Monday, 30 September 2019

வசம்பு

விஷம் குடித்தவருக்குகூட இதை கொடுத்தால் பிழைத்துவிடுவார்கள்… கட்டாயம் வீட்ல வாங்கி வைங்க…

நம்முடைய முன்னோர்கள் வீட்டில் கட்டாயம் வசம்பு வைத்திருப்பார்கள். குறிப்பாக பிறந்த கைக்குழந்தைக்கு தினமும் வசம்பு உரசி வாயில் வைப்பதுண்டு. காரணம் குழந்தை சாப்பிடும் உணவாலோ அல்லது அலர்ஜியோ விஷத்தன்மையோ குழந்தைக்கு பரவக் கூடாது என்பதற்காக கொடுக்கப்படும்.

அதனால் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் வசம்பு என்பது குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் ஒன்று என்று. ஆனால் அது அப்படியல்ல. வசம்பு பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.

வசம்பு எப்பேர்ப்பட்ட கொடிய விஷத்தன்மையையும் போக்கக்கூடியது. அதனால் கட்டாயம் வீட்டில் வசம்பு வைத்திருக்க வேண்டியது அவசியம்.

வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து
சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லா
நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

வசம்பை விஷம்அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டு, மூன்று டீஸ்பூன் கொடுத்தால் உள்ளிருக்கும் விஷம் முழுக்க வெளியே வந்து விடும்.

கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது.

பசியைத் தூண்டி சோம்பலைத் தீர்க்கும்.

அகோரஸ் காலமஸ் (Acorus Calamus) என்ற அறிவியல் பெயர் கொண்ட இது
ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃப்ளாக் (Sweet Flag) என்று அழைக்கப்படுகிறது.

பாட்டி வைத்தியம் என்று நம் முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில்
சேர்ப்பது இந்த வசம்பைத் தான். கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி
காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள்.
இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது.
சுடு தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து
கிருமிநாசினியாகவும் பயன்படுத்தலாம்.
#ப்யாரீப்ரியன்

Wednesday, 18 September 2019

விழிப்புணர்வு பதிவு...
#ப்யாரீப்ரியன்

#தண்ணீர் என்றால் பத்து நாளில் புழு வைக்க வேண்டும்!

#பழங்கள் என்றால் குறிப்பிட்ட நாட்களில் அழுகி நாற்றமெடுக்க வேண்டும்!

#காய்கறிகள் என்றால் சில நாட்களில் சொத்தையாகி புழு வைக்க வேண்டும்!

#நவதானியங்கள் என்றால் கொஞ்ச நாளில் வண்டு சேர வேண்டும்...!

ஆக எது கெட்டுப்போகிறதோ!
புழு வண்டு வைக்கிறதோ!
எது அழுகி நாற்றமெடுக்கிறதோ!
எது ஊசிப் போய் வீணாகிறதோ!
எது வண்டு வைத்து குப்பைக்கு போகிறதோ!

அவை மட்டுமே இயற்கையின் விதிப்படி நல்ல தரமான #தீங்கில்லாத_உணவுப்பொருள்கள்....!!!

3 மாதம் ஆனாலும் புழு வைக்காமல் இருக்கும் பாட்டில் வாட்டர் கேன் வாட்டர் #எப்படி_நல்லதண்ணீர்_ஆகும்??

பழமுதிர் சோலைகளிலும் ரிலயன்ஸ் பிரஷ்களிலும் மெகா சூப்பர் மார்கெட்டிலும் பூச்சி மருந்து தெளித்து இரண்டு வாரமானாலும் கெடாமல், அழுகாமல், இளமை மங்காது, பள பளப்பாக விற்கப்படும்
பழங்கள் காய்கறிகள் நல்ல தரமான பொருட்களா??

இரண்டு மூன்று மாதத்தில் வீட்டில் அரைக்கப் படும் மிளகாய் பொடி, இட்லிப் பொடியிலேயே கடும் காரத்தை உள்வாங்கி புழு வந்து கெட்டுப்போகிறது...!!

