Sunday, 25 December 2016

தாஜ்மஹாலின் இருண்ட பக்கங்கள்-வெளிவராத மர்மங்கள்..!

முகலாயமன்னர் ஷாஜகானால் தனது காதல் மனைவி மும்தாஜ் நினைவாக கட்டபட்ட சமாதிதான் தற்போதைய உலக அதிசயங்களில் ஒன்றான ''தாஜ்மஹால்'' என்று வரலாறு தெரிவிக்கிறது.
ஆனால் தாஜ்மஹால் என்பது ''தேஜாமஹாலயா'' என்றழைக்கப்பட்ட பழைய சிவன் கோவில்தான் என்கிற புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

தாஜ்மஹால் குறித்து தகவல்கள் அனைத்தும் உலகை ஏமாற்றியுள்ளது. தாஜ்மஹால் மும்தாஜின் சமாதி அல்ல அது புராதான சிவன்கோயில் என்று ஆதாரங்களுடன் கூறுகிறார் இந்தியாவின் வடமாநில வரலாற்று பேராசிரியர் பி.என்.ஓக்.

முன்பு ''தேஜாமஹாலயா'' என்கிற பெயரால் தாஜ்மஹால் அழைக்கப்பட்டுவந்தது என்று அவர் தெரிவிக்கிறார், ஜெய்ப்பூர் ராஜா ஜெய்சிங்குக்கு சொந்தமாக இருந்த சிவாலயத்தை ஷாஜகான் மன்னர் பிடுங்கிக்கொண்டார் என்றும் ஷாஜகான் மன்னரின் சொந்த வாழ்க்கை குறிப்பான ''பாத்ஷாநாமாவில்'',ஆக்ராவில் மிகவும் அழகான மாளிகையை மும்தாஜின் உடலை அடக்கம் செய்கின்றமைக்கு தேர்தெடுத்தது குறித்து குறிப்புகள் உள்ளன என்றும் பேராசிரியர் கூறியுள்ளார்.

இந்தியாவின் வடமாநில வரலாற்று பேராசிரியர் பி.என்.ஓக்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgt-XI7CwfSQIPW0B8nmat16r6V7EUW3YZlQGWMvAMOJDirpystOou1MXzv2M20rN42Kmmq42dQ5A29OlUL-VVZ7JAVqOTV_VuAtDDjTrVVL7FRltcKk9Y50nWSkvMggvfPv8LEP4AcQGSl/s1600/P.n.oak_photo.jpg

பாத்ஷாநாமாவில் பழமையான தாஜ்மாஹாலை ஒப்படைக்க கேட்டு மன்னர் ஷாஜகான், ஜெய்ப்பூர் மன்னர் ஜெய்சிங்கிற்கு ஆணை பிறப்பித்து உள்ள ஆவணம்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5eUC0KiPUXAemFMkOPoUiQVChNNCEyKAbycf2KDsfnJeBtsafDUX1vDl1sKHqV3UxCMiZ-E3ihf28b-9E-KdEafQhV2DCvNpf4duqxK9GgNl3-hUFDhE8-xiUOgY8p5uB-rzgVBnUYgQH/s1600/tmm+page+of+badsha+namah.jpg

ஆதியில் சிவன்கோயிலாக இருந்ததை கையளிக்கச் சொல்லி ஷாஜகான் மன்னரால் ஜெய்சிங் ராஜாவிற்கு அனுப்பட்ட இரு ஆணைகள் இன்னும் பத்திரமாகவே உள்ளன என்றும்,கைப்பற்றி கொள்கின்ற கோயில்கள், மாளிகைகள் போன்றவற்றில் முகலாய மன்னர்கள் மற்றும் ராணிகளின் உடல்களைவழக்கமாக புதைத்து வந்துள்ளனர் . முகலாய மன்னர்கள் ஹிமாயூன், அக்பர், எத்மத்உத்தௌலா, சப்தர்ஜத் ஆகியோரின் உடல்கள் புதைக்கப்பட்ட இடங்களை இதற்கு சான்றாக காட்டுகிறார் அந்த பேராசிரியர்.

