காரியம் கைகூட வைக்கும் பரிகாரம் :
ப்யாரீப்ரியன் ஆன்மீக பகிர்வு..
ஒரு கப்புல (கொஞ்சம் பெரிசாய் இருக்கட்டும்) 101 ரூபாய்ல இருந்து 501 ரூபாய் வரை... காசாப் போடுங்க. அதாவது, ஒரே மாதிரி நாணயமாய் இருக்கணும். ஒரு ரூபாய்னா, ஒரே மாதிரி காசாய் இருக்கணும். ஒண்ணு சின்னது, ஒண்ணு பெரிசுன்னு இருக்கக்கூடாது.
நூத்தி ஒண்ணோ, ஐநூத்தி ஒண்ணோ காசைப் போட்டு, அதுமேல விளக்கை வைச்சு, தீபம் ஏத்திட்டு வாங்க. ஒரு முகமோ, ஐந்து முகமோ அது உங்க இஷ்டம். இப்படி கிழக்கு பார்த்து, தீபம் ஏத்திட்டு வாங்க. வீட்டுல, தேவைக்கு எப்பவும் தட்டுப்பாடு வராது. அது நிச்சயம்!
முக்கியமான விஷயம்; மாசக் கடைசின்னு சொல்லி, ‘கப்’புல போட்ட காசுல கை வைக்கக்கூடாது.
இன்னொரு காரியமும் செய்யலாம். காசு வைச்சிருக்கிற கப்புக்கு மேல ஒரு தட்டை வைங்க. அந்தத் தட்டு மேல, ஒரு பேப்பர்ல - உங்களோட விருப்பம் என்ன? என்ன நடக்கணும்னு நினைக்கிறீங்க? - அதையும் எழுதி, அந்தப் பேப்பரை மடிச்சு வைச்சு, அதுக்கு மேல விளக்கை வைச்சு, தீபத்தை ஏத்திட்டு வாங்க. காரியம் கைகூடும். முக்கியமான விஷயம்; அந்தப் பேப்பரோட, ஒரு வெற்றிலையையும் வைக்கணும்.
‘வெற்றிலை வாடிடுமே; அழுகிடுமே’ன்னு கவலையா? வெத்திலையை மாத்திக்கலாம். தப்பில்லை. சரியா?
இது இல்லாம, இன்னொரு விஷயமும் செய்யலாம். ஒரே மாதிரி காசாய் போட்டு, விளக்கு ஏத்தினமாதிரி, ஒரே மாதிரி காசாய் வைச்சு மாலை செய்யலாம். எப்படி? இப்பதான், ஒட்டறதுக்கு டேப் கிடைக்கறதே. அந்த டேப்ல, 101, 501னு எது முடியுமோ, அந்த காசை ஒட்டி, அம்பாளுக்கு வீட்டுலயே மாலையாய்ப் போட்டு வழிபடலாம். இதெல்லாம், நமக்கு நாமே செய்துக்கக்கூடிய - பலன் தரக் கூடிய - காரியங்கள்!
எங்களுக்கு ஸ்லோகம் சொல்லத் தெரியும்; மந்திரம் ஏதாவது சொல்லலாமான்னு கேட்கறீங்களா? உங்களுக்கானது இது:
ஸ்ரீதேவி: அம்ருதோத்
பூதாகமலா சந்திரசோபனா
விஷ்ணுபத்னீ வைஷ்ணவீ ச
வராரோஹாச சார்ங்கிணீ
ஹரிப்ரியா தேவதேவி
மஹாலக்ஷ்மி ச சுந்தரி
இதை தினம் காலையில விளக்கேத்தி 10 தடவை சொல்லுங்க.
வெள்ளிக்கிழமை சாயந்திரம் விளக்கேத்தி, முடிஞ்சவரை சொல்லுங்க.
108 தடவை சொல்வதற்கு முன்பாக. முடிஞ்சா, விளக்குலயே லக்ஷ்மி பூஜையும் பண்ணுங்க. சுபிட்சம் வசப்படும். வேலை கிடைக்கலைன்னு வருத்தப் படறவங்களுக்கு, கண்டிப்பா வேலை கிடைக்கும்.