பூச்சிக் கொல்லி மருந்து கலந்து பல மாதங்கள் ஆனாலும் கெட்டுப் போகாது, மணமாக விற்பனை செய்யப்படும் பாக்கெட்டுகள் நல்ல பொருளா??

#இல்லவே_இல்லை...!

ரெடிமேடு உணவு பொருள் பாக்கெட் எல்லாமே நஞ்சுதான் நஞ்சுதான்...!!!

டி.வி. விளம்பரம் பார்த்து எந்த உணவு மற்றும் அழகு சாதனப் பொருட்களை வாங்கினால் அதைவிட மடமையும் முட்டாள்தனமும் வேறு எதுவுமில்லை...

கெட்ட உணவுப் பொருள்களை மெகா கடைகளில் வாங்குவது, ஒரு பொழுது போக்கு சமூக கௌரவமாக மாறி விட்டது...
அதை விடக் கொடுமை..
நோயைப்பற்றி மெகா மருத்துவமனை சிகிச்சை அதன் செலவுகள் பற்றி உரத்து பேசுவதும் ஒரு சமூக கௌரவமாக கருதப்படும் அவலமான சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்....!!!

உணவு முறை, நோய், நலம், மருத்துவம், சமூகம்
பற்றிய புரிதல் கோளாறே இதற்கெல்லாம் காரணம் வரை முறையற்ற நுகர்வு பண்பாடும் இதற்கு அடிப்படைக்காரணம்...!

#உண்மையை_உ ணர்வோம்......

Monday, 16 September 2019

விமானத்தை கண்டுபிடித்தவர்..

#விமானத்தை கண்டறிந்தவர்...#தல்படே...

மறைக்கப்பட்ட நமது இந்திய அறிவியலின் கண்டுபிடிப்பு - 

பறவை பறப்பதை போல வானில் பறக்க  உருவாக்கப்பட்ட  விமானத்தை 17 டிசம்பர் 1903 ஆம் ஆண்டு ஓர்வில் ரைட் மற்றும் வில்பர்ட்ரைட் என்ற  #ரைட்சகோதரர்கள் தான் முதன்முதலில் உருவாக்கி உலகையே வியப்பிற்கு உள்ளாக்கினர் என்பதுதான் நாம் அனைவரும் படித்து அறிந்த செய்தி...

ஆனால் விமானத்தை இவர்களுக்கு முதலே இன்னொருவர் உருவாக்கிவிட்டார் என்று வரலாற்று சான்றுகளுடன் சிலர் கூறுகின்றனர்.
#நியூசிலாந்தை சேர்ந்த #ரிச்சர்ட்_பியர்ஸ் 
(Richard Pearce ) என்ற இயந்திரவியலாளர் 
31 மார்ச் 1903 ஆம் ஆண்டு முதலாவது விமானத்தை பரிசோதித்து உள்ளதாகவும் 
மீண்டும் விமானத்தில் மாற்றங்களை செய்து 11 மே 1903 ஆம் ஆண்டு பலர் முன்னிலையில் விமானத்தை இயக்கி காட்டியதாகவும் ஆனால் அது தரையிறக்கும் போது விபத்திற்கு உள்ளாகியதில் விமானம் முற்றாக சேதமடைந்ததாகவும்

