#தொகுதி அறிமுகம்
#ஒசூர்
தொகுதி எண்: 55
சிறப்புகள்:
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சேலம் ஜில்லாவின் தலைநகராகத் திகழ்ந்த பெருமையுடையது ஒசூர் நகராகும்.
ஆசியாவிலேயே மிகப் பெரிய #கால்நடைப்பண்ணை மத்திகிரியில் அமைந்துள்ளது.
ஒசூர் அருகே உள்ள தொரப்பள்ளி அக்ரஹாரத்தில் மூதறிஞர் ராஜாஜி பிறந்தார் என்பது சிறப்பாகும்.
தமிழக-கர்நாடக மாநில எல்லையில் உள்ள ஒசூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தமிழ், கன்னடம், தெலுங்கு, உருது என பன்மொழி பேசும் வாக்காளர்கள் நிறைந்துள்ளனர்.
சுமார் 100-க்கும் மேற்பட்ட பெரிய தொழிற்சாலைகளும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறுந்தொழில்சாலைகள் இத் தொகுதியில் உள்ளன. இதனால் வெளி மாவட்டங்களில் இருந்துவந்து குடியேறிய வாக்காளர்கள் 50 சதவீதம் பேர் உள்ளனர்.
கடந்த 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரை இந்த தொகுதியில் ஒசூர் மற்றும் சூளகிரி ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட கிராமப் பகுதிகள் இடம்பெற்றிருந்தன.
இதனால், ஒசூர் தொகுதி மாவட்டத்திலேயே மிகப் பெரிய சட்டப்பேரவைத் தொகுதியாக விளங்கியது. ஆனால், கடந்த 2011 ஆம் ஆண்டில் தொகுதி சீரமைப்பில் சூளகிரி ஊராட்சி ஒன்றியப் பகுதிகள் புதிதாக உருவாக்கப்பட்ட வேப்பனப்பள்ளி தொகுதியில் சேர்க்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதி ஒசூர்.
இந்தத் தொகுதியானது, 1951 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது முதல் தேசியக் கட்சிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
அதிகபட்சமாக 9 முறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. 2 முறை சுதந்திரா கட்சியும், ஒருமுறை ஜனதா தளமும், 2 முறை சுயேச்சை வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர்.#முதன்முறையாக 2016 ல் #அதிமுக சார்பில் பாலகிருஷ்ணா ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டு #கால்நடைத்துறை_அமைச்சராக பதவியேற்றுள்ளார்...
இத் தொகுதியைப் பொருத்தவரையில் ரெட்டி, கவுடா, நாயுடு, வன்னியர், தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளிட்ட சமுதாய மக்கள் பரவலாக உள்ளனர். மேலும், முஸ்லிம் சமுதாய மக்களும் அதிக அளவில் உள்ளனர்.
கேரளம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இதனால் ஒசூர் தொகுதியில் வெற்றிவாய்ப்பை நிர்ணயிப்பதில் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில மக்களின் ஓட்டுகளின் பங்கு முக்கிய இடம் வகிக்கிறது.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்:
ஒசூர் நகராட்சி: ------------------------------: 45 வார்டுகள்
ஒசூர் ஊராட்சி ஒன்றியம்
26 ஊராட்சிகள்
வாக்காளர்கள்:
மொத்த வாக்காளர்கள் : 2,96,779
ஆண் வாக்காளர்கள் : 1,53,794
பெண் வாக்காளர்கள் : 1,42,934
திருநங்கை வாக்காளர்கள்: 51
வாக்குச்சாவடிகள்: 342
இதுவரை எம்.எல்.ஏ.க்கள்....
1952 முனி ரெட்டி- சுயேச்சை
1957 அப்பாவு பிள்ளை- சுயேச்சை
1962 ராமச்சந்திர ரெட்டி- காங்கிரஸ்
1967 வெங்கடசாமி- சுதந்திரா கட்சி
1971 வெங்கடசாமி- சுதந்திரா கட்சி
1977 ராமச்சந்திர ரெட்டி- காங்கிரஸ்
1980 வெங்கட் ரெட்டி- காங்கிரஸ்
1984 வெங்கட் ரெட்டி- காங்கிரஸ்
1989 ராமச்சந்திர ரெட்டி -காங்கிரஸ்
1991 கே.ஏ.மனோகரன் -காங்கிரஸ்
1996 வெங்கடசாமி -ஜனதா தளம்
2001 கே.கோபிநாத் -காங்கிரஸ்
2006 கே.கோபிநாத்- காங்கிரஸ்
2011 கே.கோபிநாத்- காங்கிரஸ்
2016
பாலகிருஷ்ணாரெட்டி - அதிமுக
தகவல்;ப்யாரீப்ரியன்@ pyaree priyan...ஓசூர்
+918124481600
No comments:
Post a Comment