#தமிழகநதிகள்?? 1.கடலூர் மாவட்டம் a)தென்பெண்ணை, b)கெடிலம், c)வராகநதி, d)மலட்டாறு, e)பரவனாறு, f)வெள்ளாறு, g)கோமுகி ஆறு, h)மணிமுக்தாறு, i)ஓங்கூர் 2.விழுப்புரம் மாவட்டம் a)கோமுகி ஆறு, b)மலட்டாறு, c)மணிமுத்தாறு 3.காஞ்சிபுரம் மாவட்டம் a)அடையாறு, b)செய்யாறு, c)பாலாறு, d)வராகநதி, e)தென்பெண்ணை, f)பரவனாறு 4.திருவண்ணாமலை மாவட்டம் a)தென்பெண்ணை, b)செய்யாறு, c)வராகநதி, e)வெள்ளாறு 5.திருவள்ளூர் மாவட்டம் a)கூவம், b)கொஸ்தலையாறு, c)ஆரணியாறு, d)பாலாறு 6.கரூர் மாவட்டம் a)அமராவதி, b)பொன்னை 7.திருச்சி மாவட்டம் a)காவிரி, b)கொள்ளிடம், c)பொன்னை, d)பாம்பாறு 8.பெரம்பலூர் மாவட்டம் a)கொள்ளிடம் 9.தஞ்சாவூர் மாவட்டம் a)காவிரி, b)வெட்டாறு, c)வெண்ணாறு, d)கொள்ளிடம், e)அக்கினி ஆறு 10.சிவகங்கை மாவட்டம் a)வைகையாறு, b)பாம்பாறு, c)குண்டாறு, d)கிருதமல் ஆறு, 11.திருவாரூர் மாவட்டம் a)காவிரி, b)வெண்ணாறு, c)பாமணியாறு, d)குடமுருட்டி 12.நாகப்பட்டினம் மாவட்டம் a)காவிரி, b)வெண்ணாறு 13.தூத்துக்குடி மாவட்டம் a)ஜம்பு நதி, b)மணிமுத்தாறு, c)தாமிரபரணி, d)குண்டாறு, e)கிருதமல் ஆறு, d)கல்லாறு, e)கோராம்பள்ளம் ஆறு 14.தேனி மாவட்டம் a)வைகையாறு, b)சுருளியாறு, c)தேனி ஆறு, d)வரட்டாறு, e)வைரவனாறு 15.கோயம்புத்தூர் மாவட்டம் a)சிறுவாணி, b)அமராவதி, c)பவானி, d)நொய்யலாறு, e)பாம்பாறு f)கெளசிகா நதி 16.திருநெல்வேலி மாவட்டம் a)தாமிரபரணி, b)கடனா நதி, c)சிற்றாறு, d)இராமநதி, e)மணிமுத்தாறு, f)பச்சை ஆறு, g)கறுப்பா நதி, h)குண்டாறு, i)நம்பியாறு, k)கொடுமுடிஆறு, l)அனுமாநதி, m)கருமேனியாறு, n)கரமணை ஆறு ~~~~~|~~~~~~~~ தாமிரபரணி துணை ஆறுகள் (சேர்வலாறு. மணிமுத்தாறு. கடனா ஆறு. பச்சையாறு. சிற்றாறு. பேயனாறு. நாகமலையாறு, காட்டாறு.சோம்பனாறு,கௌதலையாறு. உள்ளாறு.பாம்பனாறு. காரையாறு.நம்பியாறு கோதையாறு. கோம்பையாறு. குண்டாறு = இவை அனைத்தும் தாமிரபரணியின் ப்ரியமான துணையாறுகள் ) 17.மதுரை மாவட்டம் a)பெரியாறு, b)வைகையாறு, d)குண்டாறு, e)கிருதமல் ஆறு, f)சுள்ளி ஆறு, g)வைரவனாறு, h)தேனியாறு, i)வாட்டாறு, j)நாகலாறு, k)வராகநதி, l)மஞ்சள் ஆறு, m)மருதாநதி, n)சிறுமலையாறு, o)சுத்தி ஆறு, p)உப்பு ஆறு 18.திண்டுக்கல் மாவட்டம் a)பரப்பலாறு, b)வரதம்மா நதி, c)மருதா நதி, d)சண்முகாநதி e)நங்கட்சியாறு, f)குடகனாறு, g)குதிரையாறு, h)பாலாறு, i)புராந்தளையாறு, j)பொன்னை, k)பாம்பாறு, l)மஞ்சள் ஆறு 19.கன்னியாகுமரி மாவட்டம் a)கோதையாறு, b)பறளியாறு, c)பழையாறு, d)நெய்யாறு, e)வள்ளியாறு 20.இராமநாதபுரம் மாவட்டம் a)குண்டாறு, b)கிருதமல் ஆறு, C)வைகை, d)பாம்பாறு, e)கோட்டகரையாறு, F)உத்திரகோசம் மங்கை ஆறு 21.தருமபுரி மாவட்டம் a)காவிரி, b)தொப்பையாறு, c)தென்பெண்ணை 22.சேலம் மாவட்டம் a)காவிரி, b)வசிட்டாநதி, c)வெள்ளாறு 23.விருதுநகர் மாவட்டம் a)கௌசிகாறு, b)வைப்பாறு, c)குண்டாறு, d)அர்ஜுனா நதி, e)கிருதமல் ஆறு ~~மக்களால் காலகாலமாக பயன்பாட்டிவ் ப்ரியமான இருத்த மேற்கண்ட ஆறுகளில் தற்போது எவையெவை உள்ளன/இல்லை. என்பதை அந்தந்த மாவட்டத்தில் வசிப்போர் அறிந்து கொள்ளவும்.. #ப்யாரீப்ரியன்.மீள் .. தொகுப்பு...
Wednesday, 2 December 2020
தமிழகநதிகள்,
Sunday, 23 August 2020
Love Dictionary
அகராதி...
#பால்யகாதலில் - பக்குவமின்மை
#பள்ளிக்காதலில் - பருவமின்மை..
#பருவக்காதலில் - இனக்கவர்ச்சி..
#பார்த்தகாதல் - சுவாரசியம் குறைந்தும்..
#பார்க்காமலேகாதல் - பார்த்து உண்மையை புரியவைக்கும் வரையிலும்..
#சொல்லியகாதல் -நிறைவேறியும்
#சொல்லாதகாதல் -நிறைவேறாமலும்..
#ஊர்சுற்றும்காதலில் - ஊரார் தூற்றலிலும்
#உண்மைக்காதல் -அழியாமலும்
#உரிமையானகாதல் - உறவுகளை மேம்படவைப்பதிலும்.
#தைரியகாதல் - நிச்சயதிருமணத்திலும்
#தில்லாலங்கடிகாதல் - ஒருமுறை அடையும் வரையிலும்.
#திருட்டுகாதல் - அடுத்தவர் அறியும் வரையிலும்..
#இருட்டுகாதல் - காமம் அடங்கும் வரையிலும்..
#கடுதாசிகாதல் - பதில் கடிதம் வராத வரையிலும்..
#குறுஞ்செய்திக்காதல் - மற்றவர் பார்க்காத வரையிலும்..
#செல்போன்காதல் - அவரைவிட உயர்ந்தவர் கிடைக்கும் வரையிலும்..
#வலைதளகாதல் - புதிய அறிமுகம் கிடைக்கும் வரையிலும்..
#விலைமாதர் காதல் - பணம்தீரும் வரையிலும்..
#வேலைக்காரிக்காதல் - மனைவிக்கு தெரியாமலும்
#வேலைசெய்யுமிடக்காதல் - வேலையின் ஓய்வு நேரங்களிலும்..
#சினிமாகாதல் - கனவுலகின் ஆசையாலும்
#கவிதைகாதல் - கவிஞராகும் வரையிலும்..
#காவியக்காதல் - காதலில் வெற்றி பெறும் வரையிலும்..
#கல்யாணகாதல் - திருமணம் முடியும் வரையிலும்..
#கணவன்மனைவிகாதல் -கல்லறைக்கு போகும் வரையிலும்..
#ஒருதலைக்காதல் - மீண்டும் துணைக்கான வாய்ப்பு கிடைக்கும் வரையிலும்..
#காலம்கடந்தகாதல் - பயன்தந்து இனிக்கும் வரையிலும்..
#கடைசிகாலக்காதல் - உறவின் உன்னதத்தை எண்ணும் போதும்.
#கற்பனைக்காதல் - உண்மையாக மாறும் வரையிலும்..
#கண்மூடிக்காதல் - தகுதியை உணரும் வரையிலும்..
கண்டு...கண்ட பின் #அன்பினால் உண்மையாக உணர்வு பூர்வமாக உணருவதே..
#காதல்
அன்புடன்...
#ப்யாரீப்ரியன்...
Wednesday, 19 August 2020
போர் நுணுக்கங்களை அறிவோம்..
போர்நுணுக்கம்-2 .
வரலாற்றில் மன்னர்கள் தங்களுடன் போர்புரிய வரும் எதிரிநாட்டு வீரர்களை அழிக்க எவற்றை எல்லாம் எப்படியெல்லாம் ப்ரியமாக பயன்படுத்தி வந்தனர் என்பதை சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது இளைய தலைமுறையினரும் அறியவே இப்பதிவு
(இணையத்தொகுப்பு)...
#தூண்டில்/ பெருங்கொக்கு- கொக்கு போன்று இதன் நுனியில் ஒரு கொளுக்கி இருக்கும். இதன் மூலம் அகழியினுள் உள்ள எந்த பொருளையும் இலகுவாக வெளியில் தூக்கி வீசி விடலாம்.
#ஆண்டலையடுப்பு -
இது ஆந்தையின் தலை போன்ற அமைப்புள்ள பாத்திரமாகும்.
→ காய்பொன் உலை- உருக்கப்பட்ட இரும்புக் குழம்பு, செப்புக் குழம்பு
→ பாகடு குழிசி- சூடான தேன் கொண்ட பாத்திரம்.
→ பரிவுறு வெந்நெய்- சூடான எண்ணெய் கொண்ட பாத்திரம்.
→ காடி/ மிடா - கீழே உள்ளதைப் போன்ற ஓர் பெரிய அடுப்பில்தான் மேலேயுள்ள மூன்றும் காச்சப்படும்.
#விதப்பு- இதிலிருந்துதான் எதிரி மீது எண்ணெய் போன்றவை ஊறப்படும்.
#கவண்/ இடங்கணிப்பொறி (இடம் + கணி + பொறி ) :
#கல்லிடுகூடை- எதிரிகள் மீது வீசுவதற்கு கோட்டை மதில் மேல் வைக்கப்பட்டிருக்கும் எறிகற்கள் கொண்ட கூடை.
#தொடக்கு/ நூக்கியெறி பொறி - இதன் நுனியில் ஒரு கயிறு/ சங்கிலி இருக்கும்.இதன் மூலம் எதிரி வீரனின் கழுத்தினுட் செருகி அவனைப் பிடித்து கழுத்தில் பிடித்து தூக்கி கொன்று வீசி விடலாம்.
#கவை/ நெருக்குமர நிலை- மதில் மீது ஏறுவோரை மறித்துத் தள்ளும் ஆயுதமிது. மிக நீண்ட கைப்பிடி கொண்டது.
