Wednesday, 9 November 2016

கடலூர் விருத்தாச்சலம் அருகே பல நூற்றாண்டு பழமை வாய்ந்த சமணசிற்பம்

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே, 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய, சமண தீர்த்தங்கரர் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி கல்வெட்டு ஆய்வாளர் தமிழரசன் மற்றும் புதுப்பேட்டை கோவிந்தன் ஆகியோர், விருத்தாசலத்தை அடுத்த, 11 கி.மீ., தூரத்தில் முகாசபரூரில் உள்ள, பெருமாள் கோவிலின் சுற்றுப் பகுதியில் ஆய்வு செய்தனர்.

அப்போது, தனியாருக்குச் சொந்தமான நிலத்தில், கி.பி.,10ம் நூற்றாண்டைச் சேர்ந்த, சமண தீர்த்தங்கரரின் சிற்பத்தை கண்டு பிடித்தனர்.

இது பற்றி தமிழரசன் கூறியதாவது:

இச்சிலையை இப்பகுதி மக்கள் புத்தர் சிலை என்று கூறியும், நம்பியும் வந்துள்ளனர். ஆனால், இது தீர்த்தங் கரர் சிலை என கண்டறியப்பட்டுள் ளது. பலகைக் கல்லில் புடைப்பு சிற்ப மாக செதுக்கப்பட்டுள்ள இச்சிற்பம், 120 செ.மீ., உயரமும், 92 செ.மீ., அகல மும் கொண்டது. மூக்கும், வாய்ப் பகுதி யும் சிதைந்துள்ளன.

தீர்த்தங்கரர்களில், 24 பேர் உள்ளனர். இவர்களின் பெயர்களை அறிந்து கொள்ள சிற்பங்களின் கீழ் அவரவர்களுக்கு உரிய சின்னங்கள் இடம் பெற்றி ருக்கும்.

ஆனால், இச்சிற்பத்தில் அடையாளக் குறிகள் எதுவும் தென்படவில்லை. பீடத்தின் மீது அமர்ந்துள்ளதாகவே படைக்கப் பட்டுள்ளது. தலைக்கு மேல் இருந்த முக்குடையும், கலசமும் உடைந்துள் ளன. முக்குடையை அலங்கரிப்பது போன்று, வளைவான அசோக மரக் கிளையில் இலைகளும், மலர்களும் காணப்படுகின்றன.

தீர்த்தங்கரரின் இருபுறங்களிலும், இருவர், கவரி என்ற சாமரங்களை வீசுவது போன்றும், அதற்கு மேல் புறத்தில் இரண்டு பேர் கற்பக மலர் களை தூவுவது போன்றும் காணப் படுகிறது. தீர்த்தங்கரரின் தலைக்கு மேல் ஒளிவட்ட வடிவமாக பிரபை காணப்படுகிறது. தியான நிலையில் அமர்ந்து அறத்தை போதிப்பதாகக் காணப்படும் இச்சிற்பம், கி.பி.10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.

இச்சிற்பத்தின் பீடத்தின் கீழ் தரைப் பகுதியில், எருமைத் தலை போன்று சிதைந்து காணப்படுவதால், 12ஆம் தீர்த்தங்கரரான வாசு பூஜ்யராக இருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே, இங்கு இருந்த சமணர் கோவில் அழிந்து, அக்கோவில் கருவறையில் இருந்த சிற்பம் மட்டுமே தற்போது எஞ்சியுள்ளது தெரிய வருகிறது.

எஞ்சியுள்ள இந்தச் சிற்பம் அழியாமலும் அல்லது திருடப்படா மலும் இருக்க, அரசு தொல்லியல் துறையினரால் காக்கப்பட வேண்டும்.

இவ்வாறு கல்வெட்டு ஆய்வாளர் தமிழ ரசன் கூறினார்.
#ப்யாரீப்ரியன்

Tuesday, 8 November 2016

HERITAGE WALK @ HOSUR ..சமண மரபுநடைப் பயணம்

ஓசூரில்  மரபுநடைப்பயணம்..
நம்மை சுற்றியிருக்கிற வரலாற்று சின்னங்களையும்,
வரலாற்று தடயங்களையும், அழிவின் விளிம்பிலிருந்து
காப்பாற்றி ,பாதுகாக்கவும், ஆவணப்படுத்தவும்,
பள்ளிமாணவர்கள், பொதுமக்கள், வரலாற்று ஆர்வலர், என அனைவரிடமும் வரலாற்றின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் பொருட்டு அனைவரையும் ஒன்றிணைத்து
மரபு நடையை (Heritage Walk) மேற்கொள்ள இருக்கிறோம்.
இந்த #மரபுநடையை (Heritage Walk) அறம் இலக்கிய அமைப்பும் (ARAM FOUNDATION) மற்றும் ஒசூர் மக்கள் சங்கமும் (THE PEOPLES SOCIETY OF HOSUR) இணைந்து நடத்தயிருக்கிறோம்..
நமது #முதல்_பயணமாக ஒசூரில் சமண மரபு நடை மேற்கொள்கிறோம்.
பயணத்தின் போது பார்க்க போகும் இடங்கள்
ஒசூர் அலசநத்தம் அருகில் இருக்கும் #ஸ்ரீவெங்கடபெருமாள் கோவிலில் இருக்கும் மூன்று சமண சிற்பங்கள் , மூன்று சமண கல்வெட்டுகள், #சந்திரசூடேஸ்வரர்_கோயிலின் அடிவாரத்தில் இருக்கும் சமணப்படுகை, சமண பள்ளி, மேலும், ஸ்ரீவெங்கபெருமாள் கோயிலை ஒட்டியுள்ள நீர் சுனை, ஆகிய வரலாற்று தடயங்களை
பார்க்க இருக்கிறோம்...
#தொடங்கப்படும்_இடம் ;ஆர்.வி.அரசு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி , ஓசூர்.
தொடங்கும் நேரம்;காலை:7.30 மணி
முடிவடையும் நேரம்; காலை:11.30 மணி
#பயணவழி -அ.ஆ.மே நி .பள்ளி -தேர்பேட்டை-சந்திரசூடேஸ்வரர் கோயிலின் அடிவாரத்தில் இருக்கும் சமண படுகை(குகை)-வெங்கடபெருமாள் கோவிலில் இருக்கும் மூன்று சமண சிற்பங்கள் , மூன்று சமண கல்வெட்டுகள்,-வெங்கடபெருமாள் கோயிலை ஒட்டியுள்ள நீர் சுனை
காலை -9 மணிக்கு #காலைஉணவு_வழங்கப்படும்
அனைவரும் வருக..வருக..
வாருங்கள்
வரலாற்றை #வாசிப்பதற்கும்
வரலாற்றை #நேசிப்பதற்கும்