மந்திரம் வேணுமா சரி;
ஓம் ஹ்ரீம் பத்மே ஸ்வாஹா (இல்லேன்னா) ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நம;
இந்த ரெண்டுல எதை வேணா நம்பிக்கையோட ஜபம் பண்ணலாம்.
ஒரு முக்கியமான விஷயம்: மந்திரத்தை ஜபம் பண்ணும்போது, மனசும், புத்தியும் அதிலேயேலயிச்சு இருக்கணும். அப்பதான் பலன் கிடைக்கும்.
#ப்யாரீப்ரியன் ஆன்மீகப் பதிவு தொகுப்பிலிருந்து...
Monday, 31 October 2016
நாணய தீப வழிபாடு...
நாய்கள் இனம் அழியும் அபாயம்...
நம் தாயகமான இந்தியாவில் 88 நாய் இனங்கள் இருந்தன, அதில் அதிகமான இன நாய்கள் #அழிந்து_விட்டன. இதில் தற்பொழுது மேலும் 11 நாய் இனங்களை அழிந்து வரும் இனத்தில் சேர்த்து உள்ளனர்.
இதில் தமிழகத்தை சேர்ந்த #சிப்பிப்பாறை இனமும் அடக்கம்.
இங்கே என்னால் அனைத்து நாய் இனத்தின் புகைப்படங்களையும் தர இயலவில்லை, ஏன் என்றால் அந்த நாய் இனத்தின் புகை படங்கள் கூட தேடியும் கிடைக்கவில்லை. .
அவை #மலையேறி மற்றும் #குச்சிஇனம்.
நாம் வெளிநாட்டு இன நாய்களின் #மோகமும் ஒரு காரணம்.
இதை போலவே,
நமது நாட்டு #மாடுகளின் இனமும் அழியும் ...
ஜல்லிக்கட்டு போட்டிகளை கைவிட்டால்...
சிறிது காலங்களுக்கு முன்னாள் நாம் வளர்க்கும் நாய்களுக்கு வீட்டில் #சமைக்கும்_உணவையே அதற்கும் கொடுத்து கொண்டு வந்தோம்.
இதனால் #கார்பொரேட் நிறுவனங்களால் தொழில் பாதிப்பு சிறிது இருந்தது. பிறகு வந்தது தான் வெளிநாட்டு நாய்கள்,
அவைகள் நம் நாய்களை போல அல்ல. அவைகளுக்கு #பிரத்யேக நாய் #உணவுகள் என்று விற்கபடும் (எதை சொல்கிறேன் என்று புரிந்திருக்கும்) பொருட்களை தான் உண்ண முடியும்.
இதை போல தான் காளை மற்றும் பசு வளர்ப்பில் கார்பொரேட் நுழைந்தால், நமது நாய் இனங்களை போல காளை இனமும் #அழிவை_சந்திக்க நேரிடும்.
நம் நாட்டில் 88 இன நாய்களில் இப்போது மிகவும் அதிகமான இனம் அழிந்தே விட்டது. இதை பார்த்தாவது நாம் விழித்து கொள்ள வேண்டும்.
#ப்யாரீப்ரியன் பாரம்பரிய வாழ்வு தொகுப்பிலிருந்து...
தலைமுறைப் பெயர்கள்
நாம் - முதல் தலைமுறை,
தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை,
பாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறை,
பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை,
ஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறை,
சேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறை,
பரன் + பரை - ஏழாம் தலைமுறை,
பரன் + பரை = பரம்பரை
ஒரு தலைமுறை - சராசரியாக 60 வருடங்கள் என்று கொண்டால்,
ஏழு தலைமுறை - 420வருடங்கள்..
ஈரேழு தலைமுறை - 840 வருடங்கள்..
(சுமார் 900 வருடங்கள்)ஆக,
பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள் ஈரேழு, பதினான்கு தலை
முறையாக என்று பொருள் வரும்.
வேறெந்த மொழிகளிலும் இப்படி உறவு முறைகள் இல்லை..
இது தமிழின் தனிச் சிறப்பு!..
ப்யாரீப்ரியன் சமூக பதிவு தொகுப்பிலிருந்து..