#புதை- அம்புக்கட்டு
#ஏவறை/ சூட்டிஞ்சி - சிறுசிறு துளைப் பொந்துகள் போலிருக்கும் இவற்றிலிருந்து எதிரி நோக்கி அம்பு எய்யப்படும்.
#ஆரல்/ குருவித்தலை - மதிற்சுவரின் மேல் மறைப்பு
#ஞாயில்/ நாயில்/ ஞாஞ்சில்/ ஏப்புழை - கோட்டை சுவரில் உள்ள இரு குருவித்தலைகளுக்கு இடையிலான இடம். இங்கிருந்து எதிரி மீது தாக்குதல் தொடுப்பார்கள்.
#கைப்பெயர்ஊசி- எந்தப்பக்கம் குத்தினாலும் சங்குதான். கோட்டை மதிலின் மேல் வைக்கப்பட்டிருக்கும் அல்லது மதிலில் இருந்து எறியப்படும்…..ஒருவேளை எதிரிகள் மதில் மேல் எறி மதிலின் உச்சியைப்பிடிப்பவர் இதன் மேல் கை வைத்தால் இது அவர்களின் கையினைக் கிழித்துவிடும்.
#சென்றெறிசிரல்/ கையம்பு - இது கையால் எறியும் ஆயுதம்தான்.
#பணை- பருமையான மூங்கில்
#எழுவுஞ்சீப்பு - சிறைக் கதவு போன்று இரும்பால் செய்யப்பட்ட ஓர் வாயிற்கதவு. அவ்வளவு இலகுவில் இடித்து உடைக்க இயலாதது. ஐயவித்துலாம் கீழே இறக்கப்பட்டால் இது மேலே எழும்பும் ; ஐயவித்துலாம் மேலே தூக்கபட்டால் இது கீழே இறங்கும்.(கோட்டையின் பாதுகாப்பிற்காகத்தான்)
#கவர்தடி- இரு பக்கமும் கூரான எறிபடை… எறியவும் செய்யலாம்; குத்தவும் செய்யலாம்.
#கழு/ கழுக்கோல்/ யானைத்தடை -கோட்டைக்கு முன்னால் எதிரிப் படைகளின் மதிற்போர்க்கருவிகள், போரானைகள் உள்நுழையாமல் இருக்க வைக்கப்பட்டிருக்கும்.
#எந்திரவில் / வளைவிற்பொறி/ வேலுமிழ்ப் பொறி/ அம்புமிழ்ப் பொறி:
இதில் வைத்து எதிரி நோக்கி எய்யப்படும் எறிபடையின் பெயர் நாளிகம்
#ஐயவித்துலாம் /ஐயவி- கோட்டை வாயிலையும் அகழி தொடக்கத்தையும் இணைக்கும் ஓர் தூக்கு பாலம்.
#வல்லயம் - கோட்டையின் மதிலில் இருந்துகொண்டு கீழே உள்ள வீரரை குத்த பயன்படும் ஈட்டி. முனையில் கூரிய இரும்புள்ள மிகவும் நீளமான கையிற்வைத்து எதிரியை குத்தும் ஒருவகை ஈட்டி ஆய்தம்.
#தாமணி-பொருட்களைக்கட்டி வைக்க உதவும் கயிறு.
#நாராசம் -இது ஒரு இரும்பால் ஆன அம்பு.& தீயம்பு..
#சலாகை - இது ஒரு இரும்பால் ஆன சிறு அம்பு.
#மிளை/ காவல்காடு - கோட்டை அகழிக்கு முன்னுள்ள செயற்கைக் காடு.
இங்கு தோட்டி எனப்படும் இரும்பு முட்கள் புதைத்து வைக்கப்பட்டிருக்கும். காவல்காட்டினுள் வேலியாக நொச்சிமரங்களும் முள்வேலிகளும் அமைந்திருந்தன. இதனை வாழ்முள்வேலி,இடுமுள்வேலி எனப் பகுத்து காட்டரணைப் பலப்படுத்தியுள்ளனர்.
#வாழ்முள்வேலி - என்பது முள் செடிகளையும் மரங்களையும் வளர்த்து அவற்றால் ஆக்கிய வேலியைக் குறிப்பது.
#இடுமுள்வேலி - முள்ளை வெட்டிக்கொண்டு வந்து பிற இடத்தில் இடப்படும் வேலி எனப்படும்.
காட்டரணை முற்றுகையிடும் பகைவர்களின் உயிரைக் கவரும் வகையில் பல நிறம் கொண்ட தவளை, பூராண், நண்டு, கம்பளிப்புழு, பல்லி, பூதிப்புழு, கவுதாரி ஆகியவற்றுடன் கீழாநெல்லியின் பட்டை, இலை, மலர், கனி, வேர், தண்ணீர்முட்டான் கிழங்கு, சேங்கொட்டை மரம், எருமையாட்டம் கொடிகளின் சாற்றுடன் சோர்த்துப் புகையை உருவாக்கினால் அப்புகை பகைவர்களின் திறனை அழித்து அவர்களின் கண்களைக் குரடாக்குவதுடன் பகைவர்களைக் கொல்லும் திறன் உள்ளது.—
அகழி/ கிடங்கு /உடுவை/ அகப்பா/ கயம்/ காடி/ உடு/ ஓடை/ இனைடயம் /உவளகம்/ நீரரண் / அகப்பா/ கிடங்கில்- (moat) கோட்டையைச் சுற்றியுள்ள நீரரண்.
எதிரிகள் அகழியில் உள்ள நீரை அருந்தும் பொழுது அவர்களை அழிக்கும் வகையில் அவர்கள் அறியாவண்ணம் சேங்கொட்டை, அரங்கன்,நாயுருவி, மருதமரம் ஆகியவற்றின் மலர்களுடன் ஏலமரம், தானிமரம், குங்கிலியம், ஆலாலம் ஆகியவற்றின் சாறும் செம்மறியாட்டின் குருதியுடன் மக்களின் குருதியையும் சேர்த்து நன்கு அரைத்து அதனைப் பிண்ணாக்குடன் நீரில் கலந்து விட்டால் இந்நிரை அருந்துபவனும் தொடுபவனும் உடனே இறந்துவிடுவான்.
#செய்கொள்ளி - கொல்லனால் காய்ச்சப்பட்ட செந்தீயான இரும்பு
#சுறட்டுக்கோல்/ தொரட்டி- இழுத்து விழுத்தும் கோல்.
#சுண்டுவில்
#கூர்ந்தரி நுண்ணூல்- தொட்ட கையை அறுக்கும் நுண்ணூல்= மாஞ்சா நூல்
#கற்பொறி - அவிழ்த்துவிட்டால் கீழே வந்து வீழ்ந்து எதிரியைத் தாக்கும்.. மீண்டும் இதனை சுழற்றி எடுத்துப் பயன்படுத்தலாம்.
#அடிப்பனை- கோட்டை மதிலில் இருந்து எதிரிகள் மீது இதனை எறிவார்கள்.
#விடுசகடம்- உருட்டி விடப் படும் தீச்சக்கரம
#முட்செடி- இக்கொடி கோட்டை மதில் மீது படரவிடப்பட்டிருக்கும்.
#நச்சுக்கொடி- இக்கொடி கோட்டை மதில் மீது படரவிடப்பட்டிருக்கும்.
#பதணம் /பரிகை /கற்பு / மதிலுண் மேடை/ அகப்பா /மஞ்சிவர் - கோட்டை மதிலில் நடக்கும்படி ஏற்படுத்தப்பட்ட மேடு.. இங்கு நிண்டபடி எதிரி மீது போர்புரிவார்கள்
#உக்கடம் - கோட்டை உயரத்திலிருந்து எதிரி இடராளிகளை காணும்படி உக்கடம் (watch tower) எனும் கட்டுமானம்.
#நிலவரண்
காட்டரணையும் நீரரணையும் கடந்து வெற்றி பெற்ற மன்னர்கள் அதனை அடுத்து தண்டை நிலப்பகுதியில் அமைந்துள்;ள நிலவரணை முற்றுகையிடுகின்றான். “நிலவரண் இருநிலைகளில் அமைந்திருக்கும். பகைவர்கள் புறமதிலைப் பற்றாமை பொருட்டு அதன் புறத்தேயுள்;ள வெள்ளிடை நிலமும் பகைவர் முற்றுகை நீடித்திருக்கும் போது அகத்தாருக்கு வேண்டும் உணவுப்பொருள்களைப் பயிர் செய்யும் வகையில் மதிலின் உட்புறமாக விடப்படும் தண்டை நிலம் நிலவரணாகும்
அகழிக்கும் மதிலுக்கும் இடைப்பட்ட இடமான புறநகரினை நிலவரண் என்பர். இங்கு காவல் வீரர்கள் தம் பாசறையை அமைத்துக் காவல் காட்டினையும் அகழியையும் அழித்துக்கொண்டு வரும் பகைவர்களின் படைகளை எதிர்த்துத் தடுத்து நிறுத்துவர். கோட்டைக்குள் வசிக்கும் மக்கள் தத்தம் வீடுகளில் பயன்படுத்தி வெளியேற்றும் கழிவுநீரும், மழைக்காலத்தில் கோட்டையில் இருந்து வெளியேறும் நீரும் அகழியைச் சென்று அடைவதற்கு முன்பாக இந்நிலவரணைக் கடந்து செல்கிறது. கோட்டைக்குள் வசிக்கும் மக்கள் இந்நீரை பயிர்செய்வதற்குப் பயன்படுத்திக் கொள்வர். இதனால் பகைவர்களின் நீண்ட நாள் முற்றுகையைச் சமாளிக்க இயலும். இத்தகைய சிறப்பிற்குரிய இவ்வரணைப் பாதுகாக்காவிடில் மக்கள் முற்றுகைக்காலங்களில் துயர்பட நேரிடும்.
#முடக்கறை- வாயிலுக்கு மேலுள்ள அம்பு வரும் துளைகள் .
#யாநகம் - ஒரு கயிற்றால் மதிலின் உச்சியில் இருந்து கீழ்நோக்கி இறக்கப்பட்டு தொங்கவிடப்பட்டிருக்கும். எதிரி வீரர்கள் வந்தால் அவர்கள் மீதிதை அவிழ்த்து விடுவார்கள்.
#சாலம்- தொடக்ககாலத்தில் கோட்டைகளை வெறுங்கல்லால் அன்றி, மரமுஞ் சேர்ந்தே கட்டினர்.
#அட்டாணி/ அட்டாலகம் / இதணம் / மேவறை / அலங்கம் - கோட்டை மதிலுக்கு மேலே ஆங்காங்கே அமைக்கப்பட்டிருக்கும் காவலரண். உள்ளே இருப்பவருக்கு வெளியே உள்ளவர்கள் தெரியக்கூடியவகையிலும் சிறு துளைகள் கொண்டு இருக்கும் போர்க் காலங்களில் இதன்மூலம் ஈட்டி, வில்லம்பு கொண்டு வெளியே உள்ளவர்களை தாக்க வசதியாக இருக்கும். வெளியில் இருப்பவர்களுக்கு உள்ளே இருப்பவர்களைக் காண இயலாது என்ன செய்கிறார்கள் என்றும் அறிய இயலாது.