மீண்டும் அதை சரி செய்து இயக்குவதற்கு முன்னர், ரைட் சகோதரர்கள் முந்திக்கொண்டதாகவும் செய்திகள் வந்ததாக அறியப்படுகிறது...
~~~~~~~~~~~~~~~~~~~~~~
உண்மையில்
இந்தியரான அறிஞர் சிவ்கர் பாபுஷி #தல்படே தான் உலகில் முதல் விமானத்தை உருவாக்கியவர் எனவும் 
அவர் வடிவமைத்த விமானத்தின் முதல் சோதனை ஒட்டம் 1895ஆம் ஆண்டு மும்பையில் ௨ள்ள ஜவ்பதி கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில்ல் நடைபெற்றதாகவும். அதில் அவருடைய விமானம் 1500 அடி உயரத்திற்கு பறந்து சென்று பத்திரமாக தரையிறங்கியதாகவும் 
அந்த பார்வையாளர்களில் கோவிந்த ரானடே மற்றும் ஷாயாஜி ராவ் கெய்க்வாட் போன்ற புகழ்பெற்ற நீதிபதிகளும் இருந்தனரெனவும் அறியப்படுகிறது. 

ஆனால், ரைட்ஸ் சகோதர்களின் விமானத்தின் முதல் சோதனை ஒட்டம் 1903ஆம் ஆண்டு டிசம்பர் மாததில் தான் நடைபெற்றது. அதுவும் அந்த விமானம் 13 நிமிடங்கள் மட்டுமே பறந்தன என்பது குறிப்பிடத் தக்கது.

தல்படே விமானத்தின் முதல் சோதனை ஒட்டம் வெற்றிபெற்றதாலும் விமான ஆராய்ச்சியை மேலும் தொடர பண உதவி தேவைப்பட்டதாகவும். தன்னால் நிறைய விமானங்களை பல திறனில் தயாரிக்க முடியும் ௭ன்று கூறியதாகவும், அவருடைய விமான ஆராய்ச்சிக்கு பரோடாவின் மகாராஜா சாயாஜி ராவ் ஹேய்க்வாட் பண உதவி செய்ய முன்வந்ததாகவும்...

 ஆனால், இந்தியன் ஒருவன் விஞ்ஞானியாக ஆகுவதை விரும்பாத ஆங்கிலேயர்கள் பரோடாவின் மகாராஜாவை மிரட்டியதால் அவ௫ம் ஆங்கிலேயர்களுக்கு பயந்து தல்படேக்கு பண உதவி செய்ய முன்வரவில்லை என அறியப்படுகிறது..

1916ஆம் ஆண்டு தல்படே மரணமடைந்தபிறகு, அவர் உருவாக்கிய விமானத்தையும் அதன் வடிவமைப்புகளையும் அவருடைய சொந்தங்கள் ஒரு ஆங்கிலேய கம்பெனிக்கு பணத்திற்காக விற்றுவிட்டதாகவும் அதன் மூலம். அவருடைய விமான வடிவமைப்பு ரைட்ஸ் சகோதர்களுக்கு சென்றிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

ரைட்ஸ் சகோதர்களின் விமானத்தின் முதல் சோதனை ஒட்டம் 1903ஆம் ஆண்டு டிசம்பர் மாததில் தான் நடைபெற்றது. அதுவும் அந்த விமானம் 13 நிமிடங்கள் மட்டுமே பறந்தன. ரைட்ஸ் சகோதர்கள் பறவை பறப்பதை முன்மாதிரியாக கொண்டு விமானத்தை உருவாக்கினர். 

ஆனால்,  தல்படே சூரிய ஆற்றல் மற்றும் பாதரசம் இணைந்த கொள்கையின்படி அதாவது, சூரிய ஆற்றலை கொண்டு பாதரசத்தை வெடிக்க செய்து அதன்முலம் கிடைக்கும் உந்துவிசையால் விமான என்ஜின் இயங்குமாறு வடிவமைத்து  முதல் சோதனை ஒட்டத்தை 1895ஆம் ஆண்டு வெற்றிகரமாக முடித்ததென்பது சிறப்பு தானே....
#ப்யாரீப்ரியன்..
~|இணையச்செய்திகளிலிருந்து|~~|

Saturday, 7 September 2019

சந்திராயன்-2

#சந்திரயான் 2 நம்பிக்கை..