வாழ்க்கை அறிவியல்
அறிவியல் ரீதியாக கதிர் வீச்சு இல்லாத பொருள்களே இல்லை எனலாம். .மரம் ,செடி கொடிகளில் இருந்து மனிதன் வரை.காந்தக் கதிர் வீச்சுக்கள் அல்லது magnetic field , அல்லது ஆரா Body என்று அழைக்கப்படும் . இது மனிதனின் ஆரோக்கியத்துக்கும் துணை புரிகிறது .இது பாதிக்கப் பட்டால் உடல் நோயுறும் என்கிறார்கள். இது வேறொன்றுமில்லை ,நம் உடல் சேகரித்து வைத்திருக்கும் cosmic energy தான்.ஒரு பாட்டரி போல. ஆக வெளியில் இருப்பதுதான் உள்ளேயும் இருக்கிறது ,அல்லது எங்கும் இருக்கிறது.
சரி இதில் கடவுள் எங்கே வருகிறார் ?எங்கேயும் வரவில்லை. இருப்பதெல்லாம் மனிதன் மட்டுமே.இந்த cosmic energy என்பதைக் கொண்டு நிறைய விஷயங்கள் பண்ணலாம்.நோய்களை குணப்படுத்துவது உட்பட. சாமியார்கள் செய்வது இதைத்தான்.ஆனால் இது எல்லாராலும் முடியும்.ஜப்பானியர்கள் இதை reiki என்று பெயரிட்டு இதை எல்லோருக்கும் கற்றுக் கொடுக்கிறார்கள். #மனோசக்தி பல அற்புதங்களைச் செய்யக்கூடியது. ரெய்கியின் அடிப்படைத் தத்துவம் அதுதான்,
cosmic energy யை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்,உங்கள் மனம் அதற்கு எந்த அளவு உபயோகப்படும் என்றெல்லாம் கற்றுக் கொடுக்கிறார்கள்.ஆரம்ப காலங்களில் இந்த தத்துவத்தை எளிதாக சொல்லப் போய் அது கை கால்கள் முளைத்து வேறு வடிவத்துக்கு வந்து விட்டது.சரி அப்படியென்றால் கோவில்கள் எதற்கு?அவை எனர்ஜியை சேமிக்கும் பெரிய பாட்டரி.கோவிலுக்கு போனால் அது உங்களுக்குள் புகும் என்பதால்தான்.உங்களிடம் இருந்து கோவிலுக்குள்ளும் பரவும்.அதிகமான இடத்திலிருந்து குறைவான இடத்திற்கு பரவும்.
எனவேதான் பழைமையான கோவில்களில் ஒரு தனி நிம்மதி relaxation ஐ உணர்கிறீர்கள் .புதிதாக கட்டப்பட்ட கோவில்களில் அது கிடைக்காமல் போக வாய்ப்பு உண்டு.
சரி நாம் செய்யும் பிரார்த்தனைகள் நிறைவேறுவது எப்படி ? அல்லது நிறைவேறாமல் போவது எப்படி?என்றால் அதற்கு நீங்கள்தான் காரணம். ஒரு சரியான, மனம் ஒருமுகப்பட்ட , பிரார்த்தனை நிறைவேறுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.அது அந்த இடத்தில் பல மடங்காக replicate ஆகிறது .அப்படி பிரார்த்தித்தால் கோவிலில்தான் என்று இல்லை எங்கும் அது நிகழ வாய்ப்பு உண்டு.செயல்படுவது முழுக்க முழுக்க உங்கள் கைகளில்தான் இருக்கிறது.
#ப்யாரீப்ரியன் ஆன்மீக அறிவியல் தொகுப்பிலிருந்து...
வாழ்க்கை அறிவியல் திருஷ்டி கயிறு
வீட்டு வாசலில் தொங்கிக்கொண்டு இருப்பது திருஷ்டி கயிறு அல்ல. நம் உயிரை காக்கும்அது முதலுதவி பெட்டகம்.
நம் வீட்டுவாசலில் கருப்பு கயிற்றில் படிகாரம். எலுமிச்ச்சை பழம். மிளகாய். மிளகு. ஈச்சமுள் மற்றும் மஞ்சள், தேங்காய் உள்ளிட்ட பொருட்கள் கயிற்றில் கட்டி தொங்கவிடப்பட்டுஇருக்கும்.
