Monday, 22 April 2019

எலும்புக் குறியீடு....

#உலக_புத்தகதினம் (23-04-2019).
உலகின் முதல் பதிவு.#எலும்பில்.!

குகைகளில் எழுதத் தொடங்கு முன்பே, எலும்புகளில் பதிவு செய்துவிட்டனர்.
 முதன் முதலில் குரங்கின் கை எலும்பில்  பெண்கள், மாதத்தின் நாட்களை, குறியீடாக அந்த எலும்பில் தனது #மாதவிடாயை, கருக்காலத்தைக் கணக்கில் கொள்ள, வானில் நிலவு வந்து போகும் காலக் கெடுவுடன் தொடர்புடையதாக பிரியமாககுறித்து வைத்துள்ளனர். ஆப்பிரிக்காவின் "#லேபோம்பா" (Lebombaஅ) எண்ற இடத்தில் அந்த குறியீடு செய்துள்ள எலும்பு கிடைத்தது. எனவே அதன் பெயரிலே லேபோம்பா எலும்பு என்றே அழைக்கப்பட்டது. அதன் வயது என்ன தெரியுமா? சுமார் 37,000 ஆண்டுகள்.! இந்த எலும்பில் 29 கோடுகள்/பட்டைகள் உள்ளன.

அதுபோலவே, இஷாங்கோ என்ற இடத்தில் கிடைத்த எலும்பின் பெயர் "இஷாங்கோ எலும்பு". எலும்பின் நுனியில் அதனை எழுதப் பயன்படுத்திய படிகக் குச்சியும்(crystal) உள்ளது. இதுவும் ஆப்பிரிக்க எரிமலைப்படிவுகளில் கிடைத்துதான். இதன் வயது 20,000 -25,000 ஆண்டுகள். இதில் 3 வரிசைகளில் எண்கள் பற்றி "டாலி( Tally )" குறியீட்டில் பதிவு செய்துள்ளனர் அக்கால பெண்கள்! இதில் 6 மாத சந்திர காலண்டர் பொறிக்கப்பட்டுள்ளது.

எலும்பில் எழுதிய மனிதன், மலையின் குகைகளில் எழுதினான். பிறகு பாப்பிரஸ் மரபட்டைகள், ஆடு மற்றும் கன்றுகுட்டியின் தோல்கள், மரபட்டைகள், களிமண், மண் ஓடுகள் மற்றும் பேப்பர்கள் என எழுத்தின் பதிவு கொஞ்சம் கொஞ்சமாக பரிணாமம் பெற்றது. இன்று மின்னஞ்சலில், வலைதளத்தில், e-எழுத்தாக மாறியுள்ளது.

காலப்பதிவுகள்..
மனிதப்பரிணாமத்தில்

விலங்குகளின் எலும்பில் எழுத்து தொடங்கி ஓலைச்சுவடி ..தாள்களாகி இன்று மின்னூலாகி பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது வியப்பு??

ஒரு புத்தகம் என்பது கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்குமான இணைப்பு,
தலைமுறைகள் மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையிலான பாலம்” என்பதும் ஒட்டுமொத்த மனித குலத்தை ஒரு குடும்பமாக இணைக்க உதவுகின்றன என்றும், புத்தகங்கள்
மனித குலத்தின் லட்சியங்களை பிரதிபலிக்கும் வகையில்  அமைந்திருப்பதாகவும் கருதி யுனெஸ்கோ அமைப்பு
கடந்த 1995 ம் ஆண்டு முதல் ஏப்ரல் 23 ம் தேதியை உலக புத்தக மற்றும் காப்புரிமை தினமாக கொண்டாடி வருகிறது.
#ப்யாரீப்ரியன்...
இணையத்தொகுப்பு பதிவிலிருந்து....

Friday, 19 April 2019

சிரமா?..சுரமா?

#குடமலைநாடு_கொண்டோன்.

விக்கிரம சோழன் உலாவில், இராஜராஜரின் ஆட்சிக்காலத்தில் நடந்த ஒரு போர்பற்றிய இருவரிகள்.. !
“தூதர் காப்புண்டு பகலொன்றில் ஈரொன்பது சுரமும் கொண்டு, மலைநாடு கொண்டோனும்.. “

காவிரியின் வலக்கரையான கலியூர் என்னுமிடத்தில், கங்கர் படைக்கும், சோழர் படைகளுக்கும் இடையேயான போர்.