தாஜ்மஹால் என்ற பெயரை எடுத்துக்கொள்கிற போது ஆப்கானிஸ்தான் முதல் ஆல்ஜீரியா வரையான எந்தவொரு இஸ்லாமிய நாட்டிலும் ''மஹால்'' என்கிற பெயர் எந்த கட்டிடத்திற்கும் கிடையாது.மும்தாஜின் முழுபெயர் ''மும்தாஜ்உல்ஜமானி'' ஆகும். மும்தாஜின் நினைவாக ஷாஜகான் சமாதி கட்டியிருந்தார் என்றால் மும்தாஜ் என்ற பெயரில் இருந்து மும் என்பதை நீக்கிவிட்டு தாஜ் என்பதை மட்டும் நினைவுச்சின்னத்திற்கான பெயரில் ஏன் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று பேராசிரியர் பி.என்.ஓக் கேள்வியை எழுப்பியுள்ளார்.

தாஜ்மஹாலின் உண்மையான வரலாற்றை மறைத்திட பிற்காலத்தில் புனையப்பட்ட பெயர்தான் மும்தாஜ்- -ஷாஜகான் காதல் கதை என்கிறார் நியூயார்க்கை சேர்ந்த பேராசிரியர் மார்வின்மில்லர்.அவர்தான் தாஜ்மஹாலின் மாதிரிகளை எடுத்து கார்பன் டேட்டிங் முறையில் தாஜ்மஹாலின் ஆயுளை கணித்தவர். மில்லரின் கருத்துப்படி தாஜ்மஹால் வயது 300க்கும் மேல் இருக்கும்,இதையும் பேராசிரியர் ஓக் ஆதாரமாக சொல்கிறார். ஐரோப்பிய நாட்டு முதல் சுற்றுலாப் பயணியான அல்பர்ட் மாண்டேஸ்லா என்பவர் 1638ம் ஆண்டு அதாவது மும்தாஜ் இறந்து ஏழு ஆண்டுகளுக்கு பிறகு ஆக்ரா வந்திருந்தார், இவரது பயண குறிப்புகளில் ஆக்ரா பற்றி விரிவாக ஏழுதப்பட்டுள்ளது. ஆனால் தாஜ்மஹால் கட்டப்படுவது சம்பந்தமாக எந்த குறிப்புகளும் அதில் இடம் பெற்வில்லை.

அதே சமயம் மும்தாஜ் இறந்து ஒருவருடத்திற்குள் ஆங்கிலேய பயணியான பீட்டர்மாண்டி ஆக்ரா வந்திருந்தார்.இவரது பயணக்குறிப்புகளில் தாஜ்மஹாலின் கலை நயம் குறித்து விரிவாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் இன்று சொல்லப்படுகிற வரலாற்றில் மும்தாஜ் இறந்து 20 வருடத்திற்கு பிறகல்லவா தாஜ்மஹால் கட்டப்பட்டிருக்கிறது என இவற்றையும் ஆதாரங்களாக முன்வைக்கிறார் பேராசிரியர் ஓக்.

தாஜ்மஹாலின் பெரும் பகுதி பொதுமக்களுக்காக இன்றளவும் திறந்துவிடப்படவில்லை. இதற்கு காரணம் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்று கூறப்படுகிறது. தாஜ்மஹாலின் உள்ளே தலையில்லாத சிவன் சிலையும்,பூஜைக்கு பயன்படுத்துகிற பொருட்களும் இருக்கின்றன என்று அடித்து கூறும் பேராசிரியர் ஓக், தாஜ்மஹாலின் கட்டிடகலை நுட்பங்களை பார்க்கும் போது அனைத்தும் இது ஒரு இந்துகோயிலுக்கு குறியது என்பதில் சந்தேகமில்லை என்கிறார்.