கண் திருஷ்டிக்காக என நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம்.
ஆனால் அது நம்முடைய உயிரைகாக்கதான் தொங்கிக்கொண்டு இருக்கிறது.
எப்படியென்றால்
மின் வசதியில்லாத காலங்களில் நம் வீடுகளீல் இரவில பொருட்களை தேடுவது மிகுந்த சிரமாம இருந்திருக்கும்.
இரவில் நம்முடைய முன்னோர்கள் வெளியில் சென்று வரும்போது அக்காலத்தில் தெருக்களிலும் மின்சாரம் இருக்காது.
அப்பொழுது ஏதேனும் பூச்சியோஅல்லது பாம்பு மற்ற ஏதேனும் விசபூச்சிகள் கடித்துவிட்டால் என்ன செய்வது.
அந்த சூழ்நிலையில் நம்முடைய பதட்டம் அதிகரிக்கும், முதல் உதவி மிக முக்கியம் அல்லவா?
அதற்காகதான் இந்த பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை நம் வீட்டுவாசலில் தொங்கவிட்டு இருப்பார்கள்.
கைகளிலோ அல்லது காலிலோ கடிப்பட்டு இருந்தால் விசம் மேலும் பரவாமல் இருக்க கயிற்றால் கட்டிவிடுவதால் விசம் பரவுவதை தடுக்கலாம்.
கடித்த இடத்தில் எரிச்சல் இருந்தால் படிகாரத்தை தேய்த்துவிடுவதால் எரிச்சல்குறையும்.
விசக்கடியாக இருந்தால் மிளகாய் அல்லது மிளகு கடித்தால் காரம் இல்லையென்றால் கடுமையான விசக்கடி என்றும் காரம் இருந்தால் பூச்சிக்கடி என்றும் தெரிந்துகொள்வார்கள்.
ஏற்படும் களைப்பை போக்க எலுமிச்சை பழத்தை பிழிந்துகொடுப்பார்கள்
எந்தமாதிரியான விசக்கடி என்பதை அறிய ஈச்சமுள்ளால் அந்த இடத்தை கீரிபார்த்து தெரிந்துகொள்வார்கள்.
எட்டுகால் பூச்சி போன்றவை கடித்தால் தேங்காய் தண்ணிரும் தேங்காய்கீத்தையும் தின்றால் உடனடி விசமுறிவு ஏற்படும்.
சாதாரண ரத்தகட்டி வீக்கமாக இருந்தால் மஞ்சள் தடவி விடுவார்கள்.
இதுதான் நம் முன்னோர்களின் முதலுதவி பெட்டகம்.
நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல.
தொங்கிக்கொண்டு இருப்பது மூடநம்பிக்கை சின்னம் அல்ல.
முதலுதவி_பெட்டகம். .!!!
#ப்யாரீப்ரியன் பதிவு தொகுப்பிருந்து..
கடலூர் தெருக்களின் வரலாறு
முற்காலத்தில் கடலூர், கூடலூர் என்று அழைக்கபட்டது. பெண்ணையாறு, கெடிலம், பரவனாறு ஆகிய மூன்று ஆறுகள் கடலில் கலக்கும் இடம் ஆதலால் இப்பெயர் பெற்றது. பிரித்தானிய ஆட்சி காலத்திலிருந்து இது கடலூர் என்று அழைக்கபட்டது, கி.பி. 1746ஆம் ஆண்டில் பிரித்தானியரின் தென்னிந்தியாவுக்கான தலைமையகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இந்தியாவுக்கு வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் செஞ்சியை ஆண்ட மன்னர்களிடம் இருந்து கடலூரில் இருந்த புனித டேவிட் கோட்டையைக் வாங்கினார்கள். சென்னை புனித ஜார்ஜ் கோட்டையை பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றிய போது புனித டேவிட் கோட்டைக்கு தங்கள் மாகாணத் தலைநகரை மாற்றி இந்தியாவின் தென் பிராந்தியத்தை இந்தக் கோட்டையில் இருந்து ஆண்டு வந்தார்கள். ஆங்கிலேயர்கள் தங்கள் நாட்டுடனான வாணிபத் தொடர்புகளுக்கு, கடலூர் துறைமுகத்தை அதிக அளவில் பயன்படுத்தியதாக சரித்திரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன,
கடலூரில், கடலூர் முதுநகர் மற்றும் கடலூர் புதுநகர் என இரண்டு முக்கிய பகுதிகள் உள்ளன. 1866 வரை நகராட்சி அலுவலகம் போன்ற அரசு அலுவலகங்கள் முதுநகர் பகுதியிலேயே இருந்தன. 1866க்கு பிறகு அவை புதுநகர் பகுதியில் உள்ள #மஞ்சகுப்பம் எனப்படும் இடத்திற்கு மாற்றப்பட்டது.