தமது தலைநகரான தலைக்காடு பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் இருந்த கங்கர்படை,  சிறைபிடிக்கப் பட்டிருந்த தமது தூதன் ஒருவனை காக்க குடமலைநாடு நோக்கிப் பயணித்த சோழர் படையினை, இடையே தடுத்தி நிறுத்திய போர்.

சோழர் படையின் தளபதியாக அப்ரமேயன், இப்போரில் தான் கொன்றதாகக் கூறும் பதினெட்டு தளபதிகளின் பேரையும், பட்டியலிட்டு வைத்துப் போயிருக்கிறான் தமது கல்வெட்டில்.  ( படம் கீழே )

மேற்கூறிய விக்கிரம சோழனுலாவில் காணப்படும் வரிகளில் உள்ள சுரம் என்னும் வார்த்தை ‘காடு’ என்ற பொருள்கொள்ளப்பட்டு, ஈரொன்பது, அதாவது பதினெட்டு காடுகளை ஒரே பகலில் கடந்தது சோழர் படை என்று பொருள்கொள்ளப் பட்டிருந்தது முன்பு.

இக்கல்வெட்டு கிடைத்தபின், சுரம் என்ற வார்த்தை, காட்டினை மட்டுமல்ல.. சிரமாகிய தலையினையும் குறிக்கும் என்பது தெளிவாக விளங்கியது.
அப்ரமேயன் கல்வெட்டு காட்டும் அந்த பதினெட்டு கங்க தளபதிகளின் பெயர்கள் பின்வருமாறு :

1. ஹொய்சலர் நாகவர்மன்.
2. மலேபர மல்ல ஒயிகன்.
3. ஹொய்சலன் பெலஹொப்பா.
4. சோலக சஞ்சிதா.
5. சின்னிவாரா.
6. மாதல எரேகங்கா.
7. மத்தச பரமன்னன்.
8. ரண்டகண்டன்.
9. முண்டா.
10. ஜக்காரிகா.
11. வீருகா.
12. நாகவர்மா.
13. புத்தரா.
14. மேயின்வரா.
15. சந்திகா.
16. ஹொன்னா.
17. நன்னிகம்.
18. பெயர் தெரியவில்லை.

வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கல்வெட்டினை கண்டறிந்து, வெளியுலகிற்குத் தெரியப்படுத்திய முனைவர். வெங்கடேசன், நண்பர். திரு. கோமகனார் மற்றும் சசிதரன் குழுவினருக்கும், இதுபற்றி எப்போது எழுதினாலும், நன்றிகூறியே ஆகவேண்டும்.

கலியூர் போரில், கங்கநாட்டுத் தளபதிகள் பதினெட்டு (ஈரொன்பது ) பேரின் தலைகளையும் சீவியெறிந்து வென்றிருக்கிறார்கள்  சோழத்தளபதி  அப்ரமேயன் தலைமையிலான படையினர் என்பதைத்தான் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது இந்தக் கலியூர் கல்வெட்டு.

சரி. இப்போது இன்னோர் விஷயத்திற்கு வருவோம்.. !

பாண்டியனை சுரம் இறக்கின பெருமான்னு,  சுந்தரசோழருக்கு ஒரு புகழ்ப்பெயர் இருக்கிறதல்லவா ?

கலியூர் கல்வெட்டின்படி, சுரம் என்பதனை சிரம் ( தலை ) என எடுத்துக் கொண்டால், பாண்டியன் தலைகொண்ட பெருமான் என்றல்லவா பொருள்தருகிறது ?

அப்படியெனில், தனது ஆட்சிக்காலத்தில் நடந்த சேவூர்ப் போரில், வீரபாண்டியன் தலைகொண்ட பெருமையினை, தமது மகனான ஆதித்த கரிகாலரோடு, சுந்தர சோழரும் பகிர்ந்து கொண்டதை அல்லவா இது குறிக்கிறது.?

( ஏற்கனவே, பார்த்திவேந்திரன் வேறு அப்பட்டத்தினை சுமந்து கொண்டிருக்கிறார் தம் கல்வெட்டுகளில்.)

சோழ வரலாற்றில் விடுவிக்கப்படவேண்டிய புதிர்கள் இன்னும் எத்தனை எத்தனையோ.. ?!

ஆய்வாளர்கள்தான் விளக்கவேண்டும்.

எழுத்தாக்கம்  :
#உளிமகிழ் ராஜ்கமல்.