இத்தனை விபரங்களையும் பேராசிரியர் ஓக் ''தாஜ்மஹால் உண்மையான வரலாறு'' என்ற தலைப்பில் புத்தகமாக எழுதி வெளியிட்டு இருக்கிறார். இதில் பல்வேறு சர்ச்சைகள் இருப்பதாக கூறி அரசியல் காரணங்களுக்காக இவரது புத்தகம் அன்றைய பாரதப்பிரதமர் இந்திராகாந்தி அரசால் தடைசெய்யப்பட்டது. தாஜ்மஹால் குறித்த உண்மைகள் வெளிவர வேண்டுமானால் ஐக்கியநாடுகள் சபையின் மேற்பார்வையில் சர்வதேச தொல்லியியல் நிபுணர்களை கொண்ட குழுவின் மூலமாக ஆய்வுகள் நடத்தப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார் பேராசிரியர் ஓக்.

இந்த சர்ச்சையை கிளப்பிய பேராசிரியர் ஓக் எனப்படும் புருசோத்தம் நாகேஷ்ஓக் 1917 ம் ஆண்டு மார்ச் 2 ம் தேதி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிறந்தவர்.தாஜ்மஹாலின் உண்மை வரலாறு உட்பட பல்வேறு ஆராய்ச்சி புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் கடந்த 2007 ம்ஆண்டு டிசம்பர் 4ம் தேதி மரணமடைந்தார். அப்போது அவருக்கு வயது 90.தாஜ்மஹால் குறித்த சர்ச்சையை கிளப்பிய பேராசிரியர் ஓக் மறைந்து விட்டாலும் சர்ச்சைகள் மட்டும் தொடர்ந்து கிளம்பிக்கொண்டுதான் இருக்கின்றன.தாஜ்மஹாலை நேரில் பார்த்திருக்கிறீர்களா?... பாருங்கள் உங்களுக்கு எந்த வயதாக இருந்தாலும் காதல் பற்றிக்கொள்ளும்.

Tuesday, 13 December 2016

கெலமங்கலம் சந்திரமௌலீஸ்வரர் கோவில்

கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆர்வலர்களின் களப்பயணம்(04-12-2016)
ஒசூர் அருகே #கெலமங்கலம் ஜி.பி பகுதியில் உள்ள #சந்திரமௌலீஸ்வரர் திருக்கோவிலின் இன்றைய நிலை..
ஹொய்சால ஆட்சியில் கட்டப்பட்டு விஜயநகர பேரரசால் பராமரிக்கப்பட்ட இக்கோவிலில் உள்ளே உள்ள தூண்களில் சிற்பங்கள் பல காணப்படுகின்றன
.#ப்யாரீப்ரியன்

Saturday, 3 December 2016

நிறம் மாறும் லிங்கங்கள்..முல்பாகல்,நல்லூர்

#விருப்பாஷீஸ்வரர்_திருக்கோயில் முல்பாகல் கர்நாடகா. 5000 வருட பழமையான லிங்க திருமேனி காலை,மதியம் மாலை என மூன்று நேரங்களிலும் #நிறம்_மாறும்_அதிசயம்.அம்பாளின் சந்நிதியில் ஸ்ரீ சக்ரத்தை ரிஷிகள் பிரதிஷ்டை செய்துள்ளார்.தமிழ்நா­ட்டில் #நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் திருமேனி 3 காலமும் நிறம் மாறும் என்று நமக்கு தெரியும். இங்கே #முல்பாகலிலும் அதே அதிசயத்தை காணலாம்.இந்த தீப கார்திகையின்போது சங்காபிஷேகமும் 1008 தீபமும் ஏற்றிட ஏற்பாடுகள் செய்ய பட்டுள்ளது.பக்தர்கள்­ தவறாமல் கலந்து கொண்டு ஸ்ரீ சக்ரத்தின் அதிர்வுகளையும் விருபாசீஸ்வரரின் அருளையும் பெற அழைக்கின்றோம்.