#அட்டாலை / இதண்/ பணவை - அட்டாலகத்தில் காவலுக்கு இருக்கும் வீரனை குறிக்கும் சொல்.
#வாயில் / கௌனி/ ஆத்தானம்/ அரிகூடம்/ கோட்டி- இது கோட்டைக்கான போக்குவரத்து வாசல்.
#ஒலிமுகவாயில்/ ஆசாரவாயில்/ தலைவாயில் - கோட்டையின் முக்கிய வாயில்.
நகரவாயிற் கதவை விட்டு புகும் வழி- புதவு/ புதவம்
நகரவாயிற்றிணையின் பெயர்- அளிந்தம்
நகரவாயிற் படிச்சுறுள்- அத்திகை
கவாடம் - கதவு
சிறுவாயில், பதவு, பூழை
#சுருங்கை/ கற்புழை/ மூடுவழி- கோட்டையிலிருந்து வெளியேறும் இரகசிய வழி.
#சிகரி / துருக்கம்/ அருப்பம்- மலைமேலுள்ள கோட்டை.
#கணையமரம் /துஞ்சுமரம் / தாழக்கோல் - மதிற்கதவுக்கு வலிமையாக உள்வாயிற்படியில் குறுக்கேயிடும் மரம்.
#புழை - புழை என்பது ஒரு கோட்டைக்கு பாதுகாப்பான, கட்டுப்படுத்தப்பட்ட நுழைவு வழியாகும். இது முக்கிய நுழைவுவாயிலில் இருந்து வேறு ஒரு இடத்தில் இருக்கும்.
#பரிசை/ தட்டி - இடைவெளி இல்லாமல் வைரம் ஏறிய மரங்களால் அமைக்கப்பட்டு கோட்டை மதிலில் வைக்கப்பட்டிருக்கும். பகைவர் எய்யும் அம்புகளை இது தாங்கும்.
#நூற்றுவரைக்கொல்லி - ஒரே நேரத்தில் பல பேரை கைலாயம் காண வைக்கலாம்.
#நீர்வாளி- ஏற்பட்ட நெருப்பினை அணைக்க உதவும் நீர் கொண்ட வாளி.
#அரணி/ கடகம்/ பாவை/ பீலி/ புரிசை/ புறம்/ வண்சிறை/ வரணம்/ வரைபடி/ வாடம்/ வேணகை/ தூரியம்/ முத்தகம்/ பெருங்காரம்/ நொச்சி/ பாவை / ஆரம்/ வேலி / அரணம்/ வேதி/ சாலம்/ அல்/ அரணாம்பரம்/ ஓதை - மதில்
கடிமதில் - காவல் மிகுந்திருந்த மதில்
இறைப்புரிசை, நெடுமதில் - மிகவும் உயர்ந்த மதில்
மதிலரண் வகைகள்-
அகன் மதிலரண்
உயர் மதிலரண்
திண் மதிலரண்
அருமதிலரண்.
இவ்வாறு அமைந்த மதிலைப் புறமதில்,இடைமதில், அகமதில் என மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தியிருந்தனர்.
இடைமதில் பகைவர்களின் முற்றுகை நீடித்து இருப்பினும் உள்ளே இருப்போர் உணவிற்கு எவ்விதக் குறையும் இல்லாமல் தமக்கு வேண்டிய உணவினை விளைவித்துக் கொண்டும் வாழும் வகையில் பரந்த நிலப்பரப்பினை உடையது.புறமதில் வளைந்த இடங்களை உடையதாகவும்
அகமதில் என்பதுதன் கடைசி மதிலாகும்
மதிலுக்குள் உள்ள நிலம்- காப்பு
கோட்டைக்குள் நகர்- அகநகர்
திண்ணம்- குறடு, அளிந்தம்
அடிமணை- நிலைக்களம்
மண்டபம்- களம் , தளம்
அரசர் வீதி- பூரியம்
அரசிருக்கை- அரியாசனம், அத்தாணி, வேந்தவை
சித்திரக்கூடம் - தெற்றியம்பலம்
அம்பலம்- மன்றம், பொது அவை, பொதி
அரசரில்லம்- சாலை, மாளிகை, குலம், அரண்மனை, பவனம், கோவில்.
வாரி - சுற்று மதில்
ஓதை/ ஆள்வாரி நிலம்- மதிலைக் காப்பாற்றும் படையினருக்கு மதிலையொட்டினாற் போல் உள்ளசாலை
உவளகம்- கோட்டையின் உட்பக்கம்.
கோசம் - மதிலுறுப்பு
பெருகாரம்- இது கோட்டையினுள்ளே சுற்றிவரும் பெரியபாதை.
இஞ்சி - பெரும்பாலும் செம்பு புனைந்தியற்றியதாகவும் சிறுபான்மை அரைத்த சாந்திட்டமைத்ததாகவும் பகைவரால் எளிதில் தாக்க முடியாதவாறு திண்ணிதாகக் கட்டப்பட்ட மதில் ஏனை வகை மதில்களிலும் மிக இறுகியிருத்தல் பற்றி இஞ்சி எனப்பட்டது.
#பதப்பாடு - கோட்டையரணுக்கு பாதுக்காப்பாக வெளியே கட்டப்பட்டிருக்கும் மற்றோர் மதில்.
#கொத்தளம்/ தோணி/ குடிஞை - கொத்தளம் என்பது, கோட்டை மதில்களில் இருந்து வெளித் துருந்திக் கொண்டிருக்கும் ஓர் அமைப்பு ஆகும்.
#கருவிரலூகம்/ குரங்கு- கோடை மதிலில் கட்டி வைக்கப்பட்டிருக்கும் . பெரும்பாலும் தாட்டான் வகை குரங்குளே அங்கு கட்டி வைக்கப்பட்டிருக்கும். இவை மேலே வரும் எதிரியினைக் கடித்துக் குதறும்.
#கோண்மா - புலி , சிங்கம் முதலிய கொடிய வன விலங்குகள் கோட்டை மதிலில் கட்டி வைக்கப்பட்டிருந்தன. மதிலை தொடுவோரை இவை கவனித்துக் கொள்ளும்.
#முதலை, காராம், விடங்கர்- இவை எல்லாம் அகழிக்குள் இருந்தன.
#கழுகு&கூகை -போர்க்களத்தில் எதிரிகளைக் கொல்ல பயன்படுத்தப்பட்டன
#குடப்பாம்பு/ கத நாகம்- எதிரி வீரர்கள் மீது எறிய குடத்தினுள் வைக்கப்பட்டிருக்கும் பாம்புகள்.
#பாவை- உண்மையான வீரர்கள் போன்று செய்யப்பட்ட பொம்மை பொய் வீரர்
#கரும்பொன்னியல் பன்றி: - இரும்பு நிறம் கொண்ட பன்றி- காட்டுப்பன்றி.
இவற்றினை கோட்டைக் கொத்தளங்களில் கட்டி வைத்திருப்பதால் இவை எழுப்பும் ஒலியினைக் கேட்டு எதிரியின் யானைப் படை திணறி ஓடும்.. மேலும் இவற்றிற்கு மேலே எண்ணெய் பூசி நெருப்பினை வைத்து எதிரியினை நோக்கி ஓட விடுவதால் அவை எதிரியினைக் குழப்புவதோடு மட்டுமல்லாமல் அவனின் யானைப்படையினை மிரள வைக்கும். இவ்வாறு பல போர்கள் வரலாற்றில் நடைபெற்றுள்ளன.
#தோற்றமுறு_பேய்களிறு - அச்சுறுத்தும் தோற்றம் கொண்ட யானை -
இவ்யானைகளானது மதிலின் பின் புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இவை மதிலை கடந்து வருபவர்களை சிதறடிக்கும்.
#துற்றுபெரும் பாம்பு - மலைப்பாம்பு
இது எதிரிகளை அச்சமுறுத்தவும் சில வேளைகளில் அவர்களை விழுங்கவும் செய்திருக்கும்.
#ப்யாரீப்ரியன்...இணையத்தொகுப்பு..
Saturday, 15 August 2020
பழந்தமிழரின் போர் ஆயுதங்கள் சில..
பழந்தமிழரின் போராயுதங்களில் சில:
வீரத்தில் சிறந்து விளங்கிய தமிழர்கள் இத்தகைய போராயுதங்களைப் ப்ரியமாக பயன்படுத்தி இருக்கிறார்கள் என்ற செய்தி நமக்கெல்லாம் பெரும் வியப்பை தருவதாகவே அமைந்துள்ளது .
தமிழரின் ஆய்தங்கள் இருவகைப்படும்.
கைக்கொள்படை/ கைப்படை: - (hand hold weapons)
கைவிடுபடை/ எறிபடை
கைவிடாப்படை
கைக்கொள்ளாப்படை: - ( siege & defense tools)
தோய்த்தல் - ஆயுதங்களைக் காய்ச்சி நனைத்தல்
துவைச்சல் (படைக்கருவி) - tempering (weapons)
பணைத்தல் - AIM MISS
இலக்கு, மச்சை - target
ஆயுதப்பயிற்சி செய்யுமிடம் - சரம்புச்சாலை, பயிற்சிப்பாசறை
சரம்பு - ஆயுதப்பயிற்சி
பணிக்கன் - படைக்கலம் பயிற்றுவிப்போன்.
சலகுபிடித்தல் - படைப் பயிற்சி எடுத்தல் (to practice drill)
ஆயுதங்கள் வைத்திருக்குமிடம் - ஆயுதசாலை, படைவீடு, ஆயுதக்களஞ்சியம், தில்லெரி.
எஃகம் / துப்பு / படைக்கலம் / ஆய்தம்/ ஏதி/ தானை/ கடுமுள்/ துழுமுள் / படை/ கூர்த்திகை/ அரி -ஆயுதப்பொது
ஆய்தம் என்பது தமிழே. இச்சொல்லே பிற்காலத்தில் 'ஆயுதம்' என்று சமற்கிருததில் திரிந்தது
எஃகம் - எஃகில் இருந்து செய்யப்பட்டதே எஃகம் .
ஆய்தங்களின் கூர்மையின் பெயர் - வல், வள், வசி , வை, அள், பூ, ஆர் (sharpness, pointedness)
ஆயுதத்தின் நுனி - முனை (tip of a weapon)
அலகு - ஆயுதத்தின் கொல்லும் கூர்மை கொண்ட பகுதி (blade of a weapon or instrument)
ஆயுதத்தின்பல்- கரு
கழி - ஆயுதப்பிடி
அடைப்பம்- போர்க் கருவிகள் வைக்கும் பை/ பேழை.
தடறு- ஆயுதவுறை / படையுறை/ கருவிப்புட்டில்
காரோடன் - ஆயுதவுறை செய்வோன்.
வாளுறை - புட்கரம்/ வாளலகு /கட்காதாரம்/வள் / இடங்கம்
வாண்முட்டி - வாளின் பிடி (handle or hilt of a sword)
கிண்ணி- வாளின் கைப்பிடி உறை (cover of the hilt of the sword)
வாண்முகம் - வாளின் வாய் (edge of the sword)
சொருகுவாள் - உறையினுள் வைக்கப்பட்ட வாள்
ஆணி - வாளின் அலகு (blade of sword)
கத்திப் பிட்டல் - கத்திக் கூடு
தாங்கு - வேல் / ஈட்டியின் பிடி (The staff of the spear)
பிடங்கு - வேல் / ஈட்டியின் பிடியானது இலையுடன் சேருமிடம் (The part of a lance to which steel is fixed.)
