Monday, 30 November 2015

Krishnagiri dist herostones

Photos of history..கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று நடுகற்கள்

Sunday, 29 November 2015

கிருஷ்ணகிரி கிருஷ்ணதேவராய மலை ,.ஆர்வலர் படங்கள்

கிருஷ்ணகிரி மலையில் மாவட்ட வரலாற்று ஆர்வலர்கள் குழு

மன்னவனின் செங்கோல் - அளவீடு..

ஓர் ஆளுயரம் எனச் சொல்லப்படும் கோல் = 2 சிறுகோல் = 5 1/2 அடி. ஒரு சாத்தாரத் தமிழரின் செந்தர உயரம் என்று இதைத்தான் அந்தக் காலத்தில் கொண்டார்கள் போலும். ஓராள் உயரத்தைச் செங்கோல், தண்டு என்று சொல்லுவது ஓரோவழி வழக்காகும். குறளில் கோல் என்னும் சொல்லாட்சி செங்கோன்மை, கொடுங்கோன்மை என்ற அதிகாரங்களில் ”மன்னவன் கோல்” என்று ஆளப்படுகிறது.

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி

இங்கே மன்னவனின் கோல் 2.75 அடியாக இருக்க வழியில்லை. 11 அடியாகவும் இருக்க முடியாது. இது பெரும்பாலும் ஓராளுயரமாய் 5 1/2 அடி இருக்கவே வாய்ப்புண்டு. ஆங்கிலத்தில் fathom என்ற அளவு ஒரு காலத்தில் 5 1/2 அடியைக் குறித்திருக்கிறது. பின்னால் அது 6 அடியையும் குறித்தது. இந்த வழக்கும் வடவர் வழக்கும் ஒன்றுபடுகிறது. அர்த்த சாற்றத்தில் இந்த வழக்கே இருக்கிறது. “தனு இரண்டதுவோர் தண்டம்” என்ற கந்தபுராணம் அண்டகோ.6 ஆம் கூற்று 5 1/2 அடி வழக்கைப் பின்பற்றியது. [தனு - வில் - என்ற சொல் 5 1/2 அடி நீளத்தையும் குறித்து, 2 3/4 அடி நீளத்தையும் குறித்திருப்பது வெவ்வேறு வட்டார வழக்குப் போலும்.]

முருகனைத் தண்டபாணி என்று சொல்லும்போது, அவன் கையில் வைத்திருக்கும் தண்டு 5 1/2 அடி உயரம் கொண்டதாகவே இருக்கலாம். முருகன் கை வேலும், தமிழர் வேலும் கூட 5
1/2 அடி உயரமே இருத்தல் இயலும். [ஐயனார் கோயில்களில் நேர்ந்து கொண்ட அல்லது நேர்ந்து கொள்ளும் வேல்களை அளந்து பார்க்க வேண்டும்.] இந்தக் காலத்தில் சவளம் எறிவது பற்றியும் ஈட்டி 8 முழம் என்பதில் மிக்குயர்ந்த உயரம் பற்றியும் சென்ற பகுதியிற் பேசினோம்.

கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம். 567

என்ற குறளில் வரும் ”கையிகந்த தண்டம் - கையில் இருந்து வெளிப்பட்ட தண்டம்” கூட 5 1/2 அடி அளவினதாக இருக்கவே வாய்ப்பு உண்டு. 11 அடித் தண்டமாய் இருக்க வழியில்லை. இதே போல தண்டச்சக்கரம் என்ற சொல்லால் குயவனது திருகையும், கோலும் உணர்த்தப் படும் போது, அந்தக் கோலும் 5 1/2 அடி தான் இருக்கமுடியும். தண்டஞ் செய்து வணங்குதல், தண்டனிட்டல் ஆகியவற்றிலும் ஓராள் உயரமே சொல்லப் பட முடியும். ஓர் உலக்கை என்பதும் கூட ஆளுயரம் உள்ள கோலையே குறிக்கிறது. மொத்தத்தில் தண்டத்தைக் குறிக்க இருவேறு பட்ட வழக்கு (5 1/2 அடி, 11 அடி) நம்மிடையே இருந்து பின்னால் 5 1/2 அடித் தண்டமே வடவர் பால் பரவியது போலும். எனவே நாம் பழைய ஆவணங்களில் கோல், தண்டம் என்ற சொற்களை ஆளும் இடங்களில் கூர்ந்து பார்த்து வேறுபாடு தெரிந்து பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது.
--ப்யாரீ ப்ரியன்..