Wednesday, 9 November 2016

கடலூர் விருத்தாச்சலம் அருகே பல நூற்றாண்டு பழமை வாய்ந்த சமணசிற்பம்

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே, 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய, சமண தீர்த்தங்கரர் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி கல்வெட்டு ஆய்வாளர் தமிழரசன் மற்றும் புதுப்பேட்டை கோவிந்தன் ஆகியோர், விருத்தாசலத்தை அடுத்த, 11 கி.மீ., தூரத்தில் முகாசபரூரில் உள்ள, பெருமாள் கோவிலின் சுற்றுப் பகுதியில் ஆய்வு செய்தனர்.

அப்போது, தனியாருக்குச் சொந்தமான நிலத்தில், கி.பி.,10ம் நூற்றாண்டைச் சேர்ந்த, சமண தீர்த்தங்கரரின் சிற்பத்தை கண்டு பிடித்தனர்.

இது பற்றி தமிழரசன் கூறியதாவது:

இச்சிலையை இப்பகுதி மக்கள் புத்தர் சிலை என்று கூறியும், நம்பியும் வந்துள்ளனர். ஆனால், இது தீர்த்தங் கரர் சிலை என கண்டறியப்பட்டுள் ளது. பலகைக் கல்லில் புடைப்பு சிற்ப மாக செதுக்கப்பட்டுள்ள இச்சிற்பம், 120 செ.மீ., உயரமும், 92 செ.மீ., அகல மும் கொண்டது. மூக்கும், வாய்ப் பகுதி யும் சிதைந்துள்ளன.

தீர்த்தங்கரர்களில், 24 பேர் உள்ளனர். இவர்களின் பெயர்களை அறிந்து கொள்ள சிற்பங்களின் கீழ் அவரவர்களுக்கு உரிய சின்னங்கள் இடம் பெற்றி ருக்கும்.

ஆனால், இச்சிற்பத்தில் அடையாளக் குறிகள் எதுவும் தென்படவில்லை. பீடத்தின் மீது அமர்ந்துள்ளதாகவே படைக்கப் பட்டுள்ளது. தலைக்கு மேல் இருந்த முக்குடையும், கலசமும் உடைந்துள் ளன. முக்குடையை அலங்கரிப்பது போன்று, வளைவான அசோக மரக் கிளையில் இலைகளும், மலர்களும் காணப்படுகின்றன.

தீர்த்தங்கரரின் இருபுறங்களிலும், இருவர், கவரி என்ற சாமரங்களை வீசுவது போன்றும், அதற்கு மேல் புறத்தில் இரண்டு பேர் கற்பக மலர் களை தூவுவது போன்றும் காணப் படுகிறது. தீர்த்தங்கரரின் தலைக்கு மேல் ஒளிவட்ட வடிவமாக பிரபை காணப்படுகிறது. தியான நிலையில் அமர்ந்து அறத்தை போதிப்பதாகக் காணப்படும் இச்சிற்பம், கி.பி.10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.

இச்சிற்பத்தின் பீடத்தின் கீழ் தரைப் பகுதியில், எருமைத் தலை போன்று சிதைந்து காணப்படுவதால், 12ஆம் தீர்த்தங்கரரான வாசு பூஜ்யராக இருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே, இங்கு இருந்த சமணர் கோவில் அழிந்து, அக்கோவில் கருவறையில் இருந்த சிற்பம் மட்டுமே தற்போது எஞ்சியுள்ளது தெரிய வருகிறது.

எஞ்சியுள்ள இந்தச் சிற்பம் அழியாமலும் அல்லது திருடப்படா மலும் இருக்க, அரசு தொல்லியல் துறையினரால் காக்கப்பட வேண்டும்.