தரங்கு - வேல் / ஈட்டியின் நுனி {The point of in spear (end tip)}
இலை - வேல் / ஈட்டியின் அலகு (blade of a spear or lance or javelin)
காம்பு - கோடாரிகளின் அலகு (blade of the battle axe)
தலை - செண்டு அ கரளாக்கட்டை போன்றவற்றின் தலைப்பகுதி (head part of a mace or club)
தமிழ் அகராதிகளில் முத்தலைச்சூலம்/ முக்குடுமி (பெரியபு. உருத்திர. 10) என்னும் வித்தியாசமான சூலத்தைக் குறிக்கும் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. சூலம் என்றால் நாம் அறிந்தது..
இரண்டு பெயர்களும் தலையினையே குறிக்கின்றன. மேலும் இந்த ஆய்தத்தினை தலையில் மணிமுடி போல தாங்கியபடி ஒருவர் அமர்ந்திருப்பது போன்ற ஓர் முத்திரையானது சிந்துசமவெளி ஆய்வில் கண்டெடுக்கப்பட்டு இருக்கின்றது.
ஆகவே இவை ஏதேனிலும் ஒன்று அதற்கான பெயராக இருக்கலாம் என்பது பதிவரின் கருத்து.
#சூலம் / காளம் / மும்முனை/ நல்வசி/ சூல் - இதில் பல வகையுண்டு.
எரிமுத்தலை - நெருப்பினைக் கொண்ட சூலம்
சத்தி - சிறு சூலம்
"தாமேற் றழுத்திய சத்தி வாங்கி" (பெருங். மகத. 20, 63)
"ஊனக மாமழுச் சூலம் பாடி"(திருவாச. 9:17)
#முக்கவராய்தம் / முக்கவர்தடி / முக்கப்பு / முக்கவர்சூலம்/ முத்தலைக் கழு - இதன் குத்தும் பகுதியானது சூலத்தின் குத்தும் பகுதியைக் காட்டிலும் நீளமாக இருக்கும். இது வேட்டைக்குப் பயன்படும் ஓர் ஆய்தம். தேவைப்பட்டால் களத்திலும் சுழலும்.
#முத்தலைக்கழு - கழு போன்ற நீண்ட குத்தும் அலகூகளைக் கொண்ட சூலம்.
"பருமுக் கப்பினரே"(தக்கயாகப். 98)
"முக்கவர் சூலமும் கபாலமும் குன்றில்மிகும் காராரிந்த மேனி"
"கழு முள் மூவிலை வேல் முத்தலை கழு…சூலப் படை என வழங்கும்" (நிக.தி:7:2)
#சூலவேல்/ மூவிலைச்சூலம் / இலைத்தலைச் சூலம்- மூன்று வேலின் இலை போன்ற முனைகளைத் அலகாகக் கொண்ட சூலம்.
#மூவிலைவேல் / முத்தலைவேல் - வேல் என்பது ஓரிலை போன்றது. மூவிலை வேல் என்பது மூன்று இலைகளால் ஆனது.
முருகனின் கையில் இவ்வாய்தம் உண்டு.
#வேல்/ உடம்பிடி/ ஞாங்கர்/ விட்டேறு : முக்கோண இலைவடிவ கூரிய முனை கொண்ட ஆய்தம். இதனை கையில் வைத்தே சண்டையிடுவர்... கூடியவரை எறிவதில்லை!
வேலின் முகம் அகன்று விரிந்து இருக்கும்! வேலின் கீழ் நுனி வட்டமாக முடியும்!
வடிவேல் - மிகவும் கூர்மையான வேல்
#சிறியிலை எஃகம் - சிறிய ஒடுங்கிய இலையினைக் கொண்ட வேல். இதன் தாங்கு நீளமாக இருக்கும்..
#ஏந்திலை/ முகட்டுவேல் - இலை நீளமாக இருப்பது போன்ற வடிவினைக் கொண்ட வேல். இதன் தாங்கு நீளமாக இருக்கும்.. கூடியவரை எறிவதில்லை!
ஏ → ஏந்து = உயரம்
இலை - இலை
ஏந்திலை = நெடிய இலை
#தூரியம் - தூரிகை போன்ற ஒரு வகையான வேல் . இதன் தாங்கு நீளமாக இருக்கும்.. கூடியவரை எறிவதில்லை!
#முத்தகம் - முத்தக இலை போன்ற அமைப்பினை உடைய வேல். இதன் தாங்கு நீளமாக இருக்கும். கூடியவரை எறிவதில்லை!
#அயில்/ அயில்வேல் - கோரைப்புல் போன்று கொஞ்சமாக அகண்டு மிகவும் நீண்டிருக்கும் ஓரு வகையான வேல்.
#சங்கு / சங்கம்- இலையானது ஒரு பக்கம் வளைந்து இருக்குமான ஆய்தம். கூடியவரை எறிவதில்லை!
சுல்- சல்- சழி - சருக்கு- சக்கு- சங்கு- சங்கம
#பூந்தலைக்குந்தம் - இதன் தாங்கு நீளமாக இருக்கும்.. கூடியவரை எறிவதில்லை.
#சவளம் :- சவண்ட வாள் போன்ற தோற்றம் உடைய ஆய்தம். கூடியவரை எறிவதில்லை! இதில் இரு வகை உண்டு:
சுவள்→ சவள் → சவளம்
சிறுசவளம் - சிறிய சவளம்
பெருஞ்சவளம்/பீலி - நன்கு சவண்ட பெரிய சவளம்.
#உழவாரம் - அலகானது கொஞ்சம் பார்பதற்கு நேராக்கி நிறுத்திய மண்வெட்டி போல இருக்கும். முன்பக்கம் மட்டுமே சப்பையாக்கப்பட்டு கூராக இருக்கும்!
#சல்லியம்- ஆணி/ முள் போன்ற அலகினை உடைய எறிபடை !
சுல் = குத்தற்கருத்து வேர்.
சுல் → சல் = கூரிய முனையுள்ளது, குத்தும் கருவி.
சல் + இயம் = சல்லியம் → ஆணி/ முள் போன்ற கூரிய முனை
கீழ்க்கண்ட சல்லியமானது தென்தமிழ்நாட்டு அரசர் ஒருவரால் பிரித்தானிய பேரரசர் ஒருவருக்கு ப்ரியமான அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டதாகும்
#அரணம் - அரணத்தின் வடிவினை ஒத்த இலையினைக் கொண்ட வேல் .
இதே பொருள் கொண்ட செருப்பு மற்றும் கருஞ்சீரகம் ஆகியவற்றினதும் வடிவத்தினைக் காண்க. அனைத்தும் ஒரே வடிவமே!
#வல்லயம் / குத்துவல்லயம் - இது அதிநீளமான ஓர் ஆய்தமாகும்; முனையில் கூரிய கூர்மையுள்ள மிகவும் நீளமான கையிற்வைத்து எதிரியை குத்தும் ஒருவகை ஆய்தம். எட்டத்தில் நின்றபடியே எதிரியை குத்தி விடலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.. இதனைக் கூடுதலாக யானைமேல் உள்ளவர்கள் பயன்படுத்துவார்கள்!
#கழுக்கடை -குச்சியில் நீளமான கூர்மையான முனையினைக் கொண்ட ஈட்டி.
#நேரிசம்- நீண்ட முள்போன்ற மெல்லிய தலையினைக் கொண்ட ஈட்டி. இது எறிபடை வகையே.
நேர்- நேரான
இல்>இளி>இசி - முள் / குத்துவது
அம் -விகுதி
#திருகுதடி- திருகுவது போல இருக்கும் ஈட்டி அலகு. இதன் தாங்கு நீளமாக இருக்கும்.. இது எறிபடை வகையே.
#தோமரம்/ கைவேல்/ கப்பம்/ கப்பணம்/ கற்பணம் - சிறிய படை.. இது பார்ப்பதற்கு சிறிய வேல் போன்று இருக்கும்.. இதே போன்ற சிலதினை முதுகில் ஓர் தூணி போன்று ஒன்றினை அமைத்து அதனுள் வைத்து செருக்களம் நோக்கி எடுத்துச் செல்வர். தேவைப்படும் போது எதிரி நோக்கி விட்டெறிவர் இல்லையேல் கையில் வைத்து சண்டையிடுவர்..
இப்படை வீரர்களை அக்காலத்தில் தோமரவலத்தார் என்றழைத்தனர்.
#கவர்தடி- இருபக்கமும் கூரான எறியாய்தம்.
#பொத்திரம் -
பொள்- துளையிடுவது போன்ற
திரம்- தகரைச்செடியின் கொத்துப் பூப்போல குண்டாக இருக்கும் கூர்மையான அலகு.
#இட்டி / ஈட்டி/ எறியீட்டி/ வண்டம்/ தரங்கம்/ குந்தம்- எறிபடை …
ஈட்டியின் முகம் அகலாது குறுகி இருக்கும் ; ஈட்டியோ நேர்க்கோட்டில் முடியும்.
இல் > இள் > ஈட்டு > ஈட்டி
துளங்கு → தளங்கு → தரங்கு → தரங்கம்
குல் > குன் > குந்து > குந்தம்
வண் - மிகுதி
வண்டம் - மிகுதியாக இருக்கும் ஆய்தம்.. (வேலினை விட ஈட்டி / குந்தம் தானே போர்க்களத்தில் அதிகமாக இருக்கும்!)
#இரட்டைக்கருவீட்டி- நீண்ட கைபிடி காணப்படும்.
#பட்டிசம் - இது சிங்களத்தில் பட்டிச்தான என்றுள்ளது
#சாக்கத்தி
#கணுவாளி- முள்கொண்ட முட்டி
#வயிரமுட்டி - இடிப்பதற்கான முளைகளை உடைய கையில் கொண்டு சண்டையிடும் ஆயுதம்.
#இடிக்கட்டை - மாட்டுக்கொம்பால் செய்த கையில் வைத்து சண்டையிடும் ஆய்தம்.
#குத்துக்கட்டை - குத்துவதற்கான கூர்களையும் இடிப்பதற்கான முளைகளையும் உடைய கையில் கொண்டு சண்டையிடும் ஆயுதம்.
#வில்லம்பு -
வில் என்னும் சொல்லுகான ஒத்த சொற்கள்- சிலை/ சாபம்/ குணி/ கேகயம்/ வேணு/ சிந்துவாரம்/ முனி/ தவர்/ தடி/ தண்டாரம்
வில்வட்டம் - archery
வில்லை தயாரிப்பவர்- வில்செய்வோன்
வில்லில் நாண் பூட்டப்பட்டிருக்கும் நிலையில் உள்ள வில் குலைவில் எனப்படும்.
வில்லின் நாணோசை - இடங்காரம்
குலை - வில்லின் குதை (notch in a bow to keep the string in check.)
நாண் என்னும் சொல்லுகான ஒத்த சொற்கள் - பூரி , தொடை, ஆவம், பூட்டு, சிஞ்சினி, நரம்பு, நாரி, வடம், குணம், கப்பம்.