சரித்திரக் குறிப்புகள் படி இவ்வூர் சோழர் , பல்லவர் , முகலாயர் மற்றும் ஆங்கிலேயர் ஆகியோரால் ஆட்சி செய்யப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர் வருகைக்கு முன்னர் இந்நகரம் மைசூர் மன்னர் ஹைதர் அலியின் கட்டுப்பாட்டில் இருந்தது (1780). அவர்கள் கட்டுப்பாட்டில் இந்நகரம் இஸ்லாமாபாத் என வழங்கப்பட்டது. அவரது மறைவிற்கு பிறகு (1782) ஆங்கிலேயர் இந்நகரை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர திட்டமிட்டனர். இதன் விளைவாக கடலூர் போர் (1783) மூண்டது. இப்போருக்குப் பின்னர் கடலூர் நகரை ஆங்கிலேயர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். ஆங்கிலேயர் இந்நகரை ஒரு பெரிய துறைமுகமாக மாற்றினர். சரக்கு கப்பல் போக்குவரத்திற்கு இந்நகரை பெரிதும் பயன்படுத்தினர். குறிப்பாக நெல்லிக்குப்பத்தில் தாங்கள் துவங்கிய சர்க்கரை ஆலையின் (EID Parrys Ltd (1780)) சரக்குகள் கடலூர் துறைமுகத்தில் கையாளப்பட்டது.
ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இவ்வூர் ஒரு முக்கிய பங்கு வகித்ததனால் இங்கு சில தெரு மற்றும் ஊர் பெயர்களில் ஆங்கிலப் பெயர்கள் இடம் பெற்றுள்ளன
#புரூக்கீச்பேட்டை
1767 முதல் 1769 வரை இவ்வூரை ஆட்சி செய்த ஹென்ரி ப்ரூக்கர் எனும் ஆங்கிலேயர் பெயர் வைக்கப்பட்டுள்ளது
#கமியம்பேட்டை
1778 களில் இவ்வூரை ஆட்சி செய்த வில்லியம் கம்மிங் என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
#கேப்பர்மலை
1796 களில் ஆங்கில படைத்தளபதியாக விளங்கிய ப்ரான்சீச் கேப்பர் அவர்களை முன்னிட்டு பெயர் என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
#வெலிங்டன்தெரு
ஆங்கில ஆட்சியாளராக விளங்கிய வெலிங்டன் துரை என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
#கிளைவ்தெரு
ஆங்கில ஆட்சியை பாரத தேசத்தில் நிறுவிய ராபர்ட் கிளைவ் என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
#ப்யாரீப்ரியன் தொகுப்பிலிருந்து...
ஆலய அதிசயங்கள்
ஆலய அதிசயங்கள்....
#ப்யாரீப்ரியன்....
1. திருவண்ணாமலை சுவாமி எப்போதுமே ராஜகோபுரம் வழியாக வராமல் பக்கத்து வாசல் வழியாகத்தான் வெளியே வருவார்.
2. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மொத்தம் 14 கோபுரங்கள் உள்ளன. வேறு எந்த கோவிலிலும் இவ்வளவு அதிகமான கோபுரங்கள் இல்லை.
3. கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் தயாராகும் எந்த நைவேத்தியப் பண்டங்களுக்கும் உப்பு சேர்ப்பதில்லை.
4. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் பெருமாள் கோவில்களில் கொடுப்பதுபோல் தீர்த்தம் கொடுக்கிறார்கள். வேறு எந்த சிவன் கோவிலிலும் இது போன்று தீர்த்தம் கொடுப்பது கிடையாது.