இவ்வாறு கல்வெட்டு ஆய்வாளர் தமிழ ரசன் கூறினார்.
#ப்யாரீப்ரியன்

Tuesday, 8 November 2016

HERITAGE WALK @ HOSUR ..சமண மரபுநடைப் பயணம்

ஓசூரில்  மரபுநடைப்பயணம்..
நம்மை சுற்றியிருக்கிற வரலாற்று சின்னங்களையும்,
வரலாற்று தடயங்களையும், அழிவின் விளிம்பிலிருந்து
காப்பாற்றி ,பாதுகாக்கவும், ஆவணப்படுத்தவும்,
பள்ளிமாணவர்கள், பொதுமக்கள், வரலாற்று ஆர்வலர், என அனைவரிடமும் வரலாற்றின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் பொருட்டு அனைவரையும் ஒன்றிணைத்து
மரபு நடையை (Heritage Walk) மேற்கொள்ள இருக்கிறோம்.
இந்த #மரபுநடையை (Heritage Walk) அறம் இலக்கிய அமைப்பும் (ARAM FOUNDATION) மற்றும் ஒசூர் மக்கள் சங்கமும் (THE PEOPLES SOCIETY OF HOSUR) இணைந்து நடத்தயிருக்கிறோம்..
நமது #முதல்_பயணமாக ஒசூரில் சமண மரபு நடை மேற்கொள்கிறோம்.
பயணத்தின் போது பார்க்க போகும் இடங்கள்
ஒசூர் அலசநத்தம் அருகில் இருக்கும் #ஸ்ரீவெங்கடபெருமாள் கோவிலில் இருக்கும் மூன்று சமண சிற்பங்கள் , மூன்று சமண கல்வெட்டுகள், #சந்திரசூடேஸ்வரர்_கோயிலின் அடிவாரத்தில் இருக்கும் சமணப்படுகை, சமண பள்ளி, மேலும், ஸ்ரீவெங்கபெருமாள் கோயிலை ஒட்டியுள்ள நீர் சுனை, ஆகிய வரலாற்று தடயங்களை
பார்க்க இருக்கிறோம்...
#தொடங்கப்படும்_இடம் ;ஆர்.வி.அரசு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி , ஓசூர்.
தொடங்கும் நேரம்;காலை:7.30 மணி
முடிவடையும் நேரம்; காலை:11.30 மணி
#பயணவழி -அ.ஆ.மே நி .பள்ளி -தேர்பேட்டை-சந்திரசூடேஸ்வரர் கோயிலின் அடிவாரத்தில் இருக்கும் சமண படுகை(குகை)-வெங்கடபெருமாள் கோவிலில் இருக்கும் மூன்று சமண சிற்பங்கள் , மூன்று சமண கல்வெட்டுகள்,-வெங்கடபெருமாள் கோயிலை ஒட்டியுள்ள நீர் சுனை
காலை -9 மணிக்கு #காலைஉணவு_வழங்கப்படும்
அனைவரும் வருக..வருக..
வாருங்கள்
வரலாற்றை #வாசிப்பதற்கும்
வரலாற்றை #நேசிப்பதற்கும்

தொடர்புக்கு
#அறம் கிருஷ்ணன்-9578468122 நிறுவனர்; அறம் அமைப்பு& கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆர்வலர்கள்

இராசு-அறம் அமைப்பு செயலாளர் -9443598816

பிரசாத் TPSOH  ஓசூர் மக்கள் சங்கம்- 9894755315

ப்யாரீப்ரியன் -அறம் இலக்கிய அமைப்பு & கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆர்வலர் குழு ஒருங்கிணைப்பாளர் -8124481600  ,   9444975473

சுவாதி சரவணன் ..ஓ.ம.ச TPSOH -9894156802

மஞ்சுநாத்-அறம் -9750980795

ஜெகன் -ஓ.ம.ச TPSOH -9787357054

சிவகுமார் -அறம் அ்மைப்பு. -9686015935

தங்கள் மேலான வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கும்
அறம் இலக்கிய அமைப்பின் அங்கமான கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆர்வலர்கள்