சந்திரயான்-1 விண்கலத்திற்கு பின்னர் நிலவை ஆய்வு செய்வதற்காக ஏவப்பட்ட இந்தியாவின் இரண்டாவது விண்கலம்.
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தினால் (ISRO) வடிவமைக்கப்பட்ட இந்த விண்கலம் ஸ்ரீஹரிக்கோட்டா விண்வெளி மையத்திலிருந்து நிலாவை நோக்கி ஜி. எஸ். எல். வி மார்க்  ஏவுகலன் மூலம் ஏவப்பட்டது.

இவ்விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவப் பகுதியின் தரையில் இருந்து 2.1 கிமீ உயரத்தில் இருந்த போது, இஸ்ரோ தரைக் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது.

2.1 கிமீ உயரம் வரையிலும் விக்ரம் லேண்டர் முழுக் கட்டுப்பாட்டில் இருந்தது.அனைத்து சாதனங்களும் நன்றாக இயங்கின.

விக்ரம் லேண்டரை நிலவின் தென் துருவப் பகுதியில் தரை இறங்கச் செய்யும் அந்த கடைசி 3 நிமிடங்களில் மட்டுமே சிக்கல் ஏற்பட்டு இஸ்ரோவிற்கும் விக்ரம் லேண்டருக்குமான தொடர்பு  தடைபட்டு நிலைநிறுத்துவதில் தோல்வி உண்டாகி இருப்பதாக அறிகிறோம்..

#நம்பிக்கை

நிலவின் தென் துருவப் பகுதியில் விக்ரம் லேண்டர் கருவியை அப்படியே மோதச் செய்து தரை இறக்காமல் ஒரு ஏரோபிளேன் தரை இறங்குவது போல ஸ்மூத்தாக தரை இறக்க திட்டம் செய்யப்பட்டது.இதன் பெயர் Soft Landing.

இப்போது விக்ரம் லேண்டருக்கும் இஸ்ரோவிற்கும் இடையிலான சிக்னல் துண்டிக்கப்பட்டு இருப்பதால் Soft Landing மட்டுமே தான் நடக்காது.
ஆனால் நிலவின் ஈர்ப்பு விசை விக்ரம் லேண்டரை பிடித்து கீழே இழுத்து விடும்.
நிலவின் தென் துருவப் பகுதியின் தரையை விக்ரம் லேண்டர் கட்டாயம் தொட்டு விடும்.

பூமியின் ஈர்ப்பு விசையை விட நிலவின் ஈர்ப்பு விசை 6 மடங்கு குறைவு என்பதால் 2.1 கிமீ உயரத்தில் இருந்து கீழே விழுந்தாலும் அதற்குப் பெரிதாக பாதிப்பு இருக்க வாய்ப்பு இல்லை என்றே கணிக்கப்படுகிறது.

விக்ரம் லேண்டர் உள்ளே இருக்கும் பிரக்யான் ரோவர் உயிர்ப்போடு இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம்.

இதற்கு எல்லாம் மேலாக சந்திரயான் 2 விண்கலத்தில் இருக்கும் ஆர்பிட்டர் நிலவை தொடர்ந்து சுற்றி வரும்.95% பணிகளை இந்த ஆர்பிட்டர் செய்யும்.விக்ரம் லேண்டர் ஆயுட்காலம் 14 நாட்கள் தான்.ஆனால் ஆர்பிட்டர் ஆயுட்காலம் 1 வருடத்திற்கும் மேல்.

சந்திரயான்-2 நிலவின் தென் துருவப் பகுதியின் தரையை தொட்டு விட்டதே வெற்றி எனலாம்.

 இது வரை எந்த நாடுகளும் தரைஇறங்க முயற்சிக்காக நிலவின் தென்துருவத்தை தேர்ந்தெடுத்தோம் ?????

