Saturday, 26 October 2019

கோலம்

#கோலம்..
வீட்டின் முன்பு இடும்
கோலமென்பது வெறும் அழகுக்காக மட்டுமில்லை.  சரியான முறையில் சரியான அளவில் உருவங்கள் ஒன்றிணையும் கோலம் தெய்வீக சக்தியை வரவைக்கும் யந்திரத்துக்கு ஒப்பானது.
அதனாலேதான், கோலங்கள் வீட்டு வாசலிலும், பூஜை அறையிலும் வரையப்படுகின்றது.
மேலும் மார்கழியில் அதிகாலையில் கோலமிடுவதால் பூமத்திய ரேகையில் பல மாற்றங்கள் நிகழ்வதால்  அதாவது டிசம்பர் மாதத்தில் பூமினுடைய சக்திநிலையில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த சக்தி மாற்றத்தின்போது தேவையான அறிவு, ஞானம் இருந்தால், அப்போது ஏற்படும் சக்தி சூழ்நிலையை, நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.
அதில் ஒரு வழிமுறைதான் இந்த கோலமிடுதல்.

நாள்தோறும் சூரிய உதயத்திற்குமுன் வாசலில் கோலமிடுவதால் நம் உடலுக்கு தேவையான முழுமையான பிராணவாயு சுவாசிக்க இயலும்... 
வீட்டை பெருக்கி சாணம் தெளிப்பதால் கண்ணுக்கு தெரியாத கிருமிகள் அழிக்கப்படுகின்றன. குனிந்து நிமிர்ந்து புள்ளி வைத்து கோலம் போடும்போது இடுப்பெலும்பு வலுப்பெறுகிறது.

புள்ளியிட்டு கோலம் போடும்போது நம்முடைய சிந்தனை ஒருநிலைப்படுகிறது.
கற்பனைத்திறன்,
மன அமைதி,
நேர மேலாண்மையும்,
தன்னம்பிக்கையும் ஏற்படுகிறது.நம்முடையை சிந்தனை சிதறலையும் தடுக்கும் ஒருவித பயிற்சியாகிறது.

மேலும் புள்ளிக்கோலம் போடும்போது புள்ளிகளை உற்று நோக்கும்போது கண்பார்வை அதிகரிக்குது. (இதனாலதான் அந்தக் காலத்து பாட்டிகள் கண்ணாடி அணிந்ததில்லை)
அரிசி மாவினால் போடப்படும் கோலங்களால் எறும்புகளுக்கு உணவாகிறது.
முழுவதுமாக போட்டு முடித்த பிறகு மகிழ்ச்சி ஏற்படுவதும்,அண்டை வீட்டாரிடம் புகழும் கிடைக்கிறது..
கோலப்போட்டிகளில் கலந்து வெற்றி பெற்றால் பரிசும் கிடைக்கிறது..
#ப்யாரீப்ரியன்..

Tuesday, 15 October 2019

உறைகிணறு

#உறைகிணறு.. காவிரிப்பூம்பட்டினத்தில் வானகிரி, நெய்தவாசல், பெருந்தோட்டம் முதலிய பகுதிகளில் உறைகிணறுகள் காணப்படுகின்றன.
கடற்கரை அருகில் உறை கிணறுகள்.உறை கிணற்றுப் புறச்சேரி' என்ற ஒரு பகுதி குறித்தும்  நல்ல தண்ணீருள்ள கிணறு பற்றியும் பட்டினப்பாலை குறிப்பிடுகிறது.

தமிழ்நாட்டில் நடைபெற்ற தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளில் பல இடங்களில் சகொற்கை, அரிக்கமேடு, மாமல்லபுரம், வசவசமுத்திரம் (மாமல்லபுரம் அருகில்), மாளிகைமேடு, செங்கமேடு, மாங்குடி(நெல்லை), காஞ்சிபுரம், படைவீடு, பெரியபட்டினம் முதலிய இடங்களிலும் அண்மையில் #கீழடி (சிவகங்கை) பட்டரைப் பெரும்புதூர் (திருவள்ளூர்) போன்ற இடங்களிலும் #உறைகிணறுகள வெளிப்படுத்தப்பட்டன.