Tuesday, 1 November 2016

அத்திமுகம் ஐராதீ்ஸ்வரர் திருக்கோவில்@ஓசூர்

கோவில் பற்றிய சில #விவரம்.
அத்திமுகம் ஸ்ரீ காமாக்ஷி அம்மை உடனுறை ஸ்ரீ ஐராவதேஸ்வர பெருமான் திருக்கோயில்.
சுவாமி: ஐராவதேஸ்வரர்
அழகிய சோழீஸ்வரர்
அம்பாள்: காமாக்ஷி அம்மை
அகிலாண்டவல்லி தாயார்
விருட்சம்: 1800 வருடங்கள் பழமையானது என்று சொல்லப்படும் மிக பிரமாண்டமான வில்வ மரம்.
தீர்த்தம்: அகத்திய நதி
காலம்: சுயம்பு லிங்க பெருமான் த்ரேதா யுகத்தில் தோன்றியதாக செவி வழி வரலாறு தெரிவிக்கின்றது. அழகிய சோழீஸ்வரர் ஆலயம் 7ம் நூற்றாண்டில் கட்ட பட்டது.
இடம்: அத்திமுகம் கிராமம் ,பேரிகை தாலுக்கா,கிருஷ்ணகிரி மாவட்டம். ஓசூரில் இருந்தும் சூளகிரியில் இருந்தும் பேருந்துகள் அத்திமுகத்திற்கு செல்கின்றன.
ஸ்தல வரலாறு: த்ரேதா யுகத்தில் இந்திரன் விருத்திராசுரனை கொன்று அழிக்க அவருக்கும் அவரது யானை ஐராவத்திற்கும் ப்ரம்மஹத்தி தோஷம் பிடிக்கின்றது. அந்த தோஷம் தொலைய இருவரும் வழிபட்டு ப்ரம்மஹத்தி நீங்க பெற்ற ஸ்தலம். ஐராவதத்தின் பக்தியை மெச்சி,சுவாமி சுயம்புவில் யானை முகத்தை பொரித்ததோடு லிங்கத்திற்கு ஐராவதேஸ்வர் என்று பெயரும் இட்டார்.
ஸ்தலத்தின் சிறப்புகள்:
இரட்டை மூலவர் சந்நிதி. சுயம்பு லிங்கம் யானை முகத்தோடு விளங்குகிறார். அதே கருவறையில் அம்மையும் வீற்றிருக்கின்றார். நந்தி விலகிய ஸ்தலம். மிக பெரிய பஞ்ச லிங்க சந்நிதி . கோட்டை கோயில். நவ கிரஹங்கள் யோக நிலையில் அமைதியாய் வீற்றிருக்கும் அதிசயம் . பல நூறு ஆண்டு காலம் தண்ணீருக்குள்ளும் மண்ணுக்குள்ளும் புதைந்து கிடந்த கோயில். தற்போது தான் வெளி உலகிற்கு தெரிய ஆரம்பித்திருக்கிறது.
ஸ்வாமி காமாக்ஷி அம்மையுடன் தம்பதி சமேதராக சிவ சக்தியாக ஒரே கருவறையில் அருள் பாலித்து வருவதால் களத்திர தோஷம்,திருமண தடை,கணவன் மனைவி இடையே ஒற்றுமை குறைவு போன்ற பிரச்சனைகள் நீங்குகிறது.
இக பர சுகங்கள் வேண்டுவோர் இந்திரன் வழிபட்ட ஸ்தலங்களில் வழிபடு செய்வர். அந்த வகையில் இந்திரன் வழிபட்ட லிங்கம்,அதுவும் தோஷங்களில் தலையாய ப்ரம்மஹத்தி தோஷம் நீக்க பெற்ற ஸ்தலம்...

ப்யாரீப்ரியன்..+918124481600 ஓசூர்

Monday, 31 October 2016

நாணய தீப வழிபாடு...