Tuesday, 9 April 2019

இரும்பை கண்டறிந்தவன் தமிழன்

அறிக...
இரும்பை கண்டுபிடித்தவர் யார் என கேட்டால் விடையாக
Henry Bessmer, England - 1856.என்று தானே சொல்வோம் இதுவரை...
இனி....அப்படி சொல்வோமா???
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்துள்ள
முதுமக்கள் தாழி, எலும்பு கூடுகள், இரும்பு மற்றும் பித்தளை பொருட்கள், கலைப்பொருட்கள், ஆயுதங்கள், தங்க ஆபரணங்கள் போன்றவை கிறிஸ்து பிறப்பிற்கு முந்தைய காலத்தை சேர்ந்தவை.
அதில் ஒரு பொருளின் (AGE) அகவை கி.மு.905, மற்றொரு பொருளின் அகவை கி.மு.791 என்றும் தெரியவந்துள்ளது. அதாவது கி.மு 10 – ஆம் நூற்றாண்டு மற்றும் கி.மு.8 – ஆம் நூற்றாண்டு என்கிறது (CARBON -14. TEST) ஆய்வறிக்கை.
கி.மு. 8 - ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழன் நாகரீகத்தோடு வாழ்ந்திருகின்றான். உலோக பொருட்களையெல்லாம் கையாண்டு இருக்கின்றான். அதிலும் குறிப்பாக ‘இரும்பு’ அவன் வாழ்வியலோடு ஒன்றர கலந்திருக்கிறதுஎன்பதெல்லாம் நமக்கு வியப்பான செய்திகள்.
‘இரும்பு வடித்தன்ன கருங்கைக் கானவன்’
‘இரும்பு வடித்தன்ன மடியா மென்தோல் கருங்கை வினைஞர் காதலம் சிறாஅர்.’ - என
பழந்தமிழர்களுக்கும் இரும்புக்குமான உறவை எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும்பறைச்சாற்றுகிறது.
‘அதியமான் நெடுமான் அஞ்சி’
அவரது தலைநகர் - தகடூர்.
இரும்பை வெட்டியெடுத்து அதை தகடாக்கும் தொழில் செய்யும் ஊர் என்பதால் அதற்கு தகடூர் என்று பெயர். இரும்பு வணிகத்தில் கொடிகட்டிப் பறந்த அதியமான், கடல் கடந்து பல்வேறு தேசங்களில் தனது இரும்பு வணிகத்தை நிலை நாட்டினார். அதிலொன்று துருக்கி நாடு. உருக்கி என்பது தான் துருக்கி என்று விளங்கியிருக்க கூடும். அந்த துருக்கியில் இன்றும் அதியமான் பெயரில் நகரம் இருக்கிறது.
ஆனால்,
பதினெட்டாம் நூற்றாண்டின் பாதியில் வந்த
அந்த வெள்ளக்கார வெண்ணை தான் இரும்பை கண்டுப்பிடித்தான் என்று திரித்து எழுதப்படுகிறது வரலாறு. ஆதிச்சநல்லூர் வரலாறு மட்டுமல்ல ; ஆதிதமிழர்களின் வரலாறுகளிலும் இந்த திரிபுவாத கும்பலில் கைங்கர்யம் நிறைய உண்டெனும் புரிதல் ப்ரியனுக்கு உண்டு.
தாழி பானை ஓடுகளில் காணப்படும் எழுத்துக் கீறல்களெல்லாம் விட்டுத்தள்ளுங்கள், இந்த தாளிப்பனைகள் பெற்றெடுத்த ஓலைச்சுவடிகளில் உழுத எழுத்தாணி ஒன்றுபோதுமே, தமிழர் இருப்பின் வரலாற்றுக்கு சாட்சியாக, இரும்பின் வரலாற்றுக்கு சாட்சியாக.
ரிக் வேதத்தின் உண்மையான பெயரே உருக்கு வேதம் என்பது தான். அதாவது உலோகங்களை உருக்கும் தொழில் நுட்ப ரகசியம் தான்.
ஆதிச்சநல்லூர் என்கிற
ஆதி ‘எச்ச’ நல்லூர் மட்டுமல்ல;
அதையும் தாண்டி, நமது கவனத்தை திருவள்ளூர் மாவட்டம் வடமதுரை மீதும் வைத்தாக வேண்டியது வரலாற்றின் தேவையாகும்.
பலநூற்றாண்டுகள் பழமை வாய்ந்த
பழைய கற்காலக் கல் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டது அங்குதான் என்பது மட்டுமல்ல; எம் வள்ளுவப் பாட்டன் பிறந்த ஊர் வடமதுரை என்பதாலும்..!
-தகவல்:சமரன் நாகன்
#ப்யாரீப்ரியன்....