இவை இரண்டு வகையாக இருக்கும். ஒரே உயரம் அளவு உடையதாக வளையங்கள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும். வளையங்களுக்கு இடையில் களிமண்பூச்சு இருக்கும். சில இடங்களில் வளையத்தின் நடுவே சிறு துவாரம் இருக்கும். இதன் வழியே பக்கவாட்டு நிலத்தில் உள்ள நீர் கிணற்றுக்குச் சென்றுவிடும்.

மற்றொரு வகையில் உறை கிணற்றின் மேற்பகுதியின் விட்ட அளவு, கீழ்பகுதியை விடக் குறைவாக இருக்கும். அதனால், ஒரு வளையத்தின் மேல் இன்னொரு வளையம் வைக்கும்பொழுது மேலே வைக்கப்படும் வளையத்தின் கீழ்ப்புற விட்ட அளவு அதிகமாக இருப்பதால் அது கீழே உள்ள வளையத்தில் நன்றாகச் செருகிக் கொள்ளும்.

பொதுவாக மனிதன் வாழ்ந்த #பண்டையவாழ்விடங்களில்' இத்தகைய உறைகிணறுகள் காணப்படுகின்றன.

தமிழகத்தில் கிணறுகள் தோண்டப்பட்டதையும், அவற்றிலிருந்து நீர் எடுத்தலைப் பற்றியும் சங்க இலக்கியங்களான அகநானூறும்  பெரும்பாணாற்றுப்படையும்  குறிப்பிடுகின்றன.
#ப்யாரீப்ரியன்

Wednesday, 9 October 2019

கல்வெட்டுகளில் உள்ள தமிழி பெயர்கள்

#தமிழி_பெயர்கள் - #தமிழ் #பிராமி கல்வெட்டுகளில் கீழ்க்கண்ட பெயர்கள் காணப்படுகின்றன: 👇

அசூதன் 
அஞ்சி
அடன்
அட்டன்
அதன்
அதினன்
அத்திரன்
அந்துவன்
அந்தை
அரட்ட
அரிதன்
அரிதி
அரியதன்
அரிய்தி
ஆதன்
ஆதன்னாகன்
ஆய்சயன்
ஆரிதன்
இராவதன்
இளங்கடுங்கோ
இளங்கடுங்கோ
இளங்காயிபன்
இளங்கோ இ
இளஞ்சடிகன்
இளவெயினி
இளவோன்
உதயன்
உபறுவன்
எளசந்தன்
எளசுடன்
ஒபனபவிரய
கசபன் 
கடலன்
கடுங்கோன்
கணதேவன்
கணிமான்
கவுடியி
கழுமாறனதன்
காத்தான்
காயபன்
காயிபன்
கீரன்
கீரன்
குவிரந்தை
குவிரன்
குற்றன்
கைய் அளன்
கொறி
கொற்றந்தை
கொற்றி
கொற்றி
கோடன்சடிகன்
கோபன்
சந்தந்தைச்சந்தன்
சந்தரிதன்
சந்திரச நந்தி
சாதன்
சாத்தன்
சாத்தன்
சிழிவன்
செக்கத்தண்ணி
செங்காயபன்
செங்குவிரன்
செல்லிரும்பொறை
செற்அதன்
சேக்கந்தி
சேந்தன்
தியன் சந்தன்
தேவன்
நக்கன்
நதசிறியகுவன் 
நத்திநடன்
நாகன்தத்மன்
நெடுசாதன்
நெடுஞ்சழியன்
நெடுமலன்
பாரரசு
பிகன்
பிடந்தை
பிடன்
பிட்டந்தை
பிட்டன்
பின்னன்
பூதிவிர
பெருங்கடுங்கோன்
பெருங்கீரன்
பேரதன் பிடன்
போலாலயன்
மோசி
வழுத்தி
விசூவன்
வியகன்
வியக்கன்
வெணி
வெண்காசிபன்
வெளியன்
வேள்

நன்றி: திரு. இங்கர்சால், 

Wednesday, 2 October 2019

ரயிலில் இருக்கை ஒதுக்கீடு செய்வது இப்படி தான்...