காரியம் கைகூட வைக்கும் பரிகாரம் :
ப்யாரீப்ரியன் ஆன்மீக பகிர்வு..
ஒரு கப்புல (கொஞ்சம் பெரிசாய் இருக்கட்டும்) 101 ரூபாய்ல இருந்து 501 ரூபாய் வரை... காசாப் போடுங்க. அதாவது, ஒரே மாதிரி நாணயமாய் இருக்கணும். ஒரு ரூபாய்னா, ஒரே மாதிரி காசாய் இருக்கணும். ஒண்ணு சின்னது, ஒண்ணு பெரிசுன்னு இருக்கக்கூடாது.
நூத்தி ஒண்ணோ, ஐநூத்தி ஒண்ணோ காசைப் போட்டு, அதுமேல விளக்கை வைச்சு, தீபம் ஏத்திட்டு வாங்க. ஒரு முகமோ, ஐந்து முகமோ அது உங்க இஷ்டம். இப்படி கிழக்கு பார்த்து, தீபம் ஏத்திட்டு வாங்க. வீட்டுல, தேவைக்கு எப்பவும் தட்டுப்பாடு வராது. அது நிச்சயம்!
முக்கியமான விஷயம்; மாசக் கடைசின்னு சொல்லி, ‘கப்’புல போட்ட காசுல கை வைக்கக்கூடாது.
இன்னொரு காரியமும் செய்யலாம். காசு வைச்சிருக்கிற கப்புக்கு மேல ஒரு தட்டை வைங்க. அந்தத் தட்டு மேல, ஒரு பேப்பர்ல - உங்களோட விருப்பம் என்ன? என்ன நடக்கணும்னு நினைக்கிறீங்க? - அதையும் எழுதி, அந்தப் பேப்பரை மடிச்சு வைச்சு, அதுக்கு மேல விளக்கை வைச்சு, தீபத்தை ஏத்திட்டு வாங்க. காரியம் கைகூடும். முக்கியமான விஷயம்; அந்தப் பேப்பரோட, ஒரு வெற்றிலையையும் வைக்கணும்.
‘வெற்றிலை வாடிடுமே; அழுகிடுமே’ன்னு கவலையா? வெத்திலையை மாத்திக்கலாம். தப்பில்லை. சரியா?
இது இல்லாம, இன்னொரு விஷயமும் செய்யலாம். ஒரே மாதிரி காசாய் போட்டு, விளக்கு ஏத்தினமாதிரி, ஒரே மாதிரி காசாய் வைச்சு மாலை செய்யலாம். எப்படி? இப்பதான், ஒட்டறதுக்கு டேப் கிடைக்கறதே. அந்த டேப்ல, 101, 501னு எது முடியுமோ, அந்த காசை ஒட்டி, அம்பாளுக்கு வீட்டுலயே மாலையாய்ப் போட்டு வழிபடலாம். இதெல்லாம், நமக்கு நாமே செய்துக்கக்கூடிய - பலன் தரக் கூடிய - காரியங்கள்!
எங்களுக்கு ஸ்லோகம் சொல்லத் தெரியும்; மந்திரம் ஏதாவது சொல்லலாமான்னு கேட்கறீங்களா? உங்களுக்கானது இது:
ஸ்ரீதேவி: அம்ருதோத்
பூதாகமலா சந்திரசோபனா
விஷ்ணுபத்னீ வைஷ்ணவீ ச
வராரோஹாச சார்ங்கிணீ
ஹரிப்ரியா தேவதேவி
மஹாலக்ஷ்மி ச சுந்தரி
இதை தினம் காலையில விளக்கேத்தி 10 தடவை சொல்லுங்க.
வெள்ளிக்கிழமை சாயந்திரம் விளக்கேத்தி, முடிஞ்சவரை சொல்லுங்க.
108 தடவை சொல்வதற்கு முன்பாக. முடிஞ்சா, விளக்குலயே லக்ஷ்மி பூஜையும் பண்ணுங்க. சுபிட்சம் வசப்படும். வேலை கிடைக்கலைன்னு வருத்தப் படறவங்களுக்கு, கண்டிப்பா வேலை கிடைக்கும்.
மந்திரம் வேணுமா சரி;
ஓம் ஹ்ரீம் பத்மே ஸ்வாஹா (இல்லேன்னா) ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நம;
இந்த ரெண்டுல எதை வேணா நம்பிக்கையோட ஜபம் பண்ணலாம்.
ஒரு முக்கியமான விஷயம்: மந்திரத்தை ஜபம் பண்ணும்போது, மனசும், புத்தியும் அதிலேயேலயிச்சு இருக்கணும். அப்பதான் பலன் கிடைக்கும்.
#ப்யாரீப்ரியன் ஆன்மீகப் பதிவு தொகுப்பிலிருந்து...