#அம்பு: (இதில் பல வகையுண்டு)
அம்புகளை தயாரிப்பபவர்- அம்பன்
→ அம்பு என்னும் சொல்லுகான ஒத்த சொற்கள் - கதிரம், கலி, சாயகம், பீலு, சாரகம், பூதை, சிரி, சிருகம், வண்டு, சாசம், சிலீமுகம், தொடை, தோணியம், அங்கூடம், அத்திரி, வணகம், விக்கம், ஈ,விடூசி, வேந்திரம், ஐமை, சாயகம், பகழி, சரம், வாளி, கோ, அரி, ஏ, காண்டம், அப்பு, வாசம், வாணி
இரும்பினால் செய்யப்பட்ட அம்பு - நாராசம், சலாகை
அம்பின் வகைகள்
கோரை
பாரை
ப்ரியம்
கங்கபத்திரம்
தாமரைத் தலை
வச்சிரப் பகழி
முச்சிரப் பகழி
அஞ்சலி
குஞ்சரக்கன்னம்
எரிமுகப் பகழி
உரும் இனப் பகழி
நெருக்கி மற்று அனந்த கோடி
முருக்கின் உற்று அனந்த கோடி
பல்லம்
பிறைமுகவாளி
சூகம் ,சூபம்
விசிகம்
கத்திவாளி அம்பு
.மொட்டம்பு - உதண்
அம்புக்கட்டு - புதை, கட்டு, கற்றை (sheaf of arrows)
அம்பின் நுனி - குதை, பகழி (pointed end of an arrow)
அம்புத் திரள் கட்டுங் கயிற்றின் பெயர்- பற்றாக்கை
அம்பு விடும் போது கையில் போடும் உறை- காழகம்
அம்புக்கொண்டை - உடு, புழுகு, குப்பி (head part of an arrow)
அம்பின் ஈர்க்கு- உடுவம், கோல் (shaft of an arrow)
அம்புத்தலை - புங்கம் (butt end of an arrow)
கைப்புடை- அம்பு பிடித்து இழுத்து விடும் இடம் (சிறகிற்கு பின்னால் இருக்கும் அந்தச் சிறிய இடம்)
அம்பின் சிறகு - பக்கம் (feather of an arrow)
உடுவும் உடுவமும் இணையும் இடம் - குழைச்சு (joining area of head and shaft of an arrow)
படிமப்புரவு : சொந்தமாக உருவாக்கியது'
→ அம்பு வைக்குமிடம் - (quiver) அம்பறாத்தூணி/ அம்புறைத்தூணி/ இடுதி/ புட்டில்/ கோக்குஞ்சம்/ கலாமிடம்/ அம்புக்கூடு/ தூணீரம்/ ஆவநாழி/ ஆவம் /அம்புறை/ புழுகு /கலாபம்/ வட்டில்/ அம்புயம்
#வரிவில்-வரிபோன்றமைந்த வில்
வலுவான வளைந்த மரக்கிளையின் கொம்பால் ஆகிய வில்- கொடுமரம்
#கார்முக வில் / அமைவில் - மூங்கிலால் செய்யப்பட்ட கார்காலமேகத்தில் தோன்றும் வானவில் போன்ற வில்.
#வாங்குவில் - நடுவில் நன்கு வளைந்திருக்கும் வில்.
இத்தகைய போராயுதங்களைப் ப்ரியமாக பயன்படுத்தி சிறப்பாக வீரத்துடன் வாழ்ந்தது நமக்கு பெருமையே...
~~#ப்யாரீப்ரியன்...
இணையத்தொகுப்பு..
Saturday, 8 August 2020
சங்கேதமொழி
#நுஷுமொழி..
சீனப்பெண்களின் சங்கேத மொழி'.-
மனித நாகரிக வளர்ச்சியில் எழுத்துக்கள் தோன்றிய காலத்தில் அறிவில் சிறந்து விளங்கிய பெண்களை ஆண்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் பெண்களை ஒதுக்கி வைக்க ஆரம்பித்தார்கள். இதை புரிந்து கொண்ட பெண்கள் எதுவும் தெரியாத அப்பாவிப் பெண்கள் போல் நடிக்கத் தொடங்கினார்கள்.
சீனப் பெண்கள் ஒருபடி மேலே போய் தங்களுக்கு எழுதப் படிக்கக் கூட தெரியாது என்பது போல் நடித்தார்கள். ஒரு மாதம், இரண்டு மாதம் அல்ல. பல நூற்றாண்டுகள் இந்த நடிப்பு தொடர்ந்தது. அப்போது பெண்கள் தங்களுக்கு என்று தனி எழுத்து வடிவம் பயன்படுத்த தொடங்கினார்கள்.
பெண்கள் பேசுவதற்கும் எழுதுவதற்கும் என்று தனியாக ஒரு மொழியை உருவாக்கினார்கள். அந்த மொழிக்கு 'நுஷு' என்று பெயர் வைத்தார்கள். நுஷு என்றால் சீன மொழியில் 'பெண்ணின் எழுத்து' என்று அர்த்தம்.p.p
தங்கள் பெண்கள் இப்படி எழுத்துரு கொண்ட மொழியை பேசுகிறார்கள் எழுதுகிறார்கள் என்பதை 700 வருடங்களாக எந்த ஆணாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. யார் சொன்னார்கள் பெண்களால் ரகசியத்தை காப்பாற்றமுடியாது என்று.
சீன மொழி எழுத்துக்கள் பெரிதாகவும் கம்பீரமாகவும் இருக்கும். 'நுஷு' எழுத்துக்கள் பெண்களால் உருவாக்கப்பட்டதால், மெலிதாகவும் நிறைய அழகோடு கிறுக்கியது போல் இருக்கும். ஓவியங்களிலும் தலையணை எம்பிராய்டரி வேலைப் பாடுகளிலும் இந்த எழுத்துக்களை பார்க்கலாம். பார்டர் போல் எழுத்துக்களை பயன்படுத்தி தகவலை சொல்லிவிடுவார்கள்.
பெண்கள் ஆண்களின் கண்ணில் படும்படியே ஓவியங்களில் இந்த எழுத்துக்களை பயன்படுத்தினார்கள். திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்கு போன பெண்கள் அங்கு தங்களுக்கு நேரும் கொடுமைகளையும் அரவணைப்பையும் தன் தாய்க்கு இந்த எழுத்தின் மூலம் ரகசியமாக தெரிவித்தார்கள்.
ஒவ்வொரு பெண்ணும் இந்த மொழியை தனது மகளுக்கும் பேத்திக்கும் கற்று தந்து வழிவழியாக காப்பாற்றி வந்தார்கள். பெண்ணுக்கு மட்டுமே இருக்கும் பல தனிப்பட்ட விஷயங்களை கூசாமல் பேசிய மொழி இது.
தற்போது நுஷு மொழி தெரிந்த ஒரு பெண் கூட உலகில் இல்லை என்பது வேதனையான ஒன்று. யாங் ஹுஅன்ய் என்ற 98 வயது பெண் 2004-ம் ஆண்டு இறந்த போது நுஷு மொழியும் இறந்தது. இவர்தான் நுஷு மொழி தெரிந்த கடைசி பெண்.
பெண்களின் வலிகளையும் காதலையும் திகட்ட திகட்ட சொன்ன ஒரு மொழி இன்று உயிர்ப்போடு இல்லை. நூற்றாண்டுகள் கடந்து ரகசியமாக வளர்ந்த மொழியை இப்படி சாக விட்டுவிட முடியுமா..! அதற்காகத்தான் சீன அரசு நுஷு மொழியை பாரம்பரிய மொழியாக அறிவித்து அதற்காக ஒரு அருங்காட்சியகம் அமைத்துள்ளது.
ஏகப்பட்ட கருத்து சுதந்திரம், பொருளாதார சுதந்திரம் இருக்கும் இன்றைய பெண்கள் கூட இப்படி ஒன்றை உருவாக்கமுடியுமா என்பது சந்தேகமே!
#ப்யாரீப்ரியன்... மீள்...
Friday, 7 August 2020
படை அளவீடுகள்
#படைகள்..
மன்னர்கள் காலத்தில் இருந்த படை வகைகள்..
படை அளவுகள்..
தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை, ஆகிய நாற்படைகள்.
#பதாதி .
ஒரு யானையும், ஒரு தேரும், மூன்று குதிரையும், ஐந்துகாலாட்களும் கொண்ட சேனைத்தொகுதி பதாதி என குறிப்பிடப்படுகிறது.
பதாதி மும்மடி (மூன்று மடங்கு) கொண்டது - சேனா முகம் எனவும்
சேனா முகம் மும்மடி கொண்டது - குமுதம் எனவும்
குமுதம் மும்மடி கொண்டது - கணகம் எனவும்
கணகம் மும்மடி கொண்டது - வாகினி எனவும்
வாகினி மும்மடி கொண்டது பிரளயம் எனவும்
பிரளயம் மும்மடி கொண்டது சங்கம் எனவும்
சங்கம் மும்மடி கொண்டது -சமுத்திரம் எனவும்
சமுத்திரம் மும்மடி கொண்டது -சங்கமம் எனவும்
சங்கமம் மும்மடி கொண்டது - அநிகம் எனவும்
அநிகம் மும்மடி கொண்டது- அக்குரோணி எனவும் அளவீடு கொண்டதாக அறியப்படுகிறது.
ஒரு அக்குரோணி என்பது
21,870 தேர்கள்,
21,870 யானைகள்,
65,610 குதிரைகள்,
1,,09,350 காலாட்படை வீரர்கள் கொண்ட படையாகும்.
இதுபோன்று கௌரவர்
அணியில் 11 அக்குரோணி படைகளும்,
பாண்டவர் அணியில் 7 அக்குரோணி படைகளும் இருந்தன்.
இரு அணிகளில் இருந்த 18 அக்குரோணி படைகளின் மொத்த எண்ணிக்கை 39,36,600 ஆகும்.
பாரதப்போரில் பயன்படுத்திய பாண்டவர் அணி மற்றும் கௌரவர்கள் அணி கொடி சின்னங்கள்
#பாண்டவர்கள்
தருமன் - கிரகங்கள் சூழ்ந்த சந்திரன்
அர்ஜுனன் - குரங்கு
பீமன் - சிங்கம்
நகுலன் - தங்கத்திலான முதுகையுடைய சரபம்
சகாதேவன் - அன்னம்
அபிமன்யு - சாரங்கப் பறவை
பீமனின் மகன் கடோத்கஜன் - கழுகு
கண்ணன் - கருடன்
பிரத்யும்னன் - மகரம்
#கௌரவர்கள்
பீஷ்மர் - ஐந்து நட்சத்திரங்களுடன் கூடிய தாலக்கொடி (தாலம் பனை)
துரியோதனன் - சர்ப்பம்
துரோணர் - பீடத்தின் மீது மான் தோல் பொருத்தப்பட்டு அதன்மேல் வில்லும், கமண்டலம்
கிருபாச்சார்யர் எருது காளை)
அஸ்வத்தாமன் சிங்கவால்
கர்ணன்- யானை கட்டும் கயிறு
ஜெயத்ரதன் - கரடி
சல்லியன் - கலப்பை
கடோத்கஜன் - கழுகு இரத்தம் தோய்ந்த நிலை..