தொடர்புக்கு
#அறம் கிருஷ்ணன்-9578468122 நிறுவனர்; அறம் அமைப்பு& கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆர்வலர்கள்

இராசு-அறம் அமைப்பு செயலாளர் -9443598816

பிரசாத் TPSOH  ஓசூர் மக்கள் சங்கம்- 9894755315

ப்யாரீப்ரியன் -அறம் இலக்கிய அமைப்பு & கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆர்வலர் குழு ஒருங்கிணைப்பாளர் -8124481600  ,   9444975473

சுவாதி சரவணன் ..ஓ.ம.ச TPSOH -9894156802

மஞ்சுநாத்-அறம் -9750980795

ஜெகன் -ஓ.ம.ச TPSOH -9787357054

சிவகுமார் -அறம் அ்மைப்பு. -9686015935

தங்கள் மேலான வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கும்
அறம் இலக்கிய அமைப்பின் அங்கமான கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆர்வலர்கள்

Tuesday, 1 November 2016

அத்திமுகம் ஐராதீ்ஸ்வரர் திருக்கோவில்@ஓசூர்

கோவில் பற்றிய சில #விவரம்.
அத்திமுகம் ஸ்ரீ காமாக்ஷி அம்மை உடனுறை ஸ்ரீ ஐராவதேஸ்வர பெருமான் திருக்கோயில்.
சுவாமி: ஐராவதேஸ்வரர்
அழகிய சோழீஸ்வரர்
அம்பாள்: காமாக்ஷி அம்மை
அகிலாண்டவல்லி தாயார்
விருட்சம்: 1800 வருடங்கள் பழமையானது என்று சொல்லப்படும் மிக பிரமாண்டமான வில்வ மரம்.
தீர்த்தம்: அகத்திய நதி
காலம்: சுயம்பு லிங்க பெருமான் த்ரேதா யுகத்தில் தோன்றியதாக செவி வழி வரலாறு தெரிவிக்கின்றது. அழகிய சோழீஸ்வரர் ஆலயம் 7ம் நூற்றாண்டில் கட்ட பட்டது.
இடம்: அத்திமுகம் கிராமம் ,பேரிகை தாலுக்கா,கிருஷ்ணகிரி மாவட்டம். ஓசூரில் இருந்தும் சூளகிரியில் இருந்தும் பேருந்துகள் அத்திமுகத்திற்கு செல்கின்றன.
ஸ்தல வரலாறு: த்ரேதா யுகத்தில் இந்திரன் விருத்திராசுரனை கொன்று அழிக்க அவருக்கும் அவரது யானை ஐராவத்திற்கும் ப்ரம்மஹத்தி தோஷம் பிடிக்கின்றது. அந்த தோஷம் தொலைய இருவரும் வழிபட்டு ப்ரம்மஹத்தி நீங்க பெற்ற ஸ்தலம். ஐராவதத்தின் பக்தியை மெச்சி,சுவாமி சுயம்புவில் யானை முகத்தை பொரித்ததோடு லிங்கத்திற்கு ஐராவதேஸ்வர் என்று பெயரும் இட்டார்.
ஸ்தலத்தின் சிறப்புகள்:
இரட்டை மூலவர் சந்நிதி. சுயம்பு லிங்கம் யானை முகத்தோடு விளங்குகிறார். அதே கருவறையில் அம்மையும் வீற்றிருக்கின்றார். நந்தி விலகிய ஸ்தலம். மிக பெரிய பஞ்ச லிங்க சந்நிதி . கோட்டை கோயில். நவ கிரஹங்கள் யோக நிலையில் அமைதியாய் வீற்றிருக்கும் அதிசயம் . பல நூறு ஆண்டு காலம் தண்ணீருக்குள்ளும் மண்ணுக்குள்ளும் புதைந்து கிடந்த கோயில். தற்போது தான் வெளி உலகிற்கு தெரிய ஆரம்பித்திருக்கிறது.
ஸ்வாமி காமாக்ஷி அம்மையுடன் தம்பதி சமேதராக சிவ சக்தியாக ஒரே கருவறையில் அருள் பாலித்து வருவதால் களத்திர தோஷம்,திருமண தடை,கணவன் மனைவி இடையே ஒற்றுமை குறைவு போன்ற பிரச்சனைகள் நீங்குகிறது.
இக பர சுகங்கள் வேண்டுவோர் இந்திரன் வழிபட்ட ஸ்தலங்களில் வழிபடு செய்வர். அந்த வகையில் இந்திரன் வழிபட்ட லிங்கம்,அதுவும் தோஷங்களில் தலையாய ப்ரம்மஹத்தி தோஷம் நீக்க பெற்ற ஸ்தலம்...

ப்யாரீப்ரியன்..+918124481600 ஓசூர்