பேருந்துகளில் நாம் விரும்பும் இருக்கையை தேர்வு செல்வது போல், #ரயிலில் மட்டும் தேர்வு செய்ய முடியாதது ஏன்...??
#ப்யாரீப்ரியன்..
நம்மில் பலருக்கு இந்த சந்தேகம் இருக்கும். முதியவர்களில் இருந்து இளைஞர்கள் வரை தங்களுக்கு ஏற்ற சீட் ஒருமுறை கூட ரயிலில் கிடைக்கவில்லை என புலம்புவதை கூட காதுப்பட கேட்டிருப்போம்.
ஆனால், இது ஏன், எதனால் பேருந்துகளில் விருப்பமான சீட் புக் செய்ய வாய்ப்புகள் இருக்கும் போது ரயில்களில் மட்டும் இல்லை என நீங்கள் என்றாவது யோசித்ததுண்டா?
#அறிவியல் காரணம்...
நாம் திரையரங்கில் எந்த இருக்கை வேண்டுமானாலும் நமது விருப்பத்தின் பேரில் பதிவு செய்யலாம். ஹவுஸ்புல் ஆனாலும், ஓரிரு இருக்கைகள் புக் ஆனாலும் எந்த பாதிப்புகள் இல்லை. ஏனெனில் இது நகர்வு தன்மையற்ற இடம்.

ஆனால், ரயில் என்பது அதிக வேகத்தில் பயணிக்க கூடிய நகர்வு பொருள். இங்கே நமது விருப்பத்தின் பேரில் இருக்கை பதிவு செய்யும் போது பல தவறுகள் மற்றும் எளிதாக விபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
#கோச்
பொதுவாக ரயில்களில் S1, S2 S3.... என பல கோச்சுகள் இருக்கும். ஒவ்வொரு கோச்சிலும் 72 இருக்கைகள் இருக்கும். மேலும், கீழ், மத்திய, மேல் படுக்கை அமைப்பும் கொண்டிருக்கும்.

~டிக்கெட் புக் ஆகும் முறை..
நீங்கள் டிக்கெட் பதிவு செய்யும் போது ஒவ்வொரு கோச்சிலும் மத்திய பகுதியில் இருக்கும் இருக்கைகள் தான் முதலில் பதிவு செய்யப்படும். அதாவது. 30 - 40 என்ற எண்களுக்குள் இருக்கும் இருக்கைகள் தான் பதிவு செய்வார்கள். எல்லா கோச்சிலும் இந்த மத்திய இருக்கைகள் பதிவான பிறகு. அதற்கடுத்த இருக்கைகள் சீரான முறையில் பதிவு செய்யப்படும்.
பர்த் பதிவுகளும் இப்படி தான் பதிவு செய்வார்கள். முதலில் கீழ் பர்த், பிறகு மத்தியில், அடுத்த மேல் பர்த் பதிவுகள் செய்யப்படும்.
#புவியீர்ப்பு_மையம்
ரயிலில் இப்படி டிக்கெட் பதிவு செய்து பிரித்தால் தான் ரயில் ஓடும் போது அதன் புவியீர்ப்பு மையம் பாதிக்கப்படாமல் இருக்கும். ரயில் ஓடும்போது அதன் சமநிலை பாதிப்படையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முறை பின்பற்றப்படுகிறது.

கடைசி நேரத்தில் டிக்கெட் யாராவது கேன்சல் செய்து உங்களுக்கு இருக்கை கிடைத்தால், அது 2,3 அல்லது 71,72 என்ற இருக்கையாக கிடைப்பதற்கு இந்த முறை தான் காரணம்.
#சிந்தியுங்கள்!
நூறு கிலோமீட்டர் வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கும் ரயிலில் S1, S2, S3 முழுவதும் நிரம்பியும், S4, S5, S6 காலியாக இருந்து, இதர கோச்கள் ஓரிரு இருக்கை மட்டும் பதிவாகியிருந்தால், கண்டிப்பாக ரயிலின் வேகத்தை கூட்டி, குறைத்து, ப்ரேக் போடும் போது விபத்துகள் நேர வாய்ப்புகள் உண்டு.
இதை தவிர்க்க தான் இந்த முறையில் டிக்கெட் புக் செய்யப்படுகிறது....