Saturday, 20 June 2020

கடைசி மடையர்- நீரானிக்கர்

#மடைநுட்பம்?...
கிருஷ்ணகிரி மாவட்டம்... ஓசூரில் இராமநாயக்கன் ஏரியில் பல நூற்றாண்டுகளாக (சற்றேறக்குறைய700 ஆண்டுகள்) கம்பீரமாக வரலாற்று சின்னமாக விளங்கிவந்த இந்த மதகு அமைப்பின் சின்னம் சாலை விரிவாக்க பணிகளுக்காக அப்புறப்படுத்தப்பட்டு..
இந்த வரலாற்று எச்சத்தை மிகவும் பாதுகாப்பாக பிரித்து வைத்து இருந்தனர்.. வேறு இடத்தில் நிறுவ அனைத்து மக்களும் எதிர்பார்ப்பில் இருந்தநிலையில்..

#முகநூலிலும், புலனத்தின் வாயிலாகவும் அனைவரின் கவனத்திற்கும் கொண்டு சென்று மடை குறித்த #விழிப்புணர்வு ஏற்படுத்தியும், பல அமைப்புகள், சங்கங்கள்
அரசு அதிகாரிகள், ஆட்சியர் மற்றும் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடம் கோரிக்கை வைத்ததன் பலனாக..

ஓராண்டுக்கு பிறகு பலரின் முயற்சியின் காரணமாக அதே சாலையின் மற்றொரு பகுதியில் மீண்டும் அதே தூண்களை வைத்து பழமையை மாற்றாமல்?? கட்டுமான பணி தற்போது நடைபெற்று வருகிறது...

இச்செயல் கொஞ்சம் ஆறுதலாக இருப்பினும் அது நுட்பங்களை இழந்த , ஒரு பயன்பாடற்ற ஒரு காட்சி சின்னமாகவே கருதப்படும்.
நூறு ஆண்டுகளுக்கு பிறகு வரும் ஒரு வரலாற்று ஆய்வாளருக்கு பல்வேறு சந்தேகங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது
இப்போது மாற்றப்பட்ட இடத்தில் மாற்றப்பட்டதற்கான காரணத்தை கல்வெட்டாக எழுதி வைக்கவேண்டும் எனவும் அப்போதுதான் இதன் உண்மையான காரணம் விளங்கும் எனவும் வரலாற்று ஆர்வலர்கள் கருத்தும் கோரிக்கையாகவும் உள்ளது...

#நீர்மேலாண்மையில்_மடைநுட்பம்
ஏரியை  வடிவமைத்த  பிறகு  அதிலிருந்து  தண்ணீர் வெளியேறத்  தமிழன் கண்டுபிடித்த  தொழில்நுட்பம்தான் "மடை"

மடைகளை அமைக்க முதலில் பனைமரங்கள் பயன்படுத்தப்பட்டன. . வைரம் பாய்ந்த கட்டை என்று சொல்லப்படும் மரங்களையே  தேர்வுசெய்து அதன் உள்தண்டை நீக்கிவிட்டால் உறுதியான நீண்ட குழாய் தயாராகிவிடும். அதனை ஏரியின் அடியாழத்தில் பதித்து, அதன் உள் ஓட்டையில் கோரை, நாணல், களிமண் கலந்து அடைத்துவிடுவார்கள். இதுதான் ஆரம்பகால மடை. பிற்காலங்களில் பாறைகள், மரச்சட்டங்களில் மடைகள் அமைக்கப்பட்டது.

வெள்ளக்காலங்களில் மடைகளைத் திறப்பதற்கு என்றே ஆட்கள் இருப்பார்கள். மடையைத் திறப்பது சாதாரண விஷயமில்லை. உயிரைப் பணயம் வைத்து நீருக்குள் மூழ்கிச் செய்யும் பெரிய சாகசப்பணியாகும்.

மழையால் ஏரியில் தண்ணீர் நிரம்பி, கரையை உடைத்துக்கொண்டு செல்வதற்குமுன், ஒரே ஒருவர் மட்டும் ஏரிக்கரைக்குச்சென்று கடல்போல் கொந்தளிக்கும் ஏரிக்குள் குதிப்பார். மூச்சடக்கி நீரில் மூழ்கி அடியாழத்தில் இருக்கும் மடையின் அடைப்பை திறந்துவிடுவார்.
மடை திறந்ததும் புயல்வேகத்தில் வெளியேறும் வெள்ளம் மடைத்திறந்தவரையும் இழுத்துச்செல்லும். அந்த வேகத்திலிருந்து தப்பி பிழைப்பது மிகவும் கடினம்.

மடை திறக்க செல்பவர்கள் உயிர்பிழைப்பது அரிது. அவர்கள் தம் மனைவி, பிள்ளைகள் மற்றும் அனைவரிடம் பிரியமாக  பிரியா விடைபெற்றுச் செல்வார்கள். மடை திறக்கச்சென்று மாண்டவர்கள் அதிகம், மீண்டவர்கள் குறைவு. இவர்கள்தான் "#மடையர்கள்" என அழைக்கப்பட்டார்கள். வரலாற்றின் பக்கங்களில் இந்த தியாகிகளைப் பற்றிய குறிப்புகள், கல்வெட்டுக்கள், பதிவுகள் எதுவும் இல்லை. வரலாறு எழுதுபவர்கள் இதைக் கருத்தில் கொள்ளலாம் அல்லவா?
எம் குழந்தைகளுக்கு இவ்வீரத் தமிழ்த்தியாகிகளின் வாழ்வு ஒரு ஊக்கத்தையும் தியாகத்தையும் ஊட்டும் அல்லவா?
#ப்யாரீப்ரியன்
~~~~~~~~~~~~~~~~~~~~
இப்படிப்பட்ட புகழ்பெற்ற நுட்பமான வரலாற்று சின்னமான
(மேற்கண்ட புகைப்படத்தில் உள்ள  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராமநாயக்கன் ஏரியில் இருந்த மதகை பராமரித்து வந்த #சுப்ரமணியபிள்ளை  இவர்தான் ஒசூர் இராமநாயக்கன் ஏரி மதகின் #கடைசிமடையராவார். அதற்கு முன்பு #வெங்கடசாமிப்பிள்ளை என்பவரும் மடையை பராமரித்துள்ளனர்.
ஏரி முழு கொள்ளளவை எட்டும் நிலையில் அவரது குடும்பத்தினர் மாவுவிளக்கு செய்து பூஜைகள் செய்து இறுதியில் ஏருமைக்கன்று ஒன்றை பலியிட்டபின்பு தான் மடையை திறக்க செல்வார்கள் என தெரிவித்தனர்.
ஏரியின் கீழ்ப்பகுதியில் விவசாயம் செய்யும் குடும்பத்தினர் அறுவடையின் போது இவர் குடும்பத்தினருக்கும் ஒருபங்கு கொடுத்ததாகவும் அறியப்படுகிறது.
புகைப்பட உதவி : திரு.சண்முகம் அவர்கள், ஓசூர்)
#ப்யாரீப்ரியன்...
இதையும் பார்க்க.. விழிப்புணர்வு பதிவு
https://m.facebook.com/story.php?story_fbid=1037093899706947&id=100002190405617
~~~~~~~~~~~~~~~~~~~~
இந்த தகவலை காண..
https://www.facebook.com/100002190405617/posts/3071870229562627/













No comments:

Post a Comment