________________________________
மூவேந்தர்களுக்கும் உரிய சின்னங்கள்
1 யானை
2 காளை
3சேவல்
4 குரங்கு
5 சிங்கம்
6 யாளி
7 கருடன்
8 பன்றி
9 சேல் ( மீன்)
10 மகரம்
11 புலி( வேங்கை)
12 அரவம் ( யரவம் பாம்பு)
13 ஒட்டகமும்
14 சங்கு (வலம்புரி)
15 கப்பல்
16 சிப்பி
17 கிளி
18 அன்னம் ( பறவை)
19 தொனி முரசு
20 மயில் ( தங்கமயில்)
21 கொடிய தாலம் மரம் ( தாலம் பனை)
இவை அனைத்தையும் அறிந்து தங்களுக்குரிய பல நன்மை திண்மைகளை வென்று இந்த முத்திரைகளை விருதாக கொண்ட விருத்த பாடலை
தேடி அறிந்து ப்ரியமாக தகவல் அளித்தவர்..
#ஜான்_மில்டன்_பர்னாந்த் ஐயா அவர்கள்...
"திங்கள்வம் மிசதிகை பரதகுல பாண்டியர் தம்
ஜெயவிடால் #மூவேழ்வகை
செப்பிவாம் விவரமா யானையுங் காளையுஞ்
சேவலோடனு மந்தனனும்
சிங்கமும் யாளியுங் கருடனொடு பன்றியுஞ்
சேல் மகரம் வேங்கை யரவம்
திகழ் கனகமகனுடன் சங்கமுங் கப்பலுஞ்
சிப்பியங் கிளியன்னமும்
மங்கலாகார தொனி முரசு பைம்பொன்னுரூப
மயிலோடு கொடியதாலம்
மரமுமாகிய விவைகளாகுமிவைகளையிவர்கள்
மகிமையோடுலகறியவே
தங்களுக்குரிய பல நன்மை தின் மைக்கெலாந்
தனி விருதென நடாத்திக்
கார்தலத்தேப பவனி வர தன்மாபழமையாய்ச்
சாற்றுவார் போற்றுவாரே"
உலக அளவில் அனைத்து அரசர்களை விடவும், மூவேந்தர்களான சேர, சோழ,பாண்டிய மன்னர்களில் அதிகப்படியான படைபலத்தை பெற்றவராக 1000 வருடத்திற்கு முன்பே உலகின் பெரும்பகுதிகளை வசமாக்கிய இராஜேந்திர
சோழனது போர் படையில் சற்றேறக்குறைய
12 -14 லட்சம் வீரர்கள்,
லட்சத்திற்கும் மேற்பட்ட
குதிரைகள்,
50,000 க்கும் மேற்பட்ட
யானைகள் இருந்துள்ளதாக
அறியப்படுகிறது.
#ப்யாரீப்ரியன்...
~~இணையத்தொகுப்பு.
https://m.facebook.com/story.php?story_fbid=3244038485679133&id=100002190405617
Sunday, 2 August 2020
இதுதான் எங்கள் தமிழ்
Tuesday, 21 July 2020
பூட்டு தோன்றிய வரலாறு
பூட்டுச்சாவியின் வளர்ச்சியின் ஆரம்பப்புள்ளி தனக்குரிய பொருள்களை பாதுகாக்க கயிறு அல்லது அதைப்போன்ற ஒரு கட்டுமான பொருள்கொண்டு அவற்றைக் கட்டிவைக்கத தொடங்கியது தான்...
வரலாற்று ஏடுகளில் முதல் பூட்டுச்சாவி, அந்தக்கால மெசபடோமியா நாட்டின் அஸிரியாவில் உபயோகத்தில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
ஆனால் இயந்திர பூட்டுக்களைச்செய்யத் தொடங்கிய கலாச்சாரம் எது என்று தெரியாததால் , எகிப்து, கிரேக்கம் மற்றும் ரோமாபுரியில் ஒரே சமகாலத்தில் வேறு வேறு விதமான பூட்டுக்கள் செய்யத் தொடங்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
எகிப்தில் பின்லாக் எனும் வகை பூட்டுகளும், சாவிகளும் மரக்கட்டையால் செய்யப்பட்டதாக அறியப்படுகிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கிரேக்கர்களாலும், ருமேனியர்களாலும் இந்தப் பின் லாக் பூட்டுக்கள் கொஞ்சம்கொஞ்சமாக புதிய உருவம் பெறத்தொடங்கின.
கிரேக்கர்களின் பூட்டு பாதுகாப்புக் குறைவாக கருதப்பட்டது. இதனால் ருமேனியர்கள் உலோகங்களினால் பூட்டுக்கள் செய்யத்தொடங்கினார்கள். , அதன் சாவியையும் பாதுகாக்க கைகளிலேயே அணிந்து கொள்ளும் விதமாகச் சாவி வடிவமைக்கப்பட்டு, பொருட்களின் பாதுகாப்பை இரட்டிப்பாக்கினார்கள்.
முதலாம் நூற்றாண்டில் ரோம சாம்ராஜ்ஜியம் வீழ்ச்சி அடைந்தபின் பூட்டின் வளர்ச்சி தடைபட்டது.
பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பூட்டுக்களின் புதிய வளர்ச்சி ஆரம்பமானது.
ராபர்ட் பரோனின் 1778 ம் வருடம் கண்டுபிடித்த டபுள் ஆக்டிங் டம்ப்ளர் லாக்,
1784 ம் வருடம் ஜோசப் பிரம்மைய்யாவின் பூட்டு,
1818 ம் ஆண்டு ஜெர்மையாவின் பூட்டுக்கள்,
1848ல் லினெஸ் ஏலின் பின் டம்ப்ளர் பூட்டு,
1857 ல் ஜேம்ஸ் சர்ஜெண்டின் தானே பூட்டிக்கொள்ளும் பூட்டு,
1916ல் சாம்வேல் சேகலின் ஜெமி ப்ரூஃப் பூட்டு,
1924ல் ஹாரி சோரெஃப்பின் முதல் பாட்லாக்.....
இயந்திர வகையிலிருந்து தற்போது மின்னணுவிற்கு பூட்டின் தன்மை மாறுபடத் தொடங்கி உள்ளது.
இந்தியாவைப் பொறுத்த
வரையில் பூட்டு என்றாலேயே நினைவில் வருவது அலிகார் பூட்டுக்கள் மற்றும் திண்டுக்கல் பூட்டுக்கள்.
அலிகார் பூட்டுக்கள் புதிர் பூட்டு,அலங்காரப் பூட்டு, கைவிலங்கு பூட்டு, என்று பல வகையில் தயாரிக்கப்பட்டன. மிக அதிக அளவில் இவை ஏற்றுமதியும் செய்யப்பட்டன.
செட்டிநாட்டுப் பகுதிகளில், இன்றைக்கும் பல வீடுகளில், கதவுடன் கொண்ட பூட்டு பொருத்தப்பட்டிருக்கும். அதன் சாவி ஒரு உள்ளங்கை நீளத்தை விட பெரிதாகவே இருக்கும். தவிர, அந்தச் சாவி கனமாகவும் இருக்கும்.
திண்டுக்கல்லில் இருந்து வந்த மேங்கோ பூட்டுக்கள் அவற்றுடன் நம் வாழ் நாள் முழுவதும் பயன்படுத்தும் நிலையில் வந்தன.
திண்டுக்கல் பூட்டுக்கள் கைவேலைப்பாடுகளாலும்,
அலிகார் பூட்டுக்கள் அச்சு இயந்திரங்களாலும் தயாரிப்பதாலும் திண்டுக்கல் பூட்டுக்களின் விலை அதிகமே.
அக்காலங்களில் அரசு அலுவலகங்களிலும் உபயோகப்படுத்தப்பட்டன..
#ப்யாரீப்ரியன்..
இணையத்தொகுப்பு...
https://m.facebook.com/story.php?story_fbid=3185816178168031&id=100002190405617
Sunday, 19 July 2020
இராஜேந்திரசோழனின் பிறந்த நாள் எது??
#ஆடிஆதிரை_இராஜேந்திரச்சோழன்_பிறந்தநாள்
என்பதை குறிப்பிடும் #கல்வெட்டு
மாமன்னன் இராசேந்திரன் பிறந்த நாள் ஆடித் திருவாதிரையா?
மார்கழித் திருவாதிரையா? எனும் குழப்பத்தை தீர்த்த கல்வெட்டு...
திருவாதிரை என்பதில் யாருக்கும் குழப்பம் இல்லை.
நீலகண்டசாஸ்திரியாரும்,
சதாசிவபண்டாரத்தாரும் திருவாதிரை எனத்தான் அறிந்தனர்.
ஆனால் நீலகண்டசாஸ்திரிகள் மாதத்தை உறுதிப்படுத்தி கூறவில்லை.
பண்டாரத்தார் அதை மார்கழி என்று திருவெற்றியூர் கல்வெட்டை துணைகொண்டு கூறினார்.
~~~~~~~~~~~~~~~~~~~~
ஆனால்-
#திருவாரூரில் தியாகராசர் மூலஸ்தானத்தின் குமுத வரியில் உள்ள இராசேந்திரசோழனின் 31 வது ஆட்சியாண்டின் 244-ம் நாள் அவர் பிறப்பித்த #அரசுஆணையில் தன் தந்தையின் பிறந்த நாளுக்கும், அவரின் பிறந்த நாளுக்கும் ஈசனாரின் திருவாதிரைக்கும் நடக்கும் விழாவுக்கான நிவந்தம் பற்றி கூறுகிறார். அக்கல்வெட்டு இந்தியத் தொல்லியல் கல்வெட்டு இதழில் 1919-ம் ஆண்டு 674 எண்ணில் குறிப்புரைக்கப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டு ஏன் முழுமையாக ஏற்புடையாக இருக்கிறது என்றால்,
1.இது இராசேந்திரசோழனின் அரசாணை.
2.அவரே" யாம் பிறந்த ஆடி ஆதிரைக்கும் அய்யனின் ஐப்பசி சதயத்திலும் அய்யரின் மார்கழி திருவாதிரைக்கும்"என மூன்று நிகழ்ச்சிகளின் மாதம்,நட்சத்திரமும் குறிப்பிடப்படுகிறது.மார்கழியை பிறந்த மாதமாகக் குறிப்பிடும் பிற கல்வெட்டுகளில் இப்படி பிரித்து மூன்றையும் சுட்டவில்லை.அதோடு அவை அரசு ஆணையில்லை.
3.இராசேந்திரனுக்கு அணுக்கமான தியாகேசர் சன்னதி மூலஸ்தானத்தில் உள்ளது.
எனவே ஆடித்திருவாதிரை - பார்போற்றும் வேந்தன்
எங்களது நாயகன் #இராஜேந்திரச்சோழன்
பிறந்த நாள்....
#ப்யாரீப்ரியன்
Thursday, 2 July 2020
பூம்புகார் - ஆய்வுகள்
Sunday, 28 June 2020
மாமல்லபுரம் ஆய்வு
மாமல்லபுரத்து ஏழு கோவில்கள் (Seven Pagodas of Mahabalipuram) என்பது தென்னிந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்துள்ள மாமல்லபுரத்தில் தற்போது கடற்கரையில் எஞ்சியுள்ள கலையழகுமிக்க கோவில் பகுதிகள் தவிர கடல்கோள் ஏற்பட்டு மூழ்கிப்போன வேறு கோவில் தொகுதிகளும் உண்டு என்பதைக் குறிக்கும் சொற்பயன்பாடு ஆகும்.