Saturday, 28 November 2015

Thagadoor Naadu: மழவர்கள்/ மழவராயர்கள்

Thagadoor Naadu: மழவர்கள்/ மழவராயர்கள்

Friday, 6 November 2015

Panchabootha sculpture

சிற்பக்கலை!
சிற்பத்தில் உள்ள ஐந்து உடல்களுக்கும் அந்த ஒரு தலை பொருந்துகிறது. உடலானது பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் தோன்றியது என்ற தத்துவத்தை இச்சிற்பம் விளக்குகிறது.
Panchathathva Sculpture!
The sculpture of a head that fits in the five bodies. The figure illustrates the theory of the five elements of body composition appeared.

Thursday, 5 November 2015

MONUMENTS Poetryinstone

நடுகற்கள் பற்றிய ஆர்வமும் ஆய்வும் இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கும் மேலான பழைமை கொண்டது. நடுகல் கல்வெட்டுகள் பற்றிய சிறு குறிப்புகள் Epigraphica Indica (1892 முதல்), Anunal Report on South Indian Epigraphy (1887 முதல்) Annual Report of Indian Epigraphy (1946 முதல்) ஆகிய வெளியீடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. வால்ஷ் (1937), வெயிட்ஹெட் (1976), வொஜல் (1931), ஹுல்ட்ஷ் (1934) மற்றும் ஆச்சாரிய (1924) ஆகியோரால் நடுகல் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.*1 இருந்தாலும், முறையான ஆவணப்படுத்தும் சீரிய துவக்கமானது ஆர்.நாகசாமி அவர்கள் தலைமையில், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் 1970-களில், வடஆர்க்காடு மற்றும் இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டம் உட்பட்ட அன்றைய தருமபுரி மாவட்டங்களில் நடத்தப்பட்டதில் உள்ளது. நடுகற்கள் அதிகம் கவனம் பெற்றது, 1975-ல் தமிழகத் தொல்லியல் துறை நடத்திய நடுகல் கருத்தரங்கத்துக்குப் பிறகுதான். இக்காலக்கட்டத்துக்குப் பிறகு ‘தமிழ் வீரயுகம்’ பற்றிய ஆய்வுகளும், சிந்தனையும், சங்க இலக்கியத்தில் நடுகல் காட்சிகள் மீதான மறு ஆய்வுகளும் வலுப்பெற்றன.
நாட்டுப்புற ஆய்வுகள் வளர வளர, நடுகற்கள் கூடுதல் முக்கியத்துவம் உடைய தொல்லியல் சின்னங்களான விளங்கிவருகின்றன. தினம் தினம் புதிய நடுகல் கண்டுபிடிப்புகள் பற்றிய செய்திகள் செய்தித்தாள்கள், இதழ்கள், சமூக ஊடகங்கள் வழியாக வெளிவந்துகொண்டே இருக்கின்றன. முறையான ஆவணப்படுத்துதல் இன்மையால், ஒன்று முன்பே அறியப்பட்டதா அல்லது புதியதான அறிதலா என்ற குழப்பமும், மயக்கமும் எல்லாத் தரப்பிலும் உருவாகி வருகிறது.
நடுகற்களை ஆவணப்படுத்துதல் எப்படி ஒரு கட்டாயத்தை உருவாக்கியுள்ளதோ, அதுபோலவே வகைகளையும் வகைப்பாட்டையும் முறைப்படுத்திக்கொள்வதும் அவசியமாகியுள்ளது. முறைப்படுத்தப்பட்ட வகையும் வகைப்பாடும்தான், ஆவணப்படுத்துதலின் முதல் படியென உணர்த்துகிறது.
நடுகல் சொல்
நேரடிப் பொருளில், நடுகல் என்ற சொல் ‘நடப்பட்ட கல்’ என்று பொருள் தருவது. இலக்கியப் பயன்பாட்டில், அது ‘நினைவுக்கல்’ என்ற பொருளில் பெரும்பான்மையாக ஆளப்படுவது. தொல்லியல் பயன்பாட்டில், அது துவக்கத்தில் வீரக்கல் என்ற பொருளில் ஆநிரைக் கவர்தல் அல்லது மீட்டல் செயலில் மாய்ந்த வீரனுக்கு எடுக்கப்பட்ட கல் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டு, தற்போது பல்வேறு காரணங்களுக்காக இன்னுயிரை ஈந்த வீரமக்களுக்காக எடுக்கப்பட்ட கல் என்ற பொருளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. அதனால், நடுகல் என்பது ‘வீரக்கல்’ என்று பொருள் பட பயன்பாட்டில் வழக்குப்பட்டுள்ளது.
ஆனால், வீரக்கல் என்ற சொல்லுக்கு ‘வீரன் நினைவாக எழுப்பப்பட்ட கல்’ என்ற பொருள் கொள்ளாமல், ‘வீரத்தின் அடையாளமாக அமைக்கப்பட்ட கல்’ என்று பொருள் கொள்ள வேண்டும் என்ற கருத்தும் உண்டு.*2
நினைவுச்சின்ன வகைகளில் ஒன்று நடுகல்
தொல்பொருள்களின் வகைப்பாட்டில், நடுகல் என்பது ‘மூத்தோர் நினைவுச் சின்ன’ வகைகளில் ஒன்று. மூத்தோர் நினைவுச் சின்னங்கள் ‘ஈமச்சின்னங்கள்’ என்றும் குறிக்கப்பெறுகின்றன.
நினைவுச் சின்னங்கள்
சமூகத்தின் முன் எந்த ஒரு செயலையும் நினைவில் இருத்திவைக்க மனிதன் அவ்வப்போது அமைக்கும் சின்னமே நினைவுச் சின்னம் என்று குறிக்கப்படுகிறது. அறுதியிடமுடியாத காலப்பழமை கொண்ட நினைவுச் சின்னங்கள் அமைக்கும் சமூகப் பழக்கம், பிற்காலச் சந்ததியருக்கு இவ்வாறு நிறுவப்படும் சின்னங்கள் குறியீடாக அமைந்துப் பொருள் தந்து வருவதால், அவை தனி அடையாளமாகப் பரிணாமம் பெற்று விளங்குகின்றன.
நினைவுச் சின்னங்களின் வகைகள்
நினைவுச் சின்னங்களை அவை நிறுவப்பட்ட நோக்கம் கொண்டு,
1. மூத்தோர் சின்னங்கள் அல்லது ஈமச் சின்னங்கள்
2. வளமை அல்லது சடங்கு சின்னங்கள்
3. பிறவகைச் சின்னங்கள்
என மூன்று முக்கிய வகைகளாகப் பகுத்துப் பார்க்கலாம்.*3
1. மூத்தோர் சின்னங்கள் அல்லது ஈமச் சின்னங்கள்
இறந்த தம் முன்னோர்களின் நினைவைப் போற்றும் பண்பாட்டின் வெளிப்பாடே மூத்தோர் சின்னங்கள் அல்லது ஈமச் சின்னங்கள் ஆகும். மாந்தரினப் பரிணாம வளர்ச்சியின் பல்வேறு காலநிலைகளில் பல்வேறு வகையான வெளிப்பாட்டை மூத்தோர் சின்னங்கள் அல்லது ஈமச் சின்னங்கள் கொண்டிருந்தமையை அறியமுடிகிறது.
ஈமச் சின்னங்களில் இன்றளவு கிடைக்கப்பெற்ற தொல்பொருள் சான்றுகளைக் கொண்டு, கீழ்கண்ட நான்கு வகைகளாகப் பிரித்து அறிய முடிகிறது. அவை –
1. கற்சின்னங்கள்
2. கட்டடச் சின்னங்கள்
3. நினைவுத் தூண்கள்
4. நடுகற்கள்
வளமை அல்லது சடங்குச் சின்னங்களில் இன்றளவு கிடைக்கப்பெற்ற தொல்பொருள் சான்றுகளைக் கொண்டு கீழ்க்கண்ட மூன்று வகைகளாகப் பிரித்து அறிய முடிகிறது. அவை –
1. சன்னியாசிக் கல் மற்றும் அதன் மாற்று வடிவங்கள்
2. நாகர் கல்
3. புதிர் பாதைகள்.