5. மூலவரே வீதிவலம் வருவது, சிதம்பரம் நடராஜர் மட்டுமே.
6. மதுரை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் வளராது.
7. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகிலுள்ள கேரளபுரத்தில் சிவபெருமானுக்கு கோயில் உள்ளது. இங்கு அரச மரத்தடியில் நிறம் மாறும் அதிசய விநாயகர் இருக்கிறார். ஆவணி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் வெள்ளை நிறமாகவும், மாசி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் கறுப்பாகவும் மாறி விடுகிறார். சந்திர காந்தக் கல்லால் உருவாக்கப்பட்ட இந்தச் சிலைக்கு இப்படி ஒரு சக்தி இருக்கிறது.
8. சிதம்பரம் ஆலயத்தில் ஒரே இடத்தில் நின்றபடி, ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளையும், ஸ்ரீ நடராஜரையும் தரிசிக்கலாம்.
9. சைவர்களுக்குரிய திருவாதிரையும், வைணவர்களுக்குரிய வைகுண்ட ஏகாதசியும் ஒரே மாதத்தில் ஒரே திருக்கோயிலில் நடைபெறுவது சிதம்பரத்தில்.
10. எல்லாத் திருத்தலங்களிலும் பெருமாளின் இடது கையில் தான் சங்கு காணப்பெறும், திருக்கோவிலூரில் மட்டும் வலது கையில் சங்கு வைத்துள்ளார்.
11. இமயமலைச் சாரலில் இருக்கும் திருத்தலங்களில் ஒன்று பத்ரிநாத். மே மாதம் முதல் வாரம் நடைதிறப்பார்கள். நவம்பர் மாதம் முதல் வாரத்தில் மூடுவார்கள். நவம்பரில் கோயிலை மூடும் போது ஒரு தீபம் ஏற்றுவார்கள். அந்த தீபம் மீண்டும் கோயில் திறக்கப்படும்வரை அதாவது, ஆறுமாதம் எரிந்துகொண்டே இருக்கும்.
12. காசியில் பல்லிகள் இருந்தாலும் ஒலிப்பதில்லை.
13. காசி நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரை கருடன் பறப்பதில்லை.
14. குளித்தலை, மணப்பாறை வழியில் இருப்பது ஐவர் மலை என்ற ரத்தினகிரி மலை உள்ளது. இம்மலை மேல் காகங்கள் பறப்பதில்லை.
15. நவக்கிரகப் பிரதிஷ்டை கோவிலில் வடகிழக்குப் பகுதியில்தான் அமைய வேண்டும் என்று சிற்ப சாஸ்திரம் கூறுகிறது.
16. ஆழ்வார்குறிச்சியில் நடராஜர் சிலை ஒரே கல்லினால் ஆனது. தட்டினால் வெண்கல ஓசை வரும்.
17. சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் உட்கார்ந்த கோலத்தில் மிகப் பெரிய திருமேனி. இவ்வளவு பெரிய ரூபமுள்ள அம்பிகை வேறு எந்த கர்பகிரகத்திலும் இல்லை. இத்திருமேனி சில மூலிகைகளால் ஆக்கப்பட்டது.
18. தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள சுருளிமலையில் குகையில் விபூதி அள்ள அள்ள வந்து கொண்டே இருக்கும். இந்தக் குகைக்குப் பெயர் திருநீர்குகை. திருநீறு தானாகவே விளையும் மற்ற திருத்தலங்கள், கதிர்காமம், மருதமலை, திருநீற்று மலை, கங்கை கரையில் உள்ள திருவருணை.
19. ரத்னகிரி மலையில் உள்ள முருகனுக்கு அபிஷேகம் செய்யும் பால் சிறிது நேரத்தில் தயிராக மாறும் அதிசயம் நடக்கிறது.
20. சென்னிமலை முருகனுக்கு அபிஷேகம் செய்யும் தயிர் புளிப்பதில்லை.
21.தேனி மாவட்டம் தெப்பம்பட்டியில் உள்ள வேலப்பர் கோவிலில் உள்ள மூலவர் சுயம்பு மூர்த்தி. இந்தக் கோவில் அருகில் உள்ள மாமரத்தின் அடியில் இருந்து ஊற்று நீர் பொங்கி வந்து கொண்டேயிருக்கிறது.