மாமல்லபுரத்தில் மறைந்துபோன கோவில்கள் பற்றிய மரபுச் செய்தி
இன்று மாமல்லபுரத்தில் அமைந்துள்ள கடலோரக் கோவில் தவிர வேறு ஆறு கோவில்கள் கடல்நீருக்குள் மூழ்கிப்போயின என்னும் மரபுச் செய்தி தமிழகத்தில் பல காலமாக வழங்கிவருகிறது. அச்செய்தியையும் உள்ளடக்கிய விதத்தில் 1914இல் ஜே.டபிள்யூ ஜோசையா வாட்டர்சு (J.W. Josaiah Water) என்ற பிரித்தானியர் “ஏழு கோவில்கள்” (The Seven Pagodas) என்ற தலைப்பில் இலண்டனில் ஒரு நூல் வெளியிட்டார்.
1931இல் டி.ஆர். ஃபைசன் (D.R. Fyson) என்பவர் “மகாபலிபுரம் அல்லது ஏழு கோவில்கள்” (Mahabalipuram or Seven Pagodas) என்ற தலைப்பில் சிறியதொரு நூலை வெளியிட்டார். ஃபைசன் நெடுங்காலம் சென்னையில் வாழ்ந்த ஒரு பிரித்தானியர். அவர் எழுதிய சிறுநூல் ஐரோப்பிய பயணியருக்கு மாமல்லபுரம் பற்றிய செய்திகள் வழங்குகின்ற ஒரு பயணக் கையேடு. தாம் எழுதிய சிறு நூலின் கடைசிப் பக்கங்களில் அவர் தமிழ்நாட்டில் மாமல்லபுரக் கோவில்கள் பற்றி வழங்கிவந்த புராதனச் செய்தியையும் குறிக்கிறார். அதாவது, சீரும் சிறப்புமாகப் பல கோவில்களைக் கொண்டு விளங்கிய மாமல்லபுரத்தைப் பார்த்து இந்திரன் பொறாமை கொண்டு, பெரியதொரு புயலை அனுப்பி அந்நகரை அழித்துவிட்டாராம். கடற்கரைக் கோவில் மட்டும் தப்பியது. கடலில் மீன்பிடிக்கச் சென்றவர்கள் கடலலைகளின் கீழே கோவில்கள் “ஒளிர்ந்து மிளிர்வது” பற்றிக் கூறுகிறார்கள் என்றும் குறிப்பிட்டார். இவ்வாறு மூழ்கிப்போன ஆறு கோவில்கள் உண்மையிலேயே உள்ளனவா என்பது குறித்து ஃபைசன் ஆய்வு நிகழ்த்தவில்லை. மாறாக, ஏழு கோவில்கள் பற்றிய மரபினால் மாமல்லபுரம் புகழ்பெற்றதே அவருக்கு முக்கியமானதாயிற்று.
இருப்பினும், இன்றைய மாமல்லபுரத்தை அடுத்த கடல்பகுதியில் வேறு கோவில்களும் கட்டடங்களும் கடலுக்குள் மூழ்கிய நிலையில் உள்ளனவா என்பது பற்றிய அறியும் ஆர்வம் மக்கள் நடுவிலும், அகழ்வாளர் நடுவிலும் தொடர்ந்து இருந்துவந்துள்ளது.
ஆய்வாளர் முயற்சிகள்
இந்திய வரலாற்று அறிஞர் என்.எஸ். இராமசுவாமி (N. S. Ramaswami) 1993இல் வெளியிட்ட “தென்னிந்தியக் கோவில்கள்” (Temples of South India) என்ற நூலில் 13ஆம் நூற்றாண்டு பயணி மார்க்கோ போலோ மாமல்லபுரம் சென்ற செய்தியைக் குறிப்பிடுகிறார். மார்க்கோ போலோ மாமல்லபுரத்தை நிலப்படத்தில் காட்டினார்.
ஐரோப்பியர் பலர் பிரித்தானிய இந்தியாவுக்குச் சென்று திரும்பியதோடு “ஏழு கோவில்கள்” பற்றியும் பேசினர். 18-19 நூற்றாண்டுகளில் சென்னையில் வாழ்ந்த பிரித்தானிய வானியல் ஆய்வாளர் ஜான் கோல்டிங்காம் (John Goldingham) என்பவர் 1798இல் மாமல்லபுரம் சென்றது பற்றியும் கடல்கோளால் மறைந்த மாமல்லபுரக் கோவில்கள் பற்றிய மரபுச் செய்தி குறித்தும் உரைக்கிறார். அவர் கூறியவற்றை மாற்கு வில்லியம் கார் (Mark William Carr) என்பவர் தொகுத்து தாம் வெளியிட்ட நூலில் அளித்தார். அந்த நூலின் பெயர் “சோழமண்டலக் கரையில் அமைந்த ஏழு கோவில்கள் பற்றிய விளக்க மற்றும் வரலாற்று ஆய்வுகள்” (Descriptive and Historical Papers Relating to the Seven Pagodas on the Coromandel Coast) என்பது. அது 1869இல் வெளியானது.
கோல்டிங்காம் பெரும்பாலும் மாமல்லபுரத்துக் கலைப்பொருள்கள், சிலைகள், கல்வெட்டுகள் பற்றிப் பேசினார். கல்வெட்டுகள் பலவற்றையும் அவரே தம் கைப்பட பிரதி எடுத்து வெளீட்டார். அவருடைய விளக்கப்படி, அக்கல்வெட்டு படவடிவ எழுத்துக்குறிகளைக் கொண்டவை, அவற்றின் வடிவம் பார்த்து அவை எப்பொருள் தருகின்றன என்று காண வேண்டும். மேற்கூறிய நூலில் பெஞ்மின் கி பாபிங்டன் என்பவர் தாம் எழுதிய கட்டுரையில் மாமல்லபுரக் கல்வெட்டுகளில் தெலுங்கு எழுத்துக்கள் உள்ளன என்றார்.
பிரித்தான எழுத்தாளர் ஜே.டபிள்யூ. கோம்ப்ஸ் (J.W. Coombes) என்பவர் மாமல்லபுரத்தின் மறைந்த கோவில்கள் பற்றிய மரபுச் செய்தியையும் ஐரோப்பிய கருத்தையும் 1914இல் எடுத்துரைத்தார். மாமல்லபுரத்துக் கடற்கரையில் ஒருகாலத்தில் பலகோவில்கள் இருந்தன என்றும், அக்கோவில்களின் கூரையில் வேய்ந்த தாமிரத் தகடுகள் கதிரவனின் ஒளியில் ஒளிர்ந்து கடல் பயணிகளுக்குக் கலங்கரை விளக்கமாக அமைந்தன என்றும், மக்கள் பொதுவாக ஏழுகோவில்கள் இருந்ததாகக் கருதுவதாகவும் குறிப்பிட்டார்.
என்.எஸ். இராமசுவாமி கருத்துப்படி, மாமல்லபுரத்தின் மறைந்த கோவில்கள் பற்றிய கருத்து எழுவதற்கு முக்கிய காரணம் 1810இல் ராபர்ட் சவுதி (Robert Southey) என்பவர் வெளியிட்ட “கேகமாவின் சாபம்” (The Curse of Kehama) என்னும் காப்பியமே. அக்கவிஞர் தமது படைப்பில் மாமல்லபுரத்துக் கடலின் கீழே கோவில்கள் உள்ளன என்றார்.
ஆய்வாளர் இராமசுவாமி கருத்து
என்.எஸ். இராமசுவாமி மாமல்லபுரத்தில் கடல்கொண்ட கோவில்கள் உண்டு என்னும் செய்திக்கு வரலாற்று ஆதாரம் இருந்ததாகக் கருதவில்லை. இருப்பினும், பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் மாமல்லபுரத்தின் பல வரலாற்றுக் கட்டடங்கள் மணலுக்குள் அழுந்திக் கிடந்தன என்றும், பிரித்தானியக் குடியேற்றத்தாரும் அவருடைய குடும்பத்தாரும் தம் ஓய்வு நேரத்தில் உழைத்து அந்த வரலாற்றிடங்களை வெளிக்கொணர்ந்தார்கள் என்றும் குறிப்பிடுகிறார். மாமல்லபுரத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை உணர்ந்ததும் பிரித்தானியர் கோலின் மாக்கென்சி (Colin Mackenzie) போன்ற அறிஞரின் துணையோடு அகழ்வாய்வில் ஈடுபட்டனர்.
மறைந்துபோன வரலாற்று ஆதாரம்
2004, திசம்பர் 26இல் ஏற்பட்ட சுனாமிக்கு முன்னால் மாமல்லபுரத்து மறைந்த கோவில்கள் பற்றிய செய்தி, ஆதாரங்களோடு உறுதியாக நிறுவப்படவில்லை. கடற்கரைக் கோவில், இரத வடிவிலான குடைக்கோவில்கள் மற்றும் கட்டுக்கோவில்கள் ஆகியவை ஒரே இடத்தில் காணப்பட்டது அந்த இடத்தின் சமய முக்கியத்துவத்தை வெளிப்படுத்தின. எனவே, மேலதிக கோவில்கள் அங்கு இருந்திருக்கலாம் என்ற ஊகம் உறுதியாகவே இருந்தது.
மாமல்லபுரத்தின் மறைந்த கோவில்கள் பற்றிய மர்மம் தோன்றியதற்கு என்.எஸ். இராமசுவாமி அளித்த விளக்கம்: ”2000 ஆண்டு தொன்மை வாய்ந்த கலாச்சார அறிகுறிகள், மாமல்லபுரத்தில் தற்போதுள்ள சுமார் 40 கட்டடங்கள், வெளியே அமைந்துள்ள சிற்பத்தொகுதிகள் இவை எல்லாவற்றையும் அடிப்படையாகக் கொண்டு மக்கள் மனத்தில் மாமல்லபுரத்தின் மறைந்த கோவில்கள் பற்றிய கருத்து எழுந்தது. அதற்கு ஐரோப்பியர்கள் ஊக்கமளித்தார்கள். ஆனால் உண்மையிலேயே மாமல்லபுரத்து மறைந்த கோவில்களுக்கு வரலாற்று ஆதாரம் இல்லை.”
ஆனால், வாய்மொழிச் செய்தியும் சில வேளைகளில் உண்மையாகலாம் என்பது விரைவில் தெரிந்தது.
2002ஆம் ஆண்டு ஆய்வு
மாமல்லபுரத்துக் கடலோரத்தில் மீனவர்கள் நீருக்கடியில் கட்டடங்கள் பகுதிகளைக் கண்டதாகக் கூறிய இடத்தில் 2002இல் அறிஞர்கள் ஆய்வைத் தொடங்கினர். அந்த ஆய்வுத்திட்டம் இந்திய தேசிய கடலாய்வு நிறுவனத்தாலும் (National Institute of Oceanography) ஐக்கிய இராச்சிய “அறிவியல் ஆய்வுக் கழகத்தாலும்” (Scientific Exploration Sociey) இணைந்து மேற்கொள்ளப்பட்டன.