Monday, 2 November 2015

Athimugam..a hidden history

ஹோசூர் அத்திமுகத்தில் இதுவரை பஞ்சலிங்கம் என்று நம்பி இருந்த லிங்கங்கள் ஐந்தும் சித்தர்களின் சமாதி என்று தெரிந்ததும் அவற்றை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டோம். ஒரே இடை வெளியில் ஒரே நேரத்தில் கட்டப்பட்டு இருப்பதால் ஐந்து சித்தர்கள் ஒரே நேரத்தில் ஜீவ சமாதி அடைந்து இருக்கமுடியும் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது . மேலும் இவ்வற்றில் நடுவில் உள்ள லிங்கம் மட்டும் பெரிதாக உள்ளதால் ஐந்து சித்தர்களில் முதன்மையானவர் அங்கே நடுநாயகமாக வீற்றிருக்க கூடும் என்றும் கூறப்பட்டது.ஜாதகத்தில் குரு பலவீனமாக இருப்பவர்கள், சித்தம் தெளிவில்லாமல்,ஸ்திரமாக இல்லாமல் இருப்பவர்கள் அமாவாசை அன்று இது போன்ற ஜீவ சமாதிகளில் சென்று வழிபடுவது நல்ல பலனை தரும்.

Sunday, 1 November 2015

அனுமன் ஆலயம்,நெடுமருதி,கிருஷ்ணகிரி ,சிக்காரி மேடு

பழமையான அனுமன் ..இமயமலை அகோரிகளால் சொல்லப்பட்டு கண்டறியப்பட்டது..இடம் கிருஷ்ணகிரி,சிக்காரி மேட்டிலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில்..நெடுமருதி கிராமம்..நெடுமருதி..