22. அம்மன் சந்நிதி இல்லாத கோயில் காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்.
~ #ப்யாரீப்ரியன் ஆன்மீக தொகுப்பிலிருந்து~
ஹிட்லர் பொன்மொழிகள்
ஹிட்லரின் பத்து உபதேசங்கள்!
1) மடையனுடன் விவாதிக்காதே..! மக்கள் உங்கள் இருவரையும் பிரித்தறிவதில் தவறிழைத்துவிடலாம்.
2) தோற்றவன் புன்னகைத்தால் வெற்றியாளன் வெற்றியின் சுவை இழக்கிறான்.
3) ஒரு மனிதன் அவனது தாய் மரணிக்கும் வரை குழந்தையாகவே இருக்கிறான்.
4) அவள் மரணித்த அடுத்த கணம் அவன் முதுமையடைந்து விடுகிறான்.
5) இழப்பதற்கு இனி எதுவுமில்லை என்றிருக்கின்ற மனிதனிடம், நீ சவால்விடாதே!
6) நீ நண்பனாக இரு. உனக்கு நண்பன் இருக்க வேண்டும் என ஆசைகொள்ளாதே!
7) பின்னாலிருந்து நீ விமர்சிக்கப்பட்டால் நினைத்துக் கொள்: நீ முன்னால் இருக்கிறாய் என்று.
8) உனது மனைவியின் ரசனையில் நீ குறைகாணாதே. ஏனென்றால் உன்னையும் அவள்தான் தெரிவுசெய்தாள்.
9) நீ உன் எதிரியை விரும்பும்போது அவனது அற்பத்தனத்தை உணர்ந்து கொள்கிறாய்.
10) நாம் எல்லோரும் நிலவைப் போன்றவர்கள். அதற்கு இருளான ஒரு பக்கமும் உண்டு.
ஓசூரில் சமண மதம்
ஓசூர் வெங்கடபெருமாள் கோயிலில்
12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சமண கல்வெட்டுகளும் .சமணசிற்பங்களும்
கண்டு பிடிப்பு.
ஓசூரில் உள்ள ஸ்ரீ வெங்கடபெருமாள் கோயிலில்
12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சமண கல்வெட்டுகளும் .சமண சிற்பங்களையும்
கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று தேடல் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.
கிருஷ்ணகிமாவட்டம் ஓசூருக்கு கிழக்கு திசையில் மலைமீதுள்ள ஸ்ரீ வெங்கடபெருமாள் கோயிலில் 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த மூன்று சமண கல்வெட்டுகளும், மூன்று சமண கற்சிற்ப்பங்களும் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று தேடல் குழுவினர் கண்டறிந்துள்ளனர்
. கிருஷ்ணகிமாவட்டத்தில் அறம்கிருஷ்ணன் தலைமையில் ,பிரியன்,இராசு,மஞ்சுநாத்,ஜெகன், உள்ளிட்டோர் ஒன்றினைந்து கிருஷ்ணகிமாவட்டவரலாற்று தேடல்குழு என்ற அமைப்பை ஏற்படுத்தி இம்மாவட்டத்தின் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களையும், கோயில்கள், கல்வெட்டுகள்,நடுகற்கள், கோட்டைகள், புராதானவராலாற்று சின்னங்கள்,ஆகியவற்றை எல்லாம் ஆய்வு செய்து, புதைந்து போயிருக்கும் பல்வேறான வரலாற்று தகவல்களை வெளியே கொண்டு வருகின்றனர்.இந்த சிறப்பு மிக்க வரலாற்று தேடலை விழுபுரம் வரலாற்று ஆய்வாளர் திரு.வீரராகவன் அவர்கள் தலைமையேற்று நடத்தி கொடுத்தார்.
ஓசூரை சுற்றி மூன்று மலைகுன்றுகள் உள்ளன.நேர்கிழக்காக சந்திரசூடேஷ்வரர் மலையும். தென்கிழக்கே ஸ்ரீ வெங்கடபெருமாள் கோயிலும், வடக்கு புரமாக பிரம்மா மலையும் உள்ளன.மும்மூர்த்திகளும் ஒறே நேர்கோட்டில் அமைந்திருப்பது இங்கு மட்டுதான் .இதில் தென்கிழக்கில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடபெருமாள் கோயிலில்தான் மேற்கண்ட சமண கல்வெட்டுகளும்,.சமண சிற்பங்களும் அமைந்துள்ளன.
