#எகிப்தில் யானைப்படையை உருவாக்கிய #இந்திய_யானைப்பாகன்.
கிமு. மூன்றாம் நூற்றாண்டு, செளூசிதியர்களுக்கும் எகிப்தினை ஆண்ட தாலமியர்களுக்கும் பனிப்போர் நிகழ்ந்து கொண்டிருந்த காலம்.
செளூசிதியர்கள் இந்தியாவோடு நல்ல நட்புறவை கொண்டிருந்தனர். எனவே தங்கள் படைபலத்தை காட்ட போர் யானைகளை இந்தியாவிடம் இருந்து வரவழைத்தனர்.
எகிப்தை ஆண்ட தாலமியர்களும் யானைப் படையை உருவாக்கப் பல வழிகளில் முயற்சி செய்து வந்துள்ளனர்.
ஆனால் இந்தியாவில் இருந்து கடல் வழியாக யானைகளை எடுத்து வர அவர்களுக்கு இயலவில்லை. ஆகவே இந்திய யானைகளை விட பெரிய, பலம்வாய்ந்த ஆப்ரிக்க யானைகளை பிடித்து தங்கள் படையில் சேர்த்துவிடவேண்டும் என முடிவுக்கு வந்தனர்.
ஆப்ரிக்க யானைகள் மிகவும் முரட்டுத் தனமானது. அதனை கட்டுப்படுத்துவது சுலபமல்ல. இந்திய யானைகளைப் போல அவை எளிதில் பழக்கப்படுத்தக் கூடியதும் அல்ல. முக்கியமாக போர்ப்படையில் சேர்த்து அதற்கு உத்தரவு இட்டு வேலை வாங்கும் அளவுக்கு பழக்கப்படுத்த முடியாமல் தாலமியர்கள் திண்டாடி வந்தனர். பல நேரங்களில் பிடித்து வரப்பட்ட ஆப்ரிக்க யானைகள் வீரர்களையே கொல்ல ஆரம்பித்தன.
அப்போது எகிப்தியர்களுக்கு உதவ இந்தியாவிலிருந்து ஒரு யானைப் பாகன் முன்வந்தான். யானைகளைப் பிடிப்பதில் வல்லவனான அவனைக் கண்ட இரண்டாம் தாலமி அரசன் சந்தோஷக் கடலில் மிதந்தான்.
அவனுக்கு துணையாக ஒரு மொழிப்பெயர்ப்பாளர் உட்பட 231 பேர்கள் கொண்ட பல நாட்டவர்கள் வேட்டைக் குழு ஒன்று கிமு. 223 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
மத்திய ஆப்ரிக்கக் கண்டத்தில் இருந்து செங்கடல் வழியாக யானைகளைக் கொண்டுவர கப்பல்களை உருவாக்க சிறு சிறு துறைமுகங்களை நிறுவ ஆணையிட்டான். யானைகளைக் கொண்டுவர உருவாக்கப்பட்ட கப்பல்கள் "Elephantagoi" என அழைக்கப்பட்டன.
மிகவும் திறமையான அந்த குழு, பல ஆப்ரிக்க யானைகளைப் பிடித்தது. அங்கேயே ஒரு பயிற்சி தளம் அமைத்து பல மாதங்கள் பழக்கியப் பின்பு கப்பலில் ஏற்றி கடல் மார்க்கமாக துறைமுகத்தை அடைந்தது. அங்கிருந்து எடிபு பெரநீஸ் என்ற பாலைவனச் சாலை வழியே இரண்டு வார நடைபயணத்தின் மூலம் நைல் நதிக்கு கொண்டுவர அந்த பாகனுக்கு உத்தரவு இடப்பட்டிருந்தது.
தனது பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு அந்த பாகன் அந்த ஊரில் இருந்த பாண் கோவிலுக்கு சென்று தனது பயணம் வெற்றி பெற தனது பெயரையும், யானைகளின் உருவத்தையும் ப்ரியமாக வரைந்து வழிபாடு செய்துள்ளான். அந்தக் கல்வெட்டு இன்றளவும் அங்குள்ளது.
பாலைவனத்தைக் கடக்கும் போது உச்சி வெயில் நேரங்களில் அவன் அந்த யானைகள் வழியிலிருந்த குகைகளில் அடைத்து வைக்கப்பட்டன. அந்த குகைகளிலும் அதே போன்று யானைகளின் உருவங்கள் வரையப்பட்டுள்ளன.
இறுதியாக நைல் நதிக்கரையை அடைந்ததும், நதியின் மூலம் எகிப்தில் உள்ள அலக்ஸாண்டிர்யா நகருக்கு படகு மூலம் கொண்டு செல்லப்பட்டது.
எகிப்தியர்களின் பல நூற்றாண்டுக் கனவாக இருந்த யானைப் படையை உருவாக்கியப் பெருமை ஒரு இந்திய யானைப் பாகனையே சாரும். ஆய்வாளர்கள் அந்த யானைப்பாகன் வட இந்தியராகவோ அல்லது தென்னிந்தியராகவோ இருக்கலாம் எனக் கூறுகின்றனர்.
அந்த யானைப் பாகனை தாலமியர்கள் “சோபோன் (Sophon)” என்று அழைத்துள்ளனர். இது சுபானு என்ற பெயரில் இருந்து தோன்றியது என அறிஞர்கள் கூறுகின்றனர்.
#ப்யாரீப்ரியன்..
~நன்றி;ஹெரிட்டேஜ்

No comments:
Post a Comment