட்டி - இடைவெளி இல்லாமல் வைரம் ஏறிய மரங்களால் அமைக்கப்பட்டு கோட்டை மதிலில் வைக்கப்பட்டிருக்கும். பகைவர் எய்யும் அம்புகளை இது தாங்கும்.


#நூற்றுவரைக்கொல்லி - ஒரே நேரத்தில் பல பேரை கைலாயம் காண வைக்கலாம்.


#நீர்வாளி- ஏற்பட்ட நெருப்பினை அணைக்க உதவும் நீர் கொண்ட வாளி.


#அரணி/ கடகம்/ பாவை/ பீலி/ புரிசை/ புறம்/ வண்சிறை/ வரணம்/ வரைபடி/ வாடம்/ வேணகை/ தூரியம்/ முத்தகம்/ பெருங்காரம்/ நொச்சி/ பாவை / ஆரம்/ வேலி / அரணம்/ வேதி/ சாலம்/ அல்/ அரணாம்பரம்/ ஓதை - மதில்


கடிமதில் - காவல் மிகுந்திருந்த மதில்

இறைப்புரிசை, நெடுமதில் - மிகவும் உயர்ந்த மதில்

மதிலரண் வகைகள்-


அகன் மதிலரண்

உயர் மதிலரண்

திண் மதிலரண்

அருமதிலரண்.

இவ்வாறு அமைந்த மதிலைப் புறமதில்,இடைமதில், அகமதில் என மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தியிருந்தனர்.


இடைமதில் பகைவர்களின் முற்றுகை நீடித்து இருப்பினும் உள்ளே இருப்போர் உணவிற்கு எவ்விதக் குறையும் இல்லாமல் தமக்கு வேண்டிய உணவினை விளைவித்துக் கொண்டும் வாழும் வகையில் பரந்த நிலப்பரப்பினை உடையது.புறமதில் வளைந்த இடங்களை உடையதாகவும்

அகமதில் என்பதுதன் கடைசி மதிலாகும்

மதிலுக்குள் உள்ள நிலம்- காப்பு

கோட்டைக்குள் நகர்- அகநகர்

திண்ணம்- குறடு, அளிந்தம்

அடிமணை- நிலைக்களம்

மண்டபம்- களம் , தளம்

அரசர் வீதி- பூரியம்

அரசிருக்கை- அரியாசனம், அத்தாணி, வேந்தவை

சித்திரக்கூடம் - தெற்றியம்பலம்

அம்பலம்- மன்றம், பொது அவை, பொதி

அரசரில்லம்- சாலை, மாளிகை, குலம், அரண்மனை, பவனம், கோவில்.

வாரி - சுற்று மதில்

ஓதை/ ஆள்வாரி நிலம்- மதிலைக் காப்பாற்றும் படையினருக்கு மதிலையொட்டினாற் போல் உள்ளசாலை  

உவளகம்- கோட்டையின் உட்பக்கம்.

கோசம் - மதிலுறுப்பு

பெருகாரம்- இது கோட்டையினுள்ளே சுற்றிவரும் பெரியபாதை.

இஞ்சி - பெரும்பாலும் செம்பு புனைந்தியற்றியதாகவும் சிறுபான்மை அரைத்த சாந்திட்டமைத்ததாகவும் பகைவரால் எளிதில் தாக்க முடியாதவாறு திண்ணிதாகக் கட்டப்பட்ட மதில் ஏனை வகை மதில்களிலும் மிக இறுகியிருத்தல் பற்றி இஞ்சி எனப்பட்டது.


#பதப்பாடு - கோட்டையரணுக்கு பாதுக்காப்பாக வெளியே கட்டப்பட்டிருக்கும் மற்றோர் மதில்.


#கொத்தளம்/ தோணி/ குடிஞை - கொத்தளம் என்பது, கோட்டை மதில்களில் இருந்து வெளித் துருந்திக் கொண்டிருக்கும் ஓர் அமைப்பு ஆகும்.


#கருவிரலூகம்/ குரங்கு- கோடை மதிலில் கட்டி வைக்கப்பட்டிருக்கும் . பெரும்பாலும் தாட்டான் வகை குரங்குளே அங்கு கட்டி வைக்கப்பட்டிருக்கும். இவை மேலே வரும் எதிரியினைக் கடித்துக் குதறும்.


#கோண்மா - புலி , சிங்கம் முதலிய கொடிய வன விலங்குகள் கோட்டை மதிலில் கட்டி வைக்கப்பட்டிருந்தன. மதிலை தொடுவோரை இவை கவனித்துக் கொள்ளும்.


#முதலை, காராம், விடங்கர்- இவை எல்லாம் அகழிக்குள் இருந்தன.


#கழுகு&கூகை -போர்க்களத்தில் எதிரிகளைக் கொல்ல  பயன்படுத்தப்பட்டன


#குடப்பாம்பு/ கத நாகம்- எதிரி வீரர்கள் மீது எறிய குடத்தினுள் வைக்கப்பட்டிருக்கும் பாம்புகள்.


#பாவை- உண்மையான வீரர்கள் போன்று செய்யப்பட்ட பொம்மை பொய் வீரர்


#கரும்பொன்னியல் பன்றி: - இரும்பு நிறம் கொண்ட பன்றி- காட்டுப்பன்றி.


இவற்றினை கோட்டைக் கொத்தளங்களில் கட்டி வைத்திருப்பதால் இவை எழுப்பும் ஒலியினைக் கேட்டு எதிரியின் யானைப் படை திணறி ஓடும்.. மேலும் இவற்றிற்கு மேலே எண்ணெய் பூசி நெருப்பினை வைத்து எதிரியினை நோக்கி ஓட விடுவதால் அவை எதிரியினைக் குழப்புவதோடு மட்டுமல்லாமல் அவனின் யானைப்படையினை மிரள வைக்கும். இவ்வாறு பல போர்கள் வரலாற்றில் நடைபெற்றுள்ளன.


#தோற்றமுறு_பேய்களிறு - அச்சுறுத்தும் தோற்றம் கொண்ட யானை -

இவ்யானைகளானது மதிலின் பின் புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இவை மதிலை கடந்து வருபவர்களை சிதறடிக்கும்.


#துற்றுபெரும் பாம்பு - மலைப்பாம்பு


இது எதிரிகளை அச்சமுறுத்தவும் சில வேளைகளில் அவர்களை விழுங்கவும் செய்திருக்கும்.


#ப்யாரீப்ரியன்...இணையத்தொகுப்பு..

No comments:

Post a Comment