இது வரை அமெரிக்கா,ரஷியா,சீனா  போன்ற எந்த நாடுகளும் தென் துருவத்தில் தரை இறங்க முயற்சிக்கவில்லை ஏன் என்றால் அது மிகவும் கடினமான பகுதி. தென் துருவப் பகுதி பூமத்திய ரேகையிலிருந்து வெகு தொலைவில் உள்ளது, இது இப்போது வரை முற்றிலும் அறியப்படாதது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, அதைச் சுற்றியுள்ள நிரந்தரமாக நிழலாடிய பகுதிகளில் நீர் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. சந்திரனின் தென் துருவத்தில் உள்ள பரப்பளவு நிழலில் உள்ளது, இது அதன் வட துருவத்தை விட மிகப் பெரியது, எனவே நீர் மற்றும் தாதுக்கள் இருப்பதை எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரோவின் கூற்றுப்படி, சந்திரனின் தென் துருவப் பகுதியில் குளிர் பொறிகளாக இருக்கும் பள்ளங்கள் உள்ளன மற்றும் ஆரம்பகால சூரிய மண்டலத்தின் புதைபடிவ பதிவுகளைக் கொண்டுள்ளன. பில்லியன் கணக்கான ஆண்டுகளில் இருந்து, சந்திரனின் தென் துருவத்தின் பள்ளங்கள் சூரிய ஒளியால் தீண்டத்தகாதவை, இது சலனமற்ற சூரிய மண்டலத்தின் தோற்றம் பற்றிய பதிவுகளைக் கொண்டுள்ளது. நிழலாடிய பள்ளங்கள் கிட்டத்தட்ட 100 மில்லியன் டன் தண்ணீரை வைத்திருக்கக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் அதன் பாறைப்படிவுகள் ஹைட்ரஜன், அம்மோனியா, மீத்தேன், சோடியம், மெர்குரி மற்றும் சில்வர் ஆகியவற்றின் தடயங்கள் உள்ளன, இது அத்தியாவசிய வளங்களின் பயன்படுத்தப்படாத ஆதாரமாக அமைகிறது. இஸ்ரோவின் கூற்றுப்படி, அதன் அடிப்படை மற்றும் நிலை நன்மைகள் எதிர்கால விண்வெளி ஆய்வுக்கு பொருத்தமான குழி நிறுத்தமாக அமைகின்றன.இதற்காக தான் இந்தியா மற்ற நாடுகளை போல் எளிதாக தன் விண்கலத்தை தரையிறங்க முடியும் நிலவின் பூமத்திய ரேகை பகுதியை தேர்ந்தெடுக்காமல் இது மிகவும் கடினமான முயற்சி என தெரிந்துமே இதில் அமெரிக்கா,ரஷ்யா,சீனா வரிசையில் நான்கோடு ஒன்றாக தன் பெயரை சேர்ப்பதற்கு முயலாமல் தனித்துவமாக தன் பாதையை வகுத்தது.இதில் ரிஸ்க் மற்றும் சாத்தியக்கூறுகள் மிகவும் கடினம் எனத் தெரிந்தும் 2.1 கிலோ மீட்டர் வரை நிலவின் தென் துருவத்தின்  அருகில் வந்தது இங்கு தோல்வி அல்ல பெரும் வெற்றிக்கான முதல்படி.
இது நம் நாட்டின் தனித்துவமான முயற்சிக்கு கிடைத்த வெற்றிக்கனியே.அதனால் உங்கள் குழந்தைகளிடம் சந்திராயன்-2 விண்கலம் நிலவில் தரையிறங்கவில்லை என்று எதிர்மறையாக சொல்லாமல்  நாம் உலகில் எந்த நாடும்  முயற்சிக்க தயங்கிய நிலவின் தென் துருவத்தில்  2.1 கிலோ மீட்டர்  உயரம் அருகில் வரை அடைந்து விட்டோம் என பெருமிதத்துடன் சொல்லுவோம்.இதற்காக கடுமையாக  உழைத்த அத்தனை விஞ்ஞானிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவருக்கும் எங்கள் இந்திய மக்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்.