நாய்கள் இனம் அழியும் அபாயம்...

நம் தாயகமான இந்தியாவில் 88 நாய் இனங்கள் இருந்தன, அதில் அதிகமான இன நாய்கள் #அழிந்து_விட்டன. இதில் தற்பொழுது மேலும் 11 நாய் இனங்களை அழிந்து வரும் இனத்தில் சேர்த்து உள்ளனர்.
இதில் தமிழகத்தை சேர்ந்த #சிப்பிப்பாறை இனமும் அடக்கம்.
இங்கே என்னால் அனைத்து நாய் இனத்தின் புகைப்படங்களையும் தர இயலவில்லை, ஏன் என்றால் அந்த நாய் இனத்தின் புகை படங்கள் கூட தேடியும் கிடைக்கவில்லை. .
அவை #மலையேறி மற்றும் #குச்சிஇனம்.
நாம் வெளிநாட்டு இன நாய்களின் #மோகமும் ஒரு காரணம்.
இதை போலவே,
நமது நாட்டு #மாடுகளின் இனமும் அழியும் ...
ஜல்லிக்கட்டு போட்டிகளை கைவிட்டால்...
சிறிது காலங்களுக்கு முன்னாள் நாம் வளர்க்கும் நாய்களுக்கு வீட்டில் #சமைக்கும்_உணவையே அதற்கும் கொடுத்து கொண்டு வந்தோம்.
இதனால் #கார்பொரேட் நிறுவனங்களால் தொழில் பாதிப்பு சிறிது இருந்தது. பிறகு வந்தது தான் வெளிநாட்டு நாய்கள்,
அவைகள் நம் நாய்களை போல அல்ல. அவைகளுக்கு #பிரத்யேக நாய் #உணவுகள் என்று விற்கபடும் (எதை சொல்கிறேன் என்று புரிந்திருக்கும்) பொருட்களை தான் உண்ண முடியும்.
இதை போல தான் காளை மற்றும் பசு வளர்ப்பில் கார்பொரேட் நுழைந்தால், நமது நாய் இனங்களை போல காளை இனமும் #அழிவை_சந்திக்க நேரிடும்.
நம் நாட்டில் 88 இன நாய்களில் இப்போது மிகவும் அதிகமான இனம் அழிந்தே விட்டது. இதை பார்த்தாவது நாம் விழித்து கொள்ள வேண்டும்.
#ப்யாரீப்ரியன் பாரம்பரிய வாழ்வு தொகுப்பிலிருந்து...

தலைமுறைப் பெயர்கள்

��நாம் - முதல் தலைமுறை,
தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை,
பாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறை,
பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை,
ஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறை,
சேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறை,
பரன் + பரை - ஏழாம் தலைமுறை,
பரன் + பரை = பரம்பரை
ஒரு தலைமுறை - சராசரியாக 60 வருடங்கள் என்று கொண்டால்,
ஏழு தலைமுறை - 420வருடங்கள்..
ஈரேழு தலைமுறை - 840 வருடங்கள்..
(சுமார் 900 வருடங்கள்)ஆக,
பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள் ஈரேழு, பதினான்கு தலை
முறையாக என்று பொருள் வரும்.
வேறெந்த மொழிகளிலும் இப்படி உறவு முறைகள் இல்லை..
இது தமிழின் தனிச் சிறப்பு!..
ப்யாரீப்ரியன் சமூக பதிவு தொகுப்பிலிருந்து..