தமிழகத்தில் சமணசமயத்தின் நுழைவாயிலாக ஓசூர் இருந்துள்ளது.வளர்ந்து வரும் பெரும் நகரங்களில் ஒன்றான ஓசூர் நகரின் தென்கிழக்கே சுமார் 1000 அடி உயர மலையின் மீது இயற்க்கையாக அமைந்துள்ளது ஸ்ரீ வெங்கடபெருமாள் கோயில்.இந்த கோயிலில்தான் மூன்று சமண கல்வெட்டுகளும், மூன்று சமண கற்சிற்ப்பங்களும் உள்ளன. அதே போல் இக்கோயிலின் அருகில் இருக்கும் சந்திரசூடேஷ்வரர் மலையின் அடிவாரத்தில் சமண படுக்கையும், சமண பள்ளி இருந்ததற்காண அடையாளங்கள் உள்ளன.
இந்தியாவில் தோன்றி வளர்ந்த பல தொன்மையான சமயங்களில் சமண சமயமும் ஒன்று. இந்தியாவில் 2500 வருடங்களுக்கு முன்பாகவும்,தமிழகத்தில் கி.மு.இரண்டாம் நூற்றாண்டு வாக்கிலும் சமண சமயம் உள்ளே வந்திருக்கிறது. தகடூரை ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சி கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் விழுபுரம் மாவட்டம் ,திருகோயிலூருக்கு அருகில் உள்ள ஜம்பையில் சமணர்களுக்கு சமணபடுக்கை ஏற்படுத்தி கொடுத்தற்கான கல்வெட்டை செதுக்கியுள்ளார்.
தமிழ் நாட்டை பொருத்தவரை கி.பி. 7 ஆம் நூற்றாண்டு வாக்கில் தமிழகம் முழுவதும் சமணம் பரவியிருந்தது.
இந்தியாவில் தென்பகுதியில் கர்நாட்டாகா மாநிலம் சிரவணபெளகோளாவிலிந்துதான் சமணம் தொடங்கியிருக்கவேண்டுமென வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.தமிழகத்திற்கு எந்த வழியாக வந்திருக்கும் என்று பார்க்கும் போது ஆச்சர்யாமான தகவல் கிடைக்கிறது.தமிழகத்தின் எல்லைநகரமான
ஓசூர்வழியாகதான் உள்ளே வந்து தருமபுரி, அதியமான்கோட்டை,(பாவக்கல்,ஆம்பள்ளி) கொங்குஎல்லை,கரூர்,திண்டுகல் வழியாக மதுரையை அடைந்திருக்கிறது.
தமிழகத்தில் சமண சமயத்திற் அதிகமான தடயங்கள் உள்ள நகரம் மதுரை.அதனால்தான் சமணத்தின் தலைநகரமாக மதுரை விளங்குகிறது.
ஓசூர் வழியாகதான் சமண சமயம் பயணப்பட்டிருந்தாளும் கூட சுமார் ஆயிரம் வருடங்களுக்கு பிறகே கி.பி.12 ஆம் நூற்றாண்டில்தான் இங்கு அதற்கான கோயில் கட்டப்பட்டிருக்கிறது. ஓசூரின் ஸ்ரீ வெங்கடபெருமாள் கோயிலில் பெரிய கற்பாறையில் கி.பி.12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த மூன்று சமண கல்வெட்டுகளும், மூன்று சமண கற்சிற்ப்பங்களும் உள்ளன.கோயிலின் நுழை வாயிளில் படிக்கட்டுகளில் ஏறும்போது வலதுபுரம் பெரிய கற்பாறையில் ஆறடி உயரமும், பத்தடி அகலத்தில் கற்பாறையில் கல்வெட்டு செதுக்கப்பட்டுளது.இந்த கல்வெட்டு தமிழ், வடமொழி,கிரந்தம் ஆகிய மூன்று மொழிகளில் இக்கல்வெட்டு செதுக்கப்பட்டுள்ளது.