அந்த இரு குழுக்களும் கண்டுபிடித்தவை: கடற்கரையிலிருந்து சுமார் 500-700 மீ. தொலைவில் 5-8 மீ. நீருக்கும் மணல்படுகைக்கும் அடியில் சுவர்ப் பகுதிகள். அவை பரந்து விரிந்து கிடந்த அமைப்பைக் கண்டபோது அவை பல கோவில்களின் பகுதிகளாக இருந்திருக்க வேண்டும் என்று தெரியவந்தது. அந்தக் கட்டடங்கள் பல்லவர் காலத்தவை என்றும், முதலாம் மகேந்திரவர்மன், முதலாம் நரசிம்மவர்மன் காலத்தவை என்றும் அறிஞர் கருதுகின்றனர். மேலும் பல கண்டுபிடிப்புகள் வெளியாகலாம் என்றும் கூறினர்.
சுனாமி வெளிக்கொணர்ந்த கட்டடப் பகுதிகள்
2004, திசம்பர் 26இல் நிகழ்ந்த சுனாமியின் விளைவாக மாமல்லபுரத்துக் கடல் பகுதியில் கடல்நீர் சுமார் 500 மீ. பின்வாங்கியது. அப்போது ஊர்மக்களும் சுற்றுப்பயணிகளும் கடல் மண் பகுதியில் நீண்ட தூரம் வரிசையாக அமைந்த பெரிய பாறைகள் தோன்றியதைக் கண்டனர். கடல் நீர் மீண்டும் கரைநோக்கி வந்து மணல்பகுதியை மூடியதும் அப்பாறை வரிசைகளும் நீருக்குள் மூழ்கின.
ஆயினும், பல நூற்றாண்டுகளாகப் படிந்த மணல் படுகைகளை அலைநீர் அடித்துச் சென்றுவிட்டிருந்தது. சுனாமியின் விளைவாக மாமல்லபுரக் கடலோர எல்லையிலும் மாற்றம் ஏற்பட்டது. இதனால் கடலடியிலிருந்த பல சிலைகளும் கட்டடப் பகுதிகளும் கண்ணுக்குத் தென்படலாயின. [5]
மாமல்லபுரத்தின் மறைந்த கோவில்கள் பற்றிய ஆய்வைத் தொடர்கையில் சுனாமியின் விளைவாக வேறு கண்டுபிடிப்புகளும் வெளிவந்தன. கல் பாளங்கள் அமைந்த பகுதிக்குக் கீழே செங்கல்லால் ஆன கட்டடப் பகுதிகள் தெரியவந்தன. இந்த இருவகைக் கட்டுமானப் பொருள்களும் வெவ்வேறு காலத்தவை என்பது தெளிவு. கல் பாளங்கள் அமைந்த பகுதி பல்லவர் காலத்தது என்று கொண்டால் அதற்கு அடியில் உள்ள செங்கல் பகுதிகள் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கடைச்சங்க காலத்தைச் சார்ந்தவை என்பது அறிஞர் கருத்து.
சங்ககாலக் கோவில் பகுதிகள் கண்டுபிடிப்பு
சங்ககாலக் கட்டடங்களும் குடியிருப்புகளும் சுனாமி கடல்கோள் காரணமாக மறைந்திருக்க வேண்டும். இந்திய அகழ்வாய்வு ஆராய்ச்சிக் கழகத்தின் (Archeological Survey of India) சார்பாக நடந்த ஆய்வுமுடிவுகள் பற்றி டி. சத்தியமூர்த்தி இவ்வாறு கூறினார்: “சுனாமி அலைகள் வெளிக்கொணர்ந்த ஒரு பெரிய பாறைக் கல்வெட்டுகள் கி.பி. 935ஆம் ஆண்டைச் சார்ந்தவை. அவற்றில் மூன்றாம் கிருஷ்ணா என்ற கர்நாடக வம்ச மன்னன் கோவிலில் அணையா விளக்கு எரியும் வகைக்காகக் கோவிலிக்குப் பொன் கொடுத்த செய்தி உள்ளது. எனவே நாங்கள் இன்னும் ஆழமாக அகழ்ந்தோம். அங்கு நாணயங்கள், மண்பாண்டத் துண்டுகள், சுண்ணத்தால் ஆன சிறு உருவங்கள், பித்தளை விளக்குகள் போன்றவை கிடைத்தன. விரைவிலேயே 9ஆம் நூற்றாண்டு பல்லவ காலத்துக் கோவில் பகுதிகளைக் கண்டுபிடித்தோம்.”
அகழ்வாய்வு தொடர்ந்தபோது பண்டைய சங்கக் காலக் கோவில் பகுதிகள் தோன்றின. செங்கல் கட்டடப் பாணியிலிருந்து கருங்கள் பாளங்கள் அமைந்த கட்டடப் பாணிக்கு மாற்றம் ஏற்பட்டது தெளிவாகத் தெரிந்தது. சங்ககாலக் கோவில் தகர்க்கப்பட்டபின், அதன் அடித்தளத்தின் மீதே பல்லவர்கள் கோவிலை எழுப்பியுள்ளார்கள்.
சங்ககாலத்து சுனாமி
அகழ்வாய்வின் போது தெரிந்த மற்றொரு உண்மை, பல அடுக்குகளாக அமைந்த கடல் சிப்பிப் பரப்புகள் மற்றும் இடிமானங்கள். அவற்றின் அடிப்படையில் ஆய்வாளர்கள் அந்த இடத்தில் சுனாமி இரு முறை நிகழ்ந்திருக்க வேண்டும் என்று முடிவு செய்கின்றனர். பல்லவர் காலத்துக் கட்டடங்கள் 13ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட சுனாமியில் அழிந்தன. அதற்குக் கீழே மணலுக்கு அடியில் தெரிந்த செங்கல் கட்டடப் பகுதிகளைப் பார்க்கும்போது சங்ககாலத்தில் சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன்னிருந்த கோவிலும் சுனாமிக்கு இரையாகியிருக்க வேண்டும். இவ்வாறு இந்திய நில ஆய்வுக் கழக முன்னாள் இயக்குநர் எஸ். பத்ரிநாராயணன் கூறினார்.
இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் ஒரிசா, ஆந்திரா, தமிழ்நாடு உட்பட் 1,200 கி.மீ. தூரம் இந்த சுனாமி அழிவு ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன.
2004ஆம் ஆண்டு சுனாமிக்குப் பிறகு கடற்கரையிலிருந்து கடலுக்குள்ளாக சுமார் 1 கி.மீ. தூரத்திலும் பெரிய கட்டடங்கள் அழிவுப் பகுதிகள் கிடைத்துள்ளன. அவை முற்காலத்து மாமல்லபுரத்தின் மறைந்த கோவில்களின் பகுதிகளாக இருக்கலாம் என்று ஆழ்வியலார் கருதுகின்றனர்.
சுனாமி வெளிக்கொணர்ந்த சிங்கச் சிலை
2004ஆம் ஆண்டு சுனாமியால் கடலிலிருந்து வெளிப்பட்ட வரலாற்று ஆதாரங்களுள் மிகச் சிறப்புவாய்ந்தது பெரியதொரு சிங்கச் சிலை ஆகும்.மணற்கல்லால் ஆன இச்சிங்கம் கி.பி. 7ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்று அறிஞர் கருதுகின்றனர். இது பல்லவர் காலத்ததே என்பதற்குத் தெளிவான அடையாளங்கள் உள்ளன.
பிற கண்டுபிடிப்புகள்
2005 ஏப்பிரல் மாதத்தில் இந்திய அகழ்வாய்வுக் கழகமும் இந்திய கடற்படையும் மாமல்லபுரக் கடல்கரைப் பகுதியில் நீருக்குள் ஒலிச் செலுத்துவழி மற்றும் வீச்சளவு (sonar) நுட்பத்தைப் பயன்படுத்தி ஆய்ந்தனர். அதன்போது, 2004ஆம் ஆண்டு சுனாமி வெளிக்கொணர்ந்த பாறைக் கூட்டம் என்பது ஆறடி உயரமும் 230 அடி நீளமும் கொண்ட சுவரின் பகுதிகள் என்று கண்டனர். மேலும், கடற்கரையிலிருந்து 500 மீ. தூரத்தில் கடலுக்கடியில் வேறு இரண்டு கோவில்களின் பகுதிகளும் ஒரு குகைக்கோவில் பகுதியும் காணப்பட்டன. மேலும் கடலில் மூழ்கிய 25 மீ. நீளம் மற்றும் 28 மீ. அகலம் கொண்ட கோவிலின் கர்பகிரகம் (ஒவ்வொரு பக்கமும் 2.6 மீ. கொண்ட சமசதுரம்), அதைச் சூழ்ந்த பகுதி, பிரகாரம் ஆகியவையும் தெளிவாகத் தெரிந்தன. இடிந்து விழுந்த கோவில் சிகரம், கலசம் போன்றவையும் மாமல்லபுரக் கடற்கரைக் கோவிலில் உள்ளதுபோலவே உள்ளன.
கர்பகிரகப் பகுதியில் காணப்பட்ட கருங்கல் பாளங்களில் கட்டடக் கலைஞரின் கையெழுத்துப் போல ஒரு பறவை வரையப்பட்டுள்ளது. மேலும் அம்பும் வில்லும் உள்ளன. குறுக்கு நெடுக்காக இரு முக்கோணங்கள் ஒரு வண்ணத்துப் பூச்சி வடிவைக் காட்டுகின்றன. இத்தகைய ப்ரியமான சின்னங்கள் பல்லவர் காலக் கட்டடங்களில் இதுவரை காணப்படவில்லை என்று தெரிகிறது என்று ஆய்வாளர் கூறுகின்றனர்.
இப்பொருள்கள் பற்றியும் அகழ்வில் கிடைத்த கல்வெட்டுகள், பல்லவர் காலத்திற்கு முற்பட்டதாகத் தெரிகின்ற சுடுமண்ணால் (terracotta) கட்டப்பட்ட கிணறு போன்றவற்றைப் பற்றி டி.எஸ். சுப்பிரமணியன் ஃப்ரண்ட்லைன் இதழில் விரிவான தகவல்கள் தருகின்றார்
http://www.frontline.in/…/fl2…/stories/20050520005812900.htm
மாமல்லபுரத்தின் ஏழு கோவில்களா?
மாமல்லபுரத்தில் ஏழு கோவில் அமைப்புகள் இருந்தன என்ற புராதனச் செய்தி முற்றிலும் உண்மையே என்று கூறமுடியாவிட்டாலும், மேற்கண்ட கண்டுபிடிப்புகளின் விளைவாக, மாமல்லபுரம் பகுதியில் மாபெரும் கோவில் வளாகம் இருந்தது என்றும் கடல்கோள் காரணமாக அது பெரும்பாலும் மறைந்துவிட, இன்று ஒருசில கட்டடங்களே எஞ்சியுள்ளன என்பதும் தெளிவாகிறது.
#ப்யாரீப்ரியன்...
இணையத்தொகுப்பு..
https://m.facebook.com/story.php?story_fbid=120656368269815&id=105541249781327