கோவில் பற்றிய சில #விவரம்.
அத்திமுகம் ஸ்ரீ காமாக்ஷி அம்மை உடனுறை ஸ்ரீ ஐராவதேஸ்வர பெருமான் திருக்கோயில்.
சுவாமி: ஐராவதேஸ்வரர்
அழகிய சோழீஸ்வரர்
அம்பாள்: காமாக்ஷி அம்மை
அகிலாண்டவல்லி தாயார்
விருட்சம்: 1800 வருடங்கள் பழமையானது என்று சொல்லப்படும் மிக பிரமாண்டமான வில்வ மரம்.
தீர்த்தம்: அகத்திய நதி
காலம்: சுயம்பு லிங்க பெருமான் த்ரேதா யுகத்தில் தோன்றியதாக செவி வழி வரலாறு தெரிவிக்கின்றது. அழகிய சோழீஸ்வரர் ஆலயம் 7ம் நூற்றாண்டில் கட்ட பட்டது.
இடம்: அத்திமுகம் கிராமம் ,பேரிகை தாலுக்கா,கிருஷ்ணகிரி மாவட்டம். ஓசூரில் இருந்தும் சூளகிரியில் இருந்தும் பேருந்துகள் அத்திமுகத்திற்கு செல்கின்றன.
ஸ்தல வரலாறு: த்ரேதா யுகத்தில் இந்திரன் விருத்திராசுரனை கொன்று அழிக்க அவருக்கும் அவரது யானை ஐராவத்திற்கும் ப்ரம்மஹத்தி தோஷம் பிடிக்கின்றது. அந்த தோஷம் தொலைய இருவரும் வழிபட்டு ப்ரம்மஹத்தி நீங்க பெற்ற ஸ்தலம். ஐராவதத்தின் பக்தியை மெச்சி,சுவாமி சுயம்புவில் யானை முகத்தை பொரித்ததோடு லிங்கத்திற்கு ஐராவதேஸ்வர் என்று பெயரும் இட்டார்.
ஸ்தலத்தின் சிறப்புகள்:
இரட்டை மூலவர் சந்நிதி. சுயம்பு லிங்கம் யானை முகத்தோடு விளங்குகிறார். அதே கருவறையில் அம்மையும் வீற்றிருக்கின்றார். நந்தி விலகிய ஸ்தலம். மிக பெரிய பஞ்ச லிங்க சந்நிதி . கோட்டை கோயில். நவ கிரஹங்கள் யோக நிலையில் அமைதியாய் வீற்றிருக்கும் அதிசயம் . பல நூறு ஆண்டு காலம் தண்ணீருக்குள்ளும் மண்ணுக்குள்ளும் புதைந்து கிடந்த கோயில். தற்போது தான் வெளி உலகிற்கு தெரிய ஆரம்பித்திருக்கிறது.
ஸ்வாமி காமாக்ஷி அம்மையுடன் தம்பதி சமேதராக சிவ சக்தியாக ஒரே கருவறையில் அருள் பாலித்து வருவதால் களத்திர தோஷம்,திருமண தடை,கணவன் மனைவி இடையே ஒற்றுமை குறைவு போன்ற பிரச்சனைகள் நீங்குகிறது.
இக பர சுகங்கள் வேண்டுவோர் இந்திரன் வழிபட்ட ஸ்தலங்களில் வழிபடு செய்வர். அந்த வகையில் இந்திரன் வழிபட்ட லிங்கம்,அதுவும் தோஷங்களில் தலையாய ப்ரம்மஹத்தி தோஷம் நீக்க பெற்ற ஸ்தலம்...
ப்யாரீப்ரியன்..+918124481600 ஓசூர்
No comments